வியாழன், 30 நவம்பர், 2017

மென் பொறியாளனும் மேன்மையான கணக்கு பிள்ளையும்!

ஏங்க.. ஒரு மாசமா கண்ணாலம் - பிறந்தநாள்-லொட்டு லொசுக்குன்னு சொல்லினே ஒரு முக்கியமான காரியத்தை கோட்டை விட்டுடுங்களே...

அலறினே  வந்தார்கள்..  எங்கள் இல்லத்தின் அம்மணி...

இல்லையே.. கல்யாணம் - பிறந்தநாள் - லொட்டு லொசுக்கு எல்லாம் நல்லாதானே போச்சி.

அது நல்லாத்தான் போச்சி.. உங்க எடையை கடைசியா எப்ப செக் பண்ணீங்க?

அதை எதுக்கு செக் பண்ணனும்? தலைவர் பாணியில் எடைக்கு எடை ஏதாவது தரபோறீயா?

நினைப்பு தான் பொழப்ப கெடுத்திச்சான்.

சரி விடு ... எடையை பத்தியே  நினைக்கலே..

பக்கத்துல தான் ஜிம் இருக்கு .. போன மாசம் கூட ஒழுங்கா போனீங்க... இப்ப ஒரு மாசமா போகல.. அங்கே போய் கொஞ்ச நேரம் சைக்கிள் ஓட்டிட்டு அந்த மிசன் மேலே நடந்துட்டு வாங்க..

பேச கூடாது... வெறும் பேச்சில்...?

நான் ஏற்கனவே நிறைய இடத்தில எழுதிய ஒரு விஷயம் தான்..

என்னை வானவில்லை வளைக்க சொல்லு..
பாத்திரத்தை கழுவ சொல்லு..
வீட்டை சுத்தம் படுத்த சொல்லு...
என்ன வேலையினாலும் சொல்லு ..

பாஷாவில் ரஜினி சிரிச்சினே அடிவாங்குவாரே.. அதே பாணியில் செய்யுறேன்.. அனால் கடைக்கு மட்டும் கூப்பிடாத.. அதுக்கு பதிலா என்னை   கொன்னு போட்டுடுன்னு அம்மணியிடம் சொல்லி  வைத்துள்ளேன்.

கடைக்கு போவது அவ்வளவு பிடிக்காத காரியம். அப்படியும் சில நேரங்களில் அம்மணி.. அருகே உள்ள அமெரிக்க சூப்பர் மார்க்கெட் மற்றும் காஸ்ட்கோ போல கடைக்கு போக வேண்டும் என்று அனுப்பி விடுவார்கள். வேறு வழியிலில்லாமல் அவர்கள் தந்த லிஸ்ட்டை எடுத்து கொண்டு கடைக்கு சென்று வாங்கி வருவேன். இந்த அமெரிக்க கடைகளில் பார்கைன் (அதுக்கு தமிழில் என்ன வார்த்தை)  என்ற பேச்சுக்கே இடம் இல்லை. நேராக போகிறோம். வேண்டியதை எடுத்து கொண்டு பணத்தை கட்டி விட்டு நேராக வீடு தான்.

புதன், 29 நவம்பர், 2017

நடுவுலே மானே தேனே போட்டுக்குங்க.

அமெரிக்காவில் "Stand Up" என்று ஒரு மேடை பேச்சு உண்டு. நகைச்சுவையோடு பேசும் நபர் ஒருவன் மேடைக்கு வந்து பேச சபையோர் சிறிது கை கொட்டி ஆரவரிப்பார்கள்.

இந்த நிகழ்ச்சியை மிகவும் விரும்பி பார்ப்பவன் நான். இதில் பலரை நான் ரசித்தாலும் எனக்கு மிகவும் பிடித்த நபர் George Carlin. என்ன ஒரு பேச்சு? எந்த ஒரு தலைப்பை எடுத்தாலும் நூல் பிடித்தவாறு அவர் சொல்லி கொண்டு போகும் விதம் நம்மை வயிறு வலிக்க சிரிக்க செய்யும்!

