இன்று காலை என்னுடன் பணிபுரியும் மெக்சிக்கன் நண்பன் பெர்னாண்டோவை கடைவீதியில் சந்தித்தேன். அவன் என்னை பார்த்தவுடன் ஒரு புன்சிரிப்புடன் "குமாஸ்தா விசு" என்றான். நானும் பதிலுக்கு "ஆர்கிடெக்ட் பெர்னாண்டோ" என்று கூறிவிட்டு கூடவே ஒரு சிரிப்பையும் அள்ளி வீசிவிட்டு என் வழியில் சென்றேன்.
என் மனதிலே ஒரு சின்ன சந்தோஷம். அடடே.. "திரை கடல் ஓடி திரவியம் தேடு" என்று இங்கு வந்த போதிலும் "யாம் அறிந்த மொழிகளிலே" என்ற பாரதியாரின் பாடல்கள் நினைவிற்கு வந்தது. மெக்சிக்கன் பேசும் ஸ்பானிஷ் மொழியிலும் கணக்குபிள்ளைக்கு குமஸ்தாவா? தமிழ் என்ன ஒரு அழகு மொழி என்று யோசித்து "நான் ஒரு குமாஸ்தா" என்ற அந்த கால பாடல் ஒன்றை முணுமுணுத்து கொண்டே இல்லத்தை அடைந்தேன்.
முயல் பிடிக்கும் நாயை மூஞ்சை பார்த்தால் தெரியும் அல்லவா? என் மூத்த மகள் என்னை பார்த்து, உங்கள் முகத்தில் ஒரு இனம் புரியாத சந்தோசம் தெரிகிறதே.. திருமணத்திற்கு முன்பான நாட்களை யோசித்து கொண்டு இருகின்றீர்களா என்றாள்? உடனே முகத்தை சற்று சோகமாக மாற்றி கொண்டு, இல்லை, இல்லை, அப்படி எது இல்லை என்று அமர்ந்தேன்.
சிறிது நேரம் களித்து என் மூத்த மகள் தன்னுடைய ஸ்பானிஷ் பாடத்தை படித்து கொண்டு இருந்தாள். அவளிடம் சென்று காலையில் நடந்த விஷயத்தை கூறி குமாஸ்தா என்றால் ஸ்பானிஷ் மொழியிலேயும் கணக்கு பிள்ளை என்று அர்த்தமா என்று கேட்டதற்கு அவள் சிரிக்க ஆரம்பித்தாள்.
பிறகுதான் தெரிந்தது காலையில் அந்த மெக்சிக்கன் நண்பன் கூறியது " cómo estás"? ஸ்பானிஷ் மொழியில் அதற்கு நீ எப்படி இருக்கிறாய்? How are you? என்று அர்த்தமாம்.
பின் குறிப்பு :
தயவு செய்து யாரும் "குமாஸ்தா" என்ற வார்த்தையே தமிழ் வார்த்தை இல்லை என்று என் வயிற்றில் நெருப்பை அள்ளி போடாதீர்கள்.
'Gumasta' it is from Farsi(language spoken by Iranian/Persian) means 'Agent'.
பதிலளிநீக்குNeengala vaytril neruppai alli pottu kondan company nirvagam porupalla. :)
"குமாஸ்தா" பார்சி சரி... "நீங்களா" என்று நீர் கூறியது. "மலையாளம்" அல்லோ...
நீக்குBTW, thanks for your comment.
'Neengala' enbathu vazhakku tamil.
பதிலளிநீக்குநீங்க சொன்னால் சரியாதான் இருக்கும். "நீங்களுக்கு" நன்றி!
நீக்குஸ்பானிஷ் மொழியும் தெரியுமா...?
பதிலளிநீக்குகணக்குப்பிள்ளைக்கு குமஸ்தாவா?
பதிலளிநீக்குசிறந்த பகிர்வு
பாராட்டுகள்