வெள்ளி, 30 அக்டோபர், 2015

பாட்டு பாடவா ? வா .....


பல வருடங்களுக்கு முன் என் கல்லூரி தோழன் "முத்து" வை  போலிஸ் கைது செய்த விஷயம் எனக்கு இன்றும் நன்றாக நினைவில் உள்ளது.

வேலூர் அருகே காந்திநகரில் வாழ்ந்த நாட்கள். ஒவ்வொரு வீடும் "சீட்டு கட்டு கணக்காக" அருகே அருகே கட்டப்பட்டு இருக்கும்.நண்பன் முத்து நமக்கு மிகவும் வேண்டியவன்.

சில நாட்களாகவே நண்பன் முத்து காலை வேளையில் கோழி கூவுவதற்கு முன்பே எழுந்து குளித்து  நண்பர்கள் அனைவரையும்  " என்னதான் நடக்கும் நடக்கட்டுமே" என்று நினைக்க வைத்தது மனதில் இன்றும் பசுமரத்து ஆணி போல் உள்ளது.

என்ன முத்து ? இப்பெல்லாம் காலையில் சீக்கிரமா ரெடி..

அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல விசு..

டேய்.. .முயல் புடிக்கிற நாயை ... பழமொழி தெரியும் இல்ல..

அப்படி என் மூஞ்சில் என்ன தெரிஞ்சது ?

ஒரே புன்னகையா இருக்கியே..

அப்படி ஒன்னும் இல்ல..

காதல் ஏதாவது...

புதன், 28 அக்டோபர், 2015

"பராசக்தி"யில் இருந்து "படையப்பா" வரை...

இது ஓர் தொடர் பதிவு ..

முதல் பாகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்.

அதிசயம் : "நடக்காதென்பார் நடந்துவிடும் ..."



இரண்டாம் பாகத்தை படிக்க இங்கே சொடுக்கவும் .

(ரஜினியின் "முரட்டுகாளை" &  கமலின் "குரு" எனக்கு கிடைத்த வாய்ப்பு!)


மூன்றாம் பாகம் .... கீழே தொடருகின்றது..

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் "பொழுதுபோக்கு பூங்கா"விற்கு அக்டோபர் 25, 2018 குடும்பத்தோடு வந்த நான்,

விசு சார் ...எப்படி இருக்கீங்க ..?

நல்லா இருக்கேன்.

என்று சொல்லி நான் திரும்பி பார்க்கையில்.. எதிரில்..

மீண்டும் பேய் அறைந்தவனை போலானேன் ..

என்று சொன்னேன் அல்லவா .. ஏன் என்று பார்ப்போம்.

விசு என்று அழைத்தவுடன், அடே டே, தென்னிந்திய நடிகர் சங்கத்தில் நம்மை பெயர் சொல்லி அழைக்கவும் யாரோ இருகின்றார்கள் என்று திரும்பி பார்த்தால் அங்கே சினிமா இயக்குனர் -கதை வசனகர்த்தா விசு நின்று கொண்டு இருந்தார். அவரை யாரோ எப்படி இருக்கீங்க என்று கேட்க்க... நான் பதிலை சொல்ல..

மன்னிக்கவும் .. என் பெயரும் விசு தான் .. அதுதான் உங்கள் கேள்விக்கு நான்  பதில் சொல்லிட்டேன்.

செவ்வாய், 27 அக்டோபர், 2015

ரஜினியின் "முரட்டுகாளை" & கமலின் "குரு" எனக்கு கிடைத்த வாய்ப்பு!

இது சென்ற பதிவின் தொடர்ச்சி. அந்த பதிவை படித்து விட்டு இங்கே வந்தால் இன்னும் நன்றாக புரியும். அதை படிக்க இங்கே சொடுக்குங்கள் ...

அதிசயம் : "நடக்காதென்பார் நடந்துவிடும் ..."(தொடர்ச்சி..1)


தென்னிந்திய நடிகர் சங்கத்தின் "பொழுதுபோக்கு பூங்கா"விற்கு அக்டோபர் 25, 2018 குடும்பத்தோடு வந்த நான், அப்படி என்ன ஒரு எதிர் பாராத காட்சியை காட்சியை பார்த்தேன்.

