வெள்ளி, 28 ஆகஸ்ட், 2020

மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்! - 4 (ஸ்கூல் நேரத்தில் சினிமாவா!!?)

முந்தைய ஏமாற்றத்தை படிக்க இங்கே சொடுக்கவும் 

மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்! - 3 (பாக்யராஜின் அறிவுரை)

இரண்டு மணி நேரம்...


இரண்டு மணி நேரம்...



இரண்டு மணி நேரம்..

காலை காட்சி பாமா ருக்மணி 10  க்கு ஆரம்பிக்கும்.

இப்ப பத்தாக போது. அடிச்சி பிடிச்சி ஓடுனா நியூஸ் ரீல் முடிஞ்சி படம் தொடங்கறதுக்குள்ள போயிடலாம்.

அடிச்சி பிடிச்சி  கிளம்பினோம்.  

காலை காட்சி ஆரம்பித்ததோ இல்லையோ.. நான் ஏமாறும் படலம் ஆரம்பித்தது.

"எழில், காசு எவ்வளவு இருக்கு!!?"

"ரெண்டு ரூவா சில்லறை"

"என்கிட்டே ஒரு மூணு தேறும், வா நைசா போய் பாமா  ருக்மணி பாத்துட்டு வந்து இந்த பார்ம்ஸ் வாங்கின்னுபோலாம் "

கிளம்பினோம். பள்ளி சீருடை அணிந்து இருக்கின்றோம் என்பதை மறந்தும்  கூட.

தியேர்ட்டர் வாசல் எதிரில்..

"என்ன கதவு பூட்டி இருக்கு..!!!? "

"விசு.. இப்ப டைம்  10 25  ஆக போகுது.மூடிட்டாங்க போல இருக்கு !"

 என்ன இது.... ? பாமாவுக்கு எட்டியது ருக்மணிக்கு எட்டவில்லையே என்று நொந்து கொண்டே கிளம்புகையில்....

"இன்னாபா... ஸ்க்கூல் புள்ளீங்களா? 

என்று பீடியை வலித்து கொண்டு எதிரில் ஒரு நைனா , சவால் படத்தில் வரும் மனோரமாவே ஆண் உருவத்தில் வந்தது போல்..

"நாங்க.. சும்மா.. போஸ்டர் பாக்க!!"

"இதோடா, நம்மகிட்டே ரீல்  வுடுறீயா? எத்தினி பேர்?"

"ரெண்டே பேர்"

"ரெண்டு டிக்கட்.. பெஞ்ச் டிக்கட் .. தலைக்கு ரெண்டு ரூவா என்கிட்ட கீது , வேணுமா?"

எழிலும் நானும் ஒருவரையொருவர் பார்த்து ஆமோதிக்க, 

"ஜல்தி பா.. போலீஸ் கீலீஸ் வந்துடுவான்"

பாக்கெட்டில் கையை விட்டு பணத்தை எடுக்கையில் .. எதிரில் போலீஸ்..

"என்னாடா? ஸ்கூலுக்கு கட் அடிச்சிட்டு சினிமாவா?"

"சார்..., சாரி .. ப்ளீஸ்"

"ஸ்டேஷனுக்கு நடங்க"

ப்ராடவே மற்றும் பிரபாத் தியேட்டர் இடையே உள்ள முத்தியாலுப்பேட்டை ஸ்டேஷனை நோக்கி நடக்க..

"சார்.. ப்ளீஸ்.. NCC யில் ... ஸ்கூல்.. தெரியாம..."

"எவ்வளவு பணம் இருக்கு!!?"

என்று அவர் கேட்க..

பீடி வலித்தவர்..

"கீதுபா... கண்டிசனா நாலு ரூவா, கீது பா.. "

'எடு!!"

இருவரிடம் இருந்த ஐந்து சொச்சத்தை தாரை வார்க்க..

"ஓடிடுங்க.. இனிமேல் இங்கே பாக்க கூடாது.."

ஓடினோம்..

" என்ன விசு.. இப்படி ஆயிடுச்சே..!!?"

"பரவாயில்லை விடு. அந்த போலீஸ் மட்டும் பிரின்சிபால் ஆஃபிஸுக்கு கூட்டினு போய் இருந்தா என்ன செஞ்சீர் இருப்போம்.

மீண்டும் பிஷப் கொரி பள்ளி சென்று அஙக NCC பார்ம்ஸ் வாங்கி கொண்டு  St.Gabriels பள்ளியில் நுழைய.. பிர்னிசிபல் ஆபிஸ் எதிரில் கூட்டம்.. 

பள்ளி வாட்ச்மேன் அருகில் இருந்தோரிடம்... 

"சினிமா.. நம்ம ஸ்கூல் பையன் தான். பிரின்சிபால் ஆஃபிஸ்.. "

என்று சொல்லி கொண்டு இருக்க, எழில் 

"பயமா இருக்கு விசு!!"

என்று சொல்ல 

பின்னாளில் வெளி வந்த மைக்கல் மதன காம ராஜன் படத்தில்.. 

"I know what I mean, he doesnt mean"

என்று இருவர் பேசி கொண்டு செல்ல 

"ஒருவேளை சாம்பாரில் கருவாடு விழுந்ததை கண்டு பிடிச்சிட்டாங்களா? "

என்று பயப்படுவார்களே, அதே போல்,

என்று வியந்து கொண்டே பயந்து கொண்டே வகுப்பறை சென்றோம். அடுத்த சில நிமிடங்கள் தொடை நடுங்க..ஆறாம் வகுப்பில் இருந்தே இதே பள்ளியில் படிக்கும் லாரன்ஸிடம்..

நடந்ததை விவரிக்க ஆரம்பித்தோம்.

பீடி வலித்தவர் வரை கதை வந்தவுடன், லாரன்ஸ் வழி  மறித்து,

"நீங்க ரூவாயை கையில் எடுத்தவுடன் திடீருனு எங்கே இருந்தோ போலீஸ் வந்து மிரட்டி இருப்பாரே.."

"ஆமாம், உனக்கு எப்படி தெரியும், கூட இருந்து பார்த்த மாதிரி சொல்ற?"

"டே... இது இங்க தினந்தோறும் நடக்கும். பள்ளி கூடத்து பசங்க சினிமாவுக்கு போனா அந்த ப்ளாக் டிக்கட் ஆளும் போலிசீஸும் சேர்ந்து பணத்தை பிடுங்கி ஆளுக்கு பாதி பிரிச்சிப்பாங்க, அடுத்த முறை போகும் போது சொல்லு. அதுக்கும் ஒரு வழி இருக்கு. ஆறு வருசமா இங்கே படிக்குறேன்.. அது சரி.. போயும் போயும் பாமா ருக்மணிக்கு ஆளுக்கு ரெண்டு ரூவா கொடுக்க ரெடியா இருந்து இருக்கீங்களே. ரஜினியின்  ஜானி பாத்துட்டிங்களா!!?"

என்று கேட்கையில்... 

ஸ்பீக்கரில்.. 

"எல்லாரும் அசம்ப்ளிக்கு வாங்க, நம்ம ஸ்கூல் - ஸ்டுடென்ட் - சினிமா...  " 

என்று பிரின்சிபால்  தொடர..எழில் பற்றி தெரியவில்லை எனக்கு தலை சுற்றியது.

அடுத்த  பதிவை படிக்க இங்கே சொடுக்கவும்

மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் - 5 (ஓயாத அலைகள் )

1 கருத்து:

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...