விசு, கொஞ்சம் நாளா உன்னிடம் ஒரு விஷயம் பேச வேண்டும்... ஆனால் பேச முடியில்லை!
வா, தண்டபாணி, கொஞ்ச நாளா பேசவேண்டும் என்று நினைத்தாய், ஆனால் பேச முடியவில்லை என்றால், அது ஒரு நல்ல விஷயமாய் இருக்காதே.. ஏதாவது பிரச்சனையா?
விசு, நீ கோவித்து கொள்ளாவிட்டால் உன்னிடம் ஒன்று கேட்க்க வேண்டும்.
அட பாவி, இப்பதான் பேச வேண்டும் என்றாய் அதற்குள் கேட்க்க வேண்டும் என்கின்றாயே, உனக்கு பேச வேண்டுமா அல்ல கேட்க்க வேண்டுமா?
அதுவா முக்கியம் விசு ?நான் உன்னிடம் கேட்க்கடும்மா? கோபித்து கொள்ள மாட்டாயே.
பாணி, நம் இருவருக்கும் பல வருடங்கள் பழக்கம், எதோ ஒரு விஷயத்த மனதில் வைத்து கொண்டு என்னிடம் கேட்க வேண்டும் என்று நினைத்த போதும், நான் கோவித்து கொள்வேன் என்று கேட்காமல் இருக்கின்றாயே, அதிலே நீ என்மேல் வைத்துள்ள நட்ப்பும் பாசமும் தெரிகின்றது. இந்த விஷயம் என்ன உயிர் போகும் விஷயமா? இதை கேட்டகாமல் விட்டு விடேன்.
இல்ல விசு, நீ என் நல்ல நண்பன் தானே கேட்டாலும் கோவித்து கொள்ளமாட்ட, அதனால் தான் கேட்கலாம் என்று நினைக்கின்றேன்.
தண்டபாணி, நீ சொல்வது தவறு, நான் கோவித்து கொள்ள மாட்டேன் என்று நினைத்து இருந்தால் நீ இந்த விஷயத்தை முதல் நாளே கேட்டு இருப்பாய். நீ என்னை கேட்க்காமல் இருந்ததில் இருந்தே நான் கோவித்து கொள்வேன் என்று உனக்கு தெரிந்து இருகின்றது. மறுபடியும், சொல்கிறேன், இது நம் இருவரின் நட்ப்பை பரிசோதிக்கும் என்றால் கேட்க்காமல் இருந்து விடேன்.
நானும் அப்படி தான் யோசித்தேன், இருந்தாலும் உன்னிடம் கேட்காததினால் தூக்கத்தை இழந்தேன்.
சரி, பாணி, உன் நிம்மதிக்காக கேள், நான் கோவித்து கொள்ள மாட்டேன் என்ற உத்தரவாதம் தருகின்றேன்.
நீ கோவித்து கொண்டால்?
அப்படி யோசித்தால் கேட்க்காதே.
உன்னிடம் கேட்ட்க்காமல் வீட்டிற்க்கு செல்ல முடியாதே?
ஒ, பிரச்சனை அப்படி போதா? உங்க வீட்டுக்காரம்மா சுந்தரி ஏதாவது சொன்னார்களா?
அப்படி ஒன்னும் குறிப்பா சொல்லவில்லை, ஆனால், ஒரு விஷயம் உன்னிடம் கேட்ட்க சொன்னார்கள்.
இந்த விஷயத்தில் என் வீட்டுக்காரம்மா இருக்காங்களா?
ச்சே ச்சே .. இல்ல விசு, இது நம்ப ரெண்டு பேருக்கும் உள்ள பிரச்சனை தான்.
நமக்குள்ள பிரச்சனையா.. என்ன பாணி பயமுறுத்துற ...?
பயப்படற அளவு ஒன்னும் இல்லை... ஆனாலும் உன் மனதை நோகடிக்க கூடாதுன்னு ...