திரும்பி பார்த்த நான் அக்காலத்து மாமன்னர்கள் உடையணிந்த இரண்டு மன்னர்களையும் மற்றும் அவர்கள் இருவரின் மத்தியிலும் நடந்து வந்த ஒரு மூதாட்டியும் பார்த்தேன். நான்காம் வகுப்பில் நான் படித்த வரலாற்று நாடகம் நினைவிற்கு வர அந்த மூதாட்டியை அவ்வையார் என்று அறிய நிறைய நேரம் பிடிக்கவில்லை. அம்மை அவ்வையார்... அப்போது அந்த மன்னர்கள்... ஒருவேளை ...அதியமானும் .. தொண்டைமானும்..

திங்கள், 26 அக்டோபர், 2015

அதிசயம் : "நடக்காதென்பார் நடந்துவிடும் ..."

என்ன டாடி, காலையில் இவ்வளவு சீக்கிரம் கிளம்ப சொல்றிங்க?

அடியே, நான் பெத்த ராசாத்தி, இன்னைக்கு என்ன தேதி ..

அக்டோபர் 25, 2018, அதுக்கு என்ன இப்ப?

அதுக்கு என்னவா? ரெண்டு வருஷம் கழித்து  இந்தியா வந்து இருக்கோம் . அதுவும் மெட்ராசுக்கு (அது என்னவோ போங்க.. இந்த சென்னை என்ற பெயர் வாயில் நுழைய மாட்டுது), இன்னைக்கு பெரிய பிளான்.

என்ன பிளான்?

மகள், நம்ம ஊரில் ஹாலிவுட்டில் இருக்கிற "யுனிவர்சல் ஸ்டுடியோ" போல், இங்க தமிழ் சினிமாவின் வரலாறை பற்றி எடுத்து சொல்லும் ஸ்டுடியோ ஒன்னு திறந்து இருக்காங்க.

ஞாயிறு, 25 அக்டோபர், 2015

டிங்கிரி டிங்காலே .... மீனாக்ஷி.. டிங்கிரி டிங்காலே ...

சனியும் அதுவுமா மதியம் அதுவுமா  அம்மணியும் கண்மணிகளும் வெளியே சென்ற இருந்த நேரம். வெளியே சிறிய மேகமூட்டம். இல்லத்தில் அமர்ந்து, நமக்கு பிடித்த பழைய பாடல்கள் சிலவற்றை கேட்கலாம் என்று கணினியை தட்டினேன்.

பொதுவாகவே இந்த மாதிரி பாடல்கள் கேட்க்க ஆரம்பித்தால் சந்திரபாபு அவர்களின் " பம்பர கண்ணாலே" பாடல் தான் முதலில் வரும். அந்நாள் இம்முறை.. அந்த பாடலுக்கு பதில் சந்திரபாபுவின் மற்றொரு பாடலான டிங்கிரி டிங்காலே என்று தட்டினேன்.

சனி, 24 அக்டோபர், 2015

எங்கிருந்தோ வந்தான் ….

என்னா, வாத்தியாரே ..? “பாம்பேயில் பீப்” சாப்பிட்டவன் போல் திருட்டு முழி முழிக்கிற!
கிண்டலாக கேட்டு கொண்டே வந்தான், நண்பன் தண்டபாணி . எல்லாம் என் நேரம் தான் என்று மனதில் நினைத்து கொண்டே …
ஒன்னும் இல்ல தண்டம்.. நீ எப்படி இங்க ?சொல்லாம கொள்ளாம?
சும்மா வீட்டில ரிலாக்ஸ் பண்ணி கொண்டு இருந்தேன் …

வியாழன், 22 அக்டோபர், 2015

"பல்லாங்குழிபணியாரம் ..."

சனியும் அதுவுமா காலையில் அலாரம் வைத்து எழுந்து, ராசாத்திக்கள் இருவரையும் எழுப்பி (அம்மணி வேலை நிமித்தம் மருத்துவமனை சென்று இருந்தார்கள்) 7 மணிக்கு "கோல்ப்" ஆட போகலாம் என்று அடித்து பிடித்து தயாராகினேன்.

ராசாத்திக்கள் இருவரும் தயாராகியவுடன் மூவரும் கதவை திறந்து வெளியே வந்தால் "சோ" என்று மழை. அடே டே, நேற்று வானிலை அறிக்கையில் படித்தோமே என்ற நினைவு மனதில் வரும் போதே...

இளையவள் . டாடி.. கொஞ்சம் வெளியே மழை பெய்தான்னு பார்த்துட்டு எழுப்ப கூடாதா ? நல்ல தூக்கம் போச்சு என்று பாசாங்கு செய்ய ...

