வியாழன், 10 ஜூலை, 2014

San Diegoக்கு இல்ல ... சந்தானம் வீட்டிற்கு ..

ட்ரிங்....ட்ரிங்....

சனியும் அதுவுமா, அதுவும் அம்மணியும் கண்மணிகளும் ஊரில் இல்லாத நேரத்தில் யாருடா நமக்கு போன் பன்றாங்கோனு அரை தூக்கத்தில் எழுந்து போனை பார்த்தா அதில் "தண்டம்-சுந்தரிஸ் ஹஸ்பன்ட்" என்று போட்டு இருந்தது.



விசு,  தண்டம் பேசுறேன்.

அட பாவி, நீ என்னை கூட அந்த மாதிரி சுருக்கமா கூப்பிடாதே, முழுசா தண்டபாணின்னு கூப்பிடுன்னு சொல்லுவியே, இப்ப இப்படி ஆயிட்டே, சரி விஷயத்த சொல்லு. ஆமா ஏன் இவ்வளவு மெதுவா பேசுற? ஏதாவது சிதம்பர ரசகசியமா?

விசு, நான் இப்ப பாத்ரூமில் இருந்து பேசுறன், நீயும் உடனே போன எடுத்து கொண்டு பாத்ரூம் போ, முக்கியமான ஒரு விஷயம் பேசவேண்டும்.

டேய், அழுக்கு புடிச்சவனே... நான் ஏன்டா பாத்ரூம் போய் பேசனும். எங்க வீட்டில் தான் ஊருக்கு போய் இருக்காங்களே , நான் ராஜாதி ராஜ போல நடு வீட்டில் சோபா மேல கால் மேல் கால் போட்டு உக்காந்து கூட பேசுவன். நீ விஷயத்த சொல்லு.

ஒன்னும் இல்ல விசு.

சரி அப்புறம் பாக்கலாம்

விசு.. என்னப்பா.. காலில் சுடுதண்ணி ஊத்தின போல ஓடுற...ஏன் சனியும் அதுவுமா காலையில் தூங்கினு இருந்தியா?

இல்லடா...4:30 "அலாரம்" வைச்சு  எழுந்து உனக்கு பிடிக்கும்மேன்னு "அதரசம்" சுட்ன்னு இருக்கேன், வந்துசாப்பிட்டு போ..

கிண்டல் பண்ணாத விசு, ஒரு முக்கியமான விஷயம்.

அதை சொல்லி தொலையண்டா ...

சனியும்  அதுவும் காலையிலே சுந்தரி ஆரம்பிச்சிட்டா..

அவ மட்டும்மா ஆரம்பிச்சா? விவரமா சொல்லு, ஒன்னும் புரியில..

இல்ல விசு. "லாஸ் அன்ஜெல்ஸ்" போய் இந்தியா ட்ரிப்க்கு வேண்டிய சாமானம் எல்லாம் வாங்க வேண்டுமாம். நீதான் எனக்கு உதவி பண்ணவேண்டும்.

டேய்.. ஒரு பெண் இருக்கறவன் வீட்டில்ல பொண்ணு எடுத்தாதான் எவனோ சம்பாதிச்சத நம்ம சந்தோசமா சாப்டலாம்னு வருஷ கணக்கில் வெயிட் பண்ணி, சுந்தரிய கட்டுன. உனக்கு என்ன கஷ்டம். எவ்வளவு வேணும்?

அட போப்பா... நீ ஒன்னு. காசு பிரச்சனை இல்ல.. ஆனால் இன்னைக்கு 9:30 மணிக்கு கால் பந்து போட்டி மறந்து விட்டாயா?

அதே எப்படி மறப்பன், தண்டம். இன்னும் ஒன்னே"கால்"மணி நேரம் தானே இருக்கு..ஒரு "கால்" மேல இன்னொரு "கால்" போட்டு ஒரு"காலு"ம் மறக்க முடியாமல் இருக்க போகிற "கால்' பந்து போட்டியின் "கால்" இறுதி ஆட்டத்த பார்காலாம்னு நான் நினச்ச போது தான உன் "கால்" வந்தது.

சோக்கா சொன்ன விசு.. . ஏன் விசு, உனக்கு மனசாட்சி இருக்கா? நீ பாக்குற அதே ஆட்டத்தை நானும் பார்க்க வேண்டாமா?

சரி தண்டம், ஆனால் இன்னைக்கு இல்லாவிட்டாலும் என்றாவது ஒரு நாள் இந்த ஷாப்பிங் பண்ணிதானே ஆக வேண்டும். வேலையை முடி.

விசு.. இவளோடு ஷாப்பிங் போனா, விளக்கு ஏத்தியவுடன் தான் வீட்டுக்கு வர முடியும். அந்த போனை புடிச்சின்னு இருக்கே? அது உன் "கை" இல்ல, "காலு". அதை புடிச்சி கெஞ்சி கேட்டுகிறேன், நீ தான் இந்த ஆபத்தில் இருந்து காப்பாத்த வேண்டும்.

நான் என்னடா செய்ய முடியும்?.

சுந்தரிக்கு ஒரு போன போட்டு உனக்கு எதோ உதவி வேண்டும் "தண்டத்தை அனுப்ப முடியுமான்னு கேளு" உனக்கு மட்டும் அவ வேணான்னு சொல்ல மாட்டா. உன் மேல நல்ல மரியாதை.

