சனி, 25 அக்டோபர், 2014

பெண்ணின் சக்தி ... ஒரு பாடல் வாயிலாக!



சென்ற வாரம் நான் எழுதிய " அதை காண வானவிலும் அங்கே வந்தது" உங்களில் அநேகர் ரசித்து படித்து பின்னூட்டம் அளித்து இருந்தீர்கள். அந்த உற்சாகத்தினால் எனக்கு பிடித்த மற்ற சில  ஆங்கில பாடல்களை மொழிபெயர்ப்பு செய்து அந்த பாடலின் இணைப்பையும் (காணொளி) தருகின்றேன்.

இம்முறை நான் தரும் என்னை கவர்ந்த பாடல் "Shaggy" என்பவரின் "Strength of a Woman". ஒரு பெண்ணை , பெண் இனத்தை தான் என்ன அழகாக புகழ்ந்து ஒரு அருமையான ராகத்தையும் போட்டு தானே பாடி, கூட வாத்தியம் வாசிக்கும் இசை கலைஞ்சர்களை கூட பெண்களாகவே வைத்து... கீழ் உள்ள மொழியாக்கத்தை படித்து விட்டு நீங்களே இந்த பாடலை கேட்டு பாருங்களேன்.



இதோ அந்த பாடலின் மொழியாக்கம்:

இவ்வுலக படைப்பு என்ன அற்புதம் 
ஒரு வேளை, படைத்தது ஓர் பெண்ணோ?
தனக்குள் ஓர் உயிரை உருவாக்கி,
சிலிர்க்க வைக்கின்றாளே...
தலை குனிகின்றேன்,
அப்பெண்ணுக்கு...

என் வாழ்க்கை ஓடத்தை செலுத்தும்
காற்றும் ஒரு பெண்ணே...
புன்னகை, தனக்கென்று ஒரு பாணி 
குழந்தை போல் நம்மை காக்கின்றாளே,
அந்த பெண்.

என் முகத்தில் ஒரு புன் முறுவல் தருங்கின்றாளே ,
ஆகாயதிர்க்கே அழைத்து செல்கின்றாளே , 
என்றைக்கும் குறைத்து நினைக்காதே...
அப்பெண்ணின் சக்தியை.

காலையில்எழுவதே அவளை  உச்சி முகரவே,
அவளின்றி என் வாழ்வு வெற்றிடம்தானே,
பிச்சி எடுக்கும் நச்சரிப்பும் எச்சரிப்பும் 
உச்சரிப்பும் அங்கே இங்கே இருக்குமே ... 
அப்பெண்ணிடம்,

என்னை மடையனாகிய அவள் இடை,
அதை அடைய இல்லை தடை.
என்ன ஒரு அற்புதம், அப்பெண்!

என் முகத்தில் ஒரு புன் முறுவல் தருங்கின்றாளே ,
ஆகாயதிர்க்கே அழைத்து செல்கின்றாளே , 
என்றைக்கும் குறைத்து நினைக்காதே...
அப்பெண்ணின் சக்தியை.

தேன் போன்ற மாதுளை  உதடுகள், தரும்,  
வருடும்  வார்த்தைகள் தக்க நேரத்தில்   
தேவதை  தான் அவள் நம் தேவையில்

அவள் கால் பட்ட பூமியை
ஆண்டவனே ஆசிர்வதிப்பாபானே,

நம் வாழ்க்கை தரத்தை உயர்த்துவாள், 
நம் அழுகையிலே ஆறுதல் அளிப்பாள்,

அவள் கண்களை கூர்ந்து நோக்கு, 
அப்போது தெரியும் உனக்கு
அப்பெண்ணின் சக்தி ....    


என் முகத்தில் ஒரு புன் முறுவல் தருங்கின்றாளே ,
ஆகாயதிர்க்கே அழைத்து செல்கின்றாளே , 
என்றைக்கும் குறைத்து நினைக்காதே...
அப்பெண்ணின் சக்தியை.






www.visuawesome.com

6 கருத்துகள்:

  1. ப்பெண்ணின் சக்தியை சரியாக ஆண்கலால் இன்னமும் புரிஞ்சுக்க முடியல.
    என்று மாருமோ இந்த நிலை!

    மொழிபெயர்ப்பு சூப்பர் சார்!