புதன், 21 அக்டோபர், 2015

என்னை மன்னிச்சிடுங்க.... தெரியாமல் கேட்டுட்டேன் ..

சேவல் ஒன்று கூவ அதிகாலையிலே எழுந்து விட்டேன். பலமாதங்கள் கழித்து இந்தியாவிற்கு விடுமுறைக்காக வந்துள்ளேன். சேவல் கூவி நான் எழுந்து எத்தனை வருடங்கள் ஆகி இருக்கும். கடிகாரம் கண்டுபிடிக்காத காலத்திலேயே இந்த சேவல்கள் நம்மை அதிகாலையில் எழுப்பிவிடும் அருமையான அலாரம் ஆயிற்றே!

அந்த சேவலுக்கு ஒரு நன்றியை செலுத்திவிட்டு, என் வேலையை கவனிக்க ஆரம்பித்தேன். ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை அந்த சேவல் கூவி கொண்டே இருந்தது. அடே டே, இந்த சேவல் நம்மை எழுப்புவதற்கு உதவினாலும் எழுந்தவுடன் கூவி கூவி எரிச்சலை கொடுக்கின்றதே என்று எண்ணி கொண்டு இருந்தேன்.

பல மாதங்கள் கழித்து இந்தியா ... அதுவும் பெண்  எடுத்த வீடு. எப்போது இங்கே வந்தாலும் உணவிற்கு பஞ்சம் இல்லை. என்ன வேண்டும் என்று கேட்டு சமைத்து கொடுப்பார்கள். காலை 7 மணி போல் வரும் நாஷ்ட்டாவை நினைத்து கொண்டே இருக்கையில், உறவினர் இல்லத்தில்  கேட்டார்கள்...

திங்கள், 12 அக்டோபர், 2015

பழமொழி சொன்னால் ….. ஆராயக்கூடாது …

அம்மா  … இந்த வியாழகிழமை பரவாயில்லை, அடுத்த வியாழ கிழமை காலையில் எனக்கு கோல்ப் பயிற்சி வகுப்பு புக் பண்ணாதீங்க ..
சொல்லி கொண்டே வந்தாள், சின்ன ராசாத்தி. அவள் இப்போது 8ம் வகுப்பில் இருகின்றாள். திங்கள் முதல் வெள்ளி வரை (வியாழன் தவிர ) வகுப்புகள் காலை 8:40க்கு ஆரம்பிக்கும். வியாழன் அன்று மட்டும் 10:20க்கு. அதனால் தான் வியாழன் காலை 8 மணிக்கு வாரந்தோறும் கோல்ப் வகுப்பிற்கு அனுப்பிவிடுவோம்.
அடுத்த வாரம் ஏன் வேண்டாம்னு சொல்ற …?
அம்மா  … ஒரு நாளாவது கொஞ்சம் நேரம் அதிகமா தூங்கலாம்னு தான் .
இந்த வயதில் உனக்கு என்ன தூக்கம், அமைதியா போ…
டாடி. ….

சனி, 10 அக்டோபர், 2015

யார் இந்த பாடகி ! வலைப்பதிவு சந்திப்பில்...

 புதுகோட்டையில் நடந்து கொண்டுள்ள வலைபதிவு சந்திப்பின் நேரலையை பார்த்து கொண்டு இருக்கின்றேன்.  9000 மைல்களுக்கு அப்பால் என் இல்லத்தில் அமர்ந்து கொண்டு

நினைவுகளுக்கு நன்றி,ஆச்சி!

தமிழ் திரை  உலகிற்கு  இறைவனால் கொடுக்க பட்ட ஒரு பொக்கிஷம் அல்லவா " ஆச்சி மனோரமா" , என்ன ஒரு நடிப்பு. என்ன ஒரு திறமை.

மே 26, 1937ல் பிறந்து தன் வாழ்க்கை பயணத்தை கலையுலகில் நடத்தி வந்து 78வது வயதில் இறைவனை சேர்ந்தார். தம் நடிப்பால் கலையால் திரை உலகில் தனக்கு என்று ஒரு வழியை ஏற்படுத்தி கொண்டு முடிசூடா ராணியாக வளம் வந்தவர் அல்லவா? இருந்தாலும் கடந்த சில வருடங்களாக வயதினால் வரும் பிரச்சனைகளினால் நடிப்பு துறையில் இருந்து விலகி இருந்தார்.

புதன், 7 அக்டோபர், 2015

மெட்ராஸ் டு சென்னை ... ரயில் பயணங்களில்..

