இந்தியாவை விட்டு வெளியேறி முப்பது வருடங்களுக்கும் மேலாகிவிட்டது. இந்தியாவை விட்டு நான் வெளியேறினாலும் இந்தியா என்னை விட்டு வெளியேறவில்லை என்றுதான் சொல்வேன்.
ஒரு சராசரி வெளிநாடு வாழும் இந்தியனை விட இந்தியாவின் நடப்புகளை கொஞ்சம் அதிகமாகவே கவனிப்பவன் தான் நான்.
இணையதளம் வருவதற்கு முன்பான காலத்தில், தெற்கு அமெரிக்காவிலும் சரி வளைகுடா நாடுகளிலும் சரி, இந்திய செய்தித்தாளை படிப்பதற்காக அங்குள்ள இந்திய தூதரகத்திற்கு சென்று வந்த காலமும் உண்டு.
அன்றைய காலம் முதல் இன்று வரை! இந்தியாவில் உறவில் சரி நட்ப்புகளிலும் சரி சமுதாயத்திலும் சரி எதோ ஒரு நல்லதோ கெட்டதோ என்றால் அடியேனை நாடுவார்கள். நானும் என்னால் முடிந்த உதவிகளை செய்துள்ளேன். அதுமட்டும் அல்லாமல் இங்கே உள்ள உறவுகள் மற்றும் நட்புக்கள் அனைவரிடமும் தொடர்பு கொண்டு அவர்களையும் உதவி செய்ய வற்புறுத்திய காலமும் உண்டு.
இம்மாதிரி அமெரிக்காவில் மற்றும் பல நாடுகளில் வாழ்ந்து கொண்டு இந்தியாவின் சுக துக்கங்களில் பங்கேற்கும் பெரிய கடலில் நானும் ஒரு சிறு துளி.
சரி, தலைப்பிற்கு வருவோம்.
இன்றைய நாட்களில் அமெரிக்காவிற்கு ஒரு பிரச்சனை என்றால் அநேக இந்தியர்களுக்கு அவ்வளவு கொண்டாட்டம்.
"விசு, கொரோனாவில் சரியான பிரச்சனை. இது எங்கே போய் முடிய போகிறதோ.. முன்பை போலவே இன்னார் இன்னாருக்கு உன்னால் முடிந்த உதவி செய், ப்ளீஸ் "
என்று மின்னஞ்சல் எழுதிய ஒருவரின் முகநூல் பதிவில்..
"பெரிய அண்ணன் அமெரிக்காவிற்கு ஆப்பு ! தெருக்கள் கழிவறையான நிலைமை"
என்று ஒரு பதிவை போட , அதற்கு பல லைக்ஸ். சிரிப்பு .. ஆரவரிப்பு!
சில வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு நிகழ்ச்சி.
நாம் அனைவரும் அறிந்த அண்ணன் Alfred (அதாங்க பரதேசி@நியூயார்க் என்ற வலைத்தளத்தில் எழுதுவாரே) அவரின் ஒரு பதிவு ஒரு முன்னோடி செய்தி தாளில் வந்தது. அதை யாரோ எனக்கு சொல்ல நானும் அண்ணனை அழைத்து வாழ்த்து சொல்ல அண்ணன் நீ அதை படித்தாயா? என்றார்.
இல்லை என்ற பதிலை கேட்டு அதற்கான லிங்கை அண்ணன் அனுப்பி வைக்க அந்த பதிவிற்கான தலைப்பு "அமெரிக்காவில் பிச்சைக்காரர்கள்". நியூயார்க் நகரில் வசிக்கும் அண்ணன் தன் இல்லத்தில் இருந்து வேலைக்கு செல்லும் வழியில் கண்ட சில "ஹோம்லஸ் " மற்றும் பிச்சைகேட்டோரை பற்றி ஒரு பதிவு எழுதி இருந்தார்.
