வெள்ளி, 10 ஏப்ரல், 2020

கொரோனா கொடுத்த வரம்!

"ராத்திரி எட்டு மணிக்கு கிச்சனில் என்ன சத்தம்!!!?"

அதட்டி கொண்டே வந்தாள் பெரியவள்.

மேலே செல்லும் முன்பு, அவளை பற்றிய சிறு குறிப்பு :

இருபது வயது.எனக்கும் சரி அம்மணிக்கும் சரி எங்கள் வாழ்க்கையில் கிடைத்த இரண்டு  பொக்கிஷயங்களில் ஒன்று.

அம்மணி அம்மா இல்லாமல் வளர்ந்தாலும் அடியேன் அப்பா இல்லாமல் வளர்ந்தாலும், மூத்தவளை எப்படி வளர்க்க வேண்டும் என்ற முறையையே "Trial and Error" என்று தப்பு சரி தெரியாமல் வளர்த்தோம்.

எவ்வளவு அன்பு காட்ட வேண்டும்?
எப்போது கோபப்பட வேண்டும்?
எப்போது / ஏன் கண்டிக்க  வேண்டும் ?
எவ்வாறு கண்காணிக்க   வேண்டும்?
எப்போது எதற்கு தண்டிக்க வேண்டும்?
மற்றும் சிலவற்றை சரியாக அறிந்து கொள்ளாமல் அவளை வளர்த்தோம்.



ராசாத்திக்ககள் இருவரையும் சிறு வயதில் இருந்தே 18  வயதாகியவுடனே  இல்லத்தை விட்டு கிளம்பி சற்று தொலைவில் உள்ள கல்லூரியில் சேர்ந்து  படிக்க வேண்டும், உலகத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்று அம்மணியும் அடியேனும் உற்சாக படுத்தி வளர்த்ததால் பள்ளி கூடம் முடிந்ததும் 200  கிலோ மீட்டர் அப்பால் உள்ள ஒரு கல்லூரியில் அங்கேயே தங்கி படித்தும் வேலைக்கு சென்றும் வருகின்றாள்.

தற்போது கொரோனா தந்த இம்சையால்  கடந்த ஒரு மாதமாக வீட்டோடு ...

அவள் தான்...

"ராத்திரி எட்டு மணிக்கு கிச்சனில் என்ன சத்தம்!!!?"

கேட்டு கொண்டே வந்தாள்!

"அம்மா வேலையில்  இருந்த வர நேரம், கொரோனா நோயாளிகள் அது இதுன்னு  பயங்கர டென்ஷனில் வருவாங்க, அவங்க உள்ளே நுழையும் போது கிச்சன் அழுக்கா இருந்தா நல்ல இருக்காது இல்ல!!! "

"I need to find myself a man like you", அது சரி, நான் இங்கே இருக்கும் போது என்னை தானே கழுவுன்னு  சத்தம்  போடுவீங்க.."

"அப்படியே நான் சத்தம் போட்டாலும் நீ எப்ப கழுவுனா? சத்தம் போட்டுட்டு  நான் தானே கழுவுவேன்"

"ஓகே!, இருந்தாலும் சின்னவளை கழுவ சொல்லி கொஞ்சம் சத்தம் போடுங்களேன், என்னை ரொம்ப கண்டிப்பா வளர்த்தீங்க, அவளை இப்படி கெட்டு வைச்சு இருக்கீங்களே.."

என்று அவள் கொக்கரிக்க..இளையவளோ..

"அப்பாக்கு  அப்பா இல்ல, அம்மாக்கு அம்மா இல்ல, அதனால உன்னை தப்பு தப்பா  வளத்தாங்கலாம்.. அந்த தப்ப அப்புறமாம் புரிஞ்சிக்குனு என்னை சரியா வளக்குறாங்களாம்"

"யார் சொன்னா!!!"

"அவங்க ரெண்டு பேரும் தான்"

நான் குறுக்கிட்டு ..

"சின்னவ  .. பாத்திரம்.. நல்லா சொன்ன போ...என்னை கழுவி ஊத்திட்டு போவா!!!"

"சரி, இதை ஏன் நீங்க  கழுவின்னு இருக்கீங்க?"

"வேற யாரு கழுவுவா...!!!?"

"இங்கே தான் இதோ டிஷ் வாஷர் இருக்கே.. அதுல போடுங்க...!"

"டிஷ் வாஷர்.. சத்தியமா சொல்றேன், அதை போடவே எனக்கு தெரியாது !" (இங்கே ஒரு விஷயம், அமெரிக்காவில் இந்தியர்களின் இல்லங்களில் ஏறக்குறைய 99  % வீடுகளில் டிஷ் வாஷர் உண்டு, ஆனால் நான் அறிந்த எந்த ஒரு ஆண்மகனுக்கும் அதை எப்படி உபயோக படுத்துவது என்று தெரியாது)

"எத்தனை வருசமா டிஷ் வாஷர் வீட்டுல இருக்கு..?"

"அமெரிக்கா வந்ததில் இருந்தே.."

"அப்புறம் ஏன் யூஸ் பண்றது இல்ல!!?".

"அம்மா தான்..பாத்திரத்தை  கழுவி  துடைச்சு டிஷ் வாஷரில் வைக்கணும்னு .."

"எல்லாத்துக்கும் அம்மா அம்மான்னு .. யாராவது கழுவி துடைச்சிட்டு டிஷ் வாஷரில் வைப்பார்களா.!!?"