சீக்கிரம், சீக்கிரம் எல்லாரும் கிளம்புங்க.

காலையில் 4:30க்கு அலாரம் அடித்தவுடன் அனைவறையும் எழுப்ப ஆரம்பித்தேன்.

என்ன டாடி...? இப்ப தான் 4:30 .. ஏன் எழுப்புரிங்க?

நம்ம இன்றைக்கு மெட்ராஸ் போறோம் இல்ல அதுதான்.

விமானம் எத்தனை மணிக்கு ?

விமானம் இல்ல மகள், இது ரயில்...?

என்ன ரயிலா.. ?

கருணாஸ் ஒரு ரெகார்ட் டான்சர் : ராதா ரவி !

கடந்த நாட்களில் நான் பார்த்து கொண்டு இருந்த காணொளியில் ராதா ரவி அவர்கள் ஒரு மேடையில் பேசுகையில் காழ்ப்புணர்ச்சியோடு "கருணாஸ்  ஒரு ரெகார்ட் டான்சர்" என்று ஒரு கிண்டல் அடித்தார்.


"கருணாஸ்  ஒரு ரெகார்ட் டான்சர்" என்பது உண்மையா என்று எனக்கு தெரியாது . அப்படியே இருக்கட்டுமே. அது என்ன பெரிய குற்றமா?

தெருவில் ரெகார்ட் டான்ஸ் ஆடி கொண்டு இருந்த ஒருவர் திரை உலகில் தன் திறமையால் படிப்படியாக முன்னேறி இன்று நடிகர் சங்கத்து துணை தலைவராக போட்டி இடுகின்றார் என்றால், அது பாராட்டதக்க விஷயமே தவிர, கிண்டல் பண்ண வேண்டிய விஷயம் அல்ல.

திங்கள், 5 அக்டோபர், 2015

கொஞ்சலில் “"பிரிஞ்சி"” கெஞ்சல் !

 ஒரு மீள் பதிவு..ஏற்கனவே படிக்காத நண்பர்களுக்காக ...

என்ன வாத்தியாரே… காலையில் இருந்து ஆளையே காணோம்? எங்களுக்கு தெரியாம ஏதாவது பிளான்னா ?

சொல்லி கொண்டே நுழைந்தான் நண்பன் தண்டபாணி…

மற்றொரு நண்பன்சாரதி வீட்டில் ஒரு விசேஷம் … அங்கே அமர்ந்து கொண்டு இருக்கையில் நடந்த ஓர் உரையாடல் தான் இது…

ஒன்னும் இல்ல தண்டபாணி … ராசாத்திக்கள் இங்கே அருகே இருக்கும் ஒரு கோல்ப் மைதானத்தில் ஒரு போட்டியில் பங்கேற்றனர், காலையில் 10 மணி போல் ஆரம்பித்தது ,,, மாலை 5:30 போல் தான் முடிந்தது.. அதுதான் …

ஞாயிறு, 4 அக்டோபர், 2015

TR & சிம்பு : நீங்கள் தமிழன் என்றால் நாங்கள் என்ன ஆங்கிலேயரா ?

அன்புள்ள சிம்புவின் அப்பா ..

நான் சொல்லவருவதை நீங்க எடுக்ககூடாது தப்பா ..!

கடந்த பல வருடங்களாக தம்மை கவனித்துவரும் ஒருவனாக இந்த பதிவை  எழுதுகிறேன்.

திறமையில் உங்கள் குடம் "நிறை"
அதில் நாங்கள் பார்க்கவில்லை "குறை'

பின்ன இந்த பதிவு எதற்கா ?.

இதோ சொல்கிறேன், கேளுங்கள்!

எப்போது எங்கே போனாலும் ...

சனி, 3 அக்டோபர், 2015

காசு மேலே, காசு வந்து...(புது கோட்டையில் இருந்து )

வாத்தியாரே.. என்ன லாட்டரி ஏதாவது விழுந்ததா? என்ன இவ்வளவு சந்தோசம்?

சொல்லிக்கொண்டே நுழைந்தான் நண்பன் தண்டபாணி.

சந்தோசம் சரி தான், பாணி.. அது எப்படி லாட்டரி விழுந்ததுன்னு கண்டுபிடிச்ச?

சரஸ்வதி காணாமல் போய் லட்சுமி உன் முகத்தில் தாண்டவம் ஆடுறாங்களே அதை சொன்னேன்.

டேய்.. புரியிற மாதிரி சொல்லு..