அரசியல்வாதிகளை பற்றி அவர் பேசியதை இங்கே மொழி பெயர்கிறேன். இதை படிக்கும் பொது .. இதில் ஏது நகைசுவை ? எங்கே சிரிப்பு என்று நினைக்க தோன்றும். படித்து முடித்து விட்டு அந்த காணொளியை காணுங்கள். அரங்கமே அதிரும் அளவிற்கு சிரிப்பு.


திங்கள், 27 நவம்பர், 2017

பால் இருக்கு....

நாலு நாட்கள் தொடரந்து விடுமுறை..

ஆட்டம் பாட்டம் போட்டு விட்டு அசதியினால் ஞாயிறு 7  : 30  உறங்க சென்றவனை .. காலை 5  :45 க்கு அம்மணி எழுப்ப...

இன்னைக்கு திங்கள் அவளுக்கு 7 :30  மணிக்கு பள்ளியில் விட்டா போதும். ஆளை விடு.. இன்னும் அரை மணி நேரம் ப்ளீஸ்.

ஏங்க.. கொஞ்சமா பொறுப்பா இருங்க..

பொறுப்பா  இருக்குறனால தான் இம்புட்டு பொறுமையா பேசினு இருக்கேன்.. இல்லாட்டி நடக்குறதே வேற..

என்ன சொன்னீங்க...?

சொல்லு...

அவளை பாருங்க.. ஒரே கால் வலின்னு முனகின்னு இருக்கா.. கொஞ்சம்.. என்னனு விசாரியுங்க..

அட பாவி.. நேத்து தூங்க போகும் போது எனக்கும் கால் வலின்னு சொன்னேன்னு.. அதுக்கு, இது எல்லாம் வலி இல்ல.. மனபிராந்தி ..விஸ்கி .. ரம்ன்னு சொல்லிட்டு கம்முன்னு இருந்தியே..

ஞாயிறு, 26 நவம்பர், 2017

தக்காளி ... என்கிட்டயேவா?

ஏங்க...

சொல்லுங்க..

மதியம் சாப்பாட்டுக்கு மாதவன் குடும்பத்தை கூப்பிட்டு இருக்கேன்..

சந்தோசம்...நைஸ் கப்பில்.. புருஷன் பொண்டாட்டி ரெண்டு பேரும் அம்புட்டு படிச்சி அம்புட்டு பெரிய வேலையில் இருந்தாலும் என்னே ஒரு தாழ்மை.. என்னே ஒரு பொறுமை.. மேன் மக்கள் மேன் மக்களே..

சூப்பரா சொன்னீங்க.. எனக்கு ஒரு சந்தேகம்?

சொல்லு..

கோச்சிக்க மாட்டீங்களே..

சரி வேணாம் விடு..

இல்ல சொல்றேன்..

சொல்லு..

இப்ப அவங்க ரெண்டு பேரை அம்புட்டு நல்லவங்குன்னு  இம்புட்டு பாராட்டினீங்களே.. நம்மளை யாராவது அப்படி சொல்லுவாங்களா?

தூங்காதே விசு தூங்காதே..

இவரு இப்ப எல்லாம் ரொம்ப சோம்பேறி ஆகிட்டார்..

நன்றி திருவிழா கொண்டாட்டத்தில் தோழி  ஒருவரிடம் அம்மணி முணுமுறுத்தார்.

என்ன சொல்றீங்க?

ரொம்ப சோம்பேறி ஆகிட்டார்.

அப்படினா.. நீங்க தவறிட்டிங்கன்னு  தான் சொல்லணும்...

நான் எங்கே தவறினேன்... அவரு தான் சோம்பேறி ஆகிட்டாரு..

அவரை சோம்பேறி ஆக்க விட்டது நீங்க தானே..

எப்படி?