அதை கண்ட முன்னோடி செய்தி உடனே பிரசுரித்து விட்டது. அதற்கு பிறகு பல மாதங்கள் கழித்து அண்ணனிடம் பேசுகையில் ..
"அப்புறம், தங்களின் பதிவு வேறு ஏதாவது பதிவு வந்ததா? "
"கண்டிப்பாக வந்து இருக்காது!!"
"ஏன்,எதுவும் எழுதலையா? "
"எழுதினேன், ஆனா அமெரிக்காவில் பிச்சைகாரரை பற்றி எழுதலையே , அதனால வராது"
சோகத்தோடு சிரித்தோம்.
அப்படியென்ன வெறுப்பு?
பல வருடங்களுக்கு முன்பு தமிழ் நாட்டில் மின்சார தட்டுப்பாடு தலைவிரித்து ஆடுகையில் ..இங்கே கத்ரினா என்ற ஒரு புயல் வீச சில மாநிலங்களில் இரண்டு நாட்களுக்கு மின்சார தடை இருந்தது.
அப்போது ஒரு தமிழ் செய்தி தாளின் தலைப்பு செய்தி.
"பெரிய அண்ணன் அமேரிக்கா இருட்டில், மின்சார தட்டுப்பாடு"
-வல்லரசு என்று பீற்றி கொள்ளும் அமெரிக்கா.. blah blah blah ...
ஏன் இவ்வளவு வெறுப்பு?
தற்போது நடந்து வரும் கொரோனா அமெரிக்காவை கடுமையாக தாக்கியுள்ளது. கடந்த நாற்பது நாட்களாக பள்ளி கல்லூரி வர்த்தகங்கள் அலுவலகங்கள் விளையாட்டுகள் உணவகங்கள் என்று அனைத்தும் மூடப்பட்டு இருக்கின்றது.
அமெரிக்காவில் ஜனவரி இறுதியில் செழித்து இருந்த பொருளாதாரம் எங்கே போக போகின்றது என்று யாரும் கணிக்க முடியாத நிலை. பல மில்லியன் மக்களுக்கு வேலை பறிபோயிற்று.
இதை விட மோசம் என்ன வென்றால்.. இந்த வருடம் கல்லூரி படிப்பை முடித்து வேலைக்கு தயாராக இருந்த பட்டதாரிகளின் நிலைமை.
வருட துவக்கத்தில் அனைவருக்கும் வேலை வாய்ப்பு கொட்டி கிடந்தது. ஆனால் இப்போது வேலை எப்போது கிடைக்கும் என்ற பயம்.
ஆனாலும், மக்களின் மத்தியில் ஒரு நம்பிக்கை.. We shall overcome (இதுவும் கடந்து போகும்). இப்படி நாம் இருக்கையில், சமூக வலைத்தளத்திலும் சரி, மற்ற சில இடத்திலும் சரி. கிண்டல்!
நடக்கட்டும்.
இதில் மிகவும் சோகமான காரியம் என்னவென்றால், இங்கே குடியுரிமை பெற்று வாழும் சில இந்தியர்கள் கூட இந்த கிண்டலில் பங்கேற்று கொண்டு இருப்பது. உண்ட வீட்டில் கதை போல..
அடுத்தவனுக்கு இடுக்கண் வந்தால் நகுக !
சென்ற வாரம் இந்தியாவில் இருந்து அழைத்த நண்பர் ஒருவர்..
"என்ன விசு, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மட்டும் ஓவர் இடத்துல ஒரு வேளை சாப்பாட்டுக்கு ஆறு மைல்களுக்கு கார் வரிசையா நின்னதாமே.. உண்மையா"?
அவர் கேட்கையிலே அவ்வளவு சந்தோசம் அவரின் குரலில்.
"தெரியல இருக்கலாம்."
