ஞாயிறு, 6 ஜூலை, 2014

என்ன சமைக்க வேண்டும் என்று கேட்ப்பேன் ஆனால் செய்ய மாட்டேன்..

சென்ற இடுகையின்  தொடர்ச்சி..

இந்த வாரம் நம் நேயர்களில் ஒருவர்.. " நான் தினமும் என் கணவரிடம் என்ன சமைக்க வேண்டும் என்று கேட்ப்பேன், ஆனால் அவர் கேட்டதை மட்டும் செய்து தர மாட்டேன்".நான் ஏன்  இப்படி செய்கிறேன் என்று என்னை கேட்டு ஒரு சவால் விட்டு இருக்கிறார்.


அவருக்கான பதில் இதோ இங்கே..


இந்த கேள்வியில் பல அர்த்தங்கள் உண்டு,இதற்க்கு முட்டிஆடி (knee jerk reaction) பதில் சொல்ல கூடாது. இந்த நேயர் இந்த கேள்வியை கேட்க்கையில் தம் கணவரை பல விதங்களில் கோணங்களில் மடக்கி விட்டார். இதற்க்கு 1000 பதில் இருந்தாலும் இவர்கள் ஏன் இப்படி செய்கிறார்கள் என்பதை நான்கு வகையாக பிரிக்கலாம்.

முதல் வகை : ஏக்கம்

ஒவ்வொரு நாளும் வேலையும் என்ன சமைக்கட்டும் என்று கேட்பார்கள். ஏன்? என்றாவது ஒரு நாள் இந்த மரமண்டை அவர்களை அன்போடு, நீ இன்று சமைக்க வேண்டாம், நாம் இருவரும் சந்தோசமாக வெளியே போய் சாப்பிடலாம் என்று பதில் கூறுவார் என்று. இவர்களின் கணவனோ ஞானசூனியம் போல் தினமும் அவர்களிடம் இது செய் அது செய் என்பார், அவர்கள் தங்களுக்குள் உள்ள ஏக்கத்தினால் அவர் கேட்டதை மட்டும் செய்து தர மாட்டார்கள்.

இரண்டாம் வகை:  நாட்டு நடப்பு 

இவர்கள் இவ்வாறாக கேட்க்கும் போது கணவன்மார்கள் சற்று நிதானித்து பதில் கூற வேண்டும். இவர்கள் கேட்ட உடனேயே  நாக்கை தொங்க போட்டு கொண்டு  பூரியும், உருளை கிழங்கு மசாலாவும், அல்ல தோசையும் வெங்காய சட்டினியும் என்று பதில் சொன்னால்.... உருளை கிழங்கு, வெங்காயம் விக்கிற விலைக்கு உனக்கு இப்படி ஒரு ஆசையா? ஒரு நாட்டு நடப்பு விலை வாசி உனக்கு தெரியுமா? நீ சம்பாரிக்கிற சம்பளத்திற்கு உனக்கு ... உருளை கிழங்கு மசாலா... வெங்காய சட்டினி. உங்க வீட்டில்ல உன்ன ஏன்னா வளர்த்து விட்டு இருக்கீறார்கள்? எது  எடுத்தாலும் பூம் பூம் மாடு போல தலைய மட்டும் ஆட்டு.வந்து மோர் கஞ்சி குடிச்சிட்டு வேலையை போய் பார் என்பார்கள்..

மூன்றாவது வகை : உளவு துறை

இவர்கள் இப்படி கேட்க்கையில் கணவன்மார் மிகவும் கவனமாக பதில் சொல்ல வேண்டும். உதாரணத்திற்கு எடுத்து கொள்வோம். இந்த தம்பதியர் தமிழ்நாட்டிலேயே பிறந்து அங்கேயே வாழ்பவர்கள் என்று வைத்து கொள்வோம். இங்கே இவர்கள் என்ன சமைக்கட்டும் என்று கேட்க்கையில் அவர் ... இட்லி தோசா, ஊத்தாப்பம் என்று ஏதாவது ஒரு பாரம்பரிய தமிழ் உணவை சொல்லவேண்டும். இவர் சிறிது உணர்ச்சிவசப்பட்டு 'பிசிபில்லா பாத்" என்று சொல்லிவிட்டார் என்று வைத்து கொள்வோம், உடனே அவர்கள் 6வது தெருவில் வாழும் கன்னட மாமிக்கும் உனக்கும் என்ன தொடர்பு என்று மற்றொரு பிரச்சனையை ஆரம்பித்து விடுவார்கள்.

நான்காம் வகை : பழி  வாங்கும் படலம்.

