(400-350-5)/3=15 தானே எடு அந்த 15 ரூபாய...
இந்த சேகரும் டேவிட்டும் வண்டிய கிளப்பிட்டு போனதும் வீட்டில் வந்து படுத்தேன். தூக்கம் வரல. எவ்வளவு நெஞ்சு தைரியம் இருந்தா அவன் எனக்கே கணக்கு சொல்லி கொடுத்து இருப்பான், அதுதாங்க.. சென்ற இடுகையில் சேகர் சொன்னானே யோ, "(400-350-5)/3=15 தானே எடு அந்த 15 ரூபாய"! அந்த நினைத்தவுடன் கொஞ்சம் கடுப்பே ஏறி எப்ப தூங்க போன்னணு எனக்கே தெரியில?
அடுத்த நாள் சண்டே.. இவங்க இரண்டு பெரும் ஆளே காணும் சரி எப்படியும் அந்த கைமாத்து வாங்க திங்கள் வருவான் தானே அப்ப இவனை "கணக்கு பழி" வாங்கலாம்னு வெயிட் பன்னன்.
சரி.. திங்கள் மாலை,
விசு, அந்த கை மாத்தா கேட்டனே 50 அதை கொஞ்சம் கொடுக்க முடியுமா?
ஆமாம், இல்ல சேகர்... திங்கள் தரன்னு சொன்னன் இல்ல... இந்தா 35 ருபாய். 50 ருபாய் கணக்கு தீர்ந்து விட்டது.
புரியில விசு.. நுப்பத்து அஞ்சு கொடுத்துட்டு 50 செட்டில் ஆச்சின்னு எப்படி சொல்லுவா.
டேய்முட்டாள், அது நுப்பத்து அஞ்சு இல்லடா.. முப்பத்தி அஞ்சு.
சரி விடு விசு.. "தர்ட்டி பைவ்"ன்னு வச்சிக்கோ. ஆனால் அது எப்படி 50க்கு சமம் ஆகும்.
சேகர்... மட சேகரு.. நீ என்ன கணக்கில் கொஞ்சம் வீக்கா?
முதலில் இருந்து ஆரம்பிக்கலாம்.. சனிகிழமை நீ இங்க வந்தியா?
ஆமா,விசு வந்தேன்..
என்னை என்ன கேட்ட?
50 ருபாய் கடன் கேட்டேன்..
அதுதான் இல்ல சேகரு.. .சரியா நினைவு பண்ணி சொல்லு என்ன கேட்ட..?
சம்பளம் வர வரைக்கும் 50 ருபாய் கைமாதா கேட்டேன்.
சரி அதுக்கு நான் என்ன சொன்னேன்?
திங்கள் 50 தரன்.. சொன்ன...
அட பாவி... நடந்தட அப்படியே சொன்னா தானே எனக்கு அந்த கணக்கை விவரிக்க முடியும். அதுக்கு நான் என்ன சொன்னேன்?
சம்பள நாள் என்னைக்கு கேட்ட?
அதுக்கு நீ என்ன சொன்ன?
எனக்கு எப்படி தெரியும் நீ தானே வேலைக்கு போறேன்னு சொன்னன்.
அதுக்கு நான் என்ன சொன்னேன்..?
அப்புறம் ஏன்டா சம்பளம் நாள் வரைக்கும் கேட்டேன்னு கேட்ட.. சரி சும்மா நீ மட்டும் தான் வேலைக்கு போறேன்னு காட்டிக்காத விசு.
அப்படி இல்ல சேகர்.. முழுசா கதைக்கு போனா தான் எனக்கு இந்த கணக்கு சொல்லி தர முடியும்.
அதுக்கு அப்புறம் என்ன ஆச்சின்னு உனக்கே தெரியும்.. வெளிய போனும்.. 45ஐ 3லா வகுத்து 15 ருபாய் கேட்ட அதை தான் டேவிட்கிட்ட வாங்கிக்கோ அன்னைக்கு சொன்னேன் இல்லையா.. 50ல் இருந்து 15 போச்சின்ன எவ்வளவு?
நுப்பத்தி அஞ்சி..
டேய், முட்டாள், எத்தனை முறை சொல்வது.. அது முப்பத்தி அஞ்சி...
அதுதான் .. இந்தா 35. ஓகே. 50 ருபாய் செட்டில் ஆச்சி.
விசு... என்னை வெறுப்பு ஏத்தற.. நுப்பத்து அஞ்சு குடுத்துட்டு 50நு சொன்னா எப்படி.
டே சேகர்... முட்டாள், நான் திரும்பவும் சொல்லுறேன்... அது நுப்பத்து அஞ்சு இல்ல, முப்பத்தி அஞ்சி.
