புதன், 30 செப்டம்பர், 2015

விஜய்யின் புலி - லாரன்சின் "Black Knight"? கன்புயுசன் !

அட பாவி.. இப்ப தான் புலி படத்து " கதை"யை படித்தேன். இந்த கதை 2001ல் ஹாலிவுட்டில் வெளி வந்த " Black  Knight " கதை போலவே இருக்கே.

சரி, புலி கதையை விடுவோம். Black  Knight கதையை கொஞ்சம் கேட்போம். கதாநாயகன் ஒரு பொழுதுபோக்கு பூங்காவில் பணி புரிபவர். ஒரு லூட்டியான மனிதர். நிறைய காலாய்ப்பவர். வேலையில் இருக்கும் போது ஒரு நாள் மண்டையில் எதோ அடிபட மயங்கி விழுகின்றார். மயக்கத்தில் இருப்பவர் சிறிது நேரத்தில் விழித்து கொள்ள அவர் இருக்கும் இடமோ ..

இன்னொரு நாடு .. 14ம் நூற்றாண்டில் உள்ள ஒரு காட்சி. அந்நாட்டில்  இருக்கும் ராணியை சிலர் ஆட்டிப்படைத்து நாடே குட்டிசுவராகி போன வேளையில், அங்கே உள்ள சிலர் இவரை "ஆபத்வாந்தவன் - ஆளவந்தான் " என்று நினைக்க ..

இவரும் அங்கே உள்ள தவறுகளை நிவர்த்தி செய்து அங்கே நடக்கும் கொடுமைகளை எதிர் கொண்டு தன்னுடைய வீரத்தினால் அங்கே உள்ள கயவர்களை வெற்றி பெற்று அந்த ராணியிடம் அந்நாட்டை ஒப்படைத்து மீண்டும் மயக்கம் அடித்து விழுவார். எழுந்து பார்க்கையில் தான் பணி புரிந்து கொண்டு இருந்த பொழுது போக்கு பூங்காவில் சிறிது மயக்கத்தோடு எழுவார்.
மார்டின் லாரன்ஸ் என்ற "ஆப்ரிக்க -  அமெரிக்க" நடிகர் நடித்த இந்த படம், மிக பெரிய வெற்றி பெறாவிடினும், மிக பெரிய தோல்வி என்றும் சொல்ல முடியாது. ஆனால் தயாரிப்பாளரின் கையை கடித்தது என்று தான் சொல்ல வேண்டும்.



ஒரு வேலை புலி படத்தின் கதை இதை தழுவி இருந்தால், இந்த ஆங்கில படத்து தயாரிப்பாளர்கள், கண்டிப்பாக எதாவது "லம்பாக" எதிர்பார்த்து நீதி மன்றம் செல்ல வாய்ப்புண்டு. ஏன் என்றால், மார்டின் லாரன்ஸ், தன் பணத்தை மொத்தமாக செலவு செய்து விட்டு திவாலாகிவிட்டார். வேற ஒன்னும் இல்ல, "விவகாரத்தில்" சம்பாதித்தது எல்லாத்தையும் அம்மணி எடுத்துனு போயிட்டான்னு என்ற ஒரு செய்தி இங்கே  நிலவுகின்றது.

சரி, இப்ப புலி படத்து கதைக்கு வரலாம். புலி என்று கூகிளில் தட்டியவுடன் முதலில் வருவது இந்த சுருக்கமான கதை தான்.

"A man travels back in time to a fantasy kingdom to save a queen from a tyrant."

அதாவது, நாயகன் கடந்த காலத்திற்கு சென்று அங்கே உள்ள ஒரு ராணியை கொடியவர்களிடம் இருந்து மீட்கின்றான்".

எங்கேயோ இடிக்குதே.. கன்புயுசன்....

பின் குறிப்பு :

நான் நினைத்ததை போல் புலி கதை இந்த படத்து கதை போல் இருக்க கூடாது. அப்படி இருந்தால், இந்த கதைக்கு விஜய் ஒத்து வர மாட்டார், அவர் ரசிகர்களும் ஏற்று கொள்வார்களா என்ற ஐயம் வருகின்றது.

இந்த கதைக்கும் புலிக்கும் சம்பந்தமே இல்லைன்னு ஒரு நம்பிக்கையோடு படத்த பாருங்க...

3 கருத்துகள்:

  1. பாத்துட்டு நீங்க எழுதுறதையே படிச்சுக்கிறேன் :)

    பதிலளிநீக்கு
  2. படத்தினையும் பார்த்துவிட்டு எழுதுங்கள் நண்பரே
    காத்திருக்கிறேன்

    பதிலளிநீக்கு
  3. போஸ்டர்களைப் பார்க்கும்போது ஏதோ நகைச்சுவை படம் பார்ப்பது போல உள்ளது. பார்ப்போம். எனது முதல் தளத்தில் பௌத்த நல்லிணக்க சிந்தனைகளைக் காண அழைக்கிறேன்.
    http://www.ponnibuddha.blogspot.com/2015/10/blog-post.html

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...