ஞாயிறு, 3 டிசம்பர், 2017

பல்ப் வாங்கிய கதை.. Literally!

தண்டம்...

அலை பேசியில் அலறினேன்...

சொல்லு வாத்தியாரே.. என்ன பதறுற..அம்மணி கண்டு பிடிச்சிட்டாங்களா?

என்ன சொல்ற?

பொதுவா சொன்னேன்.. இந்த வாய்ஸில் நீ கூப்பிட்டானா... அம்மணி கண்டி பிடிச்சிட்டாங்கனு தானே அர்த்தம்.

ரொம்ப அவசியம்..

சரி சொல்லு வாத்தியாரே..

உடனே என் வூட்டுக்கு போய் அம்மணியை ஏதாவது சொல்லி  ஒரு அரைமணிநேரத்துக்கு வெளியே கூட்டினு போ.. ப்ளீஸ்..

ஓ... விஷயம் அப்படி போதா? என்ன பண்ண?

டேய் .. தேங்க்ஸ் கிவ்விங் அன்னைக்கு நீ இதே மாதிரி போன் பண்ணும் போது நான் ஏதாவது கேட்டேனா?

ஆர்வ கோளாறுதான்.. என்ன பண்ண?

டேய்..அப்புறம் விவரமா சொல்றேன்.. ப்ளீஸ்.. சீக்கிரம்... ஏதாவது சொல்லி கூட்டினு போ.. பக்கத்துக்கு தெருவில் சட்டி ஒன்னு வாங்கனா.. அகப்பை இலவசம்னு ஏதாவது சொல்லி கூட்டினு போ .. ப்ளீஸ்..



அம்புட்டு சுலபம் இல்ல வாத்தியாரே.. சட்டி அகப்பைன்னு சொன்னா சுந்தரியும் கிளம்பி வந்துடுவா.. அஞ்சு நிமிஷம் கொடு. நீ இப்ப எங்க இருக்க?

வெளிய கடையில்..

அஞ்சு நிமிஷம் கொடு.. அம்மணி உன்னை கூப்பிடுவாங்க..

தேங்க்ஸ்..

ஆன்னா ஒன்னு என்ன விஷயம்னு மறைக்காம மறக்காம சொல்லணும்.

சரி..

ஞாயிறு காலையும் அதுவுமா..

என்னங்க..?

சொல்லு...

இன்னைக்கு காலையில் என்ன செய்யறேன்னு சொன்னீங்க..?

கொஞ்ச நேரம் கூடுதலா தூங்க போறேன்னு சொன்னேன்..

ஏங்க... சீரியஸ்...!

சாரி.. மறந்துட்டேன் சொல்லு..

கிறிஸ்துமஸ் டெக்ரேசன்...

ஓ...

ஒரு காப்பியை குடித்து விட்டு .. அடுத்த மூணு மணி நேரம் ஒரு ஏணியை வைத்து வீட்டில் கூரையின் மேல் ஏறி கிறிஸ்துமஸ் விளக்குகளை இல்லத்தை சுற்றி மாட்டி விட்டு....

கீழே வந்து ..

ஆண்டவனே .. இந்த ஸ்விட்சை போட்டவுடன் அம்புட்டும் எரியனும்ன்னு ஒரு விண்ணப்பத்தையும் போட்டு விட்டு.. ஸ்விட்சை தட்டினால்.. ஒன்றுமே எரியவில்லை..

ஏங்க...?

சொல்லு..

ஒண்ணுமே எரியல...!

அதுதானே..

எங்கப்பா அந்த காலத்தில்...

ஒவ்வொன்னா செக் பண்ணி போட்டு இருப்பாரு.. அது தானே..

எப்படிங்க..? அம்புட்டு சரியா சொன்னீங்க..

இருவது வருசமா உங்கப்பா என்ன என்ன செஞ்சாருன்னு தானே கேட்டுனு இருக்கேன்.. அதுதான்.

இப்ப என்ன பண்ண போறீங்க..

விளக்குகளை ஒவ்வொன்றாக செக் செய்ய.. நடுவில் ஒரு பல்ப் உடைந்து இருந்தது..

ஒரு பல்ப் உடைஞ்சி இருக்கு...

அதை தூக்கி போட்டுட்டு மத்ததை  எரிய விடுங்க..

இல்ல.. ஒன்னு எரியாட்டி அம்புட்டும் எறியாது..