கடல் தாண்டி வந்து வாழுகின்றோம், கை விரல் விட்டு எண்ணிவிடும் அளவுக்கு தான் உறவும் நட்ப்பும் , இந்த பிரச்சனையால நம்ம நட்ப்பு தடுமாறும் என்றால் அதை கேட்க்காமல் விட்டு விடு.
அப்ப சுந்தரிக்கு நான் என்ன சொல்வேன்?
சுந்தரியிடம் நான் பேசுகின்றேன், போன் போட்டு கொடு.
ரிங் ரிங்..ரிங்..
ஹலோ சுந்தரி, விசு பேசுறேன்...
அண்ணா, சொல்லுங்க அண்ணா, தண்டம் அங்க வந்தாரா?
இங்கே தான் இருக்கான், சரி...
அண்ணா, அது எனக்கு பிடிக்காவிட்டாலும், உங்களை கேட்க்க வேண்டாமென்று தான் நினைத்தேன்.. ஆனால் நீங்க கோவித்து கொள்ள கூடாது.
ஐயோ... அவன் இன்னும் ஒன்னுமே கேட்கவில்லை, நீயாவது விஷயத்த சொல்லு.
ஐயோ, அது ஒன்னும் உயிர் போற விஷயம் இல்ல அண்ணா, சும்மா சின்ன மேட்டர் தான் அண்ணா.
அப்ப கேளுங்க, என் தரப்பு விளக்கத்தை நான் முடிந்த வரை தரேன்.
ஐயோ, அண்ணே, விளக்கம் தர அளவுக்கு அது ஒரு விஷயமே இல்லை,
அவரிடம் போன கொடுங்க..
சொல்லு, சுந்தரி... ம் ... ம்...
நான் இன்னும் ஒண்ணுமே கேட்டகவில்லை ....
ம் ... ம். ம்...
வாத்தியார் கோவித்து கொண்டால்...
ம்... ம்ம்.... ம்...
நீ சொன்னதால தான் நான் இங்கே வந்தேன்...
ம்.. ம்... ம்... அட பாவி.. இந்த விசயத்தை ஏன் நீ எனக்கு இவ்வளவு தாமதமா சொல்லுற...?
ம் .. ம்ம்..
என்னாது, இப்பதான் தெரிய வந்ததா? நான் மட்டும் வாத்தியாரிடம் கேட்டு இருந்தால் அவர் மனது என்ன பாடு பட்டு இருக்கும்.
ம்.. ம்.. ம்..
அவரிடம் தரேன்,.. நீயே கேளு..
சொல்லு, சுந்தரி..
அண்ணே ரொம்ப சாரி அண்ணே..
எனக்கு ஏன் சுந்தரி சாரி,
ஒரு சின்ன விஷயத்தில் உங்கள ஒரு நிமிடம் தவறா நினைத்து விட்டேன், ப்ளீஸ் என்னை சாரி பண்ணி கொள்ளுங்கள்.
அய்யோ, என்ன விஷ்யம்னே தெரியல ... சாரி சொல்லுற ... நோ ப்ராப்ளம் சுந்தரி.. அப்புறம் சந்திக்கலாம்.
சரி பாணி, நீ கிளம்பு... சுந்தரி கொஞ்சம் பீலிங் ஆகா இருகின்றார்கள், நேர வீட்டிற்கு போய் அவங்கள கவனி.
சரி வாத்தியாரே, உன்னிடம் மனம் விட்டு பேசியது நிம்மதியா இருக்கு, நீயும் மனதில் ஒன்னும் வைச்சிக்காதே, நான் கிளம்புறேன்.
தண்டபாணி, கிளம்பிவிட்டான்.. மனதில் ஒரே உளைச்சல். என்னவா இருக்கும் .எந்த விஷயத்தில் இவங்க ரெண்டு பேரும் நான் தவறு பண்ணி இருப்பேன் என்று நினைத்து இருப்பார்கள். புரண்டு புரண்டு படுத்தேன், தூக்கம் வரவில்லை.
