வியாழன், 31 டிசம்பர், 2015

இவன் இல்லாவிடில் எனக்கேது சுதந்திரம்...

மீள் பதிவு தான்.. ஜூலை 4  ... சுதந்திர நாள்.. இவர்களை மறக்க கூடாதே..அதனால் மீண்டும் ஒரு முறை..


அது என்னமோ தெரியல.. கணக்கு பிள்ளை ஆனா நாள் முதல் இன்று வரை கிட்ட தட்ட 30 வருஷம், டிசம்பர்  31ம் தேதி ஊருல   இருக்குற எல்லாரும் குடும்ப சகிதமா வீட்டில் என்சாய் பண்ணி கொண்டு இருக்கும் போது நான் மட்டும் அலுவலக வேலையா தனியா இருப்பேன்.

வருட கடைசியாச்சே.. கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தலை கடைசியா ஒரு முறை பார்த்து கொண்டு இருக்கும் போது...

புதன், 30 டிசம்பர், 2015

தயவு செய்து பெண்கள் இதை படிக்க வேண்டாம்.

சில மாதங்களாகவே பல சமூக வலைதளங்களில் நம் தமிழக அரசியவாதிகளின் நடவடிக்கைகளை பார்த்து கொண்டு வருகின்றேன். இதில் நம் அரசியல்வாதிகள் செய்யும் கேவலமான காரியகளை நம் சமூக வலைதளத்தில் கலாய்த்து  வரும்  பதிவுகள் நம் அனைவரையும் சிரிக்க  வைக்கும் என்பதும்  உண்மையே. உதாரணதிற்கு..

செவ்வாய், 29 டிசம்பர், 2015

கங்கை அமரனுக்கு ஒரு மனம் திறந்த கடிதம்.

"இளையராஜாவின் இசை இல்லையேல் நீங்கள் எல்லாரும் இன்று நாறிசெத்து ஒழிந்து போய் இருப்பீர்கள்". - கங்கை அமரன்.

அண்ணன் அமரனுக்கு ஒரு சேதி ..

 இந்த பதிவை மேலே படிக்கும் முன் (படிக்க நேர்ந்தால்.. அருமை ஞானி இளையராஜா அவர்களின் இசையில் வந்த .. "நேத்து ராத்திரி அம்மா".. மற்றும் "நிலா காயுதே" என்ற பாடல்களில் ஜானகி அவர்கள் மிதிபட்ட பூனை போல் அலறுவார்களே அந்த சப்தத்தை மனதில் வைத்து  கொண்டு படிக்கவும்).

திங்கள், 28 டிசம்பர், 2015

மல்லிகா - தண்டபாணி - சுமதி...

மணியை அழுத்தினேன்.. டிங் டாங்…

வா வாத்தியாரே… என்ன சொல்லாம கொள்ளாம இந்த பக்கம்?


ஒன்னும் இல்ல தண்டம்… அம்மணி சுந்தரியிடம் …மல்லிகாவை கொடுத்துவிட்டு வர சொன்னாங்க …

என்ன வாத்தியாரே.. மல்லிகான்னு சொல்லிட்டு எதோ டிபன் டப்பாவில் எடுத்துன்னு வந்து இருக்க?

பாணி.உனக்கு கல்யாணம் ஆகி 10 வருஷத்திற்கும் மேலே ஆச்சிதானே …?

அந்த விபத்து நடந்து தான் 15 வருஷம் கிட்ட ஆக போதே .. அதுக்கு என்ன இப்ப?

மனைவி எதையாவது எதிலாவது போட்டு எப்பவாது எங்கேயாவது கொடுன்னு சொன்னாங்கனா … கேள்வி எதுவும் கேட்க கூடாது … அமைதியா
செய்யணும் ..

அதுவும் சரிதான் ..

ஞாயிறு, 27 டிசம்பர், 2015

நினைத்ததெல்லாம் நடந்துவிட்டால், நினைத்தாலே இனிக்கும்!

இப்போது தான் ஆரம்பித்தது போல் இருந்தது, கண் மூடி திறப்பதற்கு முன் இந்த வருடம் முடிந்து விட்டது. எல்லா வருடங்களும் ஒரே மாதிரியாக இருந்தாலும் இந்த வருடம் சில விஷயங்களில் ஒரு தனி தன்மை பெற்றது என்று தான் சொல்ல வேண்டும்.