"உங்கள யோசிச்சா பயமா இருக்கு "
"தேங்க்ஸ்.. பட் ரொம்ப பயப்படாதே. ஒரு வேளை எனக்கே சாப்பாடு இல்லாட்டியும், ஒரு வேளை சாப்பாட்டுக்காக வண்டிய எடுத்துன்னு போய் ஆறு மைல் வரிசையில் நாலு மணி நேரம் நிக்க மாட்டேன், அதுல வேஸ்ட் ஆகுற பெட்ரோல் காசை வைச்சி கடையில் ஏதாவது வாங்கி வீட்டுல சமைச்சிப்பேன்"
"ஓ .. ஓகே.. நானும் யோசிச்சேன்.. ஒரு வேளை சாப்பாட்டுக்கு எதுக்கு இவ்வளவு கஷ்டம்ன்னு..."
"டே .. அப்படியே அது உண்மையானாலும் அவன் காருல AC போட்டுன்னு பிடிச்ச பாட்டை கேட்டுன்னு இருப்பான், நீ ரொம்ப பீல் ஆகாத..."
"ஹ்ம்ம்"
"சரி, இந்தியாவில் எப்படி நிலைமை"?
"சொன்னா நம்ப மாட்ட.. அரசாங்கம் கவனமா இருந்ததனால் கொஞ்சம் பாதிப்பு தான். பொருளாதாரம் கூட அப்படியே தலை கீழ மாற போதாம். அமெரிக்காவோடு ஒப்பிட்டா இது ஒரு பாதிப்பே இல்லையாம் . சீனா மேல இருக்க கோவத்துல அமெரிக்கா காரன் அம்புட்டு தொழிற்சாலையையும் இந்தியாவுக்கு மாத்தா போறானாம்.."
"டே, இப்ப தான் ஒரு வேளை சாப்பாட்டுக்கு இங்கே ஆறு மைலுக்கு நிக்கோரம்ன்னு சொன்ன.. இந்தியாவில் தொழிற்சாலை வைச்சி நாங்க என்ன பண்ண போறோம், சரி சொல்லு"
இன்னொரு விஷயம்..
"இந்த கொரோனா முடிஞ்சவுடன். இந்தியா உலகத்தின் தலை சிறந்த சுற்றுலா தளமாக மாற போதாம். இந்த கொரோனாவினால் அமெரிக்கா டாலர் படுபாதாளத்துக்கு போகுமாம். அநேகமா அடுத்த ஜனவரியில் ஒரு டாலர் 40 ரூபாயாம், அமெரிக்கா கதை கந்தலாம் .."
"சந்தோசம், அப்புறம் பேசலாம்."
அப்படி என்ன கொலைவெறி..
நட்ப்புகளே.. அடுத்தவன் கஷ்டத்தில் என்றுமே சந்தோசப்படக்கூடாது முடிந்தால் உதவுவோம்..இல்லாவிடில் குறைந்த பட்சம் உபாத்திரவமாக இல்லாமல் இருப்போம்.
இதுவும் கடந்து போகும். We shall Overcome!

மனித மனம் அவ்வாறு...
பதிலளிநீக்குஅற்ப விசயங்களுக்கு மிகவும் சந்தோசப்படும்... அது தவறு என்பது கூட தெரியாது...
அமெரிக்காவை பற்றி முழுமையாக அறியாதவர்கள் இப்படி எல்லாம் பேசுகிறார்கள் அது போல இங்குள்ள அமெரிக்கர்களும் இந்தியாவை பற்றி முழுமையாக் அறியாமல் பேசிக் கொண்டும்தான் இருக்கிறார்கள் ஆனால் நம்மை போல இங்கு வந்து வசிப்பவர்களுக்குதான் இரண்டு நாடுகளைப் பற்றி உண்மைகள் தெரிகின்றது... உண்மையை சொன்னால் அதுவும் நல்லதுக்கு சொன்னால் தாய் மண்ணை மறந்துவிட்டு பெருமை பேசுகிறான் என்று சொல்லுவார்கள்
பதிலளிநீக்கு