நீ ஒவ்வொரு சனியும் இந்த மாதிரி பண்ணு...என் மரியாதை "கிளிஞ்சது கிருஷ்ணகிரி" ஆக போகுது.

தமாஸ் பண்ணாத விசு.. இன்னும் ஒரு 5 நிமிஷத்தில கூப்பிடு... நான் போன வைக்கிறேன்.

சரி..

விசு... கடைசியா ஒரு விஷயம்.. அந்த "அதரசம்" சுட்ரன்னு சொன்னியே, அது தமாஸ் தானே..?

போடாங்க...

தண்டபாணிய எனக்கு ஒரு 7 வருஷமா தான் தெரியும். இன்னும் 6 மாதம் கழித்து அவனால் எனக்கு இந்த மாதிரி பிரச்னை எல்லாம் இல்ல என்றும் தெரியும் (ஏன்னு கேட்கின்றீர்களா? நல்ல கேள்வி.. அவன்ஒரு ஏழரை வருஷ சனி தானே. அதான்) என்று எனக்கே நான் ஒரு ஆறுதல் சொல்லி கொண்டு...


ரிங் .... ரிங்....

சுந்தரி ... விசு பேசுறன்..

அண்ணா.. சொல்லுங்க அண்ணா.. ஊரில ஆத்துக்காரி பிள்ளைகள் எப்படி?

ஏன் சுந்தரி.. ஆறு அடி ஒரு அங்குலம் நான் இங்க இருக்கும் போது நான் எப்படி இருகேன்னு கேட்க்காமல் 9000 மைல் தள்ளி இருக்கிறவர்களே விசாரிகின்றாயே...இது உனக்கே நல்லா இருக்கா?

அண்ணா, தமாஸ் பண்ணாதேங்கோ.. சொல்லுங்கோ..

தண்டம் இருக்காரா?

என்னானே தெரியலன்னா.. கலையில் இருந்து பாத்ரூமில் இருக்கார். இருங்க கூப்பிடறன்.

இல்ல வேணா, சுந்தரி. அவர் இன்னும் ஒரு அரை மணி நேரத்தில் எங்க வீட்டுக்கு வர முடியுமா?

ஏன்னா? நாங்க லாஸ் அன்ஜெல்ச்க்கு ஷாபிங் போலாம்ன்னு ஒரு பிளான்.

அட. தெரியாம போச்சே.

ஏன்னா? ஏதும் அவசரமா?

இல்ல சுந்தரி.. San Diego வரை போக வேண்டும். தண்டம்  வந்தால் பேசினே போகலாமே அதுவும் இல்லாமல் ரெண்டு பேர் இருப்பதால் "பாஸ்ட் ட்ரக்கில்" போகலாம்னு யோசித்தேன், பரவாயில்லை உடு.

ஐயோ, தனியா அவளவு தூரம் போகதீங்கனா ..ஒன்னு கிடக்க ஒன்னு ஆச்சினா அக்காவுக்கு எனக்கு பதில் சொல்லி மாளாது. அனுப்பி வைக்கிறேன், பத்திரமா போயிட்டு வாங்கோ.

ரொம்ப தேங்க்ஸ் சுந்தரி.



தண்டம் வந்தான் ... ஆட்டம்.. பாட்டம் எல்லாம் அடுத்த சில மணி நேரங்களில் முடிந்தது. மாலை வேளையில் கிளம்பும் போது..

விசு.. இன்னும் ரெண்டு வாரத்தில் இறுதி ஆட்டம் வருமே என்ன பிளான்?

" வி வில் கிராஸ் தட் பிரிட்ஜ், வென் வி கெட் தேர்"

சரி சந்திப்போம். மறுபடியும் சொல்லுறன்,  இது கை இல்ல காலு..
சரி, சரி .. உணர்ச்சிவச படாத போ.

அவனை அனுப்பி விட்டு ... சோபாவில் அமர...

ரிங்.. ரிங்...

என்னாங்க ...?

சொல்லுமா.. எப்படி இருக்கீங்க..?

என்னமோ அவசரமா Mr .தண்டபாணிய கூட்டி கொண்டு  "San  Diego" போனீங்கலாமே, என்ன விஷயம்... இப்பதான் சுந்தரி சொன்னாங்க..

 San Diego னா சொன்னாங்க?

ஆமாங்கோ.. என்ன விஷயம்.

 San Diego னா சொன்னாங்க?

எத்தன தரவ சொல்லுறது.. என்ன விஷயம்?

இல்ல மா. San Diego இல்ல, நம்ப சந்தானம் வீட்டிற்கு ... இன்டெர் நேஷனல் "கால்" உனக்கு சரியா கேட்டு இருக்காது.

அதுதான பார்த்தன். சரி.. நாங்க அங்க இல்லன்னு "காஞ்ச மாடு கம்பம் கொல்லையில் மேஞ்ச மாதிரி" எதுவும் செஞ்சு வைக்காதீங்க..
சரி மா..

போனை துண்டித்து விட்டு அடுத்த வினாடியிலேயே மற்றொரு கால் போட்டேன்.


ரிங்.. ரிங்..

ஹலோ, திஸ் இஸ் சந்தானம்.

சந்தானம், அவசரமா பேசணும், உடனே போனை எடுத்துகிட்டு பாத்ரூம் போ...

2 கருத்துகள்:

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...