வெள்ளி, 29 ஆகஸ்ட், 2014

கலிபோர்னியாவில் தண்ணீர் தட்டுபாடு?


கடந்த சில நாட்களாகவே கலிபோர்னியாவில் எங்கே பார்த்தாலும், எதிலே பார்த்தாலும் "தண்ணீரை சேமியுங்கள்", "தண்ணீரை சிக்கனமாக உபயோக படுத்துங்கள்" என்று எல்லார் மனதிலும் படும் படியான எச்சரிக்கைகள். அடடே... வீட்டில்குழாயை எப்போது திறந்தாலும் பாய்ந்து வரும் தண்ணீர், எங்கே பார்த்தாலும் பச்சை பசேல் என்ற புள் வெளிகள், பள்ளத்தாக்குகள், மற்றும் நிறைய ஏரிகள். காய்கறி விளைச்சலில் கலிபோர்னியாவிற்கு நிகர் யாருமே இல்லை. பழ வகைகளா, மற்றவர்கள் பேச்சுக்கே இடமில்லை.

இன்னும் சொல்ல போனால் " California's agricultural abundance includes more than 400 commodities. The state produces nearly half of US-grown fruits, nuts and vegetables. Across the nation, US consumers regularly purchase several crops produced solely in California'"


அமெரிக்காவில் உள்ள பல பெரிய ஏரிகளில் பல ஏரிகள் கலிபோர்னியாவில் உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.  சில வருடங்களுக்கு முன் "டாஹோ" என்று அழைக்கபடும் ஏரிக்கு சென்று அதன் பரப்பளவை கண்டு பேய் அறைந்தவன்  போல் நின்றேன் ( பேய் அறைந்த கதையை மற்றொரு நாள் கண்டிப்பாக சொல்கிறேன்).


Lake Tahoe 

இவ்வளவு செழிப்பான இடத்திற்கு தண்ணீர் தட்டுபாடா ? சற்று நம்ப மறுத்தேன்.   இந்தியாவின் பஞ்சாப், போல அல்லவா நம்ம கலிபோர்னியா, இங்கே எப்படி இந்த தட்டுபாடு என்று சற்று விசாரிக்க ஆரம்பித்தேன். இதை விசாரிக்கையில் தெரிய வந்தது தான் "வருமுன் காப்போம்- யுக்தி" .

கடந்த சில வருடங்களாக வந்த குறைச்சலான மழையினால் இந்த ஏரிகளில் நீரளவு வற்றி வருகின்றதாம், இப்படியே நிலைமை போனால் இன்னும் சில வருடங்கள் கழித்து     தட்டுபாடு வர நேரிடும் என்று இப்போதே அபாய சங்கு ஊதுகின்றார்கள். எவ்வளவு நல்ல காரியம்.

நம்ம ஊரில் வளரும் போதும், வாழும் போதும், அரசியவாதிகளும் அலுவலர்களும் அதிகாரிகளும்  "ஆறு" என்ற பெயர் கொண்ட அன்னையை "மணல் எடுக்கின்றோம்" என்று சொல்லி மாறி மாறி கற்பழித்ததை பார்த்து வளர்ந்த எனக்கு இது ஒரு பெரு மாற்றம்.

மணல் என்பது ஆற்று அன்னையின் தாலி அல்லவா? அதை எடுத்து அவளை விதவையாக்கி, விதவையும் விட்டு விடமால்  அவள் வெள்ளை சேலையையும் துயில் உரிப்பதை காண்கையில் அந்த ஆற்றில் ஈரம் உள்ளதோ இல்லையோ, நம் கண்ணில் ஈரம் நிச்சயம் உண்டு.

சரி இப்போது விஷயத்திற்கு வருவோம். இங்கே "தண்ணீரை சேமியுங்கள்" என்று சொல்லி  விட்டுஅரசு ஒன்றும் அமைதியாக இருக்காது. தண்ணீரை வீணடிக்கும் பொது மக்களுக்கும் சரி, நிருவனகங்களுக்கும் சரி, பெரிய அபராதம் விதிக்க படும். இந்த விதி முறைகளினால் இங்கே பொதுவாக முன்னேற்றங்கள் ஏற்பட வாய்ப்புண்டு.

இது மட்டும் அல்லாமல் வீ ட்டிற்கு வெளியே உள்ள புள் தரையை நீக்கிவிட்டு அங்கே மரத்தை நட்டால் அதற்க்கு வெகுமதியாக ஓவ்வொரு Square feetர்க்கும் அரசு 2$ தருகிறது. அடுத்த இரண்டு வருடங்களில் வருணபகவான் கருணையிட்டால் இந்த பிரச்சனை குறையும்.

கலிபோர்னியா வாழ் மக்களுக்கு ஒரு அறிவிப்பு-எச்சரிக்கை. இங்கே சில நாட்களாக போய் கொண்டு இருக்கும் "பனிகட்டி வாலி பந்தயம்" (Ice Bucket Challenge) தவிருங்கள். இதை நீங்கள் செய்வதை பார்த்தால் காவல் துறை அதிகாரிகள் நிர்வசாரமாக நீரை வீணாக்கியதால்500$ அபராதம் விதிக்க நேரிடும். அப்படியே தாங்கள் அந்த வேலையை செய்து  இருந்தாலும் அதை பெருமையாக சமூக வலையில் எதிலும் போட்டு விடாதீர்கள். நீங்கள் இந்த வேலையை செய்தது கலிபோர்னியாவில்  என்று நிருபனம்  செய்து உங்களுக்கு அந்த அபராதம் வழங்க படும்.

பின் குறிப்பு: இதை படித்த பின்னும் யாரவது என் பெயரை இந்த போட்டிக்கு சிபாரிசு செய்தால் "மவனே, உனக்கு நாளைக்கு பால் தான்"

http://www.visuawesome.com/


"லிங்கா" இல்லை, இல்லை " நெற்றி கண்"? ரஜினிக்காக!

எனக்கு பிடித்த ரஜினிகாந்த் பாத்திரம்; நெற்றிகண் சக்ரவர்த்தி.

அடுத்த சில இடுகைகளில் "எனக்கு பிடித்த ரஜினிகாந்த்" என்ற தலைப்பில் சில இடுகைகள் பதிவு செய்யவுள்ளேன். சிலர் ஏன் என்று கேட்பது செவியில் விழுகிறது. ஒன்றும் இல்லை "லிங்கா" படபிடிப்பின் சில ஸ்டில்களை பார்க்கையில் ரஜினிகாந்த் அவர்கள்  மிகவும் வயதாகி சோர்வாகவும் மற்றும் ஒரு நோயாளியாகவும் என் கண்களுக்கு படுகிறார்.

நான் ஏற்கனவே கூறியது  போல் படையப்பாவிற்கு பிறகு நான் ரஜினியின் படங்களை பார்ப்பதை விட்டு விட்டேன். வயதான இவர் முகத்தில் சுண்ணாம்பு அடித்து கொண்டு தன பேத்தி வயதில் உள்ள பெண்களோடு ஓடி ஆடி விளையாடுவதை பார்க்க சகிக்க முடிய வில்லை. ஆனால் 80-90 களில் இவர் படத்தை ரசித்து பார்த்தவன் என்ற காரணத்தினால் எனக்கு படித்த ரஜினி தொடர்ச்சி.