வெள்ளி, 25 டிசம்பர், 2015

தன்னை போல் பிறனையும் நேசி

பல வருடங்களுக்கு முன் வளைகுடா நாடுகளில் வாழும் போது கிறிஸ்துமஸ் அன்று நடந்த ஓர் நிகழ்ச்சி:
இன்னொரு கிறிஸ்மஸ், இன்னொரு வருடம், குடும்பத்தை பிரிந்து பிழைப்புக்காக வந்துள்ள நீங்கள் ஒவ்வொருவரும் துக்கத்தை சற்று தள்ளி வைத்து விட்டு சிறிது நேரமாவது சந்தோசமாக இருப்போம்.  நீங்கள் அனைவரும் தம் தம் இல்லத்திற்கு போன் செய்து பேசி விட்டீர்களா? அப்படி போன் செய்யாதவர்கள் எங்கள் வீட்டு போனை உபயோகபடுத்தி கொள்ளலாம்.

ஞாயிறு, 20 டிசம்பர், 2015

அய்யய்யோ ஊரே கெட்டு போச்சு

மீண்டும் வார இறுதி.. அருமை நண்பர் ஒருவர் இல்லத்திற்கு வர இருவரும் சேர்ந்து ஒரு பாடலை பதிவு செய்தோம். இன்றைய வாழ்க்கைத் தரத்தை பற்றியது.

இந்த ராகமும் பொப்பிசை பிதா நிதி கனகரதினர்திக்கு சொந்தம். எழுத்துக்கள் மற்றும் பாடியது மட்டுமே நான். இசை அவருடையதே.

கேட்டு பார்த்து பிடித்து இருந்தால்.. சொல்லுங்கள்..

சனி, 19 டிசம்பர், 2015

கை நிறைய சம்பளம், இந்தியாவிற்கு வந்துடு…

இன்று காலை எழுந்தவுடன் படித்த ஒரு தலைப்பு செய்தி என்னை மலரும் நினைவிற்கு அழைத்து சென்றது. அந்த செய்தி என்ன என்பதை இந்த பதிவின் இறுதியில் பார்க்கலாம். இதை பற்றி தான் சென்ற வருடம் ஒரு பதிவிலும்  மற்றும் புத்தகத்திலேயும் எழுதி இருந்தேனே. 


அதை படிக்கும் வாய்ப்பு இல்லாதவர்களுக்காக இந்த மீள் பதிவு.

கை நிறைய சம்பளம், இந்தியாவிற்கு வந்துடு…

விசு, ரொம்ப நாளா வெளிநாட்டிலே இருக்கிறியே? ஒரு “ஆறுவருஷம்” நல்ல ஒரு ப்ராஜக்ட் இருக்கு, வரியா?

வெள்ளி, 18 டிசம்பர், 2015

சிந்திப்போம்...சந்திப்போம்...

இனியும் தாமதித்தால் நம் பிள்ளைகளின் எதிர்காலமும் இந்த பிணந்தின்னி பிறவிகளிடம் அடகு வைக்க படும். இதுவரை ஏமாந்தது போதும். விழிக்கும் நேரம் அல்லவா இது. இனிமேலும் நாம் சுதாரிக்காவிடில், நமக்கு ஐயோ..

யோசித்து பார்போம்.

ஞாயிறு, 13 டிசம்பர், 2015

அண்ணே… இவங்க நிஜமாவே முட்டாளுங்க தான் அண்ணே…

மே 7ம் தேதி நான் எழுதி வெளியிட்ட பதிவு... நெஞ்சு பொறுக்குதிலையே...
"கூத்தாடி முட்டாள்” சல்மான் கானிற்கு ஐந்து வருடம் சிறை தண்டனை என்ற செய்தி வந்தவுடன் இந்த கூத்தாடி முட்டாளின் சகாக்கள் இவருக்காக பேசுவதையும் இவரை சந்தித்து “கட்டிபுடி வைத்தியம்” பண்ணுவதையும் பார்த்தால் … இவர்கள் நடிக்கவில்லை, உண்மையாகவே முட்டாள்கள் என்று உறுதியாகி விட்டது, இவர்கள் செய்வதை எல்லாம் பார்த்தால் ஏதோ நாட்டின் பாதுகாப்புக்காக தன்னையே அர்பணித்த ஒருவரை அநியாமாக திட்டமிட்டு அனைவரும் சதி செய்து சிறைக்கு அனுப்ப திட்டம் போல் நினைக்க தோன்றுகின்றது.
இந்த சல்மான் “சனியன்” , பதிமூன்று வருடங்கள் கழித்து வண்டியை ஒட்டியது தான் இல்லை தன் தகப்பனின் டிரைவர் என்று ஒரு பலிகடாவை முன் நிறுத்தினார் .
கடந்த பதிமூன்று வருடங்களில் இந்த கூத்தாடி முட்டாள் செய்த பித்தலாட்டங்கள் … இந்திய சட்டம் மற்றும் நீதி துறையை பார்த்து … “நான் எதை வேணுமானாலும் செய்வேன், உங்களால ஒரு ஆணிய கூட புடுங்க முடியாது” என்று சொல்வது போல் உள்ளது.
இந்த கூத்தாடி முட்டாளின் சாகாக்கள் சொல்லும் சில காரணங்கள் …

சனி, 12 டிசம்பர், 2015

உப்புமாவிற்கு பச்சிடியா.. இதை கேக்க யாருமே இல்லையா?

