சனி, 18 ஏப்ரல், 2020

பட்டம் அவள் கையில்

சனி காலை ...

இன்றோடு கொரோனாவின் " Work from home"  ஒரு மாதம் நிறைவேற, வார  இறுதி என்று சற்று அதிகமாக தூங்கிவிட்டு .. (அஞ்சி நிமிஷம் தான் கூடுதல்!, நமக்கு வேலை நாட்களில் தானே தூக்கம் வரும், வார இறுதியில் அஞ்சரைக்கே முழிப்பு வந்து விட்டத்த தானே பார்த்துன்னு இருப்போம்) அம்மணி அன்போடு அளித்த காப்பியை கையில் எடுத்து கொண்டு வீட்டின் வாசலுக்கு வர...

எதிரில் காலை நடையை முடித்து திரும்பி கொண்டு இருந்த நபர் ஒருவர், அடியேனை பார்த்து,

"Congratulations, all  the  best "

என்று சொல்ல! நானோ..

 ஓ.. ஒருவேளை.. இந்த கொரோனா நேரத்தில் நம்ம வீதியில் யாருக்கும் கொரோனா தொற்றவில்லை என்று வாழ்த்து  சொல்கிறாரோ என்று இரு கணக்கை போட்டு , பதிலுக்கு

"Thanks, Congrats to you as well"

என்ற பதிலை சொல்ல, அவர் முகத்தில் இவன் எதற்கு எனக்கு வாழ்த்து சொல்கிறான் என்று விழித்து கொண்டே செல்ல..


இல்லத்தின் உள்ளே வந்து.. எதற்கு வாழ்த்து சொன்னார்.. என்று நினைக்கையிலே வெளியே இருந்து பேச்சு சத்தம், ஜன்னலுக்கு போய் என்னதான் நடக்கின்றது என்று நோட்டமிட...

ஆறாவது வீட்டில் உள்ள ஒரு அம்மணி அடியேனின் பக்கத்து வீட்டாரை பார்த்து..

"Congratulations, all the best " என்று சொல்ல ...

ஹ்ம்ம்.. கண்டிப்பாக! இது கொரோனாவிற்கான வாழ்த்து தான். பக்கத்து வீட்டுக்கும் சொல்ராங்களன்னு  நினைத்து.. அப்படியே இருந்தாலும் இந்த பக்கத்து வீடு ஸ்பானிஷ் ஆள் ஏன் பதிலுக்கு "Same to you "சொல்லாமல் "Thanks" மட்டும் சொன்னார் என்று மீண்டும் குழம்ப...

மூத்தவளோ..

"ஹலோ!  இட்ஸ் வீக்கெண்ட், வாங்க ஒரு ட்ரைவ் என் வீடுவரை போயிட்டு வரலாம்!"

"ராஜாத்தி, இன்னும் ஊரடங்கு முடியல, வேணாம்"

"டாட!!!  நாம காரை விட்டு கீழே கூட இறங்க வேண்டாம், போன வாரம் முழுக்க சரியான மழை, சும்மா ஒரு ரவுண்டு போய் எல்லாம் சரியா இருக்கானு பார்த்துட்டது வந்துடலாம்"

என்று சொல்கையில் இளையவளும் அம்மணியும் தயாராகி

"We are ready"

என்று வர ...நானோ,

"நான் வரலை. எங்க ஆஃபிஸில் பயங்கர ஸ்ட்ரிக்ட்! கூட வேலை செய்யுறவங்க யாராவது என்னை வெளிய பார்த்தா, "You need to set an example Vish" ன்னு அஞ்சி நிமிசத்தில் ஈ மெயில் வரும்"

என்று தப்பிக்க ...

மூவரும் 250 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள  அவளின் இல்லத்திற்கு  கிளம்ப அவர்களை அனுப்ப வெளியே செல்கையில், வீட்டை கடந்த வாகனம் ஒன்று "க்ரீச்" என்ற சப்தத்தோடு  பிரேக் அமுக்கி நின்று, இளையவளை பார்த்து ..

"ஆர் யு தி ஒன்!!!? Congratulations, all the best "

என்று சொல்ல,

அடுத்து அவர் சொன்ன வாக்கியம் அடியேனின் மண்டையை பிளந்தது.. அப்படி என்ன சொன்னாரா ?

அவர் சொன்ன வாழ்த்துக்களுக்கு ..

"தேங்க்ஸ்"

என்று இளையவள் புன்னகைக்க..

அவரோ..

"பக்கத்து வீட்டு பையனுக்கும்  என்னுடைய வாழ்த்துக்களை சொல்லிடுங்க. உங்க ரெண்டு பேருக்கும் எங்கள் வாழ்த்துக்கள் "

என்று சொல்ல..

