வியாழன், 30 நவம்பர், 2017

பேச கூடாது... வெறும் பேச்சில்...?

நான் ஏற்கனவே நிறைய இடத்தில எழுதிய ஒரு விஷயம் தான்..

என்னை வானவில்லை வளைக்க சொல்லு..
பாத்திரத்தை கழுவ சொல்லு..
வீட்டை சுத்தம் படுத்த சொல்லு...
என்ன வேலையினாலும் சொல்லு ..

பாஷாவில் ரஜினி சிரிச்சினே அடிவாங்குவாரே.. அதே பாணியில் செய்யுறேன்.. அனால் கடைக்கு மட்டும் கூப்பிடாத.. அதுக்கு பதிலா என்னை   கொன்னு போட்டுடுன்னு அம்மணியிடம் சொல்லி  வைத்துள்ளேன்.

கடைக்கு போவது அவ்வளவு பிடிக்காத காரியம். அப்படியும் சில நேரங்களில் அம்மணி.. அருகே உள்ள அமெரிக்க சூப்பர் மார்க்கெட் மற்றும் காஸ்ட்கோ போல கடைக்கு போக வேண்டும் என்று அனுப்பி விடுவார்கள். வேறு வழியிலில்லாமல் அவர்கள் தந்த லிஸ்ட்டை எடுத்து கொண்டு கடைக்கு சென்று வாங்கி வருவேன். இந்த அமெரிக்க கடைகளில் பார்கைன் (அதுக்கு தமிழில் என்ன வார்த்தை)  என்ற பேச்சுக்கே இடம் இல்லை. நேராக போகிறோம். வேண்டியதை எடுத்து கொண்டு பணத்தை கட்டி விட்டு நேராக வீடு தான்.



இந்த வேலையை செய்து விடலாம். அம்மணி வற்புறுத்தினால் வேறு வழியில்லாமல் இந்த கடைக்கு சென்று வந்துவிடலாம்.

ஆனால்.. அம்மணிக்கே நான் மறுப்பு சொல்லும் ஒரு கடை தான் இந்தியர்கள் நடத்தும் கடை. எங்கள் இல்லத்தின் அருகே இந்தியர்கள் அதிகம் இருக்கும் Artesia  என்ற ஒரு ஊர் இருக்கின்றது. இங்கே கடை வீதிகள் சென்னையிலோ அல்ல இந்தியாவின் மற்ற இடங்களிலோ போல்  இருக்கும்.

இந்த கடைகளுக்கு போவது என்றாலே உடம்பில் கம்பிளி பூச்சி  ஏறிய உணர்வு தான். சில நேரங்களில் இங்கே போகவேண்டிய நிர்பந்தம் வரும் போது வாந்தியே வந்துவிடும்.

உதாரணத்திற்கு..

மகளுக்கு ஒரு சுடிதார் வாங்க சென்ற போது , கடை காரர் 300 டாலர் என்று சொன்னார். நானும் அவர் கேட்ட அந்த தொகையை கொடுத்துவிட்டு இல்லத்திற்கு வர  ...

எவ்வளவு ?

300  டாலர்...

முதலில் எவ்வளவு சொன்னாங்க?

300  தான்?

அப்புறம்..?

300  கொடுத்துட்டு வாங்கி வந்தேன்..

என்னங்க.. சொல்றீங்க.. கிண்டல் தானே..

இல்லை.. அவன் 300  சொன்னான்..

300  சொன்னா.. நீங்க 100  ல் இருந்து தானே ஆரம்பிக்கணும்?

ஆரம்பிச்சா?

150  க்கு வாங்கி இருக்கலாமே..

அவன் தான் 300  சொன்னான்னே..

சீக்கிரம் கிளம்புங்க..

எங்க..?

நீங்க பண்ண வேலைக்கு...

சில நிமிடங்கள் கழித்து...

இது வேணாம் ..

நாங்க வித்த பொருளை வாங்க மாட்டோம்.

அந்த மாதிரி சட்டம் எதுவும் இந்த ரசீதில் இல்லையே...

ரசீதில் இல்லை .. இருந்தாலும் வாங்க மாட்டோம்.

நான் கம்ப்ளெண் பண்ணுவேன்....

எதுக்கு திருப்பி தரீங்க?

இதுக்கு எப்படி 300  வாங்குவீங்க?

அவர் தான் குறைச்சி கேக்கலையே..

அம்மணியின் பார்வையில்... உங்களை...

சரி எனக்கு வேணா..  இந்தாங்க..

நீங்க என்ன விலை தான் சொல்றீங்க..

100  டாலர்.. மீதி இருநூறு கொடுங்க..

இல்லை.. வேணும்னா.. 50  டாலர் திருப்பி தரேன்...

சரி.. உங்களுக்கும் வேணாம் எனக்கும் வேணாம்.. 125  டாலர்.. மீதி 175  தாங்க..

இல்லைங்க..

வேணும்னா.. 200 ...

கடைசியா.. 140  மீதி 170  திருப்பி தாங்க..

நமக்கு தான் வாயில் பிரச்னையாச்சே.. இடையில் புகுந்து..

140னா .. மீதி 160  தான். 170  தப்பு..

இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல.. 300  கொடுக்கும் போது இந்த சாமர்த்தியம் இருக்கணும்.

கடைசி.. 150  ..