வார இறுதி என்றாலே ஒரு குஷி தானே. இந்தயாவில் வாழும் வரை வார இறுதி என்பது ஒரு விஷயமே இல்லாமல் இருந்தது. பல வருடங்களுக்கு முன் வெளிநாடு வந்தவுடன் வந்த புதிய அனுபவங்களில் ஒன்று.

வார இறுதி.

வெள்ளி, 11 டிசம்பர், 2015

வாராய் ... நீ வாராய்...

என்னை ஏமாற்றிய எல் நினோ..

மார்ச் 2015.இணைய தளத்தில் ஒரு அறிவிப்பு.

தென் கலிபோர்னியா மக்களுக்கு ஒரு செய்தி. பசிபிக் பெருங்கடலில் நடந்துள்ள காற்றழுத்த மாறுதலால் இந்த வருட இறுதியில் துவங்கி அடுத்த வருடம் ஆரம்ப  நாட்களில் வரலாறு காணாத மழை பெய்ய வாய்ப்பு.

வியாழன், 10 டிசம்பர், 2015

முண்டாசே நான் முண்டம் தான் :(

நல்ல வேளை.. நீ இல்லை..

இருந்து இருந்தால்..

முண்டாசே என்னை முண்டம் என்றிருப்பாய் .


இன்னுயிர் தந்தென்னை ஈன்றெடுத்த இந்நாடு என்றாய்..
இமையசைத்தால்  இன்னல்கள் இது நாடில்லை சுடுகாடு.

அன்னையர் தோன்றி மழலைகள் கூறி அறிந்த நாடென்றாய்..
அன்னை என்று அர்த்தமின்றி சென்னையை இழந்தோம் இன்று நாங்கள்.

கன்னியராகி நிலாவிலாடி களித்ததும் இந்நாடென்றாய்
கண்ணியம் அன்றி கன்னியும்  இன்று தண்ணி அடித்து.. என்னத்த சொல்வேன்..

பொன்னுடல் இன்புற நீர்விளையாடி இல் போந்ததும் இந்நாடென்றாய்
 நீர் வெள்ளமாகி இல் போந்து பொன்னுடலும் பிணமாய் போனதே.

வெள்ளி பனிமலையின் மீதுலாவுவோம் என்றாய்.
வெள்ள சாக்கடையில் அல்லவா மிதக்கின்றோம்.

அடி மேலை கடல் முழுதும் கப்பல் விடுவோம் என்றாய்
அடி மேல் அடி பட்டு காகித கப்பல் ஆனோம் ஐயா!

பள்ளி தளம் அனைத்தும் கோவில் செய்குவோம் என்றாய்
பள்ளி கோயில் நடுவிலும்டாஸ்மாக் வைத்தோம்.

// காவிரி தென்பெண்ணை பாலாறு தமிழ்
கண்டதோர் வையை பொருனைநதி என
மேவிய யாறு பலவோடத் திரு
மேனி செழித்த தமிழ்நாடு...//

மன்னிக்கவேண்டும் முண்டாசு...

"நலங்கெடப் புழுதியில் நல்லதோர் வீணையை வீசிவிட்டோம் ...."

நல்லவேளை நீ இங்கில்லை.. இருந்திருந்தால்..
பாரதி யார் ? என்றும் கேட்டு இருப்போம்...
உன் பிறந்த நாளை கொண்டாடும் மனநிலை இப்போது இல்லை..மன்னிக்கவும் ..


என் பெயரை சொல்லி *பால் அடிக்கவும், முகத்தில் *ரி துப்பவும்

மூன்று வாரத்திற்கும் மேல் சென்னை மழையில் மக்கள் படும் பாடை பார்த்து மனம் நோகாதவர்களே இல்லை.


இந்த பாழாய் போன நிலைமைக்கு நமக்கு நாமே தெரிந்து எடுத்த அரசும் அந்த அரசு நியமித்த அதிகாரிகளும் தான் என்று நொந்து கொண்டு இருக்கையில்..
சாவு செய்திகள்.