ஒரு நிமிஷம் உக்கார விடாம தொடர்ந்து வேலை கொடுத்தா எப்படி சோம்பேறி ஆவார்?

புரியல? தொடர்ந்து வேலை? எப்படி? உதாரணத்தோடு சொல்லு..

சனி கிழமை காலையில் எழுந்தவுடன்..

எழுந்தவுடன்...

சனி, 25 நவம்பர், 2017

வியட்நாம் வீடு விசுவாசம்

ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் நான்காம்  வியாழன் அன்று நன்றி திருநாள் (Thanks Giving Day) இங்கே கொண்டாடப்படும்.

வியாழக்கிழமை அன்று இந்நாள் கொண்டாட படுவதால் தொடர்ந்து வரும் வெள்ளியும் சேர்த்து விடுமுறை என்பது எழுத படாத சட்டம். அதனால் தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை.

இந்த நாள் எப்படி ஆரம்பிக்க பட்டது என்று ஏராளமான கதைகள் உண்டு. அதில் சோகம் - சந்தோசம் - ஒற்றுமை - வெறுப்பு - சமாதானம் - போர் - கொள்ளை - கொலை என்று பல அம்சங்கள் உண்டு.

கனி இருக்க காய் எதற்கு என்பதை போல்.. நான் இதில் உள்ள நல்ல விடயங்களை கொண்டாடுவேன்.

நன்றி...

இந்நாளில் குடும்பத்தினர் அனைவரும் ஒன்று கூடி.. உணவு மேசையை சுற்றி  அமர்ந்து கடந்த ஒரு வருடத்தில் தங்களுக்கு நேர்ந்த நல்ல காரியங்களை கூறி அதை தமக்கு ஈர்ந்தொருக்கு நன்றி அனைவருக்கு எதிரேலேயும் நன்றி கூறுவார்கள்.

புதன், 22 நவம்பர், 2017

அப்பா என்றழைக்காத உயிர் இல்லையே...

அலை பேசி அலறியது..

இரவு 9 :40

காலை ஐந்து மணிக்கு வேலைக்கு சென்று வந்த அசதியோடு அம்மணி தூங்க, அவர்கள் எழுந்துவிட கூடாதே என்று அடித்து பிடித்து எடுத்து வெளியே அடுத்த அறைக்கு போய்..

ஹலோ..

டாடா..

மூத்தவள் தான்.

நன்றி திருநாள்  (Thanks Giving Day) விடுமுறைக்கு வருகின்றேன் என்றாள்.. ஒன்னும் செய்தி வரவில்லையே என்று இருந்தேன்.


மகள்.. எங்க.. வீட்டுக்கு வரேன்னு சொன்னீயே..?

இல்லை டாடா.. ரொம்ப பிசி.. முடியாதுன்னு நினைக்கிறேன்.

அய்யயோ ... உங்க அம்மா ரொம்ப பீலிங் ஆயிடுவாங்க.. ப்ளீஸ் வா..!

அம்மாட்ட சொல்லிட்டேன்.. ஷி அண்டர்ஸ்டாண்ட்ஸ்..

ஐயோ.. உனக்கு பிடிக்கும்னு..

நான் பிசி  டாடா.. அடுத்த மாசம் பாக்கலாம்..

ஞாயிறு, 19 நவம்பர், 2017

ஆண்கள் தினமும் முருங்கை மரமும்...

வெள்ளி மாலை  உறவினர் இல்லத்தில் ஒரு நிகழ்ச்சிக்காக நானும் இளையவளும் செல்ல (மூத்தவள் கல்லாரியில் - அம்மணியோ பணியின் நிமித்தம் வெளியில்.. என்ன விசு? எப்ப பாரு அம்மணி பணி  நிமித்தம் வெளியிலன்னு  சொல்றீயா? என்று கேட்பவர்களுக்கு.. Some one has gotta pay the bills you see... )

வீட்டில் உள்ள பென்ரில்யில் (Pantry ) வெள்ளி இரவு சென்று நோட்டமிட்டால் சனி கிழமை மளிகை கடைக்கு போக வேண்டுமா இல்லையா என்று தெரிந்து விடும்.

