ஏங்க.. ஒரு மாசமா கண்ணாலம் - பிறந்தநாள்-லொட்டு லொசுக்குன்னு சொல்லினே ஒரு முக்கியமான காரியத்தை கோட்டை விட்டுடுங்களே...
அலறினே வந்தார்கள்.. எங்கள் இல்லத்தின் அம்மணி...
இல்லையே.. கல்யாணம் - பிறந்தநாள் - லொட்டு லொசுக்கு எல்லாம் நல்லாதானே போச்சி.
அது நல்லாத்தான் போச்சி.. உங்க எடையை கடைசியா எப்ப செக் பண்ணீங்க?
அதை எதுக்கு செக் பண்ணனும்? தலைவர் பாணியில் எடைக்கு எடை ஏதாவது தரபோறீயா?
நினைப்பு தான் பொழப்ப கெடுத்திச்சான்.
சரி விடு ... எடையை பத்தியே நினைக்கலே..
பக்கத்துல தான் ஜிம் இருக்கு .. போன மாசம் கூட ஒழுங்கா போனீங்க... இப்ப ஒரு மாசமா போகல.. அங்கே போய் கொஞ்ச நேரம் சைக்கிள் ஓட்டிட்டு அந்த மிசன் மேலே நடந்துட்டு வாங்க..
எனக்கு இது எல்லாம் ஒத்துவராது..
இந்த ஊரு ஆட்களை பாருங்க. என்னாம ஜிம்முக்கு போய் ஜம்முனு இருங்காங்க, நீங்க என்னடான்னா கம்முன்னு இருக்கீங்க..
அடேடே.. எதுகை மோனையோட.. ஷோக்கா பேசுறியே. தமிழ் விளையாடுதே..
என்னோட தமிழை கேட்டு உங்கள் நண்பர்கள் பல பேர் நான் தான் பதிவு எழுதுறேன், நீங்க சும்மா உங்க பேரை தான் போட்டுகிறீங்களானு என்னையே கேட்டாங்க ..
யாரு அந்த நண்பர்கள்? இவங்க மாதிரி நண்பர்கள் இருந்தால் எதிரியே தேவை இல்லையே..யாரு.. அப்படி கேட்டது..?
எல்லாரும் தான். ஏன்.. நீங்க எழுத ஆரம்பிச்ச காலத்தில் தண்டம் கூட அப்படி தான் கேட்டார்?
தண்டம் அப்படி கேட்டான்? ஏன் அப்பவே சொல்லல?
அவர் தான் சொல்ல கூடாதுன்னு சொன்னார்...
அப்படினா இப்ப ஏன் சொன்ன?
நீங்கதான் சொல்ல சொன்னீங்க...
என்னை குழப்புற ..
இந்த மாதிரி குழம்பத்தருக்கு பதிலா ஜிம்முக்கு போய் அந்த சைக்கிள் மெதிச்சிட்டு ஒரு அரை மணி நேரம் மிஷன் மேலே நடந்துட்டு வாங்க.. இந்த ஊரு ஆட்களை பாருங்க..
ஒரு நிமிஷம் நான் சொல்றத கவனமா கவனி..
சொல்லுங்க..
இந்த ஜிம் விஷயத்தில் இந்த ஊர் காரங்க வேற.. நம்ம வேற..
எப்படி..
இந்த ஊர் காரங்க .. நடக்க வேண்டிய வயதில்.. அதுதான் பள்ளி பருவத்தில் மற்றும் சைக்கிள் ஓட்ட வேண்டிய வாலிப பருவத்திலும்
காரில் போனாங்க..
அதுக்கு..
நம்ம ஊரில் அந்த காலத்தில் நான் நடந்த நடைக்கும் ஓட்டுன சைக்கிளுக்கும் இன்னும் ஏழு ஜென்மத்துக்கு நான் ஜிம்முக்கு போகத்தேவையில்லை.
இப்படியே சொல்லினு இருங்க.. ஏழு ஜென்மம் ஆறாக போது.. இப்போ கிளம்புறீங்களா இல்லையா.
அம்மணி பேச்சுக்கு மறு பேச்சி இல்லையே.. ஜிம்முக்கு கிளம்பினேன்.
நாங்கள் வசிக்கும் வீடு ஒரு HOA ( Home Owners Association ) வைத்துள்ளது. அதில் அருமையான நவீன வசதி கொண்ட கிளப் உள்ளது. நிறைய டென்னிஸ் மைதானம் - வாலி பால் மைதானம் - கூடை பந்து - சூடு தண்ணீரோடு நீச்சல் குளம் - ஸ்குவாஷ் ஆடுகளம் மற்றும் ஜிம் என்று பல வசதி கொண்ட ஒன்று.