எனக்கு பிடித்த ரஜினி கதா பாத்திரங்களிலே "மூன்று முகம் - அலெக்ஸ் பாண்டியன்"னிற்கு நிகர் எதுவும் இல்லை. அதை நான் எவ்வளவு விரும்பினேன் என்பதை இங்கே படிக்கலாம். அதற்கு அடுத்த படியாக சில வேடங்கள் வந்தாலும் அதில் ஒரு முக்கிய பாத்திரம் "நெற்றி கண் - சக்ரவர்த்தி".

வயதான இந்த காலத்து ரஜினி வாலிபனாக நடிப்பதை பார்த்து மனம் வேதனை பட்டாலும், வாலிப வயதில் அவர் வயதானவராக நடித்த இந்த பாத்திரம் நிறைவில் நின்றது.
இந்த பாத்திரத்தில் இவர் காம இச்சைக்கு அடிமையான வயதான தந்தை பாத்திரம் . கதை கே.பாலச்சந்தர், வசனம் : விசு மற்றும் சில முக்கிய வேடத்தில் லட்சுமி, சரிதா, மேனகா, சிரிப்புக்கு தேங்காய் ஸ்ரீனிவாசன் மற்றும் கவுண்ட மணி.

சரத்பாபுவிடம் " வாழ்கையில் ஒருத்தன் மேல போறதும், கீழ வரதும்  அவனுடைய கொள்கையில் தான் இருக்குன்னு ஆணிதரமா நம்புறவன் இந்த சக்ரவர்த்தி"...."நீங்க நம்ம ஜாதி...." அந்த டைலாக் உச்சரிப்பு, பின்னணி இசை.

அடுத்த காட்சியில் தன் அலுவலகத்திற்கு சென்று அங்கே இருக்கும் அதிகாரிகளுக்கு ஒரு அறிவுரை.

மற்றும் அந்த தந்தை - மகன் அந்தபுரத்தில் சந்திக்கும் காட்சி.. சொல்லி கொண்டே போகலாம்.

மற்றும் "நீ உபதேசம் பண்ணி நான் கேக்குறதுக்கு நான் ஒன்னும் ஈஸ்வரன் இல்லடா! கோட்டீஸ்வரன்..."

இந்த மாதிரி பல காட்சிகளில் தன்னுடைய பாணியில் வந்து கலக்கும் சக்ரவர்த்தி எனக்கு போதும்.

லிங்கா படம் ரிலிஸ் ஆகும் (ஜக்குபாய் போல முடியாமல் இருந்தால் சரி தான்) நாளில் எனக்கு யு டியுப்பில் :"நெற்றி கண்"

http://www.visuawesome.com/

புதன், 27 ஆகஸ்ட், 2014

தீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014


நண்பர்களே, இந்த போட்டியில் சேரும் அளவிற்கு எனக்கு தமிழ் அறிவும் இல்லை, கவிதை திறனும் இல்லை. இருந்தாலும் இந்த படத்தை பார்த்தவுடன், விட்ட குறை, தொட்ட குறை போல் ஓர் உணர்ச்சி.இவளை எனக்கு நன்றாக தெரியும் என்ற ஒரு உந்துதல். எனக்கு தெரிந்த வார்த்தைகளை வீசி விட்டேன். அவ்வளவு தான். போட்டிக்காக அல்ல!  

செவ்வாய், 26 ஆகஸ்ட், 2014

மனைவிக்கு " I love you" வா? தொடர்ச்சி!


திருமணமான இந்திய தம்பதிகளுக்கான அறிவுரை.

இங்கே எப்படி வந்தோம் என்பதை சென்ற இடுகையில் கண்டோம். அதை படித்து விட்டு இதை படித்தால் கதை கொஞ்சம் சுவராசியமாக போகும். தயவு செய்து சென்ற இடுகையை இங்கே படித்துவிட்டு பின்பு தொடரவும்.

இந்த நிகழ்ச்சியில் மனைவிகளுக்கு என்ன பயன் என்று என் மனைவி கேட்க்க அதற்க்கு பதிலாக அவர்கள் சென்ற நிகழ்ச்சியில் கூட ஒரு கணவர் முரட்டு காளை போல வந்தார். அவரை பசு மாடாக்கி அனுப்பினோம் என்று சொல்ல.... நானும் என் நண்பர்கள் என்று அழைக்கப்படும் மற்ற சிலரும் தம் தம் மனைவிகளோடு இந்த அறிவுரை நிகழ்ச்சிக்குபலி கடா போல் இழுத்து வரப்பட்டோம்.


(I dont own this picture, just googled it, liked it, and pasted it!, thanks google)

நானும் சரி, என் நண்பர்களும் சரி, மனைவிகளிடம் சற்று செல்லமான கோவத்தை காட்டிவிட்டு எங்கள் இருக்கையில் அமர்ந்தோம். சற்று நேரம் கழித்து அந்த பேச்சாளர் வந்தார். அவர் ஒரு சுய அறிமுகம் தந்தார். அவரின் அறிமுகத்தை கேட்ட நாங்கள் எல்லாரும் அதிர்ந்தே போய்விட்டோம்.

திங்கள், 25 ஆகஸ்ட், 2014

மனைவியிடமே.... " I Love you" வா? பிச்சி புடுவேன் பிச்சி...

சில வாரங்களுக்கு முன்பு ஒரு அழைப்பு வந்தது. "திருமணமான இந்திய தம்பதியருக்கான அறிவுரை" நிகழ்ச்சி. இந்த அறிவுரையை வழங்கியவர் நன்கு படித்த ஓர் பேச்சாளார்.
வெளி நாட்டு ஆட்களை பற்றி தெரியும். கொழம்பில் உப்பு இல்லாவிட்டால் கூட மனைவியும் - புருஷனும், வக்கீல், கௌன்செலர் என்று செல்வார்கள். ஆனால் நாம் இந்தியன் ஆயிற்றே. அதிலும் தமிழன் ஆயிற்றே. நம் வீட்டில் நடப்பது நாலு சுவற்றில் தான் நடக்க வேண்டும் அது வெளியே தெரிய கூடாது என்று நினைப்பவர்கள் ஆயிற்றே.

ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2014

வைச்சிக்க நீ! பெண்களில் பிடித்தது, துப்பறியும் வீம்பு!

பெண்களில் பிடித்தது : "துப்பறியும் வீம்பு" என்று நான் எழுதிய இடுகையை அனேக நண்பர்கள் -தோழர்கள் - தோழிகள் விரும்பியாதல், அதையே என்னுடைய ரேடியோ நிகழ்ச்சியில் தொகுத்து வழங்கி இருக்கின்றேன். இது திங்கள் காலை 7 மணிக்கு (இந்தியநேரப்படி) masala.fm ல் ஒளிபரப்ப படுகிறது. கேட்டு ரசித்து உங்கள் கருத்துகளை வழங்கவும்.


WWW.MASALA.FM


வியாழன், 21 ஆகஸ்ட், 2014

டைரக்டர் பாக்யராஜுக்கு இது அவசியமா?

முதல் பொருள் முதல், அதாவது " First thing First".

