காலையில் எழுந்து செய்தித்தாளை இணைய தளத்தில் திறந்தவுடன் அகப்பட்ட முதல் காணொளி " மாட்டிகொண்ட சிறுத்தை" . அது சரி, அகப்பட்டது சிறுத்தை தானே, தலைப்பில் எப்படி புலி வந்தது? நல்ல கேள்வி தான். அதற்கான பதிலை பிறகு தருகிறேன்.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஒரு காட்டின் அருகில் உள்ள கிராமத்தில் நடந்த நிகழ்ச்சி தான் இது.
கொஞ்சம் கொஞ்சமாக, நகரங்கள் வளர்ந்து வளர்ந்து மனித இனம் தன் எல்லையை நாள் ஒரு மேனி பொழுதொரு வண்ணமாக பெரிது படுத்தி கொண்டு வரும் காலம் அல்லவா ? அதனால் வந்த வினை தான் இது.
அடர்ந்த காட்டில் தான் உண்டு தன் வேட்டை உண்டு என்று இருந்த மிருகங்களின் இல்லமான காட்டை சிறுது சிறிதாக ஆக்கிரமித்து அங்கே உள்ள மரங்களை அழித்து, நீர் வளங்களை சிதைத்ததின் விளைவு தான், அங்கே உள்ள மிருகங்கள் இப்போது இங்கே வந்து விட்டது.
அட முட்டாள் மனிதா .. இதற்கும் முன்னால் வந்த ஒரு செய்தியை மறந்து விட்டாயே..
"புலி நடமாடும் பகுதியில் மனிதன் ஆக்கிரமிப்பு"
கொஞ்சம் கொஞ்சமாக நீ ஆக்கிரமித்தால் அவை உணவிற்கும் தண்ணீருக்கும் எங்கே போகும். அதனால் தான் அதை தேடி இங்கே வருகின்றது. அப்படி வந்த மிருகங்களை அடித்தும், நெருப்பு வைத்தும் , துப்பாக்கியில் சுட்டும் ... ஐயகோ ...
இந்த வாரம், இப்படி ஒரு கிராமத்திற்கு வந்த சிறுத்தை ஒன்று ஒரு பாத்திரத்தில் இருந்த தண்ணீரை குடிக்க அதற்குள் தலையை விட, தலை வசமாக மாட்டிகொண்டது.
தலையை மூடிய பாத்திரத்தோடு கண் தெரியாமல் அலைந்து கொண்டு இருந்த இந்த சிறுத்தையை கண்ட சில கிராமவாசிகள், அருகில் இருந்த அதிகாரிகளிடம் சொல்ல, அந்த அதிகாரிகள் அங்கு வந்து சேர மூன்று மணிநேரம் ஆகியது.
தாமதமாக வந்து சேர்ந்த அதிகாரிகள், தவிக்கும் புலியோடு ஆளுக்கொரு செல்பி எடுத்து கொண்டு (கோ எப்படியோ அப்படிதானே குலம் இருக்கும் ) இப்போது என்ன செய்யலாம் என்று எண்ணி கொண்டு இருக்கையில் ...
ஐயா.. மயக்க ஊசி ஏதாவது போட்டு அதை தூங்க வைச்சி அந்த பாத்திரத்தை எடுக்கலாம்.
நல்ல யோசனை, இப்ப மயக்க ஊசிக்கு எங்கே போறது..?
என்னது ..? சிறுத்தை ஒன்று இங்கே உள்ளது என்றதும், இதனை அதிகாரிகள் வந்தீர்களே, மயக்க ஊசி எடுத்து வர தோன்றவில்லையா ?
கொஞ்சம் பொறுமை.. நாங்கள் யாரையாவது அனுப்பி மயக்க ஊசி எடுத்து வர சொல்லுகிறோம்.
என்ற பதில் சொல்லி.. அடுத்த மூண்டு மணிநேரத்திற்கு மயக்க ஊசி வரவில்லை.
ஆறு மணி நேரத்திற்கு பின் யாரோ கொடுத்த வலையில் அந்த சிறுத்தையை பிடித்து அதை வண்டியில் ஏற்றி கொண்டு மீண்டும் ஒரு மூன்று மணிநேர பிரயாணம், மற்றும் செல்பிக்கள்.
