திங்கள், 28 ஜூலை, 2014

அமெரிக்காவின் துப்பாக்கி கலாச்சாரம்;


கடந்த சில நாட்களாக அமெரிக்காவில் எனக்கு பிடித்தது என்ற தலைப்பில் சில இடுகைகளை எழுதி வருகிறேன்.

முதல் இடுகை : பள்ளிக்கூடம்

இரண்டாம் இடுகை : ஹார்ன்

மூன்றாம் இடுகை : போக்குவர போலிஸ்



இதை படித்த சகோ. மீனா அவர்கள், இது எல்லாம், நிஜம் மிஞ்சிய கற்பனைகள், அமெரிக்காவின் துப்பாக்கி கலாச்சாரம் பற்றி என்ன கூறுகிறாய் " Tell - Tell" என்று பின்னோட்டம் விட்டு இருந்தார்கள். அதற்காக இந்த இடுகை.

நான் இந்த எனக்கு பிடித்தவைகளை எழுதும் போதே, இங்கே எனக்கு பிடிக்காதவைகளும் சில உண்டே அதை பற்றி என்ன செய்யாலாம் என்று யோசித்தேன். பின் " கனி இருக்க காய் கவர்ந்தற்று" என்ற சொல்லுக்கேற்ப பிடிக்காதவைகளை தள்ளி வைக்கலாம் என்று விட்டு இருந்தேன். ஆனாலும், கேள்வி என்று ஒருவர் கேட்டு விட்டால் அதற்கு பதில் அளிப்பது தானே  மரபு.. சரி இப்போது விஷயத்திற்கு வரலாம்.

இந்நாட்டில் சட்டவிதி முறைப்படி யார் வேண்டுமானாலும் துப்பாக்கி வாங்கி கொள்ளலாம். இது இங்கே ஓர் தனி மனித உரிமையாக கருதபடுகிறது. ஒருவன் தன், தன்குடும்பதின் தற்பாதுகாப்புக்காக தன்வசம் துப்பாக்கி வைத்து கொள்ளலாம். இங்கே அநேகம் பேர், துப்பாக்கியை உபயோகிகிரார்களோ, இல்லையோ ஆனால் தன்உரிமைக்காக அதை வாங்கி வைத்து அழகு பார்ப்பார்கள்.

இங்கே நாம் ஒன்றை நினைவில் வைத்து கொள்ளவேண்டும். துப்பாக்கி மனிதர்களை கொல்லுவதில்லை. அதை வைத்து இருப்பவன் தான் கொல்லுகிறான். இந்த துப்பாக்கி கோடிக்கணக்கான மக்களிடம் இருந்தாலும்., சில நேரங்களில்  தவறனா நபரிடம் சென்று விடுவதால் இந்த வன்முறைகள் நிகழ்ந்து விடுகின்றன. கடைசியாக நடந்த சில துப்பாக்கி வன்முறை சம்பவங்களை ஆராய்ந்து பார்த்தோம் என்றால், அதை செய்தவர்கள், மனநிலை பெரிதும் பாதிக்க பட்ட நபர்கள்.

 இவர்கள் கையில் எப்படி துப்பாக்கி வந்தது? எனக்கும் புரியவில்லை. சென்ற வருடம் தன தாயை கொன்று விட்டு பின்னர் அவர்கள் வேலை செய்த பள்ளிகூடத்தில் சிறுபிள்ளைகளை கொன்று குவித்தானே, ஒரு கொடூரன். அவன் வருடகணக்கில் மனநோயாளியாக இருந்தவன். அவன் தாய் செய்த மிக பெரிய தவறு ஒரு மனநோயாளி உள்ள வீட்டில் அத்தனை துப்பாக்கிகள் வைத்தது. அந்த ஒரு பெண்ணின் தவறினால் எத்தனை குடும்பங்கள் தங்கள் குழந்தைகளை இழந்தார்கள். இதை நினைக்கும் போதே நெஞ்சு பதறுகின்றது. அதே போல் தான் ஒரு சினிமா கொட்டைகையில், ஒரு கல்லூரியிலும் கூட.

இந்த யார் வேண்டுமானாலும் துப்பாக்கி வைத்துகொள்ளலாம் என்பதில் எனக்கு உடன்பாடு உள்ளதா இல்லையா என்பது முக்கியம் இல்லை. இங்கே இவர்கள் இது தவறான நபரிடம் போய் சேராமல் இருக்க மேலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சரி, இப்போது சகோ. மீனா அவர்களின் கேள்விக்கு வருவோம். நான் அமெரிக்காவில் பிடித்தவை என்று எழுதியதை மீனா அவர்கள், எனக்கு இந்தியாவில் பிடிக்காதது என்ற கோணத்தில் பார்க்கின்றார்கள். அதில் தவறு இல்லை. என் வார்த்தைகளும் அதை பிரதிபலிக்கும்.