யாம் அறிந்த திரை கதை அமைப்பாளர்களிலே, பாக்யராஜ் போல் ஒருவரையும் கண்டது இல்லை. நான் இவரின் தீவிர ரசிகன். ஒரு தனி மனிதனின் மூளைக்கு தான் எவ்வளவு ஒரு கற்பனை சக்தி என்பதை இவரின் திரை நாட்களில் - திறமையில் கண்டு கொள்ளலாம். அவ்வளவு ஒரு திறமை. அதற்கும் அடுத்தாற்போல், நகைச்சுவை தன்மை. இவரின் நகைச்சுவையும், திரைகதையும் என்றுமே நகமும் சதையும் போல் ஒட்டி கொண்டு இருக்கும். தனியாக ஒரு "காமடி ட்ராக்"  என்பது இவரிடம் கிடையாது. இது நம்ம ஆளு, டார்லிங் - டார்லிங்-டார்லிங் போன்ற படங்களை இன்றும் பார்த்து குலுங்கி குலுங்கி சிரிப்பவன் நான்.

புதன், 20 ஆகஸ்ட், 2014

டைரக்டர் மணிரத்தினதிற்கும் எனக்கும் சின்ன கருத்து வேறுபாடு, அம்புடுதேன்.

சென்ற பதிவில் நான் "மணிரத்தினம் படத்தை பார்த்து ரசிக்கும் அளவிற்கு எனக்கு ரசனை இல்லை" என்று எழுதி இருந்தேன். அதை படித்து விட்டு நண்பர் ஒருவர் ஏன் என்று கேட்ட கேள்விக்கான பதில் பதிவு.


சில மாதங்களுக்கு  (வருடங்கள் ?) முன், அட்லாண்டா நகரில் வசிக்கும் நண்பன் ஒருவனை அழைத்தேன்.

குரு.. விசு பேசுறேன்,

சொல்லு  விசு... எப்படி சுகம்?

இருக்கேன் குரு, நீங்க எல்லாம் எப்படி.

இருக்கோம் விசு. இப்ப நான் என் குடும்பத்தார் மற்றும் சில நண்பர்கள் எல்லாம் சேர்ந்து "ராவணன்" படம் போய் கொண்டு இருக்கிறோம்.

மாப்பு, அது மணி ரத்தினம் படம் இல்ல?

ஆமா விசு, நல்லா நினைவு இருக்கு, அக்னி நட்சத்திரம் பார்த்துட்டு நீயும் நானும் போட்ட ஆட்டம்.

அது சரி மாப்பு, மணிரத்தினம் படத்திற்கு போறிங்களே, 3 மணி நேரம் "டைம் பாஸ்சுக்கு" என்ன பண்ணுவிங்க?

விசு, இந்த "மதுரை குசும்புவ" இந்தியாவிலே விட்டுட்டு வரலியா? கூடவே விமானத்தில் கூட்டிட்டு வந்துட்டியா?

இல்ல, குரு, அக்னி நட்சத்திரம் நம்ம பாக்கும் போது "அறியாத வயசு, தெரியாத மனசு" அவர் என்னதான் காதுல பூ சுத்தினாலும் அங்கேயே நின்று அசடு வழிந்தோம். இப்ப கூட அதை நினைத்தால் என்னடா, இவ்வளவு பெரிய முட்டாளா இருந்து இருக்குமேன்னு  ஒரு குற்ற உணர்ச்சி.

என்ன சொல்ல வர, விசு.

 மாப்பு, நிரோஷா அறிமுகம் ஆகும் காட்சியில், கார்த்திக் ரோட்டில் நண்பர்களோடு உட்கார்ந்து கொண்டு இருப்பார். இந்த அம்மா நேரா வந்து " ஐ லவ் யு" ன்னு சொல்லுவாங்க... அதை பாத்து நீயும் நானும் ஜொள்ளு வழிந்தோம், ஏன் தெரியுமா? இந்த மாதிரி நமக்கும் ஆகா கூடாதான்னு? ஆகுமான்னு, ஒரு அல்ப ஆசை. இப்ப அந்த காட்சியை பாத்தா என்னாட இவ்வளவு பெரிய முட்டாளா இருந்து இருக்கோமேன்னு ஒரு பீலிங்.
நான் கடைசியா பாத்த அவரோட படம், நாயகன் என்று நினைக்கிறன்.

என்னா விசு சொல்லுற? அதுக்கு பிறகு வந்த ரோஜா, பாம்பே எல்லாம்.. என்ன அப்படி ஒரு விரோதம்?

விரோதம்ன்னு சொல்ல மாட்டேன், குரு. ஒரு, ஸ்பரிசம் இல்லாமல் போச்சு.

விவரமா சொல்லு விசு.

இல்ல மாப்பு, நான்  "வசனத்த" ரொம்ப கேட்டு ரசித்து விரும்பி பார்க்கிற ஆளு.இவர் படத்துக்கு போனா எதோ "புஷ்பக் விமானம்" படத்த பாக்குற மாதிரி ஒரு பீலிங். வசனமே இல்லையே குரு. நம்ம எல்லாம் என்ன செவிடன்களா?

ஆமா பா, இருந்தாலும், ரோஜா, பாம்பே எல்லாம் ஹிட் தாணே.

ஆமா, குரு, ஆலை இல்லாத ஊரில் இலுப்ப பூ சக்கரை கதை தான். நான் சொன்னாலும் நம்ப போவது இல்லை. தமிழ் மக்கள் பேசி வாழ்கின்றவர்கள், இந்த வசனம் இல்லா ஊமை "கான்செப்ட்" கொஞ்சம் நாள் போகும், ஆனா அது கூடிய சீக்கிரம் சலித்து விடும்.

ஆமா விசு, அதுக்கு அப்புறம் வந்த அவர் படம் எல்லாம், ஊத்திகிச்சி.

அதுக்கு இன்னொரு காரணமும் இருக்கு குரு.

ரோஜா, பம்பாயில் போட்ட அதே இசையை ரெஹ்மான் அவர்கள் எல்லா படத்திற்கும் போட்டு விடுகிறார். ஒரு பாட்டை கேட்டவுடனே எல்லா பாட்டையும் கேட்ட மாதிரி ஒரு பீலிங். அது கூட ஒரு காரணம்னு நினைக்கிறன்.

சும்மா, உனக்கு பிடிகாதுன்னு சொல்லி ரீல் விடாதே விசு, பாட்டுங்க எல்லாம் ஹிட் தான்.

டேய் பாவி, நான் முதலில் என்ன சொன்னேன், " இவர் படத்த பார்த்து ரசிக்கும் அளவிற்கு எனக்கு ரசனை பத்தாதுன்னு தானே சொன்னேன். அவர் அறிவாளி தாண்டா. நான் தான் ஞான சூனியம்" அதனால் தான் பார்ப்பதை நிறுத்தி விட்டேன். அது சரி, கடைசியா வந்த அவரோடு 5-6 படத்த நான் பாக்காமல் விட்டு விட்டேனே... நீ தான் அவர் ரசிகன் ஆச்சே, அந்த படங்களில் நம்ம பாக்குற மாதிரி ஒரு ரெண்டு சொல்லு, இந்த வாரமே DVD வாங்கி வந்து பாக்குறேன்.

கடைசியா வந்த... 5-6 படத்தில் நல்ல படம்,....அது வந்து..வந்து...