கதைய மாத்தத விசு.
இப்படி நான் பேசி கொண்டு இருக்கும் போதே டேவிட் வந்தான்..
இப்ப மூணு பேர் பேசுறோம் இல்லையா அதனால, பெயர போட்டே சொல்லுறன்.
நான்; வா டேவிட்.. எங்க நேத்து எல்லாம் உன்னையும் சேகரையும் காணோம்.
டேவிட்: அது ஒன்னும் இல்ல விசு.. சும்மா இங்க தான் சுத்தி கொண்டு இருந்தோம்.
நான்; டேய்.. கேட்கிறவன் கேனையனா இருந்தா.. மிக்க்சியில மீன் வருத்தேனு சொல்லுவ. அந்த அரிசி காசு கைக்கு வந்தவுடன் என்னை மறந்துடிங்க பாத்தியா
.
சேகர்; அப்படி இல்ல விசு.. நீ சண்டேவும் அதுவுமா கொஞ்சம் நேரம் எக்ஸ்ட்ரா தூங்குவ இல்லையா? அதுதான் உன்ன டிஸ்டர்ப் பண்ண கூடாதுன்னு...
நான்; சேகர்.. நல்லா சொன்ன போ.. காசு இல்லாத போது சனி கிழமை காலையில் வீட்டுக்கு வந்து தூங்குறவன எழுப்புவிங்கோ. நேத்து அவன் டேவிட்கிட்ட 45 ருபாய் வந்த வுடன் என்னை மறந்து விட்டிங்க இல்ல.
சேகர்: சாரி பா... டேய் டேவிட்.. இவன் விசு பாருடா..நுப்பதி அஞ்சி ரூவா கொடுத்துவிட்டு 50 செட்டில் ஆச்சின்னு சொல்லுறான்.
டேவிட்; முட்டாள்,அது நுப்பத்தி அஞ்சி இல்லடா.. முப்பத்தி அஞ்சி..
சேகர் : அதுவா முக்கியம்? நுப்ப ... சாரி "தர்ட்டி பைவ்" எப்படி டா 50 ஆகும்.
டேவிட்: விசு, என்னப்பா.. இவன் கொஞ்சம் குழம்பி போய் இருக்கான்.கொஞ்சம் விவரமா சொல்லேன்.
நான்; சரி டேவிட் நீயே கேளு.
டேவிட் ; சேகர் கவனமா கேட்டுக்கோ.
நான்; இவன் சேகர் சனி கிழமை காலையில் வந்தானா? வந்தியாட சேகர்..
சேகர் : ஆமாம் வந்தேன்.
நான் ; வந்து என்ன கேட்டே?
சேகர் : 50 ருபாய் கை மாத்தா கேட்டேன்.
நான்; நடந்த விஷயத்த மாத்தாம சொல்லு..
சேகர் ; சம்பள நாள் வரை 50 ருபாய் கைமாத்தா கேட்டேன்.
டேவிட்: சம்பள நாள் வரையா? சேகர்.. நீ எப்ப இருந்து டா வேலைக்கு போக ஆரம்பிச்ச...
சேகர் ; அது ரொம்ப முக்கியமா, டேவிட்? நான் வேலைக்கு போன்னேனு சொன்னனா?
டேவிட் ; அப்ப எதுக்குடா சம்பள நாள் வரைன்னு கேட்ட?
சேகர் : இல்ல டேவிட், எனக்கு 100 ருபாய்தான் தேவை பட்டுச்சி. மாச கடைசி ஆச்சே, விசு எங்க போவான்? அது தான் இப்ப 50 ருபாய் கொடு, மீதி 50 சம்பளம் வந்தவுடன் வாங்கிகிறேன்னு சொன்னேன்.
டேவிட்; நல்ல நனசு மாப்பு உனக்கு.அடுத்தவன் மனசை புரிஞ்சு உன் வாழ்க்கைய அட்ஜஸ்ட் பண்ணி வாழ்ற..
சேகர்; அது தான் டேவிட், திங்கள் 50 வாங்கிக்கோன்னு சொன்னான்,இல்ல, இப்ப நுப்பத்தி அஞ்சி கொடுத்துட்டு 50 செட்டில் ஆச்சின்னு சொல்லுறான்
.
டேவிட்: டேய், முட்டாள், மறுபடியும் சொல்லுறன்... அது நுப்பத்தி அஞ்சி இல்ல, முப்பத்தி அஞ்சி.
சேகர்: நீ இப்ப எனக்கு தமிழ் சொல்ல வந்தியா? இல்ல இந்த கணக்க புரிய வைக்க வந்தியா?