படுக்கையில் இருந்து எழுந்து நேரத்தை பார்த்தால், மணி 1:30. என்னவா தான் இருக்கும்.. என்னவா தான் இருக்கும்..என்னாவா தான் இருக்கும்.. சரி, மனதை திடபடுத்தி ... பாணியிடமே கேட்டு விடலாம்...
ரிங்.. ரிங்.. ரிங்...
என்ன வாத்தியாரே... கோழி கூவ 4 மணி நேரம் இருக்கு, அதுக்குள்ள நீ கூவுற..?
பாணி.. நீ கோவித்து கொள்ளாவிட்டால் உன்னிடம் ஒன்று கேட்க்க வேண்டும்.
வாத்தியாரே, நீ கேட்க்க போவதில் நான் கோவித்து கொள்வேன் என்ற எண்ணம் உனக்கு இருந்தால் அதை ஏன் கேட்க்க வேண்டும், வெளிநாட்டில் வந்து வாழுகின்றோம். விரல் விட்டு என்ன கூடிய அளவில் தான் உறவும் நடப்பும், அதில் ஒன்றை இழக்க வேண்டுமா? நான் ஏதாவது தவறு செய்து இருந்தால் பெருந்தன்மையா என்னை மன்னித்து கொள் என்று போனை கட் செய்தான்...
சிரித்து கொண்டே படுக்கைக்கு சென்றேன்...
பின் குறிப்பு ;
நண்பர்களே, சில நேரங்களில் " நீ கோவித்து கொள்ளமாட்டாய் என்றால் உன்னிடம் ஒன்று கேட்கவேண்டும்" என்று சொல்லும் போது இதை கேட்டால் மற்றவர் கோவித்து கொள்ள வாய்ப்பு உண்டு என்று அறிந்து தான் கேட்க்கின்றோம். அதை கேட்க்காமலேயே, தவிர்க்கலாமே... தண்டபாணியை போல்...
வா, தண்டபாணி, கொஞ்ச நாளா பேசவேண்டும் என்று நினைத்தாய், ஆனால் பேச முடியவில்லை என்றால், அது ஒரு நல்ல விஷயமாய் இருக்காதே.. ஏதாவது பிரச்சனையா?
விசு, நீ கோவித்து கொள்ளாவிட்டால் உன்னிடம் ஒன்று கேட்க்க வேண்டும்.
அட பாவி, இப்பதான் பேச வேண்டும் என்றாய் அதற்குள் கேட்க்க வேண்டும் என்கின்றாயே, உனக்கு பேச வேண்டுமா அல்ல கேட்க்க வேண்டுமா?
அதுவா முக்கியம் விசு ?நான் உன்னிடம் கேட்க்கடும்மா? கோபித்து கொள்ள மாட்டாயே.
Photo Courtesy : Google
இல்ல விசு, நீ என் நல்ல நண்பன் தானே கேட்டாலும் கோவித்து கொள்ளமாட்ட, அதனால் தான் கேட்கலாம் என்று நினைக்கின்றேன்.
தண்டபாணி, நீ சொல்வது தவறு, நான் கோவித்து கொள்ள மாட்டேன் என்று நினைத்து இருந்தால் நீ இந்த விஷயத்தை முதல் நாளே கேட்டு இருப்பாய். நீ என்னை கேட்க்காமல் இருந்ததில் இருந்தே நான் கோவித்து கொள்வேன் என்று உனக்கு தெரிந்து இருகின்றது. மறுபடியும், சொல்கிறேன், இது நம் இருவரின் நட்ப்பை பரிசோதிக்கும் என்றால் கேட்க்காமல் இருந்து விடேன்.
நானும் அப்படி தான் யோசித்தேன், இருந்தாலும் உன்னிடம் கேட்காததினால் தூக்கத்தை இழந்தேன்.
சரி, பாணி, உன் நிம்மதிக்காக கேள், நான் கோவித்து கொள்ள மாட்டேன் என்ற உத்தரவாதம் தருகின்றேன்.