வந்து, வந்துன்னு நொந்து போகாதே...போய் ராவணன் பாத்துட்டு வர வழியில் எனக்கு ஒரு போன் போடு.

சரி விசு..

குரு...மணிரத்தினம் படம் எல்லாம் பார்த்த ஆள் தானே நீ..

ஆமா விசு... முதல் ஷோ, முதல் நாள்.

சரி, வீர பாண்டிய கட்டபொம்மன் படத்த மணிரத்தினம் எடுத்து இருந்தா ... அந்த வரி கட்டமாட்டேன் என்கிற  காட்சியில் வருகின்ற வசனம் (எங்கள் வீட்டு பெண்களுக்கு மஞ்சள் அரைத்து கொடுத்தாயே..மானம் கெட்டவனே...)  என்னவா இருந்து இருக்கும் சொல்லு...

தெரியவில்லையே விசு.. நீ தான் சொல்லேன்...

துரை : கட்டனும், வரி கட்டனும்..

கட்டபொம்மன்; கட்ட மாட்டேன், வரி கட்டமாட்டேன்.
(முன்பு எங்கேயோ படித்த ஜோக்.என் கற்பனை அல்ல)

4 மணி நேரம் கழித்து;

விசு, என்ன சொல்றதுனே தெரியலே...

எதை பத்தி..

ராவணன் படத்த பத்திதான்..

சரி விடு... வசனம் ஏதாவது இருந்ததா இல்லை, ஊமை படமா...?

என்னத்த சொல்லுவேன் விசு, நான் பாத்தது ஹிந்தி ராவணன், படம் ஆரம்பிக்கிற வரை எனக்கே இது ஹிந்தின்னு தெரியாது. அது மட்டும் இல்லாமல் ஹிந்தி தான் எனக்கு சுத்தி போட்டாலும் வராதே.

http://www.visuawesome.com/

செவ்வாய், 19 ஆகஸ்ட், 2014

மீண்டும் "கடல் மீன்கள் " இம்முறை பசிபிக் பெருங்கடலில் இருந்து...

விசு, வர திங்கள் என்ன பிளான்?

திங்களும் அதுவும்மா என்ன பிளான்? வேலைக்கு போயிட்டு வீட்டிற்கு வந்து ராசத்திகளை ஒரு ரெண்டு மணிநேரம் விளையாட கூட்டிக்கொண்டு போவேன் அவ்வளவு தான். ஏன் கேட்கின்றாய்?

இல்ல, விசு, இந்த திங்கள் நம்ம ஊருக்கு கடல் மீன்கள் வருதாம், நீயும் உன் குடும்பத்தோடு வந்தா எல்லாரும் சந்தோசமா போயிட்டு வரலாமே.

டேய், கடல் மீன்கள் ஒரு நல்ல படம், ஆனாலும் ரொம்ப பழைய படம் ஆச்சே.அது எப்படி இப்ப இங்க வருது? ஒரு வேளை நீ மணி ரத்தினத்தின் "கடல்" படத்த சொல்லுற போல இருக்கு. எனக்கு தான் மணிரத்தினம் படத்த பாத்து ரசிக்கும் அளவிற்கு ரசனை இல்லையே, நீங்க எல்லாரும் போயிட்டு வாங்க.

அட, சும்மா சினிமா பத்தியே பேசுறியே, இது நிஜமான கடல் மீன்கள் விசு.

என்னா குரு குழப்புற...?

ஒன்னும் இல்ல விசு, வருடத்திற்கு ஒருமுறை இந்த சீசனில் "க்ரானியன்" என்று அழைக்கப்படும் இந்த நெத்திலி வகை மீன்கள் கூட்டம் கூட்டமா கரைக்கு வரும். அது இங்க கரைக்கு வந்து மணலில் முட்டை போடும், அப்ப நம்ம கரையில் நின்று நமக்கு எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு சேகரிக்கலாம். அப்புறம் வீட்டிற்கு வந்து, மிளகாய், மஞ்சள், உப்பு போட்டு ஒரு வறுவல். கூடவே சீராக சாம்பாவில் அருமையான எலுமிச்சை சாதம். சேத்து வைச்சி தாக்குனா  நம்ம ஊரு காசிமேட்டில் இருக்கிற மாதிரி ஒரு பீலிங். வா, விசு போயிட்டு வரலாம்.

சூப்பர் பிளான் மாப்பு. நெத்திலி வறுவல் சாப்பிட்டு கொஞ்சம் நாள் ஆகிவிட்டது. திங்கள் கண்டிப்பா போகலாம்.

சரி விசு, இந்த மீனை பிடிக்க ஒவ்வொரு குடும்பமும் ஒரு லைசென்ஸ் வாங்கணும், அதை இந்த வாரத்திலே வாங்கி விட வேண்டும், அதுக்கு ஒரு 6 டாலர். ஓகே?

சரி, மாப்பு, ஓகே. என் பக்கத்து வீட்டு வெள்ளைகாரனிடம் ஒரு 4 பகட் கடன் வாங்கி வரட்டும்மா? சுத்தம் பண்ணி" ப்ரீஸ்" பண்ணிடலாமே.

இந்த பேராசை தானே வேண்டாங்கிறது. வீட்டுக்கு ஒரு பகட்.அதுக்கும் மேல பிடிக்க கூடாது.

ஓகே, மாப்பு, இது திங்கள் முழுவதுமா, இல்ல ஒரு குறுப்பிட்ட நேரத்திலையா?

இரவு 9-11 வரை தான், அதுக்கும் மேல ஒன்னும் கிடைக்காது.

குரு, என்னை வச்சி காமடி கீமடி எதுவும் பண்ணலையே...

என்னை நம்பு விசு, இது உண்மை. வேணும்னா இங்க விக்கிபீடியா பக்கத்தை படிச்சு பாரு, இன்னும் நிறைய விஷயம் போட்டு இருக்கான். அது மட்டும் இல்லாமல் இந்த "யு டுப்" வீடியோ கூட பாரு.

தேங்க்ஸ் குரு, திங்கள் சாயங்காலம் சந்திப்போம், மறக்காம நல்ல ஒரு காமரா எடுத்துனு வா, குரு,

காமரா ஏன் விசு?

இல்ல குரு, இந்த விசயத்த வச்சி ஒரு ப்ளாக் எழுத போறேன்.  திங்கள் கிழமை அந்த போட்டோ போட்டா எல்லாரும் பாப்பாங்க இல்ல, அது தான்.

விசு , ப்ளாக், ஆளுங்க படிக்கிறதோடு இருந்தா சரி, எலுமிச்சை சாதம், நெத்திலி வருவல்ன்னு விமானம் ஏறி இங்க வந்துட போறாங்கோ.

வெள்ளி, 15 ஆகஸ்ட், 2014

நீ கணக்கு எழுத தான் லாயிக்கு!