"அம்மா தான்...நம்ம மூணு பேருக்கு எதை எதை எப்ப எப்ப எப்படி எப்படி செய்யனும்னு ரூல்ஸ் போட்டு வைச்சி இருக்காங்களே!!!" "

"ஸ்டாப் சேயிங்  அம்மா.. அம்மா..அம்மா..! வாட் ஐஸ் தி ஒன்லி பர்பஸ் ஆப் தி டிஷ் வாஷர்!!?"

"புரியல...!"

"டிஷ்வாஷரின் ஒரே ஒரு வேலை என்ன?"

"பாத்திரம் கழுவுறது..!"

"தென் யூஸ்  இட் பார் தட்.!

பேசி கொண்டே அனைத்தையும் டிஷ்வாஷரில் அடுக்கி வைத்து, அதை சுழல விட்டவள்... ,

"ஒரு அரை மணி நேரம் கழிச்சி வாங்க.. எல்லாம் சுத்தமா இருக்கும்.!

அரை மணிநேரம் கழித்து தோளில்  துண்டோடு நின்ற என்னை பார்த்து,

"இங்கேயேவா நின்னுனு இருந்தீங்க..!!!?"

"இல்ல, அம்மா கொரோனா நோயாளிங்க..!!!"

" I need to find a  man like you for myself,  அம்மா  வரும் போது பாத்திரம் எல்லாம் சுத்தமா இருக்கும்...நீங்க போகலாம்.."

"இல்ல மக, ஈரம் போக துடைச்சு வைக்கணும்.."

"டாடா.. அது முடியும் போது கழுவி துடைச்சு தான் இருக்கும்."

"வாட்.. அப்புறம் எதுக்கு இம்புட்டு வருசமா நான் இந்த வேலையை செஞ்சின்னு இருக்கேன்..!!"

டிஷ்வாஷரில் மணி அடிக்க ....திறந்தாள்.

அம்புட்டும் பளிச்சுன்னு  இருந்தன.. ஒரு சில சமையல் பாத்திரங்களை தவிர..

"மக, இந்த கடாய் தோசை சட்டி எல்லாம் கொஞ்சம் அழுக்கா  இருக்கே.."

"ஓ.. இது எல்லாம் டிஸ் வாஷாருக்கு ஏத்தது அல்ல.. இதையெல்லாம் மாத்துங்க.."

" அம்மா. !!!"

"அம்மா ... அம்மா ... அம்மா..., நான் அவங்கள்ட்ட சொல்றேன், நாளைக்கே டிஷ் வாஷாருக்கு ஏத்த பாத்திரம் ஆன்லைனில் ஆர்டர் பண்றேன்"

அம்மணி வர...

"என்னங்க, பாத்திரம் எல்லா இம்புட்டு சுத்தமா இருக்கு?""

"மூத்தவ தான்..! "

"அட பாவத்த, அவளே பாவம் கொரோனான்னு வீட்டுல அடங்கி இருக்கா, அவளை போய் கழுவ சொன்னீங்களா, நீங்க சும்மா தானே .....!"

 "நானும் தான் கொரோனனு வீட்டுல இருக்கேன்"

"கூட கூட.. !!!!எப்படி இவ்வளவு சுத்தமா!!"

"மாம், நான் தான் அவருக்கு டிஷ் வாஷர் சொல்லி கொடுத்தேன், இவ்வளவு காசு கொடுத்து வாங்கி சும்மா எதுக்கு அழகு பாக்கவா இருக்கு?!"

"ம்ம்.. இனிமேல் பாத்திரம் கழுவுற வேலை இல்ல, அந்த நேரம் உங்களுக்கு மிச்சம், அம்புட்டு நேரத்தை என்ன செய்ய போறீங்க"

"எதனாலும் சரி, ஆனா துணியை எல்லாம் துவைச்சு காய வைச்சி வாஷிங்  மெஷினில் அடுக்கி வைய்யுங்கன்னு மட்டும் சொல்லிடாத"!

4 கருத்துகள்:

  1. இனி அனைத்து வீட்டு வேலைகளையும் தெரிந்து விடும்... இங்கும் அதே... அதே... ஹிஹி...

    பதிலளிநீக்கு
  2. ஹா ஹா ஹா ஹா ....கடைசி வரி சிரிச்சு முடியலை விசு....

    சும்மாதானே சொல்றீங்க டிஷ் வாஷர் யூஸ் செய்யத் தெரியாதுன்னு....

    அதுல எல்லா பாத்திரமும் சரியா வாஷ் ஆகாதுதான்...அதுவும் நம்மூர் கடாய் போன்றவை. ஆனா எல்லாத்தையும் கழுவிப் போட்டாத்தான் அது ஒழுங்கா செய்யும் கழுவிப் போடறதுக்கு நாம்ளே தேச்சுக் கழுவிடலாம்னுதான் தோணும்..

    கீதா

    பதிலளிநீக்கு
  3. டிடி விசு அல்ரெடி எல்லா வேலையும் செய்வார்!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  4. இந்த டிஷ் வாஷர்ல இம்புட்டு விவகாரம் இருக்கா ? சீக்கிரம் பார்க்கணும் , எங்க வீட்டிலேயும் ஒண்ணு இருக்குனு நினைக்கிறேன்

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...