விசு... இந்த வாரம் சனி, என்ன பிளான் வைச்சி இருக்க?
தண்டபாணியின் தொலைபேசி அழைப்பது வந்தது.
ஒன்னும் சொல்ற மாதிரி இல்ல, தண்டம். நீங்க எல்லாம் என்ன பண்றீங்க?
சொல்லிக்கிற மாதிரி ஒன்னும் இல்ல, சும்மா தானே இருக்கீங்க, பிள்ளை குட்டிகளை கூட்டி கொண்டு இங்க வந்துடுங்க, நான் மற்ற சில நண்பர்களையும் கூப்பிடுறேன். உட்கார்ந்து பேசி ரொம்ப நாள் ஆச்சி. என்ன சொல்ற விசு?
இரு மாப்பு , ஒரு நிமிஷம் வீட்டில கேட்டு சொல்றேன்.
என்னாவிசு, இவ்வளவு நேரம் அங்க கேட்காமலே இவ்வளவு பதில் சொல்லுற ... கோச்சிக்க போறாங்க விசு.. உடனே கேளு.
ஏம்மா, இந்த சனி மாலை ஏதாவது பிளான் இருக்கா?
ஒன்னும் இல்லீங்க, என்ன விஷயம்..
இல்ல, தண்டம் வீட்டுக்கு வர சொல்லி கூப்பிடுறாரு...என்ன சொல்லட்டும்?
நானே அவங்க சுந்தரியை பாக்கணும்ன்னு தான் யோசித்தேன், ஓகே சொல்லுங்க, மாலை ஒரு 5- 6 போல போலாம்.
தண்டம், ஓகே, நாங்க வரோம், சரி டின்னெர் என்ன பிளான்?
இங்கே சுந்தரிய ஏதாவது செய்ய சொல்லலாம்.
தண்டம், சும்மா அவங்கள வேலை வாங்காதே...நம்ம வேண்டும் என்றால் "பானை ராசி" (Pot Luck) செய்யலாம்.
அதுவும் நல்லாத்தான் இருக்கும் விசு, சுந்தரி சமையல் சாப்பிட்டு சாப்பிட்டு நாக்கு எல்லாம் செத்து கெடக்கு.
பாத்து தண்டம், கேட்டுற போது, இப்பயாவது நாக்கு இருக்கு, நீ சொன்னது கேட்டுச்சி, உன் நாக்கு "புண்ணாக்கு" தான்.
இல்ல, சுந்தரி உள்ள பசங்கள கவனித்து கொண்டு இருக்காங்க.
மேல என்ன நடந்தது என்பதை சொல்லும் முன்னால், இந்த " பானை ராசி (Pot Luck ) என்றால் என்னவென்று தெரியாதவர்களுக்கு ஒரு சின்ன விளக்கம். சில வேளைகளில், நண்பர்கள், உறவினர்கள், மற்றும் சக ஊழியர்கள், திடீரென்று ஒரு டின்னெர் பிளான் என்றால் அதற்கு இந்த "pot Luck" செய்யலாம் என்று முடிவு செய்வோம். இது ஒன்றும் கம்ப சூத்திரம் இல்லை. வருகிற ஒவ்வொரு குடும்பமும், அவர்கள் இல்லத்தில் என்ன சிறப்பாக சிறப்பாக, சுவையாக செய்வார்களோ, அதை ஒரு இரண்டு குடும்பத்திற்கு தேவையான அளவாய் செய்து எடுத்து வர வேண்டும். நாம் என்ன செய்ய போகிறோம் என்பதை அழைத்தவர்களிடம் சொல்லிவிட்டால் , அவர்கள் அதை மற்றவர்களுக்கு தெரிய படுத்துவார்கள். இப்படி செய்வதினால், அனைவரும் ஒரே விஷயத்தை செய்து எடுத்து வருவது தவிர்க்க படும்.
சரி விசு, சுந்தரி, உங்க வீட்டம்மாவை அந்த "இறால் பொரியல்" எடுத்துனு வர முடியுமான்னு கேக்கறா.
டேய் பாவி, உனக்கு இறால் வேண்டும் என்றால் கேட்டு வாங்கி சாப்பிடு, எனக்கே "பக்கத்து இலைக்கு பாயசம்" டயலாக்கா?
சரி விடு விசு, நான் தான் சொன்னேன், சரி நான் இப்படி கேட்டன்னு உங்க வீட்டிலும், எங்க வீட்டிலும் சொல்லிடாத.
ஏம்மா, நாளைக்கு இறால் பொரியல் கிடைக்குமான்னு கேட்கின்றார்கள்.
அவங்க ராசி, இறால் இருக்கு, ஓகே சொல்லிடுங்க.
தண்டம், ஓகே நாளை சந்திப்போம்
மறு நாள் மாலை ஒரு நாலு மணி போல்,
என்னங்க எல்லாம் ரெடியா?
ரெடி, அந்த இறால் பொரியல் எங்க?
அங்க பாருங்க அந்த பிளாஸ்டிக் பையில் போட்டு வைச்சு இருக்கேன்.அதை
மறக்காமல் எடுத்து கொண்டு போய் காரில் வையுங்க.
சரி மா..
ஐந்து நிமிடம் கழித்து கார் புறப்பட தயார் ஆனா நேரத்தில்:
ஏங்க, அந்த இறால் வாசனையே காரில் வரலியே... எங்க வைச்சிங்க?