கோடை விடுமுறை முடிய போகிறது. என் மூத்த ராசாத்தி 9 வகுப்பு முடித்து 10ம் வகுப்பு செல்ல தயார். இங்கே பள்ளி கூட்டத்தில் 9, 10,11, 12ம் வகுப்பே என்று யாரும் சொல்லமாட்டார்கள். இவர்கள் ஒவ்வொரு வகுப்பிற்கும் ஒவ்வொரு பெயர் :

9ம் வகுப்பு : Freshman
10ம் வகுப்பு : Sophmore
11ம் வகுப்பு : Junior
12ம் வகுப்பு : Senior

வியாழன், 14 ஆகஸ்ட், 2014

"பாரதி ராஜா - இளைய ராஜா" - ஒரு மாஸ் காம்பினேஷன்



என் இனிய தமிழ் மக்களே என்ற கம்பீரமான குரலை அறியாத தமிழன் இல்லை என்று சொன்னால் அது மிகையாகது. 16 வயதினிலே படத்தை பார்த்தவுடன் மனத்தில் வந்த முதல் எண்ணம். அடேங்கப்பா? தமிழ் சினிமா உலகிற்கு ஓர் "தங்க புதையல் வேட்டை தான்" .

புதன், 13 ஆகஸ்ட், 2014

அது சரி! பையனா, பெண்ணா?

என்ன  ரிச்சர்ட் ரொம்ப சோகமா டென்ஷனா இருக்க?

இல்ல பாஸ், என் மனைவி குழந்தை பெத்துக்க போறா. அதுதான் கொஞ்சம் டென்ஷன்.

மனைவி குழந்தை பெத்துக்க போறா, நீ இங்க என்னடா ஆபிஸ்ல.. உடனே வீட்டுக்கு போய் அவங்கள கவனி.

செவ்வாய், 12 ஆகஸ்ட், 2014

"மூன்று முகம்" ரஜினி -செந்தாமரை மோதல்! அத சொதப்பாதிங்க ப்ளீஸ்.

"இல்லேங்க, நான் அப்படி சொல்லலீங்க...என்னை யாருன்னு கேட்ட முத மனுஷன் நீங்கதான்..அலெக்சு.. டி எஸ் பி அலெக்சு.."

என்ன குழம்பிடிங்களா? ஒன்னும் இல்ல. ரஜினி நடித்த "மூன்று முகம்" படத்த மீண்டும் எடுக்க போறாங்கன்னு எங்கேயோ படிச்சேன், நொந்து போயிட்டேன்.

அலெக்ஸ் பாண்டியன் பாத்திரத்த விடுங்க, வெளிநாட்டில் இருந்து வந்த பாத்திரத்த விடுங்க, ஏன் "ஜானி' என்று "ஜாலியான" பாத்திரத்தில் வந்த ரஜினியை விடுங்க. எந்த ஓர் நடிகர்னால இந்த செந்தாமரை பாத்திரத்தை செய்ய முடியும்?

"அலெக்சு, வெளிய எங்க ஆளுங்க பயங்கரமான ஆயுதங்களோடு ரெடியா இருக்காங்க. நான் ஒரு குரல் கொடுத்தேன், செங்கல் செங்கலா பிச்சி எடுத்துடுவாங்க" என்ற இந்த டயலாக்க அந்த காலத்தில் தியேட்டரில் கேட்கும் போதே உடம்பு நடுங்கும். அவ்வளவு கம்பீரம்.

சரி விடுங்க. இந்த ரோலை வேண்டும் என்றால் நம்ம "பிரகாஷ் ராஜ்" செந்தாமரையை போல செய்ய முடியாவிட்டாலும், தன்னுடைய பாணியில் எப்படியாவது கரை ஏத்திருவாருன்னு வைச்சிக்குவோம். இப்ப மெயின் விஷயத்திற்கு வரலாம்.

இந்த கால நடிகர்களில் எந்த நடிகர்க்கு அலெக்ஸ் பாண்டியன் ரோல் பண்ண "தில்" இருக்கு?அலெக்ஸ் பாண்டியன் ரோல் ஒரு சரித்திரம். அதை தொடவே கூடாது என்பது தான் என்னுடைய தனி பட்ட விருப்பம். இந்த ரோல் பண்றேன் என்று யாராவது முன் வந்தால் அது, 'சொந்த செலவில் சூனியம் வைத்து கொள்ளும்" கதை தான்.

"இன்ஸ்பெக்டர், வெளிய சந்தேகம் படும்படியா யாரு இருந்தாலும் "சூட் அட் சைட்" மேலே என்ன வந்தாலும் நான் பாத்துக்குறேன்... என்று சொல்லி, டேய், தீபெட்டிக்கு ரெண்டு பக்கம் உரசுனா தான் தீ பிடிக்கும், இந்த "அலெக்சு"க்கு எங்கே உரசுனாலும் தீ பிடிக்கும்னு சொல்லி லைட் பண்ற சீனை இந்த காலத்தில் எந்த நடிகரால செய்ய முடியும். அப்படியே செய்தாலும், அத சென்சர் கட் பண்ணிடுவாங்க.

இதனால் எல்லாருக்கும்  சொல்ல விரும்புவது என்னவென்றால்... சில கதாபாத்திரங்கள் மக்களின் மனதில் ஒரு இடத்தை பிடித்து நின்று விட்டது. அதை தொட வேண்டாம். அப்படியே விட்டு விடுவோம். இவ்வளவு சொல்லியும் இல்லை, இல்லை நாங்கள் "மூன்று முகம்" படத்தை மீண்டும் தொடுவோம் என்று கூறினால் ஒரு காரியம் பண்ணுங்கள்.

 ரஜினியின் அதே" மூன்று முகம்" படத்தை வேண்டுமானால்மீண்டும் ரீலீஸ் செய்யுங்கள். ஆனால், இந்த முறை இசையை "இளையராஜா' அவர்களிடம் கொடுங்கள். "மூன்று முகம்" படத்தின் ஒரே திருஷ்டி சங்கர் கணேசின் இசை தான்  (ரொம்ப மோசம் இல்லை, சுமரா தான் இருந்தது).

பின் குறிப்பு : இந்த காலத்து நடிகர்களுக்கு, இவ்வளவு சொல்லியும் இந்த படத்தில் நடிக்க சம்மதித்தால், இது தான் நீங்கள் கதாநாயகனாக நடித்த கடைசி படமாக இருக்கும். இதற்க்கு பின்னால், உங்கள வைச்சி காமெடி தான் பண்ண முடியும்.

நான் மேலே குறிப்பிட்ட அந்த அட்டகாசமான காட்சியை பார்க்க இங்கே சொடுக்கவும்.

எலி இல்லாத வீட்டுக்கு பூனை, திருடன் வராத வீட்டிற்கு நாய்!

"வா விசு... மூன்று வருடம் கழித்து எங்கள் வீட்டிற்கு வர, வலது கால எடுத்து வச்சி வா" என்று அழைத்தான் என் நண்பன் சத்தி. சத்தியும் நானும் இளங்கலை, முதுகலை ஒன்றாக படித்தவர்கள். படித்து முடிந்து 25 வருடங்கள் ஆகியும், ஒவ்வோர் முறையும் நான் இந்தியா செல்லும் போது, அவனை சந்தித்து ஒருவரை ஒருவர் பற்றியும், மற்றும் சுற்றம் உற்றம் பற்றியும் அறிந்து கொள்வேன்.

என்ன சத்தி.. வீட்டில் எலி தொலையா? ரெண்டு பூனை வீட்டுக்கு உள்ளேயே இருக்குது.

எலி எல்லாம் ஒன்னும் இல்ல விசு, இது என் பிள்ளைகள் தொந்தரவு.