உள்ளே நுழையும் போது அவர்கள் கொடுத்துள்ள அடையாள அட்டை ஒன்றை காட்டவேண்டும். அந்த அட்டையை ஸ்கேன் மிஷனில் காட்டினால் கதவு திறக்கும். நாம் உள்ளே சென்றவுடன் அடைத்து கொள்ளும்.
ஜிம்மை அடைந்தேன் . எனக்கும் முன்னே ஒரு குடும்பம். குடும்பத்தை சார்ந்த அத்தனை பெரும் அவரவர்கள் பையில் அவர்களுக்கான அட்டையை தேடி கொண்டு இருக்கையில் ..
நான் அங்கே வர..
யு கோ அஹெட் ... நாங்கள் அட்டையை எங்கேயோ தவறிவிட்டோம் என்று வழிவிட்டார்கள்.
நான் என் தொலைபேசியை கையில் எடுத்து .. அந்த ஸ்கேன் மிஷன் முன் நீட்ட கதவு திறந்ததும்..
அட்டையை தேடி கொண்டு இருந்தவர்கள் அலறிவிட்டார்கள்.
டிட் தட் மிஷன் ஸ்கேன் யுவர் போன்?
எஸ்.
யு ஹேவ் அ App பர் தட்?
எஸ்.
தட்ஸ் சோ கூல் ..
என்று அவர்கள் தொடர்ந்து அட்டையை தேட நான் ஜிம்மை நோக்கி நடந்தேன்.
ஜிம்மில் சென்று ஒரு சைக்கிள் மேல் ஏறி அதை ஓட்ட ஆரம்பித்து ஒரு பத்து நிமிடம் இருக்கும் ...
வெளியே அட்டை தேடிய குடும்பம் வந்தது. அதில் ஒருவர் என் அருகில் இருந்த சைக்கிள் மேல் ஏறி என்னிடம் பேச ஆரம்பித்தார்.
வி கீப் லூஸிங் திஸ் கார்ட். வி ஹோப் வி கேன் ஹவ் அன் APP லைக் தட்.
தட் மேக்ஸ் சென்ஸ்..
யு லுக் லைக் அன் இந்தியன் .. யு மஸ்ட் பி எ டெவெலப்பர் !
நோ..
IT ?
நோ.
ஹூ மேட் திஸ் ஆப் பார் யு?
நானே தான்.
ஹொவ் மச் ஐஸ் இட் பார் திஸ் ஆப். அண்ட் ஹொவ் லாங் டஸ் இட் டேக் யு டு டெவெலப் திஸ்.
காஸ்ட் மீ அரௌண்ட் 50 சென்ட்ஸ் அண்ட் ஐ டிட் இட் வித் இன் டூ மினிட்ஸ்.
வேர் கேன் ஐ டவுன்லோட் இட்?
யு காண்ட் டௌன்லோட் இட். யு நீட் டு பை ஹாட்வேர்.
வேர் கென் ஐ கெட் ஒன்?
டோன்ட் பாதர் ஐ வில் கெட் யு ஒன். கம் டும்மாரோ அட் தி செம் டைம் ஐ வில் கிவ் யு.
தேங்க்ஸ்..
அடுத்த நாள் அது ஒன்றை வாங்கி அவருக்கு அளித்தேன். அதை பரிசோதித்து பார்த்து அலறியே விட்டார்.
பின் குறிப்பு :
மென் பொறியாளர்களே.. கணக்கு பிள்ளைகளுக்கு ஒன்றும் டெவெலப் பண்ண தெரியாது என்று தப்பு கணக்கு போட்டு விடாதீர்கள்.

அதுதானே கொக்கு என்றால் சும்மாவா ?
பதிலளிநீக்குSema Sir
பதிலளிநீக்குசூப்பர் விசு!!! எப்போ எல்லாருமே விசு...நாட் ஒன்லி மென் பொறியாளர்கள்....ஈவன் தென்னை மரம் ஏறுபவர் கூட ஆப் வைச்சுருக்கார் அவரே க்ரியேட் செய்ததாம்..!!!இத்தனைக்கும் அவர் பள்ளிக்கூடம் பக்கம் கூட ஒதுங்கியது கூட இல்லை! டெக்னாலஜி அந்த அளவிற்கு முன்னேறி விட்டது ஆர் இறங்கிவிட்டது??!!!!
பதிலளிநீக்குகீதா