கடந்த இரண்டு 24 மணி நேரத்தில் கிட்ட தட்ட 12 மணி நேரம் போல் தொலைக்காட்சியின் எதிரிலேயே அமர்ந்திருந்தேன் என்று தான் சொல்லவேண்டும்.
எந்த சேனலை திருப்பினாலும் ஆப்ரிக்க அமெரிக்கர் ஜார்ஜ் பிலோய்ட் க்கு நடந்த அநீதிக்காக நியாயம் கேட்டு நடக்கும் போராட்டமாகவே இருந்தது. இந்த போராட்டத்தினை பலர் வன்முறையில் ஈடுபட, மீண்டும் ஒரு தவறு நிகழ்கின்றதே என்று மனது கனத்தது.
ஆனால் நான் தொலைக்காட்சியின் எதிரில் அமர்ந்தது வேறு ஒரு காரியத்திற்காக. SPACE X என்ற தனியார் நிறுவனமும் NASA வும் சேர்ந்து விண்கலத்திற்கு வீரர்களை அனுப்பும் நிகழ்ச்சி.
சென்ற புதன் அன்று மதியம் 12 :30 க்கு புறப்பட வேண்டிய விண்கலம் புறப்பட ஏழு நிமிடம் இருக்கும் நேரத்தில் தட்பவெப்ப நிலை சரியில்லாத காரணத்தினால் சனிக்கிழமைக்கு தள்ளி வைக்க பட்டது.
நேற்று அனைத்தும் சரியாக முடியாக மதியம் இரு வீரர்களுடன் விண்கலம் கிளம்ப, மனதோ 1984 ஏப்ரல் மாதத்திற்கு சென்றது.
Rakesh Sharma |

விண்வெளிக்கு அமெரிக்காவும் ரஷியாவும் போட்டி போட்டுகொண்டு வீரர்களை அனுப்பி கொண்டார் இருந்த அந்த நாட்களில் இந்தியாவை சார்ந்த ராகேஷ் சர்மா என்பவர் ரஷ்ய விண்கலத்தின் மூலம் விண்வெளிக்கு சென்ற நாள் தான் அது.
அந்த காலத்தில் இந்த மாதிரி ஒரு செய்தி கிடைத்தால் போதும். செய்திக்கு தாள், வார இதழ் மாத இதழ் என்று தேடி பிடித்து அலசி ஆராய்ந்து எடுத்து விடுவோம்.
அப்படி படிக்கையில் ராகேஷ் ஷர்மா என்ற இந்திய விமான படையை சார்ந்த இவர் பல போட்டிகளுக்கு பின்னர் தகுதி செய்ய பட்டார் என்று தெரிய வந்தது.
அவர் விண்கலம் செல்ல, நாடே அவரை பாராட்ட, அந்நாள் பிரதமர் இந்திரா காந்தி அவரோடு அவர் விண்வெளியில் இருக்கையிலே உரையாட, ஒரே கொண்டாட்டம் தான்.
இருந்தாலும் மனதில் ஒரு விசனம். இந்த நாடே ராகேஷ் சர்மாவை கொண்டாடி கொண்டு இருக்கையில் என் மனமோ ரவீஷ் மல்ஹோத்ரா என்ற இன்னொருவரை நினைத்து மிகவும் வருந்தியது.
நமக்கு எப்பவுமே வெற்றி பெற்றவர்களை பாராட்டுவதோடு சோர்ந்து இருப்பவர்களை நினைத்து ஆறுதல் செய்யும் புத்தி தானே. அதனால் அன்று ரவீஷ் மல்ஹோற்றா என்பத்வருக்காக ஒரு பிரார்த்தனை செய்தேன்.
யார் அந்த ரவீஷ் மல்ஹோத்ரா.. ? இது என்ன அந்த காலமா? நூலகத்திற்கு சென்று செய்திதாள் , வார இதழ் மாத இதழில் தேட..
கூகிளில் தட்டுங்கள். நீங்களும் அவருக்காக ஒரு முறை.. அட சே.. இவருக்கு இப்படி ஆயிடிச்சேன்னு சொல்லுவீங்க!
அப்படி படிக்கையில் ராகேஷ் ஷர்மா என்ற இந்திய விமான படையை சார்ந்த இவர் பல போட்டிகளுக்கு பின்னர் தகுதி செய்ய பட்டார் என்று தெரிய வந்தது.
அவர் விண்கலம் செல்ல, நாடே அவரை பாராட்ட, அந்நாள் பிரதமர் இந்திரா காந்தி அவரோடு அவர் விண்வெளியில் இருக்கையிலே உரையாட, ஒரே கொண்டாட்டம் தான்.
இருந்தாலும் மனதில் ஒரு விசனம். இந்த நாடே ராகேஷ் சர்மாவை கொண்டாடி கொண்டு இருக்கையில் என் மனமோ ரவீஷ் மல்ஹோத்ரா என்ற இன்னொருவரை நினைத்து மிகவும் வருந்தியது.
Ravish Malhotra with Rakesh Sharma |