வெள்ளி, 18 ஜூலை, 2014

9000 மைல் தாண்டி வந்த....மனைவி அமைவதெல்லாம்!


இன்னும் மூணு மணி நேரத்தில் விமான நிலையத்தில் இருக்க வேண்டும். நேரத்திற்கு போங்க..

சரீங்க. மொத்த பயணமே 22 மணி நேரம் ஆச்சே, அதனால தான் கடைசியா நல்ல ஒரு "Bangalore பிரியாணி"  நானும் ராசாதிகளும் சாப்பிட்டு கொண்டு இருக்கோம்.

ஹ்ம்ம்ம்ம்... "Bangalore பிரியாணியா"?...கொடுத்து வைச்சவங்க.

நீங்க என்ன சாபிப்டீங்க?

காஞ்சி போன ரொட்டி துண்டும், காப்பி தண்ணியும்,

சரி சரி, கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க,
நாங்க நாளைக்கு மதியம் இருப்போம் இல்ல, அப்ப ஏதாவது சமைக்கலாம்.

சரி, அந்த பிரியாணி எப்படி சுவை?


உங்கள வெறுப்பு ஏத கூடாதுன்னு தான் நான் சொல்லவில்லை, ரொம்ப சூப்பர்.

ஹ்ம்ம்... எனக்கு இல்லை.. எனக்கு இல்லை..சரி நேரத்திற்கு கிளம்பி வந்து சேருங்க, நான் விமான நிலையத்தில் சந்திக்கிறேன். "Bon Voyage"!

அடுத்த நாள் மதியம், லாஸ் அன்ஜெல்ஸ் விமான நிலையத்தில்; 

வெல்கம் பேக், லேடீஸ்...பயணம் எப்படி இருந்தது?

கொஞ்சம்கஷ்டம் தான்.. இரண்டாவது விமானத்தில் 16 மணி நேரம் அமர்ந்தே இருந்தது கொஞ்சம் சிரமம் தான்.

நீங்க எப்படி இருக்கீங்க.

எதோ சௌக்கியம் பரவாயில்லை.

சரி போற வழியிலேயே ஏதாவது சாப்பிட்டு போலாமா? வீட்டிற்கு போய் சமைக்க நேரம் ஆகி விடும்.

இல்லங்க, வீட்டிற்கு நேராக போகலாம்.

சரி..

வீட்டை அடைந்தவுடன்.

எங்க இந்த பையை எல்லாம் அப்புறம் பாத்துக்கலாம், முதலில் சாப்பிட வாங்க?

வந்து 5 நிமிஷம் ஆகவில்லை, எப்படி சாப்பாடு?

இங்க மேசைக்கு வாங்க.

மேசையில்.. 

இது ஏன்னா, சூப்பர் பிரியாணி?

இல்லங்க, நாங்க சாப்பிடும் போது தானே நீங்க கூப்பிடீங்க, உடனே ஒரு டப்பாவில் போட்டு பிரீஸ் பண்ணிவிட்டேன். விமானநிலையத்தில்
என்னான்னு கேட்டாங்கோ, சாப்பாடு, எனக்கு தான் சொன்னேன், விட்டுடாங்கோ.

அவ்வளவு நேரம் விமானத்தில் எப்படி கெடாம இருந்தது.

இல்ல, அந்த பணிபெண்ணிடம், குளிர்பெட்டியில் வைக்க முடியுமான்னு கேட்டேன், சரின்னு சொன்னாங்க.

இங்க வந்து வெளிய வரும் போது எதுவும்  கேட்கவில்லையா?

அந்த "சீட்டி"ல உணவு ஏதாவது இருக்கான்னு கேட்டு இருந்தது, ஆமாம்னு போட்டேன்,சரி போன்னு அனுப்பி வச்சிடாங்க.

உங்க நல்ல காலம், உங்களுக்கும் பிரியாணி...

ஹ்ம்ம்.... மனைவி அமைவதெல்லாம்.....கணவன் செய்த புண்ணியம்..

12 கருத்துகள்:

  1. விமானத்திலேயே பார்சல் சாப்பாடா அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சும்மா சொல்ல கூடாது ஐயா...ரொம்ப அருமை தான்.. நான் கொஞ்சம் கூட எதிர் பார்க்கவில்லை... மீண்டும் சொல்றேன், மனைவி அமைவதெல்லாம், கணவன் செஞ்ச புண்ணிய்ம்...

      நீக்கு
  2. உண்மை தான்... கொடுத்து வைத்தவர் நீங்கள்...!

    பதிலளிநீக்கு
  3. மனைவியின் சாப்பாடு சுவைதான் ! அதுவும் புரியாணி இன்னும் பிரமாதம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் மனைவி மாதிரியே நீங்களும் புரியாணி என்று சொல்லுகிறீர்கள். இந்த பிரியாணி. இந்திய சீராக சம்பா.. இந்திய தண்ணீர், இந்திய மசாலா, இந்திய விற்கு அடுப்பு, இந்திய ஆட்டுக்கறி, இலங்கை மனைவி 9000 மைல் எடுத்து வந்ததால்,... இன்னும் பிரமாதம்!

      நீக்கு
  4. 9000 மைல் தாண்டி பிரியாணி எடுத்து வரும் மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்.

    பதிலளிநீக்கு
  5. பிரியாணி சமைத்து அடுத்த நாள் சாப்பிட்டால் சுவை கூடும் என்று சொல்வார்கள் .
    ஆனா எனக்கு அதைப்பத்தி தெரியாது நாங்கெல்லாம் சுடச்சுட மட்டும்தான் சாப்பிடுவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுத்த நாள் பிரியாணி சுவை.. "உண்மை தான் அண்ணே"

      நீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...