வெள்ளி கிழமை மாலை வீடு வந்து சேர்ந்தவுடன்.. ராசாதிக்கள் இருவரும் ... மாலை உணவை பற்றி விசாரிக்க ... (அம்மணி வேளையில் இருந்ததால்) ..என்ன செய்ய சொல்கின்றீர்கள் என்று கேட்க்க ..அவர்கள் இருவரும்... ஒன்றாக சேர்ந்து ...
வாங்க டாடி வெளிய போய் "மெக்சிக்கன் டாக்கோஸ்" போய் சாப்பிடலாம்.
அதுக்கு ஏன் வெளியே போகவேண்டும். நாமே செய்யலாமே ..
என்னது ... நீங்க... டாக்கோஸ் .. டாடி.. இது என்ன இட்லி தோசையா ? மெக்சிக்கன்..
நான் பெத்த ராசாத்தி.. இட்லி தோசை செய்ய தெரிந்த ஒருவனுக்கு இந்த மெக்சிக்கன் டாக்கோஸ் ... ஜுஜுபி..
என்று சொல்லி விட்டு நேராக அருகில் உள்ள பலசரக்கு ... (சரக்கு என்றவுடனே டாஸ்மாக் என்று நினைத்து விடாதீர்கள் ) சென்று தேவையானவைகளை வாங்கினேன்.
இந்த டாக்கோஸ் பொதுவாக அசைவத்தை கொண்டு செய்யப்படும். இன்று " இறால் டாக்கோஸ்" செய்யலாம் என்று நினைத்து ..
ஒரு பாக்கட் இறால்
குடை மிளகாய்
கொத்தமல்லி
வாங்கி கொண்டு இல்லத்திற்கு திரும்பினேன். இந்த மூன்றை தவிர இதற்கு "வெங்காயம்- இஞ்சி - பூண்டு- பச்சை மிளகாய்- கடலை மாவு -மிளகு தூள் - தயிர் - எலுமிச்சை "தேவை படும். ஆனால் இந்த பொருள்கள் இல்லத்தில் உள்ளதால் அவற்றை வாங்காமல் வந்து சேர்ந்தேன்.
முதலில் கடலை மாவை தேவையான அளவிற்கு ஒரு சிறிய பாத்திரத்தில் போட்டு அதில் இரண்டு பெரிய கரண்டி தயிர் ஊத்தினேன். பின்னர் அதில் அரைத்த இஞ்சி - பூண்டு ஒரு டீ ஸ்பூன்- ஒரு சிட்டிக்கை மஞ்சள் - மிளகாய் -மிளகு- உப்பு) எல்லாவற்றையும் போட்டு கலவையாக (நம்மஊர் பஜ்ஜி பாணியில் ) சேர்த்து இறால் உள்ள பாத்திரத்தில் இந்த கலவையை சேர்த்தேன்.
(உடனே ..கலவையை அதில் ஊற்றுவதருக்கு பதில் இறாலை இதில் போட்டு இருக்கலாமே என்று "லொள்ளு" பண்ண கூடாது. எல்லாம் ஒரு முன்னெச்சரிக்கை தான்)
பிறகு கடாய் ஒன்றை அடுப்பில் ஏற்றி அதில் எண்ணையை ஊற்றி ஒன்றோடு ஒன்று ஒட்டாதவகையில் பொரிக்க ஆரம்பித்தேன். இது பொரித்து கொண்டு இருக்கையில் இன்னொரு அடுப்பில் இன்னொரு கடாய் வைத்து நெருப்பை குறைவாக வைத்து ..
இரண்டு பூண்டு மற்றும் ஒரு சிறு துண்டு இஞ்சியை மிகவும் சிறிய சிறிய துண்டாக வெட்டி அதை இரண்டாவதாக குறைந்த நெருப்பில் உள்ள கடையில் போட்டு வதக்க ஆரம்பித்தேன். அடுத்து சில நிமிடங்களில் இரண்டு வெங்காயத்தை நீள நீளமாகவும் மற்றும் அந்த குடை மிளகாயை அதே போல வெட்டி அதை அந்த இஞ்சி - பூண்டோடு சேர்த்து வதக்கினேன். அதை இறக்கும் முன் கொஞ்சம் எலுமிச்சை சாறு மற்றும் கொத்தமல்லி போட்டு இறக்கினேன்.