உதவி இன்றி கணவன் மனைவி சாவு..

செவ்வாய், 8 டிசம்பர், 2015

ஒரே பாட்டு... வெவ்வேறு அர்த்தம்.. நடந்தது என்ன?

ஒரே பாட்டு... வெவ்வேறு அர்த்தம்.. நடந்தது என்ன?

என்ன விசு.. சென்னையில் வெள்ளம் வந்தாலும் வந்தது நீ வெள்ளமா பொங்கி எழுறியே என்று நண்பன் தண்டபாணியின் கேள்வி வந்தது.

என்னத்த சொல்வேன் பாணி. தான் ஆடாவிட்டாலும் தசை ஆடுதே. அங்கே நடக்குற அநியாயத்த பார்த்தா ரொம்ப கஷ்டமா இருக்கு.

சரி.. இவ்வளவு எழுதுறியே.. மீண்டும் அங்கே போகலாம்னு முடிவு செய்திட்டியா?

திங்கள், 7 டிசம்பர், 2015

மூத்த குடி மக்கள் அல்லவா நாம், திருந்த வேண்டாமா? தருணம் இதுவே !

கல்தோன்றி மண்தோன்றா காலம் முதல் வாழ்ந்து வந்த குடி அல்லவா தமிழினம்.

நேற்று வந்த கூகிளில் உலகில் முதலில் பேச பட்ட மொழி என்னவென்று கேட்டு பாருங்கள் .. தமிழ் என்று பதில் வரும்.

ஒன்றே நன்றே இன்றே செய்ய வேண்டும்

கடந்த சில நாட்களாக தமிழ் நாட்டில் பெய்து வரும் மழை. இந்த வரத்தை நாம் வாய் தவறியும் சபிக்க கூடாது.

சனி, 5 டிசம்பர், 2015

வெள்ளத்து நட்டம்.. எங்கே போவார்கள் நடுத்தர மக்கள்.

சென்னையில் வந்த வெள்ளம் நம் அனைவரையும் மிகவும் பாதித்தது அனைவரும் அறிந்ததே. என்னை போல் வெளிநாட்டில் வாழ்பவர்களும் சரி, மற்றும் வெளியூரில் இருப்பவர்கள் மனதளவில் பாதிக்க பட்டு இருந்தாலும், சென்னையிலே குடி இருப்பவர்கள் மனதளவு மட்டும் அல்லாமல் நிறைய பொருள்களையும் இழந்து தத்தளித்து நிற்கின்றார்கள்.


வெள்ளி, 4 டிசம்பர், 2015

பொங்கல் நிகழ்ச்சிக்கு அமெரிக்கா வரும் தமிழ் சான்றோருக்கு ஒரு மனம் திறந்த கடிதம்.

வணக்கம்.2015 தீபாவளி முடிந்தது. வெளிநாட்டு பிரயாணம் எல்லாம் முடிந்து வாங்கிய டாலரை 66ல் பெருக்கி வங்கியில் போட்டு அமர்ந்து க்னோடு இருப்பீர்கள். தவறே இல்லை. உங்கள் தமிழ், உங்கள் அறிவு, உங்கள் பேச்சு திறன், உங்கள் பெயர்.


இன்னும் நான்கு வாரத்தில் அமெரிக்காவில் உள்ள அணைத்து தமிழ் சங்கத்தில் இருந்தும் தங்களுக்கு அழைப்பு வரும். ஒன்றும் இல்லை .. பொங்கலை உங்களோடு சேர்ந்து பொங்க தான். அதுவும் தவறு இல்லை.
பல்லாயிரம் கணக்கான மைல் தாண்டி வந்தாலும் நாம் தமிழர்கள் ஆயிற்றே. பிரபலத்தை காண திரளாக ஓடி வருவோம்.

இந்த பொங்கலுக்கு வரும் உங்களுக்கு ஒரு விண்ணப்பம். கண்டிப்பாக திரண்டு வாருங்கள். உங்களை காண - உங்களை கேட்க நாங்களும் திரண்டு வருகின்றோம். ஆனால் ஒன்று.

வியாழன், 3 டிசம்பர், 2015

ஆறு மனமே ஆறு ...

இன்று என் முகநூலில்  ஒரு கருத்து வந்தது. அதில் அமெரிக்காவில் வசிக்கும் முகநூல் நண்பர் ஒருவர் ..

I see only negative posts from you .. U even commented negatively in my posts. This is a time for positivity. We have to leave our personal agenda and make people feel good about next minute .. U can change ur attitude or unfriend me...