அது இருக்கட்டும் ? எவ்வளவு தேறுச்சி?

கிட்டத்தட்ட 10,000 ருபாய் பாணி.

“கர்ம தங்கடம்”… சாரி.. “தர்ம சங்கடம்” …

இன்று முகநூலில் சென்னையில் இருந்து வந்த ஒரு குறிப்பில் " உங்கள் கர்ம தங்கடம் .. தர்ம சங்கடம் " படித்தேன் .. அழுதேவிட்டேன் என்று எழுதி இருந்தார்கள். ஏன் அலுத்து இருப்பார்கள் என்று நானும் போய் படித்தேன் . புரியவில்லை. நீங்களும் ஒரு முறை படித்து சொல்லுங்களேன்..

டாடி… இன்னைக்கு என்ன பிளான்…?
என்ன? உங்க அம்மா பேசுறத மாதிரி பேசுற , ராசாத்தி …?
கேட்ட கேள்விக்கு பதில்.. ப்ளீஸ் ..
என்ன? எங்க அம்மா பேசுற மாதிரி பேசுற, ராசாத்தி ?
எப்பவுமே உங்களுக்கு தமாசுதான் டாடி…என்ன பிளான் …?

வியாழன், 1 அக்டோபர், 2015

ஒரு "கோட்டை"யிலே என் "குடி" இருக்கும்.

வாங்க .. வாங்க .. வாங்க..

என்ன ஒன்னும் புரியலையா? தலைப்பு கண்ணதாசன் பாடல் "ஒரு கோப்பையிலே என் குடி இருக்கும்" போல இருக்கு, ஆனால் கோப்பைக்கு பதில் "கோட்டை"ன்னு இருக்கா ?


அது ஒன்னும் இல்லேங்க. இந்த மாதம் 11ம் தேதி , புது கோட்டையில் நம்ம சக பதிவர்கள் எல்லாரும் கூட போறாங்களே, அதை தான் சொன்னேன்.

புதன், 30 செப்டம்பர், 2015

பேய் திருநாள் வித் பி ஜே பி..

அக்டோபர் மாதம் வந்தவுடன் அமெரிக்காவில் அனைவரும் நினைப்பது " "ஹலோவீன் " என்ற நாளை தான். பலர் தங்கள் வீடுகளை கல்லறை தொட்டால் போல அலங்கரித்து கொள்வார்கள். சிலர் வீடு எதிரில் உள்ள மரங்களில் பிளாஸ்டிக்கினால் ஆனா எலும்பு கூடு தொங்கும்.

விஜய்யின் புலி - லாரன்சின் "Black Knight"? கன்புயுசன் !

அட பாவி.. இப்ப தான் புலி படத்து " கதை"யை படித்தேன். இந்த கதை 2001ல் ஹாலிவுட்டில் வெளி வந்த " Black  Knight " கதை போலவே இருக்கே.

சரி, புலி கதையை விடுவோம். Black  Knight கதையை கொஞ்சம் கேட்போம். கதாநாயகன் ஒரு பொழுதுபோக்கு பூங்காவில் பணி புரிபவர். ஒரு லூட்டியான மனிதர். நிறைய காலாய்ப்பவர். வேலையில் இருக்கும் போது ஒரு நாள் மண்டையில் எதோ அடிபட மயங்கி விழுகின்றார். மயக்கத்தில் இருப்பவர் சிறிது நேரத்தில் விழித்து கொள்ள அவர் இருக்கும் இடமோ ..

"புலி - "தல"ய காப்பாற்றவே முடியாதா ?

காலையில் எழுந்து செய்தித்தாளை இணைய தளத்தில் திறந்தவுடன் அகப்பட்ட முதல் காணொளி  " மாட்டிகொண்ட சிறுத்தை" . அது சரி, அகப்பட்டது சிறுத்தை தானே, தலைப்பில் எப்படி புலி வந்தது? நல்ல கேள்வி தான். அதற்கான பதிலை பிறகு தருகிறேன்.

செவ்வாய், 29 செப்டம்பர், 2015

பாக்யராஜின் "தில்" இந்த காலத்து இயக்குனர்களுக்கு வருமா?

சில மாதங்களுக்கு "கத்தி" வெளியே வந்த போது, அது தன்னுடைய கதை என்று ஒரு துணை இயக்குனர் சொல்ல, அப்படத்தின் இயக்குனர் முருகதாஸ் அவர்களின் திறமை மேல் சந்தேகம் வந்தது அனைவரும் அறிந்ததே.

