"ஹலோ ..."
"வாத்தியாரே !!!!?"
"சொல்லு தண்டபாணி.."
"தண்டபாணியா..? என்ன வாத்தியாரே உடம்புக்கு முடியலையா? "
"உடம்பு ஓகே தான், எனக்கு தான் முடியல! உன் குரல் என்ன அந்த காலத்து கமலா காமேஷ் குரல் மாதிரி சோகமா இருக்கு"?
"இல்ல, ரொம்ப டென்ஷனா இருந்தா தானே என்னை நீ தண்டபாணின்னு கூப்பிடுவ, இல்லாட்டி தண்டம் தானே..!"
"ரெண்டு வாரமா கொஞ்சம் டென்ஷன் தானே"
" ஒரு முக்கியமான விஷயம்"
"ஒன்னும் முக்கியம் இல்ல, கொரோனா முடியிற வர வெளிய போக கூடாது , வீட்டிலேயே மைண்டைன் பண்ணு"
"இத தான் கேக்க போறேன்னு எப்படி வாத்தியாரே தெரியும்!!!?"
"வீட்டுக்கு வீடு ஜாடிக்கேத்த மூடி தான்"
"பழமொழியை மிக்ஸ் பண்ணிட்ட, அது வீட்டுக்கு வீ....."
"தண்டம், அஞ்சி நிமிசத்துல கூப்புடுறேன் ... கொஞ்சம் பிஸி"
"என்ன வாத்தியாரே... திங்களும் அதுவுமா, ஆபிசில் இருந்தாலே நிதானமா பேசுவியே, இப்ப ஒர்க் ப்ரம் ஹோம் தானே, என் இப்படி அலறுற?"
"கேள்வியும் நீயே பதிலும் நீயே, சரி நீ சொல்ல வந்த விஷயத்தை சீக்கிரம் சொல்லு"
"அம்மணி இன்னும் வேலைக்கு ஆஸ்பிடல் போறாங்களா!!!?"
"உயிர் காக்கும் வேலை ஆச்சே தண்டபாணி, போய் தானே ஆகணும், உன்னை மாதிரி மானிட்டரை பார்த்துனு கொட்டாவி விடுற வேலை இல்லையே.."
"ஆமா, நீ மட்டும் ஆயுளை நீடிக்கிற ஆப்பரேசன் பண்ற பாரு, ஈயத்தை விக்கிற இடத்துல பித்தளையை அடிச்சானாம்"!
"டே, அது இரும்பு அடிக்கிற இடத்துல ஈக்கு.. சரி, விஷயத்துக்கு வா"
"வாத்தியாரே, இந்த கொரோனா அறிகுறி வந்தா, ஆஸ்பிடலில் அவங்கள என்ன பண்றங்களாம்?"
"டே, பாவி ! சுந்தரி பிள்ளைங்க நல்லாதானே இருக்காங்க!!!"
"அவங்க நல்லா தான் இருக்காங்க, எனக்கு தான்"
"தண்டபாணி!!!, என்ன சொல்ற!!!?"
"டென்ஷன் ஆகாத வாத்தியாரே, எனக்கு தான் முடியல"
"என்ன முடியல?"
"24 மணி நேரமும் வூட்டுக்குளே சுந்தரி பிள்ளைகளோடு தாங்க முடியல"
"ஹ்ம்ம் "
"என்ன வாத்தியாரே, அங்கேயும் அப்படி தானா?"
"அதுவா முக்கியம்? ஆஸ்பிடல் பத்தி ஏன் கேட்ட?"
"இல்ல, இருமல், சளின்னு சொல்லிட்டு தானே போய் ரெண்டு வாரம் அங்கேயே தங்கிடலாம்னு இருக்கேன், முடியல வாத்தியாரே,"
பேசி கொண்டே இருக்கையில்..
"டாடா.."
"தண்டம், அஞ்சி நிமிசத்தில் கூப்பிடுறேன்"
"டாடா"
"என்ன ஆச்சி?"
