ஜெர்மனியில் இன்னொரு நாள்....
பெர்லின் நகரை சுற்றி பார்த்து வீட்டை வந்து சேரும் போது இரவு 10 மணி ஆகிவிட்டது. ஐரோப்பாவில் தான் கோடை நாட்களில் இரவு 10:30 வரை சூரிய வெளிச்சம் உள்ளதே.. அதனால் தினமும் வீட்டை வந்து அடையும் போது மணி பத்துக்கும் மேல் ஆகி விடும்.
அக்கா.. நாளை என்ன பிளான் ...?
இங்கே அருகில் உள்ள நெய்தற்பினோ (Niederfinow )என்ற ஒரு பட்டிணம் அங்கே பாய்ந்து ஓடும் ஒரு ஆற்றிற்கு போகலாம் என்று ஒரு எண்ணம்..
அக்கா..ஐரோப்பாவில் நிறைய ஆறு பார்த்து விட்டோம். வேறு எங்கேயாவது...?
இது ஒரு வித்தியாசமான ஆறு..
என்ன வித்தியாசம்..
அங்கே வந்து பாரு, தெரியும்
பெர்லினில் இருந்து கிளம்பி ஒரு 90 நிமிட பயணத்திற்கு பின் இங்கு வந்து சேர்ந்தோம்.
அக்கா.. என்ன இது பெரிய பெரிய கட்டிடம் இங்கே கட்டி கொண்டு இருகின்றார்கள் ... Eiffel கோபுரம் போல் நிறைய கம்பிகள் கொண்டு ஒரு இடம் வேறு.. என்ன ...நடக்குது இங்கே ..?
என்ன டிக்கட்...?
ஏங்க.. அவங்க தான் டிக்கட் வாங்கி வரேன்னு சொல்றாங்க இல்ல.. இப்ப என்ன அவசரம் ... கொஞ்சம் பொறுமையா தான் இருங்களேன்..
என் அருமை மனைவி... ஒரு ஆம்பிளை அவன் மனைவியிடம் தான் பொறுமையா இருக்கணும் .. அக்கா தங்கச்சியிடம் தேவை இல்லை..
ஏன்..
அக்கா தங்கச்சி தான் அவனை பிறந்ததில் இருந்து பார்த்து இருக்காங்களே , அதனால் அவனை முழுசா தெரியும்...
முழுசா தெரிய நீங்க என்ன பௌர்ணமியா..? சும்மா கூட கூட பேசாதிங்க..
பேசி கொண்டே இருக்கும் போது ..
சீக்கிரம் வாங்க.. படகு கிளம்ப போது..
படகா...? புரியலையே..
அடித்து பிடித்து கொண்டு அனைவரும் படகை நோக்கி ஓடினோம்..
அங்கே வரிசையில் இருக்கையில் ..
அக்கா ..இங்கே என்ன விசேஷம்.. இப்பவாது சொல்லுங்க ...
விசு.. இங்கே இருந்து பார்.. இந்த ஆறு ஒரு 250 மீட்டர் கிட்ட தான் ஆரம்பிக்குது ...
ஆமா அக்கா.. அந்த மலையடிவாரத்தில் இருந்து..
எங்கே இருந்து இவ்வளவு தண்ணீர் வருது...
அந்த மலைக்கு மேல இந்த ஆறு ஓடுது.. பின்னர் சில குழாய் மூலம் கீழே வருது..
சரி இந்த படகில் இங்கே இருந்து அந்த 250 மீட்டர் போக இவ்வளவு பணமா..
பொறுமை.. இங்கே இருந்து 250 மீட்டர் போய் அந்த இஉர்ம்பு கம்பியினால் ஆனா இடத்தில நுழையும்.. பின்னர் அங்கிருந்து படகு மொத்த படகையும் அப்படியே 200 மீட்டர் போல அந்த பாலம் அப்படியே தூக்கி கொண்டு மேலே போய் அங்கு இருக்கும் ஆற்றில் போய் விடும். இந்த ஆற்றில் பலவித வணிக படகுகள் செல்லுவதால் இது மிக பெரிய உதவி...
என்று சொல்லி கொண்டு இருக்கும் போதே படகு அங்கே வந்து சேர்ந்தது. கிட்டதட்ட 150 பேர் அமர படகு பாலத்தை நோக்கி நகர்ந்தது .
இரும்பு கம்பியினால் செய்ய பட்ட பாலத்தில் படகு நுழைந்தவுடன் ஆற்றின் ஒரு பக்கம் அடைக்க பட்டது.
என்ன ஒரு பொறியியல் விந்தை .. தண்ணீரோடு முழு ஆற்றை தூக்கி கொண்டு உயரே பறக்க ஆரம்பித்தோம். மெல்ல மெல்ல உயரே சென்ற சில நிமிடங்களில் அங்கே மீண்டும் நிறுத்த பட்டது. மீண்டும் ஒரு எச்சரிக்கை மணி அடிக்க பாலத்தின் மற்றொரு பக்கம் திறக்க பட.. என்ன ஒரு ஆச்சரியம் ..
மலையின் மேல் ஆற்றின் அடுத்த பகுதி...