இப்ப என்ன செய்ய போறீங்க..?

அரை மணிநேரம் கொடு.. பக்கத்துல போய் வாங்கினு வரேன்..

சீக்கிரம் வாங்க.. அதை எங்க வாங்கினோம் தெரியுமா?

இல்ல..

பக்கத்துல ஹோம் டிப்போவில்.. நாலு வருசத்துக்கு முன்னால..

எப்படி .. இம்புட்டு  கரெக்ட்டா சொல்ற?

எங்க அப்பாட்ட கத்துக்குனது ! அது இருக்கட்டும்.. அந்த பில் வேணும்மா?

நாலு வருசத்துக்கு முன்னால பில்?

பத்திரமா இருக்கு.. நீங்க போங்க  நான் டெக்ஸ்ட்  பண்றேன்..

மனதில்.. எப்படி இந்த அம்மணிக்கு இம்புட்டு அறிவு என்று யோசித்து கொண்டே..

எக்ஸ்குயுஸ் மீ.. இந்த டெக்ரேசன் பல்ப்ஸ்...?

அங்கே கிறிஸ்துமஸ் பக்கம் போங்க..

எடுத்து வந்த படத்தை காட்டி..

இந்த மாதிரி ஒரு பல்ப் வேணும்.

ஓ.. இந்த மாடல் இந்த வருஷம் சீக்கிரம் தீந்து போச்சி..

வேற பிரான்ச்  போய்  கேளுங்க.

வெளிய வருகையில்..

ஏங்க..

தண்டம் வந்தானா?

உங்களுக்கு எப்படி தெரியும்..

இல்ல.. தண்டமா வந்தேன்... இந்த கடையில் இல்லையாம்..

வேற இடத்தில பாருங்க..இங்கே தண்டம் வந்து இருக்காரு.. அவசரமா எதோ கடைக்கு போகணுமாம். சுந்தரிக்கு ஏதோ கிப்ட் வாங்கணுமாம்.. நான் போய்ட்டுவாரேன்..

கிப்டா?

பொண்டாட்டியை எப்படி சந்தோசமா வச்சிக்குனும்ன்னு அவருட்ட கத்துக்குங்க..

தண்டம்.. பழி வாங்கிட்டியேடா ..... அடுத்த இரண்டு மணி நேரம் ஆறு கடைக்கு ஏறி இறங்கி கொண்டு இருக்கையில்..

ஏங்க.. ஒரு பல்புக்கு எம்புட்டு நேரம்..?

இதோ வந்துட்டேன்..

கடைசியாக ஒரு கடையில் ..

ப்ளீஸ்... வீடு முழுக்க மாட்டிட்டேன்.. ஒண்ணுமே எரியல.. ஒரு ஒரு பல்ப் எப்படியாவது கண்டு பிடிச்சி தாங்க..

யு வாண்ட் ஒன்லி ஒன் பல்ப்..

எஸ்..

நீங்க அந்த விளக்குலேயே பாருங்க.. அந்த ப்ளக் பக்கத்தில் ஒரு நாளை அஞ்சி  பல்ப் எக்ஸ்டரா இருக்கும்...

மனதில் பாலை வார்த்தான்..

ஆனாலும் அதை எப்படி அம்மணியிடம் சொல்வது..?

வீட்டிற்கு போகும் போது அம்மணி அங்கு இல்லாவிடில் விளக்கை எரிய விட்டு .. வேலை முடிந்ததுன்னு சொல்லலாம்.. அந்த எக்ஸ்டரா பல்ப் இருக்கறத அம்மணி பாத்துட்டா.. எங்க அப்பா எங்க அப்பான்னு  ....அடுத்த கிறிஸ்துமஸ் வரை..

அதுக்கு தான் தண்டத்துக்கு அந்த அவசர அலை பேசி அழைப்பு..


1 கருத்து:

  1. ஹா ஹா ஹா ஹா ஹா...

    தண்டம் பழி வாங்கிட்டியே..// ஹா ஹா செம விசு. சிரிச்சு முடில...

    //எங்க அப்பா எங்க அப்பான்னு ....அடுத்த கிறிஸ்துமஸ் வரை..

    எங்க அப்பா.. எங்க அப்பான்னு...//

    எங்கப்பா? எங்கப்பா?..நான் எங்க போவேன்னு தண்டத்தோடு ப்ளான் போடுறீங்களோ?!!! ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...