அட பாவி, இந்த பூனை எல்லாம் வீட்டிற்குள் இருந்தால் பிள்ளைகள் நோய்வாய் படுவார்களே, இத ஏன் "வேலி மேல போற ஓணான்"  கதை போல வீட்டிற்குள் வைத்து கொண்டு..?

ஒன்னும் பண்ண முடியாது விசு, கண்டிப்பா வேணும்னு அவங்க அம்மாவை "ஓகே" பண்ணிடாளுங்க.. அம்மா சொன்னா அதுக்கு ஏது மறு பேச்சி.

நல்ல சொன்ன சத்தி..அது சரி, அது என்ன அழகான நாய் போல ஒரு விளக்கு?

அட பாவி, அது விளக்கு இல்ல, விசு! உண்மையாவே நாய் தான்.

நல்ல வேளை சொன்ன, அது விளக்குதான்னு நினச்சி சுவிட்ச் தேட ஆரம்பிச்சிட்டேன். டேய், என்னாடா இது, ரெண்டு பூனை, ஒரு நாய், ஒரு மிருக கண்காட்சி சாலையே வீட்டில் இருக்கே...சரி இங்க என்னா திருட்டு பயமா?

சீச்ச்   சீ..இது ரொம்ப நல்ல ஏரியா விசு, அந்த மாதிரி எல்லாம் பயம் இல்ல..

பின்ன ஏன்டா, எலி இல்லாத வீட்டுக்கு பூனை, திருடன் வராத வீட்டிற்கு நாய்?

என்னத்த சொல்ல? மூத்த பிள்ளைக்கு ரெண்டு பூனை, இளையவளுக்கு நாய்..

நல்ல வேளை, ரெண்டோட நிறுத்திட்ட, அடுத்த பிள்ளை இருந்தா என்ன கேட்டு இருக்குமோ..

சரி ஏன் அந்த நாய்க்கு கழுத்த சுத்தி அந்த விளக்க மாட்டி இருக்க..

ஒன்னும் இல்ல விசு, வழக்கமா ராத்திரி வீட்டுக்குள்ள எங்களோடு வந்து படுத்துக்கும். போன வாரம் கொஞ்சம் மறந்து ஒரு நாள் வெளியே வச்சிட்டோம்.

நாய் குணமே ராத்திரி முழுவதும், வெளியே இருப்பது தான சத்தி, அதுக்கும் இந்த கழுத்த சுத்தி இருக்க விளக்குக்கும் என்ன சம்பந்தம்?

விவரமா சொல்றேன் கேளு. அன்னிக்கு வெளியே இருக்கும் போது நடு ராத்திரி "கூர்க்கா" வந்து ஒரு விசில் அடிச்சி இருக்கான். அந்த விசில் சத்தம் கேட்டு பயந்து ஓடி வந்து கதவில் தலைய மோதி கழுத்தில் பலமான அடி. அதுக்கு தான் அந்த விளக்கு மாதிரி ஒன்னை டாக்டர் இன்னும் ஒரு ரெண்டு மாசத்துக்கு போட சொல்லி இருக்கார்.

என்ன சத்தி, நாயை பார்த்து மனுஷன் ஓடி இருக்கான்னு கேள்வி பட்டு இருக்கேன், இது இவ்வளவு பெரிய நாயா இருந்தும், கூர்க்கா விசில் கேட்டு பயந்தது ரொம்ப ஆச்சரியமா இருக்கு.

சரி, இந்த மூணு பிராணிகளுக்கும் மாசத்துக்கு எவ்வளவு செலவு ஆகுது?

செலவு ஒரு பக்கம் இருக்கட்டும் விசு, இதை கவனிக்க எவ்வளவு நேரம் ஆகுதுன்னு யோசித்தாத்தான் மண்டை காயுது. இந்த மூணு பிராணிகளுக்கும் செலவு செய்யற நேரத்தில் சக மனிதர்களுக்கு எவ்வளவோ உதவி செய்யலாம். என்னத்த பண்றது?

சரி, எவ்வளவு காசு செலவு ஆகுது சொல்லு,

கிட்ட தட்ட மாசத்திற்கு 1000 ருபாய், சாப்பாட்டிற்கே. அப்புறம், மருத்துவ செலவு, குளியல் செலவு, முடி வெட்ட செலவு, லொட்டு லொசுக்குன்னு இன்னொரு 500 ருபாய்.

கேட்கவே ஆச்சரியமா இருக்கு சதி, உங்க அப்பா மட்டும் இத பாத்து இருந்தா, மவனே உனக்கு நடந்த கதையே வேற..

என்னத்த செய்வேன், விசு, புலி வாலை புடிச்சாச்சி, விட்டா கடிச்சிடும்.

சரி, இப்ப இதுல இருந்து எப்ப விடுதலை, சத்தி?

நாய் என்னமோ 10 வருஷம் கிட்ட வாழுமாம். இந்த கூர்க்கா விசில் விபத்தினால இதுக்கு எப்ப வேண்டும் என்றால் என்ன வேண்டும் என்றாலும் நடக்கலாம். பூனைங்க ரெண்டும் இன்னும் ஒரு 4 வருஷம் இருக்கும்.

சத்தி... டேய்.. என்னடா வீட்டுக்குள்ள எலி ஓடுது? இப்ப தான சொன்னே இங்க எலி இல்லைன்னு.

நான் கூட இப்பதான் பாக்குறேன் விசு, இதுதான் முதல் முறை.

சரி, எதிரில் ஓடுற எலிய என்னமோ சினிமாவில் கதாநாயகியா அறிமுக படுத்துற காட்சி பாக்குற மாதிரி இந்த ரெண்டு பூனையும் உட்கார்ந்து கொண்டு இருக்கே...இதுங்களுக்கு முன்ன பின்ன எலினா என்னவென்று தெரியுமா?

தெரியாது போல இருக்கு. பாலை வைச்சா குடிக்குங்க, அப்புறம் மீன் விரும்பி சாப்பிடுங்க.

நல்ல நாய், பூனை சத்தி உங்க வீட்டில்!

அது சரி விசு, அங்க உங்க வீட்டில் இந்த மாதிரி பூனை , நாய் எல்லாம் எதுவும் இல்லையா? அமெரிக்காவில் வீட்டுக்கு வீடு இந்த மாதிரி இருக்குன்னு எங்கேயோ படிச்சி இருக்கேன்.

நிறைய பேர் வீட்டில் இருக்கு சத்தி. அது அவனவனுக்கு எவ்வளவு நேரம் இருக்கோ அதை பொருத்து. என்னை பொறுத்தவரை நாய் வளக்கறது திருடன் வீட்டிற்கு வராமல் இருக்க, பூனை வளர்ப்பது எலி தொல்லைக்காக. இது ரெண்டும் இல்ல, பின்ன எதுக்கு  எங்க வீட்டில் நாய், பூனை?

சரி விசு, குறைந்த பட்சம் ரெண்டு பறவையாவது..

பாவி.. நல்ல சந்தோசமா சுத்தி இருக்க வேண்டிய கூண்டில் போட்டு அடைச்சி அத வேற நான் ரசிக்கனும்மா?

ரெண்டு மீனாவது...

மீன் சமையல் அறையில் கொழம்புல இருந்தா போதும், ஒன்னும் நடு வீட்டில் நீச்சல் அடிகனும்னு அவசியம் இல்ல.

