பிள்ளை வளர்ப்பு
நான் இங்கே சொல்ல வருவது பெண்களின் பிள்ளை வளர்ப்பு திறமை பற்றி. பிள்ளை வளர்ப்பு என்றவுடன் பொதுவாக ஒவ்வொரு பெண்ணும் தம் தம் பிள்ளைகளை நன்றாக தானே வளர்ப்பார்கள், இது ஒரு விஷயமா என்று கேட்காதீர்கள். நான் சொல்ல வருவது... கணவனை பிள்ளையாக இருக்கும் போது எப்படி வளர்க்க தவறி விட்டார்கள் என்பதை அழகாக சுட்டி காட்டுவார்கள்..
என்னங்க, உங்களை வளர்த்து வளர்த்து வைச்சு இருக்காங்கோ?
ஒரு காரியம் உருப்புடியா செய்யறீங்கள?
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?
செல்லம் கொடுத்து குட்டி சுவர் ஆக்கி வைச்சி இருக்காங்கோ?
இப்படி, நம்மை எப்படி நன்றாக வளர்க்க தவறினார்கள் என்பதை எடுத்து சொல்வார்கள்.
பின் குறிப்பு;
இவ்வாறான பேச்சு வரும் போது, அதற்க்கு பதிலாக வாக்குவாதத்தில் ஈடுபட கூடாது. அதற்கு பதிலாக, நீ சொல்வது எல்லாம் சரி, எதோ உனக்கு வாய்ச்சது அவ்வளவுதான் என்று வண்டிய ஒட்டிக்கோ என்று மட்டும் சொன்னால் நமக்கு அடுத்த வேலை சாப்பாடு. அதுமட்டும் இல்லாமல், இதற்க்கு புத்திசாலியான பதில் ஏதாவது கொடுத்தால் " உங்களுக்கு தான் பிள்ளைகளை வளர்ப்பதை பற்றி இவ்வளவு விஷயம் தெரியுதே, உங்கள் பிள்ளைகளையும் கொஞ்சம் கவனியுங்கள்" என்று சொல்லி நம்முடைய வீட்டு வேலைகள் இரட்டிப்பு ஆக நேரிடும்.
கேட்டதில் பிடித்தது:
8 வயது சிறுவன் ஒருவன் " பிள்ளைகளை சரியாக வளர்ப்பது" என்ற புத்தகத்தை படித்து கொண்டு இருந்தான். அதை பார்த்த பெரியவர் ஒருவர் அவனிடம் சென்று;
"ஏன், தம்பி இந்த புத்தகம் பெற்றோர்கள் படிக்க வேண்டியது, நீ ஏன் படித்து கொண்டு இருக்கின்றாய்" என்றார்.
அதற்க்கு அவன் பதிலாக
"என்னை சரியாக வளர்க்கின்றார்கள என்று செக் பண்ணுகிறேன்" என்றானாம்.
ஆகா
பதிலளிநீக்குஈற்றடிகள்
பதிலளிநீக்குசாற்றுவது உண்மையே
Hilarious.
பதிலளிநீக்குநாடோடிப் பையன் : Thanks for dropping by and passing your thoughts. Do appreciate that!
பதிலளிநீக்கு