ஒரு மீள் பதிவு ...
சென்ற வாரம் முழுவதும் இந்தியாவில் இருக்கையில் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் பல காண – கேட்க நேர்ந்தது. இவற்றில் பெரும்பாலானவை அதிக மகிழ்ச்சியை அளிக்கும் நிகழ்ச்சியாக இருந்தது. இருந்தாலும் சில நிகழ்ச்சிகள் மனதை சோகத்தில் ஆழ்த்தியது.
அவற்றில் ஒன்று.
பெங்களூர் நகரில் அதிகமான மக்கள் வசிக்கும் பகுதியில் ஒரு கோயில் வளாகத்தில் என்னுடைய சித்தி சித்தப்பா வசித்து வருகின்றார்கள். மிக பழமை வாய்ந்த புகழ் பெற்ற இந்த வளாகத்தில் நிறைய மரங்கள் இருக்கின்றன. பலவகையான இந்த மரங்களில் சந்தனம் மற்றும் செம்மரம் வகை மரங்களும் உண்டு.
இந்தியா சென்ற அடுத்த நாள், சித்தி குடும்பத்தை பார்க்க அவர்கள் இல்லத்திற்கு சென்று இருந்தேன். அவர்கள் இல்லத்தில் அமர்ந்து இருந்த போது சன்னல் வழியாக சூரிய ஒளி அதிக அளவில் உள்ளே வந்தது. சென்ற முறை இந்த வெளிச்சத்தை பார்க்காத நான் சித்தியிடம் ..
என்ன சித்தி…இவ்வளவு வெளிச்சமாக இருக்கின்றதே, சென்ற முறை இப்படி இல்லையே …
அந்த வயித்தெரிச்சலை ஏன் கேட்கின்றாய்? சன்னல் வழியாக கொஞ்சம் எட்டி பார் ?
எட்டி பார்த்த நான் பேய் அறைந்ததை போல் ஆனேன்.
என்ன சித்தி .. இங்கே இருந்த பெரிய சந்தன மரம் என்ன ஆயிற்று ?
பாழா போன சில பேர் இராவோடு இராவா வந்து வெட்டி எடுத்துன்னு போய் விட்டார்கள் .
என்ன சித்தி.. ஒரு பச்சை மரத்த இப்படி வெட்ட எப்படி மனசு வரும் ?
என்னத்த சொல்வேன் …?
வெட்ட பட்ட முதல் மரம்
சரி சித்தி … இங்கேயே இன்னும் ரெண்டு மரம் இருக்கே .. அதுக்கு என்ன ஆச்சி..நீயே போய் பாரு..
என்ன சித்தி .. பயமுறுத்துரிங்க… நீங்களும் வாங்க போய் பார்க்கலாம்..
சித்தியும் நானும் சேர்ந்து அந்த மரங்களை நோக்கி நடந்தோம்.
முதல் மரத்தை சுற்றி இரும்பினால் ஆன வேலி ஒன்று போட பட்டு இருந்தது.
என்ன சித்தி … இது ஒரு வயது பெண்ணை அவள் விருப்பம் இல்லாமல் சிறை செய்து வைத்து இருப்பதை போல் இருக்கே..
சிறையிட பட்ட மரம்
எப்படியாவது காப்பாதலாம்னு தான்..சரி, எதோ ஒன்னு.. இப்படியாவது இந்த மரத்தை கட்டி காத்தால் போதும்.
வாங்க அடுத்த மரத்தை போய் பார்க்கலாம் …
இருவரும் சேர்ந்து அடுத்த மரம் நோக்கி சென்றோம். அங்கே கண்ட காட்சி நெஞ்சை பதற வைத்தது.
இரண்டாவது மரத்தை போலவே இந்த மரத்திற்கும் 12 அடிக்கும் மேல் ஒரு இரும்பு வேலி போட்டு இருந்தது. ஆனால் இந்த கயவர்கள் அந்த இரும்பு வேலியின் இடையே உள்ள சிறிய இடைவெளி வழியாக இந்த மரத்தை முட்டியில் இருந்து நெற்றி வரை வெட்டிவிட்டார்கள்.
தன் உடலை இழந்த அந்த மரத்தின் உச்சமும் இலைகளும் அந்த வேலியின் மேலே காய்ந்து கிடந்தது மனதை உருக்கியது.