பின்னர் எப்படியோ ஒரு மயக்க ஊசி கிடைக்க அதை போட்டு அந்த பாத்திரத்தை விலக்கி அந்த சிறுத்தையை விடுவித்து இருகின்றார்கள்.
என்னடா நாடு? என்னடா வசதி ...? என்னடா அதிகாரிகள் என்று நினைக்கையில் .. மனதில்..
அடே விசு.. இது ராஜஸ்தானில் ஒரு கிராமத்தில் நடந்த நிகழ்ச்சி. சென்ற வருடம் டெல்லி நகரில் ஒரு மிருக கண்காட்சி சாலையில் ஒரு மனிதன் புலி வாழும் பகுதியில் விழுந்து அந்த புலியிடம் சிக்கி இறந்தானே .. தலை நகரில் அதுவும் மிருக கண்காட்சி சாலையில் இல்லாத மயக்க ஊசி, கிராமத்தில் எங்கு இருந்து வரும் ?
எங்கே போய் சொல்வது.
அரசிடம் கேட்டால் .. கடந்த 60 வருடங்களில் காங்கிரஸ் செய்த ஊழலினால் தான் இந்த மாதிரி காரியங்கள் நடக்கின்றது.
காங்கிரஸ் கட்சியினரிடம் கேட்டால், பிரதமருக்கு "செல்பி" எடுக்கவே நேரம் இல்லை.. இதில் புலியாவது... தலையாவது.. வேலையை பாருங்க.நல்ல வேளை இது உள்நாட்டில் நடந்தது, இதுவே வெளிநாட்டில் நடந்து இருந்தால் அடுத்த விமானத்தில் ஏறி .. அருகில் உள்ளவர்களை எல்லாம் தள்ளி விட்டு நம் பிரதமர் ஒரு செல்பி போஸ் கொடுத்து இருப்பார்.
பின்குறிப்பு : தலைப்பில் சிறுத்தைன்னு போட்டு இருந்தா நீங்க படிச்சு இருக்க மாட்டீங்களே ..
பின்குறிப்பு : தலைப்பில் சிறுத்தைன்னு போட்டு இருந்தா நீங்க படிச்சு இருக்க மாட்டீங்களே ..
//அருகில் உள்ளவர்களை எல்லாம் தள்ளி விட்டு நம் பிரதமர் ஒரு செல்பி போஸ் கொடுத்து இருப்பார்.// எதிரில் கேமரா இருந்தால் நமது PR Minister மோடி அருகில் இருப்பவர்கள் சற்று ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. எதோ மார்க் நகர்த்தப்பட்டார். கொஞ்சம் எளிய மனிதர்களாக இருந்தால் என்ன செய்வாரோ?
பதிலளிநீக்குஇதில் இருந்து நேக்கு என்ன புரியுதுன்னா இந்தியா ஒரு நாடே அல்ல-ஜனநாயக நாடா என்ற கேள்வி பிறகு!
பதிலளிநீக்குநீங்கள் சொல்வது உண்மையா? ஒரு சிறுவனை காப்பாற்ற புலிக்கு கொடுக்கவேண்டிய மயக்க மருந்து இந்தியாவின் தலைவலி நரகம் டெல்லியில் இல்லையா?
ஒரு பதிவு எழுதும் நீங்களே சிறுத்தையை புலி என்று மாற்றி எழுதி கல்லா கட்டும்போது, ஒரு நாட்டையே ஆள்பவர் என்னவெல்லாம் செய்ய வேண்டி இருக்கும்?
பதிலளிநீக்குஅருமையான கருத்து ! நல்ல வேளை சிறுத்தையை புலி என்று ஏன் எழுதினேன் என்பதையும் பின் குருப்பில் இட்டு விட்டேன். இல்லை என்றால் நானும் "மோடி மஸ்தான் " என்ற பெயர் வாங்கி இருப்பேன். அது சரி.. நான் எப்ப கல்லா கட்டினேன்.
நீக்குஅட பாவிங்களே.. யாரது என் வீடு கல்யாணத்தில் மொய் வாங்குறது ?
கல்லா கட்டுவது.. ஒரு flow-ல் வந்துவிட்டது. 😀😀
நீக்குநல்ல வேளை சொன்னீங்கோ .. நான் பயந்தே போயிட்டேன் ...
நீக்கு