நீ கோவித்து கொண்டால்?
அப்படி யோசித்தால் கேட்க்காதே.
உன்னிடம் கேட்ட்க்காமல் வீட்டிற்க்கு செல்ல முடியாதே?
ஒ, பிரச்சனை அப்படி போதா? உங்க வீட்டுக்காரம்மா சுந்தரி ஏதாவது சொன்னார்களா?
அப்படி ஒன்னும் குறிப்பா சொல்லவில்லை, ஆனால், ஒரு விஷயம் உன்னிடம் கேட்ட்க சொன்னார்கள்.
இந்த விஷயத்தில் என் வீட்டுக்காரம்மா இருக்காங்களா?
ச்சே ச்சே .. இல்ல விசு, இது நம்ப ரெண்டு பேருக்கும் உள்ள பிரச்சனை தான்.
நமக்குள்ள பிரச்சனையா.. என்ன பாணி பயமுறுத்துற ...?
பயப்படற அளவு ஒன்னும் இல்லை... ஆனாலும் உன் மனதை நோகடிக்க கூடாதுன்னு ...
கடல் தாண்டி வந்து வாழுகின்றோம், கை விரல் விட்டு எண்ணிவிடும் அளவுக்கு தான் உறவும் நட்ப்பும் , இந்த பிரச்சனையால நம்ம நட்ப்பு தடுமாறும் என்றால் அதை கேட்க்காமல் விட்டு விடு.
அப்ப சுந்தரிக்கு நான் என்ன சொல்வேன்?
சுந்தரியிடம் நான் பேசுகின்றேன், போன் போட்டு கொடு.
ரிங் ரிங்..ரிங்..
ஹலோ சுந்தரி, விசு பேசுறேன்...
அண்ணா, சொல்லுங்க அண்ணா, தண்டம் அங்க வந்தாரா?
இங்கே தான் இருக்கான், சரி...
அண்ணா, அது எனக்கு பிடிக்காவிட்டாலும், உங்களை கேட்க்க வேண்டாமென்று தான் நினைத்தேன்.. ஆனால் நீங்க கோவித்து கொள்ள கூடாது.
ஐயோ... அவன் இன்னும் ஒன்னுமே கேட்கவில்லை, நீயாவது விஷயத்த சொல்லு.
ஐயோ, அது ஒன்னும் உயிர் போற விஷயம் இல்ல அண்ணா, சும்மா சின்ன மேட்டர் தான் அண்ணா.
அப்ப கேளுங்க, என் தரப்பு விளக்கத்தை நான் முடிந்த வரை தரேன்.
ஐயோ, அண்ணே, விளக்கம் தர அளவுக்கு அது ஒரு விஷயமே இல்லை,
அவரிடம் போன கொடுங்க..
சொல்லு, சுந்தரி... ம் ... ம்...
நான் இன்னும் ஒண்ணுமே கேட்டகவில்லை ....
ம் ... ம். ம்...
வாத்தியார் கோவித்து கொண்டால்...
ம்... ம்ம்.... ம்...
நீ சொன்னதால தான் நான் இங்கே வந்தேன்...
ம்.. ம்... ம்... அட பாவி.. இந்த விசயத்தை ஏன் நீ எனக்கு இவ்வளவு தாமதமா சொல்லுற...?
ம் .. ம்ம்..
என்னாது, இப்பதான் தெரிய வந்ததா? நான் மட்டும் வாத்தியாரிடம் கேட்டு இருந்தால் அவர் மனது என்ன பாடு பட்டு இருக்கும்.
ம்.. ம்.. ம்..
அவரிடம் தரேன்,.. நீயே கேளு..
சொல்லு, சுந்தரி..
அண்ணே ரொம்ப சாரி அண்ணே..
எனக்கு ஏன் சுந்தரி சாரி,
ஒரு சின்ன விஷயத்தில் உங்கள ஒரு நிமிடம் தவறா நினைத்து விட்டேன், ப்ளீஸ் என்னை சாரி பண்ணி கொள்ளுங்கள்.