"அரை மணி நேரமா அம்மா கூப்பிடுறாங்க, கேக்கலையா?"
"சாரி"
"அந்த இயர் ப்ளக்ஸை காதுல இருந்து எடுங்க!"
'இல்லையே, கோரானவுக்கு டிவியில் போட சொன்னாங்க..."
"அவங்க சொன்னது வாயை மூட மாஸ்க்"
"வாய மூடற மாஸ்க் பொம்பிளைகளுக்கு, ஆம்பிளைகளுக்கு காதை மூடுனா போதுமாம் "
"ஸ்டாப் ஜோக்கிங்"
"என்னங்க"?
"சொல்லு"
"காலையில் இருந்து கம்புயுட்டரிலே இருக்கீங்களே, வீட்டு வேலைய யாரு பாக்குறது?"
"ஹலோ, ரிமம்பர், இது ஒர்க் ப்ரம் ஹோம், வீட்டில் இருந்து வேலை செய்யணும், வீட்டு வேலை செய்ய கூடாது"
"பொண்ணு பாக்க வரும் போது மல்டி டாஸ்கிங் பண்ணுவீங்கன்னு சொன்னாங்க"
'எனக்கு கூட கால் மேலே கால் போட்டுன்னு சாப்பிடலாம் சொன்னாங்க, அதுக்கு என்னஇப்ப?"
"இப்ப மட்டும் என்ன? காலையில் இருந்து போன் கால் மேலே கால் போட்டுன்னு தானே சாப்பிட்டுனு இருக்கீங்க"
"ஹ்ம்ம்... "
"ஒரே இடத்துல உக்கார கூடாது , முதுகு போயிடும், ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை பத்து நிமிஷம் இப்படி அப்படி நடங்க"
"ஓகே"
ஐந்தாவது நிமிடத்தில்...
"யாராவது வெட்டியா சும்மா நடப்பாங்களா?, அந்த துணியை லாண்டிரியில் போடுங்க"
"சரி"
மீண்டும் ஒர்க் ப்ரம் ஹோம் தொடர, அலை பேசி அலற,
"வாத்தியாரே"
"சாரி, மறந்துட்டேன், அஞ்சி நிமிஷம் ஆச்சி இல்ல"
"ஒர்க் ப்ரம் ஹோம் தானே உனக்கு, என்னமோ ஊரடங்குள போலீசை பாத்தவன் மாதிரி மூச்சு வாங்குது?"
"விஷயத்தை சொல்லு"
"அம்மணிட்ட அந்த ஆஸ்பிடல் விஷயத்தை கெட்டியா"?
"தண்டம், உனக்கு தான் தெரியுமே, கண்ணாலம் ஆனா புதுசுலேயே நானும் அம்மணியும் ஆபிஸ் விஷயத்தை வீட்டுல பேச மாட்டோம்னு ஒப்பந்தம் போட்டோமே, வேணும்னா, நீயே போனை போட்டு விசாரிச்சிக்கோ"
"ஆஃபிஸ் மேட்டர் வீட்டுல பேச மாட்டீங்க, செம்ம மேட்டர் வாத்தியாரே"
"டாடா ..., அஞ்சப்பரில் லஞ்ச் ஆர்டர் பண்ணி இருக்கேன் , டெலிவெரி பண்ண மாட்டார்களாம், கொஞ்சம் போய் வாங்கினு வாங்க, ப்ளீஸ்"
"நான் ஒர்க் ப்ரம் ஹோம் , தெரியும் இல்ல ?"
"இது லஞ்ச் டைம், சீக்கிரம் கிளம்புங்க"
"ஏங்க, நேரா போனீங்களா, வந்தீங்களானு இருக்கணும், போர் அடிக்குதுன்னு தண்டபாணி வீட்டுக்கு போய்டாதீங்க?'
"தண்டபாணி வீடை பத்தி இப்ப ஏன் பேசுற"?