ஐயோ, மனிச்சிக்கோ, சுத்தமா மறந்துட்டேன்,
போங்க, போய் எடுத்ன்னு வாங்க.ஏங்க, அங்க சமையல் அறையில் அந்த இறால் சுத்தம் பண்ணி அந்த அழுக்கை எல்லாம் ஒரு பையில் போட்டு வச்சி இருக்கேன், அதே எடுத்து பின்னால குப்பை தொட்டியில் போட்டுங்கோ. இல்லாட்டி திரும்பி வரும் பொது வீடே நாறிடும்.
ஓகே மா...
குப்பையா வீசிவிட்டு, இறாலை காரின் பின்னே வைத்து விட்டு தண்டபாணி வீட்டை நோக்கி சென்றோம்.
அங்கே....
வா விசு.... இங்கிலிஷ்காரன் ஸ்டைல் விசு நீ.. நேரத்திற்கு வர..
நன்றி தண்டம்... நம்மால் முடிந்த எதோ..தண்டம், இந்த இறால்...
அதை அந்த மேசை மேல், மற்ற சாப்பாடோட வைச்சிடு. மற்றவர்கள் எல்லாம் வந்தவுடன் சாப்பிடலாம் ஏன் விசு, ஒரு ரெண்டு குடும்ப அளவு தானே சொன்னேன், நீ ஏன் இவ்வளவு பெரிய பையில்.
விடு தண்டம்... "ஆண்டவன் படைச்சான்.... என்கிட்ட கொடுத்தான்... "அம்புடுதேன்...
சற்று நேரம் கழித்து,அனைவரும் மேசையில் அமர்ந்து ஒவ்வொரு பையாக பிரிக்கையில்..
அண்ணே.
சொல்லு சுந்தரி...
இந்த இறால் என்ன இவ்வளவு பச்சை வாசனை? அக்கா நல்லா செய்வாங்களே...?
நல்லாதான இருந்தது... நான் கூட ருசி பார்த்தேனே...
அதை முழுதாக திறந்க்தவுடன் அனைவரும் அதிர்ந்து விட்டனர்..
அண்ணே.. இந்த பை முழுவதும்,... அழுக்கு, இறால் எங்கே...
அட பாவி... ஏங்க... குப்பைக்கு பதிலா இறாலை அங்கே வீசிட்டீங்களா?
தெரியிலே, பை ரெண்டும் ஒரே மாதிரியா இருந்தது..அது தான்..
வாத்தியாரே, நான் பை இவ்வளவு பெரிசா இருக்கும் போதே நினைச்சேன்.. நீ அதுக்கும் ஒரு பாட்டு பாடி என் வாயை கட்டிட்ட..
சரி வா தண்டம், வீட்டில் போய் அங்கே இருக்கா பார்க்கலாம். அந்த பை நல்ல இறுக்க கட்டி தான் இருந்தது...
ஏங்க.. என்ன அசிங்கம்... அது..
நீ சும்மா இரு.. வா தண்டம்...
சிறிது நேரம் கழித்து..என் வீட்டின் பின்னால் குப்பைத்தொட்டியின் அருகே செல்கையில்...
தண்டம், கருப்பு பூனை என்னப்பா குருக்கில மட்டும் போகாம எதோ நன்றி சொல்லிட்டு போற மாதிரி இருக்கு,
போய் அங்கே பாரு வாத்தியாரே..
தண்டம்.. பூனை எல்லாத்தையும் ஸ்வாஹா... நீ கொடுத்து வைச்சது அவ்வளவுதான்.
ஏன் வாத்தியாரே, சொல்றேன்னு தப்பா நினைக்காதே... முட்டாள் தனமான வேலையே பண்ணி இருக்கி...
என்று தண்டபாணி சொல்லி முடிப்பதற்குள் அவன் தொலை பேசி ரிங்கியது....
சொல்லு சுந்தரி...
சாயங்காலம் சக்கரை டப்பா எடுத்திங்களா?
ஆமாம், காபி போட்டு குடிச்சேன். அதுக்கு இப்ப என்னா?
எத்தினை தரவை உங்க மரமண்டைக்கு சொல்லுறது..சக்கரை டப்பாவ உப்புக்கு பக்கத்தில் வைக்காதீங்கன்னு..?
சரி, மன்னிச்சிக்கோ, இது ஒரு பெரிய விஷயம்னு இப்படி சத்தம் போடுற..
வாங்க, வீட்டுக்கு வந்து, முழு பாத்திர பாயாசமும் நீங்களே குடிங்க...
தண்டம்..நீ எனக்கு அறிவுரை.. போடாங்க...
வணக்கம்
பதிலளிநீக்குஆரம்பம் முதல் முடிவு வரை நன்றாக உள்ளது... பகிர்வுக்கு நன்றி.
என்பக்கம்
ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: தீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும...: தீபாவளித் திருநாளை முன்னிட்டு ரூபன் &யாழ்பாவாணன் இணைந்து நடாத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014 போட்டி...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கலக்கல் நகைச்சுவை! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குHilarious ! Good one Visu. Enjoying your prolific posts ! Sujatha
பதிலளிநீக்குசிறந்த பகிர்வு
பதிலளிநீக்குதொடருங்கள்
படியுங்கள் இணையுங்கள்
தீபாவளி (2014) நாளில் மாபெரும் கவிதைப் போர்!
http://eluththugal.blogspot.com/2014/08/2014.html
பக்கத்து இலையில் "உப்பு" போட்ட பாயசம். ஹா..ஹா... நல்ல காமெடி
பதிலளிநீக்கு