சித்ரவதை செய்ய பட்ட மரம்…
எங்கே தவறினோம்…
இந்த மரத்தை வெட்டிய கூலி தொழிலார்கள் ஒரு சில நூறு ரூபாய்களுக்காக இந்த காரியத்தை செய்து இருக்கின்றனர். இந்த மரத்தை வெட்டிய இவர்கள் இதை விற்று லட்சங்கள் சம்பாரித்து இருக்க முடியாது. இதை வெட்டி எடுத்து கொண்டு அதை ஊரில் நிறைய பண மற்றும் அரசியல் சக்தி கொண்ட ஒருவரிடம் கொடுத்தே இருக்க வேண்டும்.
இறைவனை வழிபடும் ஒரு கோயிலில் அதுவும் ஒரு பச்சை மரத்தை முட்டியில் இருந்து நெற்றி வரை வெட்ட இவர்களுக்கு எப்படி மனம் வந்தது. இவர்கள் இப்படி செய்ய முன் வந்தது ஒரு தனி மனித ஒழுக்க பிரச்சனை அல்ல. ஒரு சமுதாயமாக நாம் தவறிவிட்டோம்.
இந்த காட்சிகளை என் மனதில் இருந்து எடுக்க முடியவில்லை .
பின் குறிப்பு ;
ஏன் சித்தி.. இந்த ரெண்டாவது மரத்தை மட்டும் ஏன் வெட்டாமல் விட்டுவிட்டார்கள் .?
அந்த மரம் இன்னும் கொஞ்சம் வளரவேண்டுமாம் , அடுத்த முறை நீ வரும் போது கண்டிப்பாக இருக்காது.
எப்படியும் இந்த கயவர்கள் வந்து இந்த மரத்தை வெட்டுவார்கள் என்று தெரியும். இதை ஏன் நிர்வாகிகளே வெட்டி அதில் வரும் பணத்தை ஒரு நல்ல காரியத்திற்கு செலவு செய்யலாமே..
நம்ம வெட்ட வேண்டும் என்றால் அதற்கு காவல் துறை அதிகாரிகள் அனுமதி தரமாட்டார்கள்.
ஏன்.?
இந்த மரங்கள் நாட்டின் பொது சொத்து . இதை நாம் எல்லாரும் சேர்ந்து பாதுகாக்க வேண்டும் என்று நமக்கு ஒரு அறிவுரை கொடுத்து அனுப்பிவிடுவார்கள்.
www.visuawesome.com
Visu: Here in our state, if someone steps on your property you have the right to shoot them and KILL THEM! It is the law! We could have saved the sandalwood trees like that. இந்தியாவில் பிச்சைக்காரர்களை வளத்துவிடுறது, புறம்போக்கு நிலங்களில் குடியிருப்புகளை பாவம்னு வாழவிடுவது, வீடுபூந்து சந்தன மரம் வெட்டிப்போறவனை பொழச்சுப் போறான்னு உயிரோட விடுறது.. எங்களுக்குத்தான் ஈவு இரக்கம் எல்லாம் இருக்குனு சொல்லிக்கொண்டே நாசமாப்போயிட்டோம்! :(
பதிலளிநீக்குமரத்தை வெட்டும் போது யாருமே பார்க்கலையா? சத்தமே இல்லாமலா வெட்டி இருப்பாங்க?
பதிலளிநீக்குநல்ல கேள்வி தான். மரத்தை வெட்டும் முன்பு அங்கு இருந்த காவலாளியை அடித்து கட்டி போட்டு விட்டார்களாம். மற்றும் இந்த வளாகத்தில் இருப்பவர்கள் ஏறக்குறைய அனைவருமே 65 வயதினை தாண்டிய முதியோர்கள். இரவு நேரத்தில் வெளியே வரமாட்டார்கள்.
நீக்குகொடுமையாக இருக்கிறதே!
பதிலளிநீக்குசத்தம் கேட்டு வெளியே வந்தாலும் பிரச்னைதான் ஐயா. காவல் துறையை அழைப்பதுதான் உகந்தது.
பதிலளிநீக்குகாவல் துறையை அழைப்பது கொஞ்சம் danger! முதல் கேள்வி நம்மிடம் அவர்கள் கேட்பது, "யாருக்கும் இல்லாத அக்கறை உனக்கு ஏன்?"
பதிலளிநீக்குஅருமையான பகிர்வு
பதிலளிநீக்குபுதிய வலைப்பூவில் இணைய வாருங்கள்
இவ்வலைப்பூவில் நான் இதுவரை பேணிவந்த ஆறு வலைப்பூக்களை ஒன்றாக்கிப் பேணுகின்றேன்.
http://www.ypvnpubs.com/