ஞாயிறு, 19 நவம்பர், 2017

ஆண்கள் தினமும் முருங்கை மரமும்...

வெள்ளி மாலை  உறவினர் இல்லத்தில் ஒரு நிகழ்ச்சிக்காக நானும் இளையவளும் செல்ல (மூத்தவள் கல்லாரியில் - அம்மணியோ பணியின் நிமித்தம் வெளியில்.. என்ன விசு? எப்ப பாரு அம்மணி பணி  நிமித்தம் வெளியிலன்னு  சொல்றீயா? என்று கேட்பவர்களுக்கு.. Some one has gotta pay the bills you see... )

வீட்டில் உள்ள பென்ரில்யில் (Pantry ) வெள்ளி இரவு சென்று நோட்டமிட்டால் சனி கிழமை மளிகை கடைக்கு போக வேண்டுமா இல்லையா என்று தெரிந்து விடும்.

வெள்ளி மாலை  உள்ளே சென்றேன்.. நோட்டமிட்டேன். கண்டிப்பாக கடைக்கு போக வேண்டிய அவசியம் உள்ளது என்று அறிந்து..

காலையில் எழுந்தவுடன்...

இன்னைக்கு தோட்டத்துல எனக்கு பயங்கர வேலை இருக்கு.. கிட்ட தட்ட நாலு மணி நேரம் வேணும்..

ஐயையோ... மளிகை கடைக்கு போகணுமே.. "தேங்க்ஸ் கிவ்விங்" வருதே..

தயவு செய்து நீயே போய்ட்டு  வா.. இந்த தோட்ட வேலைய இன்னைக்கு முடிச்சே ஆகணும்.. என்று சொல்லி...

வீட்டின் பின்  புறம் செல்ல..



ஏங்க.. என்னங்க இந்த முருங்கை மரம் இம்புட்டு வேகமா வளருது?

யு ஆர் வெல்கம்.

இல்லைங்க.. ஆறே மாசத்தில் கிட்ட தட்ட 15  அடி, நான் இப்படி வளந்த மரத்த பாத்ததே இல்லை.

நானும் தான்.. என்னமோ ஸ்பெஷல் பிரீட்ன்னு நினைக்குறேன்.

பக்கத்துல .. இது என்னங்க?

அதுவும் முருங்கை தான்.. ரெண்டுமே ஒரே நாளில்  வைச்சது?

இது வளரலையே...ஏன்.. இதை என்ன பண்ண போறீங்க.

இது தண்டபாணிக்கு ... அடுத்த மாசம் வந்து எடுத்துக்குவான்.,

அது எப்படிங்க ? ரெண்டும் ஒரே நாளில் வைச்சீங்க.. நல்லா வளந்த மரம் உங்க மரம்..வளராத மரம் தண்டபாணி மரம்.. எப்படி முடிவு போனீங்க?

முருங்கை மரம் வைச்சா அனுபவிக்கனும்.. ஆராயக்கூடாது?

ஏங்க? இந்த மரம் இப்படி வளந்தா இங்க இடம் பத்தாது.. அது மட்டும் இல்லாமல் முருங்கைக்கு நிறைய வெயில் தேவை.. அப்படியே நோண்டி   எடுத்துனு போய்   வீட்டுக்கு முன்னால வைச்சிடுங்க?

நல்லா சொன்ன போ !

ஏன்?

வீட்டுக்கு முன்னால எவனாவது முருங்கை மரம் வைப்பானா?

ஏன்? அதுல என்ன தப்பு? போறவறவன் எல்லாம் காயை திருடுவானு பயபடுறீங்களா? இங்கே அப்படி நடக்காது!

அது இல்ல..

பின்ன?

நாய் கண்ணு .. பேய் கண்ணுன்னு என் மேல படும்?

புரியல...?