அய்யோ, என்ன விஷ்யம்னே தெரியல ... சாரி சொல்லுற ... நோ ப்ராப்ளம் சுந்தரி.. அப்புறம் சந்திக்கலாம்.
சரி பாணி, நீ கிளம்பு... சுந்தரி கொஞ்சம் பீலிங் ஆகா இருகின்றார்கள், நேர வீட்டிற்கு போய் அவங்கள கவனி.
சரி வாத்தியாரே, உன்னிடம் மனம் விட்டு பேசியது நிம்மதியா இருக்கு, நீயும் மனதில் ஒன்னும் வைச்சிக்காதே, நான் கிளம்புறேன்.
தண்டபாணி, கிளம்பிவிட்டான்.. மனதில் ஒரே உளைச்சல். என்னவா இருக்கும் .எந்த விஷயத்தில் இவங்க ரெண்டு பேரும் நான் தவறு பண்ணி இருப்பேன் என்று நினைத்து இருப்பார்கள். புரண்டு புரண்டு படுத்தேன், தூக்கம் வரவில்லை.
படுக்கையில் இருந்து எழுந்து நேரத்தை பார்த்தால், மணி 1:30. என்னவா தான் இருக்கும்.. என்னவா தான் இருக்கும்..என்னாவா தான் இருக்கும்.. சரி, மனதை திடபடுத்தி ... பாணியிடமே கேட்டு விடலாம்...
ரிங்.. ரிங்.. ரிங்...
என்ன வாத்தியாரே... கோழி கூவ 4 மணி நேரம் இருக்கு, அதுக்குள்ள நீ கூவுற..?
பாணி.. நீ கோவித்து கொள்ளாவிட்டால் உன்னிடம் ஒன்று கேட்க்க வேண்டும்.
வாத்தியாரே, நீ கேட்க்க போவதில் நான் கோவித்து கொள்வேன் என்ற எண்ணம் உனக்கு இருந்தால் அதை ஏன் கேட்க்க வேண்டும், வெளிநாட்டில் வந்து வாழுகின்றோம். விரல் விட்டு என்ன கூடிய அளவில் தான் உறவும் நடப்பும், அதில் ஒன்றை இழக்க வேண்டுமா? நான் ஏதாவது தவறு செய்து இருந்தால் பெருந்தன்மையா என்னை மன்னித்து கொள் என்று போனை கட் செய்தான்...
சிரித்து கொண்டே படுக்கைக்கு சென்றேன்...
பின் குறிப்பு ;
நண்பர்களே, சில நேரங்களில் " நீ கோவித்து கொள்ளமாட்டாய் என்றால் உன்னிடம் ஒன்று கேட்கவேண்டும்" என்று சொல்லும் போது இதை கேட்டால் மற்றவர் கோவித்து கொள்ள வாய்ப்பு உண்டு என்று அறிந்து தான் கேட்க்கின்றோம். அதை கேட்க்காமலேயே, தவிர்க்கலாமே... தண்டபாணியை போல்...
ராசாத்திகளின் பள்ளிகூட ஆரம்ப நாட்கள். புதிய பதிவு எழுத நேரம் இல்லை. ஆதலால் ஒரு மீள் பதிவு.
intha pathivu thaan avvappothu ninavukku vanthukkonde irukkum. ethavathu nanparkal idam kekkumpothu. milpathivaak vacithalum puthithaaka padippathu polathaan irukku. thodarungal sir.
பதிலளிநீக்குநல்ல விஷயம்தான்! ஒருவர் கோபத்தை தூண்டிவிடும் என்றால் அதை தவிர்த்துச் செல்லுதல் மிக நல்லதுதான்!
பதிலளிநீக்குவணக்கம் ஐயா! தங்கள் தளத்திற்கு புதியவன் இனி தொடர்ந்து வருகிறேன் நன்றி!!