அமெரிக்காவிலும் சரி இந்தியாவிலும் சரி... நன்மை -தீமைகளை தாராசில் போட்டு நிறுத்திவிட்டு, என் அறிவிற்கு கிடைத்த விடையினாலே தானே நான் இங்கே வாழ்கிறேன். அதை மறுத்தால் நான் சொல்லும் அனைத்தும் போய் ஆகிவிடுமே. என்னை பொறுத்தவரை இங்கே எனக்கு கிடைக்கும் நன்மைகள் தீமைகளோடு அதிகம்.  அதினால் தான் நான் இங்கே வாழ்கிறேன் வாழ்வேன். துப்பாக்கி கலாச்சாரம் என்னை பயமுருத்துகிறதா? நிச்சயமாக. இருந்தாலும், அதை எதிர்கொள்ள நான் தாயார்.

ஒன்றை சொல்லி முடிக்கிறேன்..

இங்கே மனநோயாளி கையில் துப்பாக்கி கிடைப்பதால் அவ்வபோது நடக்கும் வன்முறைகளினால் பறிபோகும் உயிர்கள் பல. இந்த நிகழ்சிகள் நடக்கையில் மனம் பெருந்துயரம் பெரும்.

நம் தாய் நாடான இந்தியாவில் இந்த துப்பாக்கி வேண்டாம், மனநோயாளிகளும் வேண்டாம்.இந்த துப்பாக்கி வன்முறை கலாச்சாரமும் இல்லை.

ஆனால் பேராசை பிடித்த அரசியவாதிகளும்- படித்த அதிகாரிகளும் பணவெறி பிடித்து தகுதியற்ற காரியங்களுக்கு தங்கள் எழுதுகோலால் கை எழுத்து இடுகிரார்களே, அந்த ஆணைகளினால் இழந்த உயிர்கள் எத்தனை.

கல்யாணமண்டபத்தில் தீ...

18 அடுக்கு மாடி கட்டிடம் இடிந்தது.

பள்ளிகூடத்தில் தீ

பேருந்து ஓட்டை வழியாக கீழே விழுந்த மாணவி மரணம்

தீடீரென்று  அறிவிப்பு இல்லாமல் அணையை திறந்து விட்டதால் மாணவர்கள் வெள்ளத்தில் மரணம்

மேலே இருப்பவைகள் ஒரு சில மட்டுமே... மீதியை நீங்களே போட்டுகொள்ளலாம்.

என்னை பொறுத்தவரை ஒரு கொடூரன் கையில் இருக்கும் AK 47ன்னும் ஊழலில் ஊறிய ஒருவனின் எழுதுகோலும்ஒன்றே. இரண்டுமே பயங்கரத்தை விளைவிக்கும்.


பின் குறிப்பு;
சில நேரங்களில் நான் நினைப்பது உண்டு. இந்தியாவில் இங்கு உள்ளது போல் யார் வேண்டுமானாலும் துப்பாக்கி வைத்து கொள்ளலாம் என்ற விதி முறை இருந்தால்...? நினைக்கவே பயமாக உள்ளது!

சகோ. மீனா தங்கள் பின்னூட்டத்தில் ... "போயா, போ.. புள்ள குட்டிங்கள அங்கேயே படிக்க வச்சிக்க என்று எழுதி இருந்தார்கள்.  மீனா அவர்களே புள்ள குட்டிகளை ஏன் இங்க படிக்கவைக்கிறேன் என்பதற்கு நான் நிறைய கார  ங்கள் வைத்துள்ளேன். தமக்கு நேரம் கிடைத்தால், இங்கே சொடுக்கவும்.

":பிள்ளைகளை பேணி காக்க சிறந்த இடம் இந்நாடே.." "பேராசிரியர் பாப்பையாவின் தலைமையில் அடியேன்....

3 கருத்துகள்:

  1. "://பிள்ளைகளை பேணி காக்க சிறந்த இடம் இந்நாடே..அதிலும் பெண் பிள்ளைகளை என்று சேர்த்து சொல்லுங்கள் இங்கு பெண் பிள்ளைகள் கெடுவது என்பது அவர்களின் சுயவிருப்பத்தால் மட்டுமே ஆனால் ந்தியாவில் மற்றவ்ர்களின் பலாதகாரத்தினால் கெடுக்கப்படுகிறார்கள் பாதுகாப்பிற்காக போலிஸிடம் சென்றால் அவன் அதுக்கு மேல் மோசமாக இருக்கிறார்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த கருத்தை தம்மை விட, இதை விட அழகாக என்னால் சொல்லி இருக்க முடியாது. "அவர்கள் உண்மைகள்" பெயருக்கு ஏற்ப உண்மைகள் தான். நன்றி.

      நீக்கு
  2. சிறந்த பகிர்வு
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...