அப்ப 'டைம் பாஸ்' எப்படி விசு?

அதுக்கு தான் சிங்க குட்டிங்க மாதிரி ரெண்டு பெத்து வைச்சி இருக்கேனே? அந்த ராசத்திகளோடு தான்.

ராசத்திங்க என்னைக்காவது நாய் பூனை வேண்டும் என்று கேட்டால்...?

கேட்க்க மாட்டார்கள்.. ஏன்னா என்னை சமாளிக்கவே அவங்களுக்கு நேரம் இல்லை.

திங்கள், 11 ஆகஸ்ட், 2014

எழுதியதோ "கை நாட்டில்", படித்ததோ "வெளி நாட்டில்..."

ஸ்மிருதி இரானியும் யேல் பல்கலைகழகமும்..

2004 தேர்தல் நேரத்தில் தான் டெல்லி பல்கலைகழகத்தில் "BA" படித்துள்ளேன் என்று தேர்தல் மனுவில் எழுதிய மத்திய அமைச்சர், மாண்புமிகு "ஸ்மிருதி இரானி" சென்ற தேர்தல் மனுவில் தான் மற்றொரு பல்கலைகழகத்தில் B.com படித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இது சாத்தியம் ஆகுமா? கண்டிப்பாக. ஒருவர் BA படித்து முடித்து விட்டு அந்த படிப்பை வேண்டாம் என்று நிராகரித்து விட்டு B.Com படிப்பது தவறே இல்லை. ஆனால் இவர் தனது படிப்பை பற்றி வேட்பு மனு படிவத்தில் தவறாக குறிப்பிட்டு இருகின்றார் என்று காங்கிரஸ் கட்சிக்காரன் சொல்லும் போது இவர் ஒழுங்காக பதில் சொல்ல முடியாமல் தட்டு தடுமாறி வெவ்வேறு விதமான பதிலை கூறுகின்றார் அது தான் தவறு.

ஒரு சில்லி சிக்கன் 7500 ரூபாயா?


வா, விசு எப்ப ஊருக்கு வந்த?

போன வாரம்தான், வாழ்க்கை எப்படி ஓடுது சந்துரு?

ஏதோ போது விசு. ஒன்னாம் தேதி ஆனா சம்பளம், புள்ளை, குட்டி...வெந்தத தின்னு விதி வந்தான்னு.. இருக்கோம். நீங்க எப்படி?

வெள்ளி, 8 ஆகஸ்ட், 2014

சச்சின் டெண்டுல்கர்! அனலும் இல்லை.. குளிரும் இல்ல


சச்சின் அவர்கள் "ராஜ்யசபா" உறுப்பினர் ஆனதில் இருந்து "ராஜ்ய சபா" பக்கம் தலை வைத்து கூட படுக்க வில்லை என்று அர்னாப் கோஸ்வாமி ஒரு விவாதம் நடத்தி "பரட்டை" பாணியில் பற்ற வைத்தார். இந்த நெருப்பு சற்று வேகமாக அனல் விட்டு எரிய ஆரம்பித்து இப்போது சச்சின் அவர்கள் வேறு ஒரு வழியில்லாமல் இதை பற்றி பேச வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு, அதை பற்றி பேசினார். அவர் என்ன பேசினார் என்பதை பின்னர் பார்ப்போம். அதற்கு முன் சில விசயங்களை ஆராய்வோம்.

அவ்வையாருக்கே "சுட்ட பழமா"?

விடுமுறைக்காக இந்தியா சென்ற நாட்கள். அங்கே, என் பால்ய நண்பன் கோபாலை சந்திக்க அவன் வீட்டிற்கு போகும் வழியில் மலரும் நினைவுகள்.

வியாழன், 7 ஆகஸ்ட், 2014

என்னை ஏமாற்றிய எழுத்தாளர் சுஜாதா...


சிட்னி ஷேல்டனின் தீவிர ரசிகனாகிய நான்,  என் நண்பன் ஒருவனால் எழுத்தாளர் சுஜாதாவிற்கு அறிமுகபடுத்த பட்டேன். ஷேல்டனின் புத்தகத்தில் மூழ்கி கிடந்த என்னை பார்த்த என் நண்பன், இவ்வளவு உற்சாகமாக இந்த நாவலை படிக்கின்றாயே, நம்ம ஊர் எழுத்தாளர் சுஜாதவை தெரியுமா என்றார். நான் அதற்கு பதிலாக, தெரியாது, அப்படியே தெரிந்தாலும், நான் பெண் கதாசிரியர் புத்தகங்களை அவ்வளவாக விரும்பி படிப்பதில்லை என்றேன்.

கை நிறைய சம்பளம், இந்தியாவிற்கு வந்துடு...

விசு, ரொம்ப நாளா வெளிநாட்டிலே இருக்கிறியே? ஒரு "ஆறுவருஷம்" நல்ல ஒரு ப்ராஜக்ட் இருக்கு, வரியா?

மாப்பு, ரெண்டு வாரம் விடுமுறைக்கு வந்தாலே எனக்கு அங்கே பிரச்சனை,
இதுல அங்கேயே வந்து தங்க சொல்லுறியா?அதை பத்தி வேற ஒரு நாள் சொல்லுறேன், இப்ப விஷயத்திற்கு வா, என்ன ப்ராஜக்ட் இது?

புதன், 6 ஆகஸ்ட், 2014

(5)இந்நாட்டில் (அமெரிக்காவில்) பிடித்தவை : "விளையாட்டு மைதானங்கள்"


என்ன விசு, கையிலே பெரிய பைய தூக்கிகொண்டு உன் ராசாத்திக்களோடு எங்க கிளம்பிட்ட  என்றான் என் பக்கத்து வீட்டு வெள்ளைக்காரன் (ஆங்கிலத்தில் தான்).  பெரிதாய் எதுவும் இல்லை, இன்று வீடு வந்து சேர சிறிது நேரமாகிவிட்டது, இருந்தாலும், வளரும் பிள்ளைகள் தினமும் வெளியே சென்று ஓடி ஆடி விளையாடவேண்டும் என்பது என் கொள்கை. அதனால்  அருகில் உள்ள டென்னிஸ் மைதானத்திற்கு விளையாட சென்றுகொண்டு இருக்கிறோம் என்று சொல்லிவிட்டு கிளம்பினேன்.

செவ்வாய், 5 ஆகஸ்ட், 2014

ஸ்காட்லாந்தில் கு(ட்)டியுடன் இந்தியனின் சில்மிஷம்!

ரிங் ... ரிங்.. தொலை பேசி ரிங்கியது...

ஹலோ... விசு ஹீயர்.

வாத்தியாரே, தண்டபாணி பேசுறேன்..

அதுதானே பாத்தேன்.. கழுத கெட்டா குட்டி சுவர்..உன்னை தவிர என்னை எவன் கூப்பிட போறான்?

திங்கள், 4 ஆகஸ்ட், 2014

(7)துப்பறியும் வீம்பு:: பெண்களிடம் எனக்கு பிடித்தது


என்னங்க, இந்தியாவில் யாரோடையோ  நேத்து பேசி இருக்கீங்க?

எப்ப?ஞாபகம் இல்லையே...