"இப்ப தான் கூப்பிட்டாரு, லேசா இருமலாம், தொண்டை வலியாம்"
"ஓ, ஆஸ்பிடல் போக வேண்டி வருமா?"
'எப்ப இருந்து வேலை விஷயத்தை வீட்டுல பேச ஆரம்பிச்சீங்க, நான் அவருக்கு விலாவாரியா சொல்லிட்டேன்"
"ஓகே"
லஞ்ச் முடிந்தது..
"டாடா , அடுத்த ஒரு மணி நேரம் தொந்தரவே இல்லாம வேலை செஞ்சிட்டு , அந்த பத்து நிமிச ரெஸ்ட் நேரத்துல , சாப்பிட்ட தட்டு எல்லாத்தையும் கழுவி வைச்சிடுங்க"
"அம்மாடி, அம்மா உன்னை தானே கழுவ சொன்னாங்க"
"எனக்கு ஆன் லைன் க்ளாஸ்"
"டாடா..."
இளையவள் அலறினாள்.
"உனக்கு என்ன"
"Wifi வேலை செய்யமாட்டுது... சீக்கிரம், சரி பண்ணுங்க..."
"மக, நான் ஒர்க் ப்ரம் ஹோம்"
"அது தான் நானே கேக்கணும்னு நினைச்சேன்.. Wifi தான் வேலையே செய்யலையே, அப்புறம் கம்ப்யூட்டரில் நீங்க என்ன வேலை பண்றீங்க.. , படம் ஏதாவது டவுன்லோட் பண்ணி .."
"ப்ளீஸ், அம்மாவுக்கு கேட்டுட ..."
"அவங்க இன்னைக்கு நைட் டூட்டி, தூங்க போய்ட்டாங்க"
Wifi சரி செய்து பாத்திரத்தை கழுவி வைக்கையில்..
மூத்தவள்..
"டாடா"
"உனக்கு என்ன?"
"அந்த துவைச்ச துணிய மடிச்சு வைச்சிடுங்க, ப்ளீஸ்"
'அம்மா உன்னை தான மடிக்க சொன்னாங்க"
"என்னை தான் மடிக்க சொன்ன்னாங்க, ஆனா நான் மடிக்காட்டி உங்களுக்குத்தானே டோஸ், அது தான் உங்க நன்மைக்கான சொன்னேன்"
மடித்தாயிற்று.
இன்னொரு மணி நேர வேலை...
"என்னங்க?"
"சொல்லு"
"இத பாருங்க, போன மாசம் ஒரு ஆள் இங்கே இருந்து இந்தியா போகும் போது , ரெண்டு சீட்டிலும் மனைவி காலை போட்டுன்னு தூங்கட்டும்ன்னு நின்னுனே வந்தாராம்"
"அறிவாளி"
"அறிவாளி இல்லீங்க, அன்பானவர்"
"அறிவாளி தான்,15 மணி நேரம் அந்த அம்மா பக்கத்துக்கு சீட்டில் உக்காந்துனு நச்சரித்துன்னு இருந்தா பாவம் அந்த ஆள் என்ன பண்ணி இருப்பான்"
"ஓ, இப்படி ஒரு விஷயம் இருக்கா""
'சரி, சின்னவ குரல் கொஞ்சம் கர கர ன்னு இருக்கு, கிச்சன் போய் கொஞ்சம் சீரகம், வெந்தயம், பட்டைய தண்ணியில் போட்டு சூடு பண்ணுங்க..?"
"ஒர்க் ப்ரம் ஹோம்"
"பத்து நிமிஷம் ரெஸ்ட் நேரமாச்சு.. சீக்கிரம் போங்க"
டாடா .. மூத்தவள் அலறினாள்..
"பாத்ரூமில் ஒரு சிலந்தி.."
'வேற பாத்ரூம் போ"
'கொரோனா, அவங்க அவங்க பாத்ரூம் தனி தனியா போகணும்"
சிலந்தியை அகற்றி விட்டு... ஒர்க் ப்ரம் ஹோம் தொடர..