வெள்ளி மாலை  உள்ளே சென்றேன்.. நோட்டமிட்டேன். கண்டிப்பாக கடைக்கு போக வேண்டிய அவசியம் உள்ளது என்று அறிந்து..

காலையில் எழுந்தவுடன்...

இன்னைக்கு தோட்டத்துல எனக்கு பயங்கர வேலை இருக்கு.. கிட்ட தட்ட நாலு மணி நேரம் வேணும்..

ஐயையோ... மளிகை கடைக்கு போகணுமே.. "தேங்க்ஸ் கிவ்விங்" வருதே..

தயவு செய்து நீயே போய்ட்டு  வா.. இந்த தோட்ட வேலைய இன்னைக்கு முடிச்சே ஆகணும்.. என்று சொல்லி...

வீட்டின் பின்  புறம் செல்ல..

வெள்ளி, 17 நவம்பர், 2017

தலீவர் தலீவர் தான்.. என்னமா ஒரு கவிதை !

இன்னாதான் சொல்லுங்க..

தலீவர் தலீவர் தான்.. என்னமா ஒரு கவிதை!


விளக்கை அணைத்து விட்டு வீட்டுக்குள் புகுந்த திருடன்
அகப்பட்டதை சுருட்டி கொண்டு அகப்படாமல் ஓடியதை போல்
அருப்புக்கோட்டை நெல்லை தொகுதிகளை வென்று விட்டான்...

வியாழன், 16 நவம்பர், 2017

நான் ஒரு முட்டாளுங்க..

ஏங்க...

இன்னாடா இது? சனி கிழமை காலையும் அதுவுமா?  கணவன் புரிந்து கொள்ள இது சாதாரண வாய்ஸ் அல்ல. அதையும் தாண்டி புனிதமானது..

என்று நினைத்து கொண்டே...

சொல்லு...

இன்னைக்கு மதியம் மூணு பேமிலி லஞ்சிக்கு வராங்க..

அதுக்கு...

கொஞ்சம் வேலை இருக்கு .. சீக்கிரம் எழுந்து வாங்க..

சனி ஒரு நாளாவது  கொஞ்சம் எக்ஸ்டராவா தூங்க விடமாடியே.. இந்த மாதிரி முன்னே பின்ன சொல்லாம ஏன் விருந்தாளிகளை கூப்பிடுற.. அப்படியே கூப்பிட்டாலும் எனக்கு முன்னமே சொல்ல கூடாதா?

ஹலோ... இவங்கள கூப்பிட்டதே   நீங்க தான். இந்த மாதிரி முன்ன பின்ன சொல்லாம கூப்பிடாந்திங்கன்னு போன வாரம் தான் உங்களுக்கு கிரஷ் கோர்ஸ் எடுத்தேன்.. மறந்துடீங்களா...

சரி.. என்ன வேணும் சொல்லு..

இன்னிக்கு சனி கிழமை.. சீக்கிரம் வந்து டீ போடுங்க.. சொல்றேன்..

திங்கள், 13 நவம்பர், 2017

வீட்டுக்கு வீடு... ஸ்லீப்பர் செல்!

டாடா .. அடுத்த வருஷம் மே மாசம் ஒரு வாரத்துக்கு ஸ்பெயின் போக போறேன்..

ஆர்பரித்தாள்.. மூத்த ராசாத்தி.

நைஸ்.. என்ன விஷயம்?

எங்க காலேஜ் கொயர்.. அங்கே போய் வேற வேற ஊருல இருக்க கோயிலில்  பாட போறோம்.

வாவ்.. சூப்பர்..  அது சரி.. அம்மாட்ட ஓகே வாங்கிட்டியா?

