சிலவருடங்களுக்கு முன் என் மகளோடு (அவளுக்கு அப்போது 5வயது இருக்கும், ஆங்கிலத்தில் நடந்த உரையாடல், அதை தமிழாக்கம் செய்து அளிக்கிறேன்) வெளியே எங்கோ செல்லும் பொது பகலில் வானில் தெரிந்த வெண்ணிலவை பார்த்தவுடன் நடந்த உரையாடல்
அப்பா, வானத்தில் உருண்டையாக வெள்ளையாக இருகின்றதே, அது என்ன?
அது நிலவு, மகளே.
அப்பா, நிலவு என்பது மஞ்சள் நிறத்தில் இருக்கும், அது மட்டும் இல்லாமல் இரவில் தானே வரும், இது வெள்ளை நிறத்தில் பகலில் வந்து உள்ளதே?
இல்லை மகளே, சில நாட்களில் மேகமில்லாத வானில் நிலவு வெள்ளையாக நம் கண்ணுக்கு தெரியும், இன்று அவ்வாறான நாள், மேல அதிக மேகமூட்டம் இல்லாததினால், நிலவு தெரிகிறது.
அப்பா நான் அங்கே செல்ல வேண்டும். செல்ல முடியுமா?
கண்டிப்பாக முடியும். அதற்கு நீ சில காரியங்கள் செய்யவேண்டும்.
நான் என்ன வேண்டும் என்றாலும் செய்கிறேன், ஆனால் எனக்கு அங்கே போக வேண்டும்.
மகளே, அதற்கு, நீ சிறிய வயதில் இருந்தே நன்றாக படிக்க வேண்டும், உடலை வலிமையாக வைத்து கொள்ள வேண்டும், பெற்றோரின் பேச்சை ( நல்ல வாய்ப்பு இல்லையா, அங்க அங்க பிட்ட போட்டுடனும்) கேட்டு நடந்தால் அந்த ஆண்டவன் அருளால் NASA என்ற நிறுவனத்தில் சேர்ந்து அந்த நிலவிற்கு செல்லலாம்.
அப்பா, நீங்கள் அந்த நிலவிற்கு சென்றதுண்டா?
இல்லை மகளே,
அப்படியானால், இப்போது எனக்கு சொன்னீர்களே, அதில் எதுவுமே நீங்கள் செய்யவில்லையா?
இதை அவள் கேட்ட வுடன் நான் பேய் அறைந்ததை போல் ஆகிவிட்டேன் (பேய் அறைந்த கதையை கண்டிப்பாக மற்றொரு நாள் சொல்கிறேன்).
அப்படியில்லையடி ஏன் ராசாத்தி,
பிறகு நீங்கள் ஏன் அங்கெ செல்லவில்லை,
ஒன்னும் இல்லடா கண்மணி, அப்பாக்கு "உயரம்ன்னா" பயம் அதுதான்...
http://www.visuawesome.com/

அப்பாக்கு "உயரம்ன்னா" பயம் அதுதான்...
பதிலளிநீக்கு>>
எங்க ஊர்ல இதுக்குப் பேருதான் வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டிக்குறது.
மிக அருமையாக பிட்ட போட்டிட்டீங்க...
பதிலளிநீக்கு