    பதிலளிநீக்கு
  2. நண்பர் விசு,

    shaagy நான் கேட்பதில்லை. ஆனால் இது நன்றாகத்தான் இருக்கிறது என்ன ஒன்று இத்தனை கருத்தான பாடலுக்கு அந்த காட்சிகள் பொருத்தமானதாக இல்லை. பெண்களை இழிவுபடுத்தும் வழக்கமான கேளிக்கை நோக்கம் கொண்ட படப்பிடிப்பு. இதை விட foreigner குழுவினரின் women என்ற பாடல் சரியான தடாலடி. கவிதை கூட அசத்தல். கேட்டிருக்கலாம். மீண்டும் கேளுங்கள் எனக்காக.

    https://www.youtube.com/watch?v=McdTUlVWAE0

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி காரிகன். Foreigner "Women" கேட்டு உள்ளேன். எனக்கு என்னமோ Rock இசையை விட Reggae மேல் சற்று அதிக பிரியம். அது மட்டும் அல்லாம் இந்த Foreigner "Women" பாடல் 60'ல் வந்த "Woolly bully" மற்றும் "Born to be Wild" என்ற இரு பாட்டுகளையும் சேர்த்து கேட்பது போல் ஒரு உணர்ச்சி.

      Shaggy அவர்களின் இந்த பாடல் பாடல் காட்சி பெண்களை கேளிக்கை செய்வது போல் இருக்கின்றது என்று தங்கள் சொன்ன கருத்தை நான் ஏற்க்காவிடாலும், மதிக்கின்றேன். We will agree to disagree on that. இனிய இருக்க இன்னாவை பற்றி நாம் ஏன் பேச வேண்டும்,
      தொடர்ந்து வாருங்கள் இசையை ரசிக்கலாம்.

      AR Rehman "சின்ன சின்ன ஆசை" வெளி வந்த நேரத்தில், அதை ஒரு நாள் நான் நண்பன் ஒருவரின் காரில் (என் காரில் அல்லது வீட்டில் Oscar Awardee AR Rehman வர வாய்ப்பில்லை, அதை பற்றி வேறொரு நாள் பேசுவோம்) கேட்டு கொண்டு இருக்கையில், கூட அமர்ந்து இருந்த ஜமைகா நாட்டை சேர்ந்த நண்பர் கூறியது... " ஓ. எங்கள் ஊர் Bob Marley, உங்க ஊரிலேயும் பிரபலமா? அவர் பாடலை தங்கள் மொழியில் பாடி இருகின்றீர்களே.. நல்ல வேலை, அந்த நண்பருக்கு தமிழ் தெரியவில்லை. இல்லாவிடில், Sound of Music, ல் வந்த "Favorite Things" பாடலின் வரிகளை சற்று தன் வழிக்கு மாற்றி வைர முத்து அவர்கள் மாற்றி விட்டார் என்றும் சொல்லி இருப்பார்.
      வருகைக்கு நன்றி. எங்கே தங்கள் அடுத்த சியை பற்றியான பதிவு, ஆவலுடன் காத்து கொண்டு இருகின்றோம்.

      நீக்கு
  3. விசு,

    பெண்ணின் இடை ஆணை மடயனாகிடுமோ? இல்லை இல்லை கவின்ஞனாயல்லவா மாற்றும்.

    கோ

    பதிலளிநீக்கு
  4. நல்ல வரிகள்! மொழிபெயர்ப்பும் மிகவும் அருமையாகச் செய்கின்றீர்கள்! மேற்கத்திய இசை பரிச்சயம் என்றாலும் ஆழ்ந்த பரிச்சயமோ, அறிவோ இல்லை. உங்களின் மூலம் அதையும் கற்றுக் கொள்கின்றோம்.

    ரஹ்மான் நன்றாக இசை அமைத்தாலும்.....அமைத்தா....தா....தா....லும்.....மேற்கத்திய இசையையும்,பல நாடுகளின் இசையையும் நன்றாக அறிந்தவர்களுக்கு பல விஷயங்கள் புரியும்.....நீங்கள் காரிகன் அவர்களுக்கு பதில் சொல்லியிருப்பது போல்....பகிர்வுக்கு மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  5. மிக அருமை! தங்கள் மொழிபெயர்ப்புக்கு மிக்க நன்றி, மிக அருமையான பதிவு நண்பரே :)

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...