படகை விட்டு இறங்கி வருகையில்..
எப்படி இருந்தது விசு...?
சூப்பர் அக்கா.. இங்கே அழைத்து வந்ததற்கு நன்றி..
இந்த ஆறு எங்கே போகின்றது..
என்ற தேவை இல்லாத கேள்வியை நான் கேட்க்க .. அக்கா கொடுத்த பதில் என்னை பேய் அறைந்தது போல் மாற்றியது (பேய் அறைந்த கதையை கண்டிப்பாக இன்னொரு நாள் சொல்கிறேன்).
அக்கா சொன்ன இடத்தை என் வீட்டு அம்மணி கேட்கவில்லை என்ற நப்பாசையோடு... சரி வண்டிய வீட்டுக்கு விடுங்க என்றேன்..
அம்மணியோ..
ஏங்க.. அக்கா சொன்னத என்னாலே நம்பவே முடியல்ல....
அப்படி அக்கா எந்த இடத்தை தான் சொன்னார்கள்... நான் ஏன் பேய் அறைந்ததை போல் ஆனேன்.. அம்மணி ஏன் அவ்வளவு சந்தோசமானார்கள்.. அடுத்த பதிவில் பார்ப்போமே...
தொடரும்..
www.visuawesome.com

ஆற்றின் அருகே பெரிய பெரிய கட்டிடங்கள் ..
ஒரு ஐந்து நிமிடம் பொறு.. டிக்கட் வாங்கி கொண்டு வரேன்..என்ன டிக்கட்...?

ஆற்றின் ஒரு பக்கம் அடைக்க பட்ட கதவு
எங்கள் படகோடு சேர்ந்து மற்றும் நான்கு ஐந்து படகுகள்... அது மட்டும் அல்லாமல் சில சிறிய ஓடங்கள் .. அந்த அடைக்க பட்ட இடத்தில் அனைவரும் காத்துகொண்டு இருக்கையில் ஒரு எச்சரிக்கை மணி அடிக்க அந்த முழு இடமும் மேலே போக ஆரம்பித்தது.
உயர உயர ......
என்ன ஒரு பொறியியல் விந்தை .. தண்ணீரோடு முழு ஆற்றை தூக்கி கொண்டு உயரே பறக்க ஆரம்பித்தோம். மெல்ல மெல்ல உயரே சென்ற சில நிமிடங்களில் அங்கே மீண்டும் நிறுத்த பட்டது. மீண்டும் ஒரு எச்சரிக்கை மணி அடிக்க பாலத்தின் மற்றொரு பக்கம் திறக்க பட.. என்ன ஒரு ஆச்சரியம் ..
மலையின் மேல் ஆற்றின் அடுத்த பகுதி...
மேலே ஒரு பகுதி ...
அனைத்து படகுகளும் பாலத்தில் இருந்து முன்னேறி சென்று மேலே உள்ள ஆற்றில் கொஞ்சம் தூரம் சென்று ஒரு U Turn போட்டு மீண்டும் கீழே வந்து சேர்ந்தோம்.
மேலே இருந்து கீழே பார்க்கையில் ....
மொத்த பயணமும் கிட்டத்தட்ட ஒரு மணி இருக்கும். மனிதனின் மூளை தான் என்ன ஒரு படைப்பு. இந்த மாதிரி ஆற்றில் இப்படி ஒரு வியப்பான காரியம்.. வியந்தேன்.. மகிழ்ந்தேன்..படகை விட்டு இறங்கி வருகையில்..
எப்படி இருந்தது விசு...?
சூப்பர் அக்கா.. இங்கே அழைத்து வந்ததற்கு நன்றி..
இந்த ஆறு எங்கே போகின்றது..
என்ற தேவை இல்லாத கேள்வியை நான் கேட்க்க .. அக்கா கொடுத்த பதில் என்னை பேய் அறைந்தது போல் மாற்றியது (பேய் அறைந்த கதையை கண்டிப்பாக இன்னொரு நாள் சொல்கிறேன்).
அக்கா சொன்ன இடத்தை என் வீட்டு அம்மணி கேட்கவில்லை என்ற நப்பாசையோடு... சரி வண்டிய வீட்டுக்கு விடுங்க என்றேன்..
அம்மணியோ..
ஏங்க.. அக்கா சொன்னத என்னாலே நம்பவே முடியல்ல....
அப்படி அக்கா எந்த இடத்தை தான் சொன்னார்கள்... நான் ஏன் பேய் அறைந்ததை போல் ஆனேன்.. அம்மணி ஏன் அவ்வளவு சந்தோசமானார்கள்.. அடுத்த பதிவில் பார்ப்போமே...
தொடரும்..
www.visuawesome.com
aacharyam...
பதிலளிநீக்குippadi ella pathivukalilum kadaisila etho oru twist vechu povathum nalla irukku sir:-)
thodarungal.
வியப்பான தொழிற்நுட்பம்....!
பதிலளிநீக்குஅடடா! என்ன வளர்ச்சி! சுவை மிகு நடை! விளக்கம்
பதிலளிநீக்குஅட! இப்படியெல்லாம் கூட இருக்கா! ஆச்சர்யம்!
பதிலளிநீக்கு