என்னை பெண் பார்க்க வரும் போது என்ன என்ன "பில்ட் அப்" கொடுத்தாய். என்ன என்ன பொய் சொன்னாய். என்னை ஆசை காட்டி மோசம் பண்ணினாய் அல்லவா. அது தான். தினந்தோறும் உனக்கு என்ன வேண்டும் என்று கேட்ப்பேன். உன் ஆசையை தூக்கி வைப்பேன். ஆனால் அதை மட்டும் செய்து தர மாட்டேன்.


சரி, இப்போது இதற்க்கு எப்படி பதில் சொல்வது என்று பார்ப்போம். இந்த சத்திய சோதனையில் இருந்து தப்பிக்க இரண்டு பதில்கள் உண்டு.

முதல் பதில்: நீ இன்றைக்கு சமைக்க வேண்டாம், நானே உனக்காக சமைக்கிறேன் என்று சொல்லி நமக்கு விருப்பமானதை வாங்கி நாமே  ருசியாக சமைத்து சாப்பிடலாம். இவ்வாறு செய்வதின் மூலம் நமக்கு பிடித்த உணவை சாப்பிட முடியும், அது மட்டும் இல்லாமல் வாய் ருசியாகவும் இருக்கும்.
இரெண்டாவது பதில்.: உன்னால என்ன செய்ய முடியுமோ, உனக்கு என்ன பிடிக்குமோ அதையே செய்துவிடு. இந்த பதில் தான் அவர்களுக்கு பிடிக்கும். ஏன் என்றால் அவர்கள் நீ வருவதற்கு முன்பே சமைத்து விட்டு உன்னை சும்மா "டைம் பாசிர்"க்காக கேட்ட கேள்வி தான்... என்ன சமைக்க வேண்டும்?


12 கருத்துகள்:

  1. பின்னெ என்னங்க் தம்பி... பொளுதன்னிக்கு இந்த சோத்தை ஆக்கி ஆக்கி ..இந்தப் பொம்பளைங்களுக்கு போதும் போதும்ன்னு அகிப்போவுதுங்க் போங்க்.. அவீளுக்குமு அலுப்பு சலுப்பு இருக்குமுல்லொங்க்? அதே .. இப்புடி அவிய ஒண்ணியெ சொன்னா இவிய ஒண்ணியெ செய்யறாங்க்ளுங்க்.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யக்கா.. உங்கள் கொஞ்சும் தமிழ் கொங்கு தமிழுக்கு நான் அடிமை. தயவு செய்து எழுதி தள்ளுங்கள்.

      நீக்கு
  2. உன்னால என்ன செய்ய முடியுமோ, உனக்கு என்ன பிடிக்குமோ அதையே செய்துவிடு. இந்த பதில் தான் அவர்களுக்கு பிடிக்கும்.1
    //
    1000% உண்மை சார்

    பதிலளிநீக்கு
  3. உண்மையான காரணம் என்ன என்று தோழி சொன்னாரா?

    பதிலளிநீக்கு
  4. அடச்சே இது தெரியாம நான் எப்பவும் முதல் வகை மாதிரி ஞானசூன்யமாய் பதில் சொல்லி நாலாவது வகை மாதிரி ஏமாந்து போயிருக்கிறேன் .இப்ப என்ன செய்யறது ?

    பதிலளிநீக்கு
  5. எங்க வீட்டம்மாவும் தினமும் இப்படிதான் கேட்கிறாங்க. ஆனால் நான் சொன்னதை தான் செய்வாங்க. அப்ப இதுக்கு என்ன அர்த்தம்...?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜீவன் எங்க வீட்டம்மாவும் அப்படி தான். உங்கள மாதிரியே நான் சொன்னத தான் செய்வாங்க. ஏன் தெரியுமா? என் பதிலும் உங்கள போல தான்..
      "உன்னால என்ன செய்ய முடியுமோ, உனக்கு என்ன பிடிக்குமோ அதையே செய்துவிடு".

      நீக்கு
  6. // நான் தினமும் என் கணவரிடம் என்ன சமைக்க வேண்டும் என்று கேட்ப்பேன்,////

    இந்த கால பெண்கள் இப்படி எல்லாம் கேட்பாங்களா அது எனக்கு தெரியாம போச்சே.......அவங்க சமைச்சு தாராங்களோ இல்லையோ இப்படி கேட்டதுக்கே அவங்களுக்கு கோயில் கட்டலாம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மதுரை தமிழா, உங்கள் இல்லத்தில் தான் மூன்று வேளையும் தமக்கு மிகவும் பிடித்த "பூரி" அல்லவா? அதனால் தான் கேட்பது இல்லை.

      நீக்கு
  7. என் வீட்டில் ஐந்தாம் வகை.
    ”இன்னைக்கு பூரி சாப்பிடறீங்களா?” என்று மனைவி கேட்டால் அதற்கு என்ன அருத்தம்?

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...