நேத்து பேசி இருக்கீங்களே, அதுவும் நான் கடைக்கு கிளம்பின ரெண்டே நிமிஷத்திலே, அப்படியென்ன ரகசியம், நான் வெளியே போன ரெண்டே நிமிஷத்தில் கூப்பிடற  அளவுக்கு.

ஞாயிறு, 3 ஆகஸ்ட், 2014

ஆஸ்திரேலியாவில் முருங்கைகாய் சாம்பார்...

அருமை நண்பரொருவருக்கு ஆஸ்திரேலியாவில் நடந்த  சம்பவம் ...

பாரதி சொன்ன எதை ஒழுங்கா செய்தோமோ இல்லையோ..."திரை கடல் ஓடி திரவியம் தேடு" என்பதை ஓடோடி செய்து  கொண்டு இருக்கிறோம். இப்படி நம் நாட்டை விட்டு ஆஸ்திரேலியா சென்ற நண்பர் ஒருவர் பட்ட பாடு தான் இது.

சனி, 2 ஆகஸ்ட், 2014

இன்றைய வார்த்தை: " கலாய்த்தல்"


டோக்கியோ நகரில் தமிழ் கற்று வரும் ஜப்பானிய நண்பர் "நிக்கிமோ நிக்காதோ" என்பவர் நமக்கு அனுப்பிய கேள்வி. " கலாய்த்தல்" என்றால் என்ன? அந்த வார்த்தையின் பூர்வீகம் எது?

உங்கள் தமிழ் ஆர்வத்திற்கு நன்றி நண்பரே. இப்போது பதிலுக்கு வருவோம்.கலாய்த்தல் என்பது வழிப்பறி சொல். அதாவது, போற வழியில் என்ன என்ன கிடைக்கிறதோ அதை அப்படியே சுட்டு கொண்டு செல்லுதல்.கலாய்த்தல் என்பதிற்கு கிண்டல், ...நக்கல், உடையல் என்ற மற்ற அர்த்தங்களும் உண்டு. 

பூர்வீகம்:

"கலாய்த்தல்" என்ற வார்த்தை சுத்தமான தமிழ் வார்த்தை. இந்த வார்த்தையை பிரித்து எழுதினால் "கலந்து + ஆலோசித்தல்" என்றாகும். கலைக்கிறாயா "கலந்து+ ஆலோசிக்கிறாயா" என்று அர்த்தமாகும். இப்போது இந்த வார்த்தையை வாழ்வின் நடைமுறையில் எப்படி உபயோகிக்கிறார்கள் என்று பார்ப்போம்.

தந்தை மகனை கலாய்த்தல் "உன் வயசில் ஆபிரகாம் லிங்கன் ஆங்கில இலக்கியத்த கரைச்சி குடித்தார்".
மகனின் பதில் கலாய்த்தல் " உன் வயசில் அதே லிங்கன் என்னவா இருந்தார்னு தெரியுமா?
காதலனின் கலாய்த்தல் "உனக்காக நான் வானவில்லை வளைக்கட்டுமா"?

காதலியின் பதில் "கூரை ஏறி கோழி புடிக்க தெரியில, வானத்தில ஏறி வைகுண்டம் போனாராம்"
ஆசிரியர் கலாய்த்தல் "கஸ்துரி பாய் பற்றி சிறு குறிப்பு வரை (out of syllabus question)"
மாணவனின் பதில் " கஸ்துரி பாயே இல்ல அவ கேர்ள்"
மனைவியின் "இந்த புடவையில நான் அழகா இருக்கேன்ன?
கணவன் பதில் " இந்த புடவையினால தான் நீ அழகா இருக்கே"

இந்த "கலாய்த்தல்" பற்றி கேட்ட நண்பர் நிக்கிமோ நிக்காதோ அவர்களுக்கு இந்த வார பரிசு " தினம் ஒரு வார்த்தை கோனார் உரை" நீங்களும் ஒரு வார்த்தை கேட்டு இப்பரிசை கலாய்க்கலாம்.

வெள்ளி, 1 ஆகஸ்ட், 2014

விசு ...எங்க சொல்லு " ய ர ல வ ழ ள"


விசு ...எங்க சொல்லு " ய ர ல வ ழ ள"

"இ ற ழ வ ள ல"

இரவல் இல்ல விசு....  " ய ர ல வ ழ ள"

"ற ழ ல இ    ள  வ "

"இலவு"  இல்ல விசு "ய ர ல வ ழ ள"...

"வ ற ல ர வ ல"

இரா வறுவல் இல்ல விசு.. படிக்கும் பொது, கொஞ்சம் சாப்பாட்ட மற.
அப்பத்தான் படிப்பு வரும்.

சறி ஐயா .

எங்க சொல்லு " ய ர ல வ ழ ள"

"ர ய ழ  ல வ ர ள"

ரயில் வந்தா ஏன்னா வராட்டி ஏன்னா? நீ நாக்கை கொஞ்சம் அழகா மடிச்சு சொல்லு " ய ர ல வ ழ ள"

"ப ழ ர வ ள ல ய "

முதலில் வார்த்தை ஒழுங்கா வரட்டும் அப்புறம் பழம் வரும்.. எங்க சொல்லு '

"வாழை பழம் கொழ கொழன்னு இருக்கு"

வேநா.. ஐயா, பிறச்சினை   ஆயிடும்.

பரவாயில்லை, சொல்லு.

"வாய பயம் கொய கொயன்னு கீது"
.
அட பாவி, நல்ல பழத்தை அசிங்கம் பண்ணிட்டியே..

மண்ணிக்கணும் ஐயா..

சரி, கொஞ்சம் சுலபமா கேட்க்கிறேன். முயற்சி பண்ணு.. "இது யார் தைச்ச சட்டை, எங்க தாத்தா தைச்ச சட்டை"

"தாத்த செத்த எங்க சட்டை? இது யார் சட்டை..."

அட பாவி, நல்லா இருந்த தாத்தாவ கொன்னுட்டியே?சரி கடைசியா ஒரு முறை... " கட்டு குச்சியில் ரெண்டு குச்சி கோனை குச்சி"

"ரெண்டு கட்டு பீடி கட்டு குடிச்சி"

வேணாம் விசு, நீ போய் உட்கார்...

"னன்ரி ஐயா"

சரி விசு, தமிழில் இப்படி தடுமாறியே .... எதிர் காலத்தில் என்ன பண்ணுறதா உத்தேசம்?

தமிழ் எல்லுத்தாளர் தாண்.. வேர என்ன?

இதை கேட்டவுடன் எங்கள் தமிழ் ஐய்யா மயங்கி விழுந்து, மயக்கம் தெளிந்தவுடன் கேட்ட முதல் கேள்வி... கேள்வி...
"மெஹ்  கஹா ஹு...?

பின் குறிப்பு :  சக இடுகையோரே . மேலே சொன்னது கற்பனை போல் இருந்தாலும், ஏறக்குறைய, கிட்ட தட்ட நடந்தது தான். அது மட்டும் இல்லாமால், தமிழ்நாட்டை விட்டு வெளியேறி பல வருடங்கள் ஆகி விட்டதால், நிலைமை இன்னும் மோசம். என் எழுத்தில் பிழை இருந்தால்
(கண்டிப்பாக இருக்கும்), தயவு பண்ணி மன்னிக்கவும்.

http://www.visuawesome.com/

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...