"என்னங்க...?"
"சொல்லு!!"
"ராத்திரிக்கு கீரை பொரியல், கொஞ்சம் கீரையை ஆஞ்சி கொடுத்துடுறீங்களா "
"அடுத்த பத்து நிமிஷம் பிரேக்கில் பண்றேன்"
இப்படியாக கடிகாரம் ஐந்தடி அடிக்க ..
"என்னங்க , டாடா .. டாடா ..."
"ஒருஒருத்தரா கூப்பிடுங்க, என்ன ஆச்சி"
"இன்னும் கம்ப்யூட்டரில் என்ன பண்ணின்னு இருக்கீங்க?"
"ஒர்க் ப்ரம் ஹோம்"
"அது தான் அஞ்சி மணி ஆச்சே, எல்லாத்தையும் ஆப் பண்ணிட்டு வீட்டுலேயும் கொஞ்சம் உதவி பண்ணுங்க"
"என்னாது? வீட்டுலேயும் கொஞ்ச உதவி பண்ணனுமா ? காலையில் இருந்து என்ன பண்ணின்னு இருந்தேன்?'
அலை பேசி அலற..
"பாஸ், இன்னைக்கு வீட்டுல Wifi வேலை செய்யல, அதனால வேலை டிலே ஆகிடுச்சி.. நாளைக்கு அந்த பேங்க் பைல்ஸ் அனுப்புறேன்"
" ஹொவ் ஐஸ் பேமிலி, வீட்டுல இருக்காங்களா?"
"எஸ்"!
"ஐ அண்டர்ஸ்டண்ட்"
அடுத்த நாள் காலையில்...
ஒன்பது மணிக்கு ஒர்க் ப்ரம் ஹோமிற்கு தயாராக...
மூத்தவள்
"டாடா..."
இளையவள்
"டாடா"
அம்மணி
"என்னங்க?"
"ஒரே நிமிஷம் இருங்க,பாத்ரூம் போயிட்டு வரேன்".
அங்கே,
"தண்டபாணி'
"என்ன வாத்தியாரே, கொரோனா வந்தவன் குரல் மாதிரி உஸ்ஸு புஸ்ஸுன்னு இருக்கு"
"ஒரு முக்கியமான விஷயம்"
"சொல்லு"
"கொஞ்சம் இருமல் சளின்னு ஹாஸ்பிடல் போகலாம்னு அம்மணிட்ட கேட்டியே , அதுக்கு என்ன சொன்னாங்க"
"சாதா இருமல் சளிக்கு எல்லாம் சேக்க மாட்டாங்களாம், வீட்டுலே கவனமா இருக்கணுமாம்."
"ஹ்ம்ம்"
"அது மட்டும் இல்ல, சுந்தரிட்ட இன்னமும் ரெண்டு வாரத்துக்கு கறி , மீன் சாப்பிட கூடாதுன்னு சொல்லீட்டாங்க, உள்ளதும் போச்சி வாத்தியாரே "
"அட பாவத்த, இப்ப என்ன பண்ண போற?"
"ஒன்னும் இல்ல ஒர்க் ப்ரம் ஹோமை ஒர்க் பார் ஹோம்னு மாத்தி செய்ய வேண்டியது தான்"
##tccontest2020
நலம் தானே தலைவரே...!
பதிலளிநீக்குபல தடவை நினைப்பதுண்டு... பதிவையும் எதிர்பார்ப்பதுண்டு...
தொடருங்கள்...
ஹா ஹா ஹா ஹா ஹா...
பதிலளிநீக்குகீதா
நல்லா ஒர்க்அவுட் ஆகியிருக்கு...ஒர்க் ஃபிரம் ஹோம்..ஹாஹாஹாஹாஹாஹா
பதிலளிநீக்குவிசு சார் பதிவுகள்படிச்சி ரொம்ப நாளாச்சி. செம. நான் ஸ்டாப் காமெடி
பதிலளிநீக்கு