அம்மாட்ட ஓகே  வா, அதெல்லாம் உங்களுக்கு மட்டும் தான், எங்களுக்கு எப்ப அவங்க இல்லைனு சொன்னாங்க..

சிறிது நேரம் கழித்து ..

ஏங்க .. அவ என்னமோ ஸ்பெயின் போறாளாமே .. சொன்னாளா?

சொன்னா.. ரொம்ப குஷியா இருக்கிறா? போகட்டும்.

அதை நான் பாத்துக்குறேன்..

சரி.. ஒரு பிளோவில் சொல்லிட்டேன்.. விடு..

நல்ல பெரிய கோயிலாம். கதீட்ரலாம் ..உங்களுக்கு தான் ஊரு சுத்துணும்னா  ரொம்ப ஆசையாச்சே.. நீங்களும் அவ கூட போறீங்களா?

கிண்டல் தானே பண்ற?

வியாழன், 9 நவம்பர், 2017

அவளுக்கென்ன ... !?


அதிகாலை உறங்குகையில்....
அப்பா என்று அலறி அடித்து..
அயர்ன் பண்ணி வையுங்கள் என்று
அதட்டி நீ சொல்லும் போது.

அய்யகோ .. இப்ப தானே
அஞ்சு மணி ஆச்சி...
அதுக்குள்ள எழுப்பிட்டாளே..
அநியாயத்தை கேக்க யாருமில்லையா...

அம்மணியோ..
அவளை கெடுத்து வைச்சி..
அப்புறம் ஏன் இந்த
அங்கலாய்ப்பு என்றாள்..

அலுவலகத்தில் இருக்கையில்
அவசரம் என்று ஒரு டெக்ஸ்ட்..
ஆபிஸ்  கிட்ட  தான் இருக்கேன்..

அதுக்கு?

அதிக பசி...
அருகில் உள்ள ஹோட்டலுக்கு போறேன்..
அநேக வேலை எனக்கிருக்கு..
அத ஏன் என்னுட்டசொல்லுற ....

அது ஒன்னும் இல்ல..
அங்கே தனியா போர்
அடிக்கும், அதனால
அரை மணி நேரம் வாங்களேன்...

ஆஹா..
அலுவலை ஓரம்கட்டி..
அடித்து பிடித்து ஓடி..
ஆர்டர் சில சொல்லி..
அனுபவித்த தருணம்.

செவ்வாய், 7 நவம்பர், 2017

புகையில் வந்த பகை....


பல வருடங்களுக்கு முன்...

(பிளாஷ் பேக்  ரௌண்டு ரெண்டு முறை சுற்றவிட்டு வாங்க).

"மாப்பிளை வந்துட்டாரு" என்று... அடியேன் வண்டியை விட்டு இறங்கும் போது  பெண்ணின் உறவின சிறுவன் ஓட..

நானோ.. பஜ்ஜி - வடை சாப்பிட  போகின்றோம் என்ற ஒரு எண்ணத்தில் தயாரானேன்.

உள்ள நுழையும் போதே .. அடியேனின் இல்லத்தை சார்ந்த அம்மணியிடம் ... நான் சொன்ன விஷயத்தை மறந்துடாதீங்க.. அப்புறம் அது பிரச்சனையாகி விடும் என்று நினைவு படுத்த.. அவர்களும் தலையாட்ட..

இல்லத்தின்  உள்ளே நுழைந்தோம்.

திங்கள், 6 நவம்பர், 2017

கடலோரம் வாங்கிய காற்று..

சரி.. பிறந்தநாள் நாளைக்கு ஆனாலும் பரவயில்லை, சனிக்கிழமையே   பரிசு எதுவும் வேணாம் .. சமையல் போதும்னு அம்மணி சொல்ல.. அதையும் செஞ்சி குடும்பத்தோட டின்னர் முடிச்சிட்டு அடுத்த நாள் காலையில் எழுந்து  குடும்பத்தோடு கோயிலுக்கு போயிட்டு வீட்டுக்கு வந்த பின்னர்..