டேவிட்: என்ன விசு, கணக்கு எங்கேயோ இடிக்குதே..நுப்பட்.. சாரி. இவனோட பேசி எனக்கும் தமிழ் தடுமாறுது...முப்பத்தி அஞ்சி எப்படி பா 50 ஆகும்?
நான் : இப்படி கேளு.இவனுக்கு நான் திங்கள் எவ்வளவு தரன்னு சொன்னேன்.
டேவிட் ; எனக்கு புரிஞ்ச படி பாத்தா.. 50.
நான் ; சரி.. சனி கிழமை நீயும் அவனும் எங்க வீட்டை விட்டு போனீங்க இல்ல,
அரிசி மூட்டை வாங்க. அதில எவ்வளவு சுட்டிங்க.
டேவிட் ; அதுக்கும் இதுக்கும் என்ன கனக்சன் விசு.
நான் ; கேட்ட கேள்விக்கு பதில்.. ப்ளீஸ்!
டேவிட் ; 45 சுட்டோம்.
நான் ; 45ஐ 3லா வகுத்தா?
டேவிட் ; அத ஏன் இப்ப 3ஆல வகுக்கிற?
நான் ; கேட்ட கேள்விக்கு மட்டும் பதில்
டேவிட் ; 45ஐ 3ல வகுத்த.. 15.
நான் ; ஒரு 15, 15நா. ரெண்டு 15 எவ்வளவு?
சேகர் ; நுப்பது.
நானும் டேவிட்டும் ஒன்றாக சேர்ந்து ; டேய் முட்டாள், அது முப்பது.
நான் ; 45ல் 30 போனா எவ்வளவு?
டேவிட் : 15.
நான் ; அந்த 15தான் இந்த 50ல் இருந்து கழிச்சு 35 கொடுத்தேன்.
டேவிட் ; சேகர்.. நீ முட்டாளா? இல்ல முட்டால போல நடிக்கிறாயா? கணக்கு கரெக்டா தான இருக்கு?
சேகர் ; சரி.. எனக்கு ஒன்னும் புரியில. இருந்தாலும் இவன் கணக்கு பிள்ளை, அதனால் கரக்டா தான் இருக்கும்னு நம்பி வாங்கிட்டு போறேன்.
நான் ; சரி சேகர்.. இந்த புதன் எனக்கு சம்பள நாள்.. அன்னிக்கு வந்து அடுத்த 42.50ம் வாங்கிகோ. அதோட.. 100 செட்டில் ஓகே.
சேகர் ; 42.50 அது எப்படி 100ர செட்டில் பண்ணும் ?
நான் : நீ இன்னைக்கு கொஞ்சம் குழம்பி போய் இருக்க.. புதன் வா அந்த கணக்க சொல்லுறேன்.
இவர்கள் இருவரும்.. வெளியே கிளம்ப.. நான் என் மனதில்.. எனக்கே கணக்கா?அனுமாருக்கே ஹை ஜம்ப்பா என்று மீண்டும் அந்த புதன் கிழமை வர இருக்கும் கணக்கை மனதிலே புரட்டி எடுத்தேன்...
http://www.visuawesome.com/
அதானே...! யாருகிட்டே...!
பதிலளிநீக்குயாருப்பா அங்கே, இந்த நுப்பத்தஞ்சு சாரிபா இந்த முப்பத்தஞ்சு கணக்கை சொல்லி எல்லோரையும் குழப்புன நம்ம விசு இன்று முதல் க்ரேசி விசுன்னு அழைக்கப்படுகிறார்ர்ர்ர்ர்!!!!!!!!!!!!!!!!!!
பதிலளிநீக்குநீங்க விசுன்னு பேர் இருக்கறதால குழப்பவாதியா ? குழப்பவாதியா இருக்கறதால உங்க பேர் விசுவா ? அந்த நுப்பத்... சாரி முப்பத்தியஞ்சு கணக்கு எனக்கும் புரியல. (பி.கு. நானும் கணக்கு பிள்ளை(பெண்) தான்)
பதிலளிநீக்குநல்ல இடுகை. நல்ல நகைச்சுவை. வாழ்த்துக்கள்
சுஜாதா
ஹஹ்ஹாஹஹஹ் நல்ல நகைச்சுவை....கொஞ்சம் கவுண்டர், செந்தில் காமெடியும், வைகைப்புயலின் காமெடியும்...கலந்து!!!! ரொம்பவே ரசித்தோம்! கணக்கு செமையா மண்டைய குழப்பினது என்னவோ உண்மை!!ஹஹஹஹஹஹ்
பதிலளிநீக்கு