என்று எழுதி இருந்தார். அதற்கு பதிலாக நான் ...

I respect your feelings and am not going to change my attitude or the way I think and speak. Please note that I am "Unfriending" you, per your wish. Appreciate your tolerance so far and God Bless...

என்று எழுதி அவர் ஆசைக்கு இணங்கி அவரை என் நண்பர்கள் பட்டியலில் இருந்து எடுத்து விட்டேன்.

அதை தொடர்ந்து முகநூல் படிக்கையில் ..

நடிகர் பிரதாப் போதன் அவர்கள் முகநூலில்..

"சென்னைவாசிகளை நினைத்து நான் பெருமைபடுகிறேன். இவ்வளவு சேதம் நடந்தும் அமெரிக்காவில் நியூ ஓர்லீன்ஸ் நகரில் நடந்ததை போல் கொள்ளை எதுவும் நடக்கவில்லை. நாம் எவ்வளவு நல்லவர்கள்"
என்று போட்டு இருந்தார்.

நடிகருக்கு.. நம்முடைய பிரச்சனையே இது தான். தலைக்கு மேல் வெள்ளம், இந்த நேரத்திலும் நாங்கள் அவனைவிட மேல்.. இவனை விட மேல்.. என்று கூவுவது.

நம்மவர்கள் வருடக்கணக்கில் செய்த கொள்ளையினால் தானே இந்த அவல நிலையே நமக்கு வந்தது.

அடுத்து ... சில பேர்  இந்த நேரத்தில் நாம் இப்படி குறை காட்டி எழுத கூடாதாம். 

இங்கு ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன்.

குறை சொல்ல வேண்டும். கண்டிப்பாக குறை சொல்லவேண்டும். இப்போது குறை சொன்னால் தான் நாம் செய்யும் தவறுகளை திருத்தி கொள்ள ஒரு சிறு வாய்ப்பாவது உண்டு.

ஏறக்குறைய ஐம்பது வருடங்களில் ஒரு நகரத்தை நரகமாக்கிய அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும், இலவசதிர்க்காக தன்மானத்தை விற்ற நம்மையும் நாமே இப்போது குறை சொன்னால் தான் கொஞ்சமாவது உரைக்கும்.

இன்னும் நான்கு மாதத்தில் காவிரியை திற என்றும், மழைக்காக வருண பகவானுக்கு வேண்டுதல் என்றும் குடிநீருக்காக வரிசையில் நிற்கும் போதும் நாம் இதை மறந்துவிடுவோம்.

குறை சொல்லட்டும்.. அதை பார்த்து ஒருவராவது திருந்தட்டும்.


கடைசியாக ...ஒரு மனிதனின் உளைச்சல்.

சென்னை மக்களின் ஒற்றுமையை பாருங்கள்.. என்னே ஒரு மனிதத்தனம் என்று மெச்சி கொள்ளாமல்.. இந்த அவலநிலை நமக்கு எப்படி வந்தது என்று யோசியுங்கள். இந்த கானொளியில் உள்ள ஒரு வீடு சென்ற வாரம் தான் கோடிகளுக்கு வாங்கப்பட்டு, கிரக பிரவேசத்திற்கு கட்டிய வாழை மரம் இன்னும் இருக்கின்றது. இந்த நிலைமை நமக்கு ஏன் வந்தது? இதை பதிவு செய்தவரின் குரலை கேட்க்கையில் நெஞ்சம் பதறுகின்றது.

இனிமேல் ஒட்டு கேக்க வராதிங்கடா.. செத்து போங்கடா என்று இவர் சொல்கின்றார்.


 கிரக பிரவேசத்திற்கு கட்டிய வாழை மரம் இன்னும் இருக்கின்றது

தயவு செய்து இந்த காணொளியை ஒரு முறை பாருங்கள். உங்களை மன்றாடி கேட்டு கொள்கிறேன். என் குமுறல்களின் அர்த்தங்கள் புரியும். 

செவ்வாய், 1 டிசம்பர், 2015

அறிவுகெட்ட தமிழன் நான்...

உலகம் முழுவதும் வரமாக இருக்கும் மழை தமிழனக்கு மட்டும் சாபம். என்ன ஒரு கேவலம். எங்கே பார்த்தாலும் தண்ணீர் தேங்கி நின்று கொண்டு  இருக்கின்றது.



நீர்வழி அத்தனையையும் ஆக்கிரமித்து விட்டு இப்போது தன் இல்லத்தில் நீர் புகுந்து விட்டது என்று ஒப்பாரி.

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...