புதன், 1 நவம்பர், 2017

ஏழாவதில் ஒரு பாடம்

ஏழாவது என்று நினைக்கின்றேன். பருகுரில் படித்து கொண்டு இருக்கையில்...
சாதா ஐஸ் அஞ்சு பைசா... சேமியா ஐஸ் பத்து பைசா ..
கையில் பத்து பைசா இருந்த போதும்.. இன்றைக்கு ஒன்று நாளைக்கு ஒன்று என்று இரண்டு சாதா ஐஸ் கிடைக்குமே என்று பச்சை கலர் ஒன்று கேட்டு வாங்கி சாப்பிடும் போது..
புதிதாக வந்த EB ஆபிசரின் ராசாத்தி யோகராணி.. கையில் பத்து பைசா சேமியா ஜஸ்ஸோட அடியேனை பார்க்க..
இவளுக்கு தான் என்ன பெருமை என்று நான் நினைக்கையில்..
இதுக்கு முன்னால சேமியா ஐஸ் சாப்பிட்டு இருக்கியா என்றாள்...
இவளுக்கு உண்மையாகவே பண திமிர் தான் என்று பொங்கி கொண்டே.. இல்லை என்ற உண்மையை வெட்கத்தோடு சொன்னேன்.
இந்தா .. ஒரு கடி கடிச்சிக்கோ என்று அவள் நீட்ட..

பள்ளி கூட நாட்கள்னு ஒரு புத்தகம் போடலாமா? ஆனா படிக்க ஆள் வேணுமே..


ஐயோ.. வேணாம் எச்சி...
பரவாயில்லை, நீதானே .. ஓரத்துல கடிச்சிக்கோ.....
அவசர பட்டு யாரையும் தவறாக எண்ணிவிடாதே என்று அவள் அன்று கற்று கொடுத்த பாடம் இன்றும் உள்ளது..
அவள் தான் எங்கேயுள்ளாள் என்று தெரியவில்லை.

3 கருத்துகள்:

  1. அருமையான நினைவுகள்! பொக்கிஷம் என்று கூடச் சொல்லலாம் இல்லையா விசு. இப்படி எங்களுக்கும் நிறைய உண்டு! நினைவுகளை மீட்டது. குறிப்பாக 5 பைசா குச்சி ஐஸ், 10 பைசா சேமியா ஐஸ், 15 பைசா பால் ஐஸ் என்று...

    கீதா: இப்போது அவை மீண்டும் வேறு உருவத்தில் கோலா என்று வந்திருக்கு பார்த்தீங்களா..சக்கை போடு போடுகிறது. வித வித ஃப்ளேவரில் ஐஸ் கட்டிகள் கலர் கலராக பழக் கலவையுடன், ஜூஸுடன் என்று கப்பில் குச்சியில் கிடைக்கின்றன...

    பதிலளிநீக்கு
  2. சேமியா ஐஸை ஒரே ஒரு ஓரத்தில் கடித்ததுபோல் சுருக்கமாக அதே சமயத்தில் சுவையடனும் இருந்தது உங்கள் "பால" கால ஐஸ் பதிவு.

    கோ

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...