இம்புட்டு செழிப்பா முருங்கை வூட்டுல இருந்தா விசு எம்புட்டு ஜாலியா இருப்பாருன்னு பொறாமை படுவாங்க..

சுத்தமா புரியல?

நீ முந்தானை முடிச்சு படம் பாக்கல?

நான் எப்ப எந்த படம் பார்த்தேன்? அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?

இல்ல அந்த படத்துல முருங்கை மரத்துல அதிகமா இரும்பு சக்தி இருக்குன்னு...?

அது என்ன டாகுமெண்டரி படமா?

சரி வேணா விடு..

இல்ல சொல்லுங்க...முருங்கையில் இரும்பு சக்தி இருக்குறது படத்தை பாத்து தான் தெரியுனுமா? கூகிள் பண்ணா தெரியுது..

கூல் குடிச்சுனு இருந்த காலத்தில் கூகிள் எங்கே இருந்தது?

சரி.. எனக்கு கொஞ்சம் முருங்கை பூ மட்டும் பறிச்சு தாங்க.. முட்டையில் போட்டு வருத்தா வடிவா இருக்கும்.

"முருங்கை பூ - முட்டை.." சூப்பர்.. சொல்லவே இல்லையே? நீயே தண்டபாணி மரத்துல இருந்து எடுத்துக்கோ.. நம்ம மரத்துல காய் வரட்டும்.


இதுக்கே இப்படி சொல்லிடீங்களே .. இந்த கீரையில் ஆட்டிறைச்சி கொத்து கரி போட்டு பிரட்டினேன்னு வச்சிக்கிங்கோ .. எனக்கு ஊருல சென்னியம்மன்  கோயிலுக்கு பக்கத்துல ஒரு சிலையே வைப்பீங்க..

சொல்லவே இல்லை. இதோ மரத்தையே மொட்டை அடிக்கிறேன்...

சரி விடுங்க..இதை முன்னால வைக்க போறீங்களா இல்லையா?

வேணாம்.. சில விஷயங்களை மறைச்சு தான் வைக்கணும்.

என்னமோ போங்க.. ஒரு முருங்கை மரத்துக்கு இம்புட்டு டிராமா பண்றீங்க..

பின்குறிப்பு : இவங்களுக்கு முந்தானை முடிச்சு போட்டு காட்டலாமா? .. அந்த படத்துல பாதி "பிட் படம் " போல இருக்குமே.. திட்டுனாங்கனா?  என்னமோ போங்க!


Someone tells me today is Mens Day? Is that right? 

3 கருத்துகள்:

  1. முந்தானை முடிச்சு போட்டு காண்பிப்பதா இல்லையா என்பது அப்புறம்.... முருங்கைகாய் பூ எல்லாம் சாப்பீடீங்களா இல்லையா... சடி எஃபக்ட் ஒன்ண்டும் இல்லையே

    பதிலளிநீக்கு
  2. ஹாஹாஹாஹாஹா...ஆஹா முருங்கைய வைச்சு இப்படியா!!! ஹாஹாஹாஹா ..ஆமாம் விசு பேய்க்கண்ணு பட்டுரும்!!!! அப்புறம் உங்க ஊருல வேதாளம் எதுவும் இல்லையே!!! வேதாளம் முருங்கை மரம் ஏறிடுச்சுனு சொல்லுவாங்களே அதான்!! ஹாஹாஹா....

    .சூப்பர் ரசித்தோம் விசு!!!

    இந்தப் பதிவுக்குக் கமென்ட் போடறதுக்குச் சரியான ஆள் யார் தெரியுமா..கிழக்குச் சீமையில இருக்கரே மதுரைக்காரரு அவருதான்..!!! (ஹையோ ஆல்ஃபி அண்ணன் இல்லைப்பா!!!!)

    கீதா

    பதிலளிநீக்கு
  3. "கூல் குடிச்சுனு இருந்த காலத்தில் கூகிள் எங்கே இருந்தது" சூப்பர்

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...