ரெண்டு ராசாத்திக்களும்    அவங்க வங்கியாந்த பரிசை கொடுக்க.. நானோ விழி பிதுங்கி அமர்ந்து இருக்கையில்...

San Clemente Pier


டாடா.. எங்க உங்க கிப்ட்?

சனி, 4 நவம்பர், 2017

அம்மணியை கவர...கவிழ்க்க ஒரு ஐடியா!

அம்மணியின் பிறந்தநாள் நாளைக்கு... ரெண்டு ராசாதிக்களும் ரகசியமா பிறந்த நாள் பரிசு வாங்கிட்டாளுங்க.. என்ன பரிசுன்னு கேட்டேன் ... "இட்ஸ் எ சீக்ரட்ன்னு" சொல்லி தொரத்திட்டாளுங்க.

கடந்த சில வருடங்களாகவே நம்ம வாங்கி கொடுத்த ஒன்னும் வேலைக்கு ஆகல, அதனால் இந்த வருஷம்.. என்ன வேணும்னு நேராவே கேட்டுட்டேன்.

நல்ல வேளை.. கேட்டீங்க.. நீங்க பாட்டுக்கு ஏதாவது வாங்கினு வந்துடுவீங்களோன்னு பயந்தேன்..

நல்ல மாட்டுக்கு நாலு சூடு.. சொல்லு.. வானவில்லை வளைக்கட்டும்மா.. இல்லாட்டி ....

அடிடா சுந்தரலிங்கம்..

சிறு வயதில் இருந்து நான் மிகவும் ரசித்த ஸ்ரீலங்கா பாப்பிசை பாடல்.. அடிடா சுந்தரலிங்கம்..

அட்டகாசமான ராகம் .. தாளம்..

கேட்டு பாருங்களேன்...


வியாழன், 2 நவம்பர், 2017

முதியோர் வாசலை மிதியாதே..

படித்ததில் பிடித்தது. (எழுதியது :Narayan Ganesan, Coimbatore)


பாட்டி விசாலத்தின் பெயரை முதியோர் இல்லத்தில் பதிவு செய்து விட்டு வந்த பின்னும் மூன்று நாட்களாக அந்தத் தகவலை தாயிடம் சொல்லத் தயங்கினான் சதீஷ்.
""ஏன் இப்படி பயந்து சாகறீங்க?'' என்று எரிந்து விழுந்தாள் அவன் மனைவி சத்யா.
""இல்லை... அம்மாவுக்கு இது பெரிய ஷாக்காய் இருக்கும்''
""இதப்பாருங்க... மாமியாரைப் பார்த்துக்கலாம். அது என் டியூட்டி. ஆனா, மாமியாரோட மாமியாரைப் பார்த்துக்கறதெல்லாம் டூ மச்...''
அவன் ஒன்றும் சொல்லாமல் மவுனமாய் இருந்தான்.
""அடுத்த வாரம் அனுப்பணும்ன்னா இப்பவே சொன்னாத் தான் அவங்களுக்குப் பேக் பண்ண டைம் கிடைக்கும். சைக்காலஜிக்கலா தயாராகவும் முடியும். கிழவி இப்ப கோவிலுக்குப் போயிருக்கா. அதனால, இப்பவே போய் உங்க அம்மாவிடம் சொல்றீங்க, நீங்க''