பதிலளிநீக்குஅன்புடன் கருர்பூபகீதன் நன்றி!!
இந்தப் பதிவுக்கு தில்லைக்காட்டு க்ரானிக்ளில் வழியாக வந்தேன்.
பதிலளிநீக்குபதிவைப் படித்தபின் ஒன்று எழுதவேண்டும் என்று தோன்றுகிறது. இருந்தாலும் எழுதலாமா கூடாதா என்று என்னால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை.
எங்கே நீங்கள் கோபித்துக்கொண்டாலும் பரவாயில்ல்லை, இனிமே இந்த வலைப்பக்கமே வரக்கூடாது என்று முடிவு எடுத்து விடுவீர்களோ அதனால் வலை உலகம் ஒரு அரிய எழுத்தாளரை இழந்துவிடும் அபாயம் இருக்கிறதே என்றும் தொன்றுகிறது.
இருந்தாலும், மனதில் தோன்றியதை, உள்ளொன்று வைத்து அதை சொல்லாமல் செல்லுவது சரியா என்றும் இன்னொரு கோணத்தில் தோன்றுகிறது.
நகுதல் பொருட்டன்று நட்டல், மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தல் பொருட்டு
என்ற வள்ளுவர் வாசகம் கூட நினைவுக்கு வருகிறது.
இதை உங்களிடன் சொல்லலாமா கூடாதா என்று துலசிதரனிடமே கேட்டு விடலாம் என்றால் அவர் செல் நம்பரையும் உடனே கண்டு பிடிக்க இயலவில்லை.
உங்களுக்குத் தெரியாத ஒன்றை நான் கூறப்போவது இல்லை என்றாலும்
ஒரு வேளை உங்களுக்கு இதுபற்றி தோன்றாமலே இருந்திருந்தால், தெரிந்திருந்தும் சொல்லாமல் போனேனே என்ற மன உளைச்சலுக்கு ஆளாகிவிடுவேனோ என்ற நிலையம் என் உள்மனம் உணராமல் இல்லை.
ஆக சொல்லிவிடுகிறேன்.
அடடா. அபசகுனம் மாதிரி, சொல்வோம் என்றுசொல்ல யத்தனித்த தருணத்தில், செல் அடிக்கிறது.
செல் லில் யார் என்ன சொல்கிறார்கள் என்று கேட்டு விட்டு வருகிறேன்.
சுப்பு தாத்தா.
செல் போன் மணி அடித்தது நல்ல சகுனம் தான் ஐயா ! துளசிதரன் என்னை நான் தருகின்றேன். அறிய எழுத்தாளர் என்ற பெரிய வார்த்தைகள் எல்லாம் சொல்லி இறுதியில் ... என்ன தவறு செய்து இருப்போம் என்று என்னை மீண்டுமொரு முறை மேலே வந்த பதிவை போல்) சிந்திக்க வைத்தீர்கள்.
பதிலளிநீக்குஅடப்பாவீ....ஏற்கனவே படித்தது மாதிரி இருக்கிறதே என்று நினைத்தேன்... பழையதை கட் அண்ட் பேஸ்ட் பண்ணுவதற்குப் பதிலாக, சுறுசுறுப்பா புதியதே எழுதியிருக்கலாமே. You are capable.
பதிலளிநீக்குராசாதிக்களுக்கு பள்ளிகூட ஆரம்ப நாட்கள். தளிக்கு மேல் வேலை, அதனால் தான் " மீள் பதிவு" ஒன்றை இட்டேன். தங்கள் நம்பிக்கைக்கு நன்றி.
நீக்குவணக்கம், இதுபோல் பில்டப் பன்னி கடைசியில் கேட்டுவிடுவேன், இதனால் இழந்தது ஏராளம். நன்றி.
பதிலளிநீக்குசில விடயங்களை கேட்க்காமல் மனதிலே வைத்து கொள்வது தான் அனைவருக்கும் நலம்.
நீக்கு