நானோ,

"டேய் என்னடா நடக்குது இங்கே? இவரு இவளை வாழ்த்துறார்.. இவளோ தேங்க்ஸ் சொல்றா..பக்கத்து வீடு பையனுக்கும் வாழ்த்துன்னு சொல்ல சொல்றார், அம்மணியும் மூத்தவளும் சிரிக்கிறாங்க, என்ன வைச்சி காமடி கீமடி பண்றங்களா",

 என்று நினைத்து கொண்டே முழிக்க..

மூவரும் வண்டியை கிளப்பி மூத்தவளின் இல்லத்திற்கு செல்ல, அப்போது தான் அந்த வாழ்த்திற்க்கான அர்த்தம் புரிந்தது.

எதற்கு வாழ்த்துக்கள்?

அமெரிக்காவின்  கலாச்சாரத்தில் மிகவும் முக்கிய பங்கு பெற்றது உயர் நிலை பள்ளிகளின் பட்டமளிப்பு விழா (Graduation Day)! பனிரெண்டாம் ஆண்டுக்கான பள்ளி வருடம் துவங்கியவுடன் இந்த பட்டமளிப்புக்கான தயாரிப்புகள் துவங்கிவிடும்.

இங்கே ஒரு விடயம்!

நான் படிக்கையில் இந்தியாவில் ஒன்றாவதில் இருந்து பதினொன்று வரை என்ன படித்தாலும் படிக்காவிட்டாலும் அதை கண்டுகொள்ளாமல் பனிரெண்டாம் ஆண்டு இறுதி பரீட்சை மதிப்பெண்ணை வைத்தே வாழ்க்கை என்று அமைந்து இருப்பதால், ஒவ்வொரு மாணவ மாணவிக்கும் பனிரெண்டாம் ஆண்டு மிகவும் பெரிய சவாலாக முடியும். பனிரெண்டாம் ஆண்டு தேர்வு  மதிப்பெண்ணை வைத்தே எந்த கல்லூரி எந்த படிப்பு என்று முடிவு செய்ய முடியும்.

ஆனால் இங்கேயோ, பதினோராவது ஆண்டு இறுதியிலேயே (பொதுவாக, அடியேனின் இரண்டு பிள்ளைகளுக்கும் நடந்தது தான்) அவர்களின் மொத்த  பள்ளி (6  ல்  இருந்து 11 வரை ) எடுத்த மதிப்பெண்களின் சராசரியை வைத்து  இந்த கல்லூரி மற்றும் எந்த படிப்பே என்பதை முடிவு செய்யாலாம். இறுதி ஆண்டில் SAT, ACT என்ற சில தேர்வுகள் செய்யலாம். அதை கூட ஆண்டு துவக்கத்திலேயே எழுதிவிட்டால், பள்ளி இறுதி ஆண்டு முழுக்க ஆட்டம் பாட்டம் தான்!

"Graduation Day" க்கு வரலாம்.  இளையவள் இறுதி ஆண்டு தானே.. அதனால் வருட துவக்கத்தில்  இந்த "Graduation day" ல் பங்கு பெற  விண்ணப்பித்து விட்டு அதற்காக 800 டாலர்   (பட்டமளிப்பு அங்கி, விருந்து, நடனம், புகைப்படம் , லொட்டு லொசுக்கு, அதுக்கு எல்லாம் தான்) கட்டி விட்டோம்.

இந்த கல்வி ஆண்டின் ஆரம்பித்திலேயே இந்த "Graduation day"  இந்த வருடம் இந்நாள்  என்று குறிக்க பட அந்த நாளும்  இளையவள் பிறந்தநாளாக அமைய   இளையவள் தன் கசின்ஸ் (ஒன்று விட்டோர் ?) மற்றும் நட்ப்புகளுக்கு  அழைப்பை அனுப்பி அவர்களும் ஏற்று கொள்ள, இல்லமே இந்நாளை பற்றி  பேசி கொண்டு இருக்கையில், பள்ளியில் இருந்து ஒரு அறிவிப்பு.

"கொரோனாவினால் இந்த ஆண்டிற்க்கான "Graduation Day " ரத்து செய்ய படுகின்றது !

அனைவரும் இளையவளுக்கு ஆறுதல் சொல்ல, அவளோ

"பரவாயில்லை .. பரவாயில்லை, ஐ அண்டர்ஸ்டாண்ட் "

என்று சொன்னாலும், முகத்திலோ சோகம்.

"பரவாயில்லை மகள், இந்த கொரோனா முடிந்தவுடன் நாம எல்லாரும் சேர்ந்து சந்தோசமா கொண்டாடலாம் "

என்று தொடர்ந்து அவளை உற்சாக படுத்துகையில்..

பள்ளியின் நிர்வாகமோ..