மனைவியிடம் வழக்கம் போல் தலையசைத்தான் சதீஷ். தயக்கத்துடன் ஹாலில் புத்தகம் படித்துக் கொண்டிருந்த அம்மா முன் சோபாவில் உட்கார்ந்தான்.
புத்தகத்திலிருந்து பார்வையை எடுத்து மகனைப் பார்த்தாள் ஜானகி.
""அம்மா... நான் பாட்டி பேரை முதியோர் இல்லத்தில் பதிவு செஞ்சிருக்கேன், அட்வான்சும் கொடுத்துட்டேன்''
ஜானகியின் கையில் இருந்த புத்தகம் நழுவிக் கீழே விழுந்தது. அவள் அதிர்ச்சியுடன், ""என்னடா சொல்றே?'' என்றாள்.
தர்ம சங்கடத்துடன் தங்கள் அறைக் கதவு அருகே நின்ற சத்யாவைப் பார்த்தான் சதீஷ். அவள், "தைரியமாய் பேசுங்கள்' என்று சைகை காண்பித்தாள்.
கீழே விழுந்த புத்தகத்தை மேஜை மீது வைத்து அதைப் பார்த்தபடியே சொன்னான் சதிஷ்...
""இவ்வளவு வருஷமாய் பாட்டியை நாம பார்த்துகிட்டாச்சும்மா, இனிமேயும் பார்த்துக்கறது கஷ்டம்மா''
""பாட்டி நல்லாத் தானே இருக்காங்க அவங்கள பார்த்துக்கிறதில் கஷ்டம் என்னடா இருக்கு?''
அவன் பதில் சொல்லவில்லை.

பூண்டுக்குள் ஒரு "பூ"கம்பம் ...

நான்காவது.. ஆம்பூர் பள்ளியில் (நம்ம ராசி, வருசத்துக்கு ஒரு பள்ளி)
தள்ளு வண்டியில் மிக்ஸர் மற்றும் இனிப்புகளை விற்ற தனலக்ஷிமி அப்பாவிடம் மாலை வாங்கிய மிக்ஸரை பாதி தின்று விட்டு, மீதியை அடுத்த நாள் பள்ளிக்கு எடுத்து செல்ல..
எங்க அப்பா செஞ்சதா?


ஆமாம்... நேத்து வாங்கினேன் .. என்று சொல்லி கொண்டே ஒரு வாய் போட, ஒரு வித்தியாசமான ருசி..

புதன், 1 நவம்பர், 2017

வள்ளுவனை வென்றவன்....

மதுரை மங்கையற்கரசி பள்ளி.. மூன்றாவது என்று நினைக்கின்றேன்...
காலை இடைவேளையில்... அவனவன் அடித்து பிடித்து கமர்கட் வாங்க ஓடுகையில்..
விசு.. நீ வரல...? அருகில் அமரும் நரசிம்மன் கேட்டான்.
நீ போ நான் வரேன்..

வா.. பெல் அடிக்குறதுக்கு முன்னால வாங்கினு வந்துடலாம்..

ஏழாவதில் ஒரு பாடம்

ஏழாவது என்று நினைக்கின்றேன். பருகுரில் படித்து கொண்டு இருக்கையில்...
சாதா ஐஸ் அஞ்சு பைசா... சேமியா ஐஸ் பத்து பைசா ..
கையில் பத்து பைசா இருந்த போதும்.. இன்றைக்கு ஒன்று நாளைக்கு ஒன்று என்று இரண்டு சாதா ஐஸ் கிடைக்குமே என்று பச்சை கலர் ஒன்று கேட்டு வாங்கி சாப்பிடும் போது..
புதிதாக வந்த EB ஆபிசரின் ராசாத்தி யோகராணி.. கையில் பத்து பைசா சேமியா ஜஸ்ஸோட அடியேனை பார்க்க..
இவளுக்கு தான் என்ன பெருமை என்று நான் நினைக்கையில்..
இதுக்கு முன்னால சேமியா ஐஸ் சாப்பிட்டு இருக்கியா என்றாள்...
இவளுக்கு உண்மையாகவே பண திமிர் தான் என்று பொங்கி கொண்டே.. இல்லை என்ற உண்மையை வெட்கத்தோடு சொன்னேன்.
இந்தா .. ஒரு கடி கடிச்சிக்கோ என்று அவள் நீட்ட..

பள்ளி கூட நாட்கள்னு ஒரு புத்தகம் போடலாமா? ஆனா படிக்க ஆள் வேணுமே..

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...