புதன், 22 ஏப்ரல், 2020

ஒரு குட்டி மங்கி கதை.



ஒரு ஊருல ஒரு காடு இருந்துச்சாம் ! அந்த காட்டுல ஒரு மங்கி கூட்டமே இருந்ததாம்! அந்த மங்கிக எல்லாம் அந்த காட்டுல ரொம்ப சந்தோசமா இருந்துச்சாம். அந்த நேரத்துல...ஒரு மூத்த மங்கி  ஒரு நாள் கிணத்துல தண்ணி குடிக்க எட்டி பாத்திச்சாம் .

எட்டி பாத்த மங்கி அங்கே தண்ணீரில் இருந்த நிலாவின் பிம்பத்தை பார்த்து "அய்யகோ , வானத்தில் இருந்த நிலா கீழே விழுந்திடிச்சி. நல்ல வேளை நம்ம கிணறில் தான் விழுந்து இருக்குனு சந்தோச பட்டு.."


ஓடி போய் அங்கே இருக்க மத்த மங்கிகளிடம் சொல்ல அந்த மங்கிகளும் ஓடி போய் அங்கே இருந்த மங்கி தலைவனிடம் சொல்ல மங்கி தலைவனோ நானே வந்து பாக்குறேன்னு சொல்லி ..

அம்புட்டு மங்கியும் கிணத்துக்கு வந்தா நிலா அந்த கிணத்துலேயே இருந்துச்சாம்! இப்ப என்ன பண்றது யோசிக்கும் போது அங்கே இருந்த இன்னும் ரெண்டு மூத்த மற்றும் முக்கிய மங்கி நாம தான் எப்படியாவது இந்த நிலாவை திரும்பவும் வானத்துக்கு அனுப்பனும்னு ஒரு மீட்டிங் போட்டு ஒரு திட்டம் வகுத்தாச்சாம்.

தல மங்கி கிணத்துக்கு பக்கத்தில் இருந்த மரத்துல ஒரு கிளையை கெட்டியா பிடிச்சிக்குன்னு இன்னொரு கையில் அடுத்த மங்கியோட காலை பிடிக்க அடுத்த மங்கியும் அடுத்த மங்கியோட காலை பிடிக்க அப்படியே ஒவ்வொரு மங்கியா தொடர கடைசி மங்கி தண்ணியில் இருந்த நிலா அருகில் போக,

அங்கே நடந்த காற்றசைவால் தண்ணி லேசாக ஆட .. நிலாவின் பிம்பம் சற்று  ஆட...அருகில் இருந்த மங்கி...

யாரும் பேசாதீங்க. நிலா நம்மை பார்த்து பயந்துடிச்சின்னு சொல்ல.. மேலே இருந்த தல மங்கியோ சந்தோசம்  தாங்காமல் கிளையில் இருந்து கையை எடுக்க அம்புட்டு மங்கியும் கிணற்றில் விழுந்ததாம்.

விழுந்த மங்கிங்க அக்கம் பக்கத்துல தேடி பார்த்து நிலா காணாம போனதா பார்த்து குழம்ப.. அது சரி இப்ப எப்படி மேலே போக போறோம்னு  யோசிச்சின்னே  மேலே பாக்க..

மேலே நிலா வானத்துல இருந்துச்சாம்.

உடனே அந்த தல மங்கி... நிலா நம்மை பார்த்து பயந்து ஓடி திரும்பவும் மேலே போயிடுச்சின்னு குதிக்க ..

அம்புட்டு மங்கியும் குதிக்க..

இந்த கதையும் முடிஞ்சிச்சாம்!

பின் குறிப்பு :

நிலா தான் மேல போச்சாம் . ஆனா அம்புட்டு மங்கியும் இன்னும் கிணத்துல இருந்து வெளிய வராம தவிக்குதாம்!

4 கருத்துகள்:

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...