இந்த வருடம் "Graduation Day" ரத்து செய்ய பட்டது மிகவும் துரதிஷ்டவசமானது . இருந்தாலும் நாம் வெவ்வேறு வித்தியாசமான முறையில் நம் இறுதி ஆண்டு பிள்ளைகளை கொண்டாட வேண்டும், அதற்கான வழி முறைகளை இந்த பிள்ளைகளிடமே ஆன் லைனில் கேட்போம். அதற்கு முன் ஒவ்வொரு பிள்ளையின் இல்லத்தின் எதிரிலும் அப்பிள்ளைக்கு வாழ்த்து சொல்லி ஒரு வாழ்த்து அறிவிப்பை வைப்போம்"

என்று சொன்னதின் விளைவு தான், இன்றைய காலை வாழ்த்துக்கான காரணம்.

நல்ல ஒரு காரியம் என்று தான் சொல்ல வேண்டும்! அறிவிப்பை பார்த்த சில நிமிடங்களில் அயலார் அனைவரும் பிள்ளைக்கு வாழ்த்து சொல்ல, அவளின்  சோகம் சற்று சிரிப்பாக மாறிக்கொண்டு தான் வருகின்றது.

சரி, இவளுக்கு தான் வாழ்த்துக்கள்.. பக்கத்து வீட்டு பையனுக்கு எதற்கு?  அவனும் அருகில் உள்ள இன்னொரு பள்ளியில் இறுதி ஆண்டு படிக்கிறான்.  இங்கே இன்னொரு செய்தி கூறியாகியே வேண்டும். இவை இரண்டுமே அரசாங்க பள்ளி தான்.


பின் குறிப்பு :

"ராசாத்தி! "Graduation Day" ரத்தானத்திற்கு ரொம்ப  விசனம். அதை பத்தி நீ கோச்சிக்காட்டி ஒரு கேள்வி கேக்கணும், பரவாயில்லையா?"

"மை பேட் லக் , டாடா .. பரவாயில்லை விடுங்க ?"

"இல்ல, அந்த .."

"டாடா , இட்ஸ் ஓகே .. விடுங்க.. ஐ அம் ஆல்ரைட் "

"இல்ல, அது வந்து..."

"நீங்க என்ன ...!!? என்னைவிட நீங்க தான் ரொம்ப சோகமாயிருக்கீங்க, பரவாயில்லை விடுங்க"

"இல்லை, நான் சொல்ல வந்தது..."

" சரி பராவயில்ல, சொல்லுங்க"

"அந்த 800 டாலர்  திருப்பி வருமா?"

"அதனா பார்த்தேன். இவரு என்னாடா இவ்வளவு சோகமா இருக்காருன்னு..!!!? "

"வருமா!!!?"

"வரும் ஆனா வராதா"

"புரியல!!"

"வந்தது .. ஆனா அது என் பேங்க் அக்கௌன்ட்க்கு போயிடிச்சி, அதை மறந்துடுங்க."

என்று சொன்ன அவளின் சோகம் சிரிப்பாக மாற என் சிரிப்போ சோகமாக மாறியது. 

6 கருத்துகள்:

  1. Nice one Brother! Congratulations to your daughter. கடைசியில முழு போஸ்ட்டும் அந்த 200 ரூவா கதசுக்கு தானா ;) ;)

    பதிலளிநீக்கு
  2. உங்கள் ராசாத்திக்கு, உங்களின் சிந்தனை தானே இருக்கும்...! வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  3. ஆவரேஜ் ஸ்கோர் என்பது எவ்வளவு உயர்ந்த விஷயம். நம்ம ஊர்ல என்னடான்னா, 12ம் வகுப்பு பாடத்தை மட்டும் படித்து வாந்தி எடுத்தா போதுமானது. எல்லாமே தனியார் நலத்தினைக் கருத்தில் கொண்டுதான் நடக்குது. இன்னும் நம்ம ஊர் போக வேண்டிய தூரம் ரொம்பவே இருக்கு.

    பெண்ணுக்கு வாழ்த்துகள். அதைவிட, அவங்கள் மனசை (மாணவர்கள்) மனதில் கொள்ளும் பள்ளிகளுக்கு பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  4. Congratulations, All the best!!!!!!!!

    (உங்க இளைய ராசாத்திக்கு!!)

    அப்பாவுக்குத் தப்பாத பொண்ணு!!! கணக்குப் பொண்ணு!! ஹா ஹா ஹா

    பள்ளிக்கும் வாழ்த்து சொல்லணும் என்ன அழகா ஊருக்கே தெரியறாமாதிரி வைச்சுருக்காங்க பாருங்க.

    அங்கு கலிஃபோர்னியாவில் நான் முன்பு அறிந்தவரை அரசாங்கப் பள்ளிகள் நன்றாக இருக்கும். மற்ற மாகாணங்கள் பற்றி தெரியலை.

    கீதா

    பதிலளிநீக்கு
  5. $800 ஓட முடிஞ்சு போச்சுன்னு சந்தாஷப்படு தம்பி, இல்லன்னா செலவு எகிறியிருக்கும்

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...