அது மட்டும் அல்லாமல் அப்படத்தில் வந்த சில காட்சிகள் , ஏற்கனவே ஆங்கில படத்தில் வந்த  காட்சிகளின் அப்பட்டமான நகல் என்பதும் அனைவரும் அறிந்ததே. இப்படத்தின் இசை அமைப்பாளரும் சில ராகங்களை காப்பி அடித்துள்ளார் என்பதும் தெரிந்ததே. மொத்தமாக சொல்லபோனால் இந்த படமே "சுட்ட பழம்" என்று தான் நான் நினைத்தேன்.

அதன் பின் வந்த "லிங்கா" பென்னி என்ற உத்தமனின் உண்மை கதை என்றும் கேள்வி பட்டோம். "லிங்கா"வில் வந்த சாவி திருடும் காட்சியும் ஆங்கில படத்தில் இருந்து சுடப்பட்டதை பார்த்தோம்.

வியாழன், 24 செப்டம்பர், 2015

கலைஞரை கலாய்த்த கண்ணதாசன் !

 நான் மற்ற தளத்தில் எழுதி கொண்டு இருந்தபோது எழுதிய பதிவு. ஏற்கனவே படிகாதவர்கள் ஒரு முறை படியுங்கள். படித்தவர்கள் மீண்டும் படியுங்கள்.

சிறு வயதிலேயும் சரி, பள்ளி காலத்திலேயும் சரி, கல்லூரி நாட்களிலும் சரி, ஏன் கடந்த சில மாதங்களாக நான் மகிழ்ந்து வரும் பதிவுலகிலும் சரி .. என் “பேச்சை – எழுத்தை” “கேட்பவர்கள் – படிப்பவர்கள்” பொதுவாக கூறும் ஓர் பின்னோட்டம் ..

“விசு, உனக்கு ரொம்ப குசும்பு. யார பார்த்தாலும் ரொம்ப கலாய்க்கின்றாய்”
இந்த குசும்பு என்பது உப்பை போல். அதை சரியான அளவாக உபயோகபடித்தினால் நாம் பரிமாற்ற போகும் படைப்பு ருசியாக  இருக்கும். அதை சற்று குறைவாக போட்டால் … குப்பையில் தான் போட வேண்டும்  (உப்பில்லா பண்டம்… வேறு என்ன செய்வது .. ) அதை அதிகமாக போட்டால் … தண்ணீர் குடித்து கொண்டே இருக்க வேண்டும்  (உப்பு தின்னவன் …. கதை தான்).

திங்கள், 21 செப்டம்பர், 2015

ஐந்தில் இருந்து ஐம்பது வரை..

எப்போதும் இல்லாத அளவு வெயில். என்னடா இது , கோடை விடுமுறைக்கு மெட்ராஸ் ( நமக்கு எப்பவுமே மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் தாங்க.. இந்த சென்னை வெண்ணை எல்லாம் வேலைக்கு ஆகாது)  போன மாதிரி இருக்கே.. என்று நினைத்து கொண்டு இருக்கையில், இளைய ராசாத்தி அருகில் வந்து...

டாடி ..ரொம்ப வெயில் இல்ல ..

அதுக்கு என்ன இப்ப.. ஐஸ் கிரீம் வாங்க வழி பண்றியா...

ஐஸ் கிரீம் எங்களோடு உங்களுக்கு தானே டாடி பிடிக்கும், வாங்க போய்
ஆளுக்கு ஒன்னு வாங்கி சில்லுன்னு சாப்பிடலாம்.

சனி, 19 செப்டம்பர், 2015

விசுAwesomeமின் 'புதுமை பெண்"



கள்ளி என்று கொஞ்சுவான் பாப்பா, அயர்ந்தால் கள்ளி பால் ஊத்துவான் பாப்பா
துவக்கமே துயரமடி பாப்பா, நீ துவண்டு விடாதே என் செல்ல பாப்பா ..

ஆறு வயதினிலே பாப்பா .. மடை ஆறு போல் புரண்டோடு பாப்பா...
அடக்க நினைப்பான் பாப்பா..நீ ஆர்ப்பரித்து ஆட்டம் போடு பாப்பா

விவரம் தெரியா  வயதில்   பாப்பா, விவேகமற்ற விவாகம் என்பான் பாப்பா..
விதி என்று சதி செய்வான் பாப்பா, நீ மதியால் மிதித்து விடு பாப்பா...

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...