பொறாமை படாத மனிதன் என்பது காணுவதே அரிது. உலகில் உள்ள அனைத்து மனிதரும் எதோ ஒரு விஷயத்தில் ஏதாவது அளவில் பொறாமை இருக்கும்?
அடியேனுக்கும் இந்த பொறாமை இருக்கு. வளரும் பருவத்தில் சரி, வாலிப வயதில் சரி இன்றும் சரி.. ஏதாவது ஒரு பொறாமை இருந்துகொண்டே இருக்கின்றது. ஆண்டவன் புண்ணியத்தில் அடியேனுக்கு அது பெரிய அளவில் இல்லை. சாப்பாட்டிற்க்கேற்ற உப்பு போல சரியான அளவில்.
ஆரம்ப பள்ளியில் ..
டீச்சரின் பெட்டாக இருந்த நண்பனை பார்த்து
அதற்கும் முன்பு ...
அப்பாவின் கையை பிடித்து நடக்கும் சிறாரை பார்த்து..
நடுநிலை பள்ளியில்..
Camel ஜாமெட்ரி பெட்டி வைத்து இருந்த நண்பனை பார்த்து...
உயர்நிலை பள்ளியில் ...
அடியேனை விட அதிக மதிப்பெண் வாங்கிய எதிரியை பார்த்து..
கல்லூரியில்..
இருசக்கரத்தில் நாம் பயணிக்கையில் மஹீந்த்ரா ஜீப் வைத்து இருந்த நண்பனை பார்த்து...
ஆலயத்தில் ...
அடியேனை விட அழகாக இசையமைத்து பாடும் சகோதரனை பார்த்து..
கூட்டத்தில் ..
வாயை திறந்தவுடன் மற்றவர்களை குலுங்கி குலுங்கி சிரிக்க வைக்கும் அடுத்தவனை பார்த்து..
பார்ட்டியில்...
என்னை விட நன்றாக நடனமாடும் ஆட்டக்காரனை பார்த்து..
திருமணத்தில்...
எப்படிடா இவன் மட்டும் அவனோட அம்மணி மனசு நோகாமா பாத்துக்குறான் என்பதை பார்த்து..
பிள்ளைகள் விஷயத்தில்....
அட பாவி.. இருந்தா இவனை போல அப்பனா இருக்கணும் என்று நினைக்க வைத்த அப்பன்களை பார்த்து
அம்மா விஷயத்தில்.....
வயதான அம்மாவை கண்ணும் கருத்துமா கவனிக்கிற மகனை பார்த்து..
இப்படி வாழ்க்கையில் நிறைய பொறாமை...
ஹ்ம்ம்... இம்புட்டு பொறாமை பட்டு இருக்கோமே , நம்மை பார்த்து எவனும் பொறாமை படலையேன்னும் ஒரு பொறாமை...

உங்க நகைசுவை எழுத்தைப் பார்த்து நேக்கு பொறாமையாக இருக்குன்னா...
பதிலளிநீக்குநீங்கள் எளிதில் மற்றவர்களுடன் பழகும் தன்மையை பார்த்து நேக்கு பொறாமையாக இருக்குன்னா
பதிலளிநீக்குஅப்புறம் வெஸ்ட் கோஸ்ட் மில்லி....... வேண்டாம் எல்லாரும் பொறாமைபட ஆரம்பிச்சுடுவாங்க
பதிலளிநீக்குஒவ்வொரு காலகட்டத்திலும் நாம் ஒவ்வொருவரைப் பார்த்து வியந்து நமக்கு இல்லையே என்று நினைத்திருப்போம்தான்..
பதிலளிநீக்குவிசு, உங்களைக் கண்டுநாங்கள் வியக்கிறோம் நிறைய.
துளசிதரன், கீதா
ஹா... ஹா...
பதிலளிநீக்குதம்பி விசு, உன்னைப்பார்த்து எனக்கு பொறாமைப்பட ஒரு நூறு விஷயம் இருக்கு.அதுல கொஞ்சத்தை ஏற்கனவே மதுரை சொல்லிட்டார்
பதிலளிநீக்கு