மதுரை மங்கையற்கரசி பள்ளி.. மூன்றாவது என்று நினைக்கின்றேன்...
காலை இடைவேளையில்... அவனவன் அடித்து பிடித்து கமர்கட் வாங்க ஓடுகையில்..
விசு.. நீ வரல...? அருகில் அமரும் நரசிம்மன் கேட்டான்.
நீ போ நான் வரேன்..
வா.. பெல் அடிக்குறதுக்கு முன்னால வாங்கினு வந்துடலாம்..
நீ போ. என் பாக்கெட்டில் இருந்த அஞ்சு பைசா காணோம்.. எங்கேயோ விழுந்துடிச்சி..
கடைசியா எப்ப பாக்கெட்டை தொட்டு பாத்த?
காலையில் ஸ்கூல் உள்ளே வரும் போது...
சரி நான் வரேன்... கிளம்பினான்.
பெல் அடிக்கும் முன்பு அடித்து பிடித்து வந்த அவன்.. போற வழியில் உன் அஞ்சு காசு வாசலில் இருந்தது.. உனக்கும் வாங்கி வந்தேன்...
காசு இல்லை என்று அவனிடம் சொல்ல வெட்கப்பட்டு நான் சொன்ன பொய்யை நம்பியவன்.. எனக்கே பொய் சொல்கிறான்.. .
நல்லது செய்திட பொய் சொல்லலாம் என்று வள்ளுவரை விட அழகாக நரசிம்மன் சொல்லி தந்த பாடம் (அம்மணியிடம் போட்டு கொடுத்துடாதீங்க) இன்றும் எனக்குள் இருக்க..
நரசிம்மன் எங்கே இருக்கிறானோ?
நல்ல நட்பு
பதிலளிநீக்குkavithai
பதிலளிநீக்குஅடேயப்பா! :)
பதிலளிநீக்குநட்பென்றால் இதுதான்!!
பதிலளிநீக்குஉங்களைப் போலவே உங்கள் நண்பர்களும்.. (இதை எப்படிப் புரிந்து கொண்டாலும் சரிதான் :-))
பதிலளிநீக்கு