சென்ற இடுகையின் தொடர்ச்சி..
விசு... தண்டபாணி பேசுறேன்...
சொல்லு தண்டம்..
நான் எத்தனை முறை சொல்லி இருக்கேன். நீயும் என் மனைவி போலவே என்னை தண்டம்.. தண்டம்னு கூப்பிடாதே என்று. தயவு பண்ணி இனிமேல் அப்படி கூப்பிடாதே.
கொஞ்சம் சாரி பண்ணிக்கோ தண்டம்.. சாரி .. பாணி.
நாளைக்கு காலையில் என்ன பிளான் விசு?
ஒன்னும் இல்ல வீட்டில் தான் இருப்பேன், ஏன் கேட்கின்றாய்?
வேற ஒன்னும் இல்ல, நாளைக்கு வார இறுதி. நல்லா தூங்கிவிட்டு ஒரு 9 மணி போல எழுந்து உலக கோப்பை கால்பந்து பார்க்கலாம் என்று நினைத்தேன், அந்த நினைப்பில் என் மனைவி நெருப்பை அள்ளி கொட்டிவிட்டாள்.
புரியல, விவரமா சொல்லு.
ஒன்னும் இல்ல, உன் வீட்டில எல்லாரும் ஊருக்கு போனதினால் காலையில் உனக்கு நாஸ்டா அனுப்ப வேண்டும் என்று இங்கே ஒரு பிளான்.
நல்ல பிளான் தண்டம்.. சாரி பாணி. ஒருவேளை நீங்க எடுத்து கொண்டு வருவது இட்லியா இருந்தால் எனக்கு தேங்காய் சட்னி தான் பிடிக்கும்னு மாமியிடம் சொல்லி விடு.
அட பாவி... நான் உன்னை கூப்பிட விஷயமே ஒரு வேண்டுகோள் விட தான்.
சொல்லு தண்டம்...
நீ ஒரு அரை மணி நேரம் கழித்து என் வீட்டுக்கு போன் பண்ணி பொதுவா விசாரித்து விட்டு பிறகு நாளைக்கு காலையில் நீ எங்கேயோ போற என்று ஒரு பொய்யை அவிழ்த்து விடு. உனக்கு கோடி புண்ணியம்.
தண்டம்... போன வருஷம் உன் வீட்டிலே ஊருக்கு போனப்ப நீ பாஸ்கட் பால் இறுதி ஆட்ட நேரத்தில் உடம்பு செரியில்லை என்று போன் பண்ணி வத்தகொழம்பும், வாழக்காய் பொரியலையும் கேட்டு வாங்கி .என் மடியில நெருப்ப கொட்டுனியே அத மறந்து விட்டாயா? மவனே.. .மரியாதையா காலையில் கிளம்பி சாப்பாடை எடுத்து கொண்டு வா...
வாத்தியாரே... கொஞ்சம் பெரிய மனசு பண்ணி பழைய கதையெல்லாம் மறந்துடு..
சரி, விடு தண்டம்.. இந்த முறை ஒரு முறை மட்டும் நீ எஸ்கேப்... டோண்ட் மேக் இட் எ ஹாபிட்.
இந்த போன் முடிந்தவுடன், ஒரு அரை மணி நேரம் கழித்து....
ஹலோ .. விசு பேசறேன்..
சொல்லுங்க அண்ணா...அவங்க எல்லாம் பத்திரமா போய் சேர்ந்தார்களா?
சேர்ந்துட்டாங்க, சுந்தரி.. நீங்க எல்லாம் எப்படி..
நல்லா இருக்கோம் அண்ணா ...தண்டதுக்கிட பேசுறிங்களா?
இல்ல சும்மா தான் கூப்பிட்டேன்.
அண்ணா, நாளை காலை என்ன பிளான்? உங்களுக்கு ஒரு 9 மணி போல டிபன் அனுப்பலாம்னு இருக்கேன்.
நாளைக்கு காலையிலா? நான் வேற ஒரு பிளான் வைச்சு இருக்கேன்,
இன்னொரு நாள் பார்க்கலாம்.
ஒரு நிமிஷம் இருங்க அண்ணா..
ஏங்க.. அண்ணனுக்கு நாளை காலை வேற பிளான் இருக்கான், இன்னொரு நாள் பார்த்து கொள்ளலாம் என்று சொல்லுறார்.
அப்படியா.. ஒரு நிமிஷம் போனை ஸ்பீகரில் போடு
வாத்தியாரே.. ஏன் சாப்பாட வேண்டாம்னு சொல்லிட்ட?
(வயிதேரிச்சல்லோடு) இல்ல தண்டம்...வேற பிளான் இருக்கு..
நீ கொடுத்து வைச்சது அவ்வளவு தான் வாத்தியாரே.. மல்லிபூ போல் இட்லியும் கூடவே உனக்கு பிடித்த தேங்காய் சட்னியும் ..பிளான் மாறினா சொல்லு வாத்தியாரே
சரி தண்டம்...
போனை வைச்சிட்டு.. அடடே.. தப்பு பண்ணிடோம்மா? என்று யோசித்து கொண்டு இருக்கையில் தொலை பேசி மீண்டும் அலறியது..
ஏங்க...
சொல்லும்மா.. எப்படி இருக்கீங்க..
நாங்க நல்லா இருக்கோம். அது சரி, சுந்தரி இப்பதான் கூப்பிட்டாள். அவங்க சாப்பாடு அனுப்பவேண்டாம். வேற எதோ பிளான் இருக்குன்னு சொன்னீங்களாமே... அது என்ன பிளான்...நாங்க அங்க இல்லன்னு எதையும் சொதப்பி வைக்க வேண்டாம்...
அப்படியெல்லாம் இல்லம்மா..அவங்கள்ளுக்கு ஏன் கஷ்டம்ன்னு தான் யோசித்து அப்படி சொல்லி வைச்சேன்.
அது சரிங்க...இருந்தாலும் அவங்க தப்பா நினைக்க படாது இல்லையா.. இப்படி பண்ணுங்க.நீங்க வேணும்னா ஒரு 9 மணி போல் அவங்க வீடிற்கு போய் சாப்பிட்டு வந்துடுங்கோ.
இல்ல அது வந்து..
அது வந்து போய் எல்லாம் இருக்கட்டும்..நாளை காலையில் 9 மணி நான்
அவங்க வீடு போனில் பேசுவேன்.. நீங்க அப்ப அங்க இருக்க வேண்டும். இருப்பீங்க
சரி..
போனை வைத்து விட்டு..
அட பாவி.. தண்டமா போன தண்டதிர்ற்கு உதவ போய், இப்ப சொந்த செலவில் சூனியம் வைத்து கொண்டேனே..
தொடரும்...

அடடா...! ஹா... ஹா...
பதிலளிநீக்குஹலோ ஹலோன்னு சொல்லிட்டு ஊர் போனை கட் பண்ணாம, என்னையா இது ஒரு அடிமைத்தனம் ?
பதிலளிநீக்கு