சரி இந்தாங்க...

பேரம் ( ஓ மை காட்..  பேரம் தான் பார்கைன்) முடிந்தது.

இது எல்லாம் இந்தியன் நடத்துற கடைங்க.. அவன் என்ன விலை சொன்னாலும்.. மூணுல ஒண்ணுக்கு கேக்கணும். அப்புறம் அவன் சொன்னதில் பாதி விலைக்கு வாங்கணும்.

சரி..

வாங்க பசிக்குது.. பக்கத்துல சமோசா சாப்பிடலாம்.

ஐயோ... இந்த கடைகளில் சாமான் வாங்குறது இருக்கட்டும்.. சாப்பாடு .. வாயில் வைக்க முடியாதே.. வீட்டுக்கு வா.. வாழை பஜ்ஜியையே செஞ்சி தரேன்..

ரொம்ப பசி வாங்க..

என்று உள்ளே சென்று அமர..

நான் கல்லா பெட்டியிடம் சென்று..

சமோசா எவ்வளவு...?

ஒன்னு ஒன்னரை டாலர்..

ஐம்பது சென்டுன்னு வைச்சி ஒரு டாலருக்கு ரெண்டு தாங்க..

வாட்?

ஐம்பது சென்டுன்னு வைச்சி ஒரு டாலருக்கு ரெண்டு தாங்க..

புரியல..

ஒரு நிமிஷம் இருங்க.. அவங்கள கூப்பிடுறேன்..

ஒரு சமோசா ஒன்னரை டாலராம்.. ஒரு டாலருக்கு ரெண்டு கேட்டேன்.. புரியலைங்குறாரு..

அய்யயோ.. உங்களை..

அங்கே போய் உக்காருங்க..

சமோசா வந்தது..

நீ தானே சொன்னே..

அது அந்த துணி கடையில்.. சாப்பாடு ஐட்டத்துக்கெல்லாம் இப்படி கேக்க கூடாது. அவன் பாருங்க நம்மள கேவலமா பாக்குறான்..

இதுக்கு தான் என்னை இங்கே கூட்டினு வராதன்னு கெஞ்சுறேன். ப்ளீஸ்.. என்னை நரகத்துக்கு கூட அனுப்பு .. Artesia அனுப்பாத..

சரி.. சரி.. விடுங்க..

வண்டியில் ஏறினோம்.

ஏங்க..

சொல்லு..

நீங்க செய்ய மாட்டீங்க தெரியும்.. இருந்தாலும்..

சொல்லு..

என் பிறந்தநாளுக்கு நகை எதுவும் வாங்குறேன்னு இங்கே தனியா வந்துடாதீங்க..

ஏன்..?

துணி மட்டும் தான் மூனுக்கு ஒன்னுல இருந்து ஆரம்பிக்கணும். நகைக்கு அஞ்சில் ஒன்னு.. கொஞ்சம் ஏமாந்தா மொட்டை அடிச்சிடுவாங்க..

மனதில்.. அட பாவி.. மகளுக்கு சுடிதாருக்கு 300  கொடுத்த அன்றே அந்த நகை கடையில் அவன் கேட்டதை கொடுத்து வாங்கி வந்துட்டேனே.. இப்ப என்ன பண்றது?

9 கருத்துகள்:

  1. reminds me of chappani in 16 vayathinile... so... silly(i mean kamal's character) Barmaa bazaarla pannaatha beramaa...?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பர்மா பாஜாரில் பேரம் பேசணும். அது அம்புட்டு பேஜாரா தெரியல.. ஏன்னா.. அந்த காலத்தில் அம்புட்டு கடையிலும் தான் பேரம் பண்ணோம். அதனால. இங்கே அப்படி இல்லை. இந்த இந்தியன் கடையில் மட்டும் தான் பேரம்.

      நீக்கு
  2. சொல்லி சென்ற விதம் மிக அருமை விசு

    பதிலளிநீக்கு
  3. விசு... I enjoy your blog posts.. Here is the tamil word for
    Bargain ==> பேரம் பேசி

    பதிலளிநீக்கு
  4. ச.. பாருங்க விசுவுக்குத் தெரியாததா...நானும் ரொம்ப நல்ல பிள்ளையா ஹா ஹா ஹா பார்கைனுக்கு அர்த்தம் சொல்லப் போக நீங்களெ கடைசில பதிவுல சொல்லிட்டீங்க...பல்பு எனக்கு!! ஹா ஹா ஹா ஹா...

    செம ரசித்தேன்...அங்கயும் இப்படியா..அங்க இருந்தப்ப நான் க்ராஸரி மட்டும் அதுவும் இந்தியன் பொருளா வேணும்னா மட்டும் தான் இந்தியன் ஸ்டோர். அப்ப 6 இருந்துச்சு sunnyvale ல்...
    இதுக்குத்தான் தண்டத்திடம் ஒரு வார்த்தை கேட்டுட்டுப் போயிருக்கணும்...அவருக்கு சுந்தரியோடு போன அனுபவம் இருந்திருக்குமே....

    கீதா

    பதிலளிநீக்கு
  5. இங்கும் துணிக்கடையில் அதாவது பெரிய துணிக் கடையில் பேரம் பேச முடியாது. பாரிஸ் கார்னர் கடைகளில் பேசலாம்...

    கீதா

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...