ஒரு பக்கம் இறால் பொரிக்க அடுத்த பக்கம் வெங்காயம் - மிளகாய் பொரிக்க .. அவகோடா (Avocado) என்று அழைக்கப்படும் ( இதை இந்தியாவில் "பட்டர் ப்ருட்" என்பார்கள் ) ஒன்றை ஆரஞ்சு சுளை வடிவில் வெட்டி அடுத்த பாத்திரத்தில் வைத்து கொண்டேன்.
பின்னர் பொறித்த இறால் மற்றும் வெங்காயத்தை தனி தனி தட்டில் போட்டு மேசையில் வைத்து விட்டு .. ரெடி மேட் சப்பாத்தியை சூடு செய்து மேசையில் வைக்கையில்..
வீட்டின் அழைப்பு மணி அடிக்கும் சத்தத்தை கேட்டு..
வாத்தியாரே.. என்ன சூப்பர் வாசனை..
வா, தண்டம்.. என்ன சொல்லிக்காமல் கொல்லிகாமல்..
இல்ல வாத்தியரே.. பிள்ளைகள் வெள்ளியும் அதுவுமா வெளிய போய் சாப்பிடலாமான்னு கேட்டாங்க, அதுவும் "மெக்சிக்கன்" தான் வேணுமாம்..
அதுதான் வாங்கினு போகலாம்னு வந்தேன். வழியில் உன்னையும் பார்த்துட்டு .. அது சரி என்ன.. உன்வீடு மெக்சிக்கன் வீடு மாதிரி வாசனை..?
பாணி .. உனக்கு ரொம்ப ராசி..தேவையான அளவு எடுத்துக்குனு, அந்த மெக்சிக்கன் கடையில் குடுக்க வேண்டிய டாலரை கொடுத்துட்டு போ.
சோக்கா சொன்ன.. ஆனா, சுந்தரி இன்றைக்கு சைவம் ..
அதுக்கு.. கவலையே இல்லை தண்டம்.. அஞ்சு நிமிஷம் கொடு ..
என்று சொல்லி அங்கே மீதி இருந்த கடலை மாவு கலவையில் வெங்காயத்தை வட்டமாக வெட்டி போட்டு சில வெங்காய பஜ்ஜி.. மேலும் இரண்டு பச்சை மிளகாயை போட்டு மிளகாய் பஜ்ஜி...
இந்த பாணி ... வைச்சிக்க நீ...
நன்றி வாத்தியாரே..
என்று கூறி பாணி விடை பெற.. அருமை ராசாத்தியோ..
டாடி.. அங்கே மெக்சிக்கன் கடையில் செய்யுற மாதிரியே இருக்கு.. எப்படி டாடி.. ?
மகள்.. நான் தான் சொன்னேனே, இட்லி தோசை செய்யுற ஆளுக்கு இடது ஜுஜுபி...
என்று மனதில்..
என்ன விசு.. ? இப்படி தாக்குறியே .. என்ன வந்தாலும் பிச்சி பிச்சி.. இடஞ்ச்சூட்டி பொருள் விளக்குறியே என்று என்னையே நான் மெச்சி கொண்டு அதற்கும் மேலே ஒரு படி போய்.. " Visu- Awesome Dad" என்று இருக்கையில் ... ராசாத்தி எனக்கும் ஒரு "டாக்கோஸ்" தயார் பண்ணி கொடுத்தாள்.
ஒன்னும் இல்ல, இது ரொம்ப சுலபமா செய்ய முடியும். கற்று கொண்டு அசத்துங்கள்.
பின் குறிப்பு :
அண்ணே .. சுந்தரி பேசுறேன்..
சொல்லு சுந்தரி.. தண்டம் வந்தாரா ?
வந்துட்டார் அண்ணே.. சாப்பாடிற்கு ரொம்ப நன்றி..
பரவாயில்லை...
அண்ணே ...இருந்தாலும் இவர் உங்களை ரொம்ப புரிஞ்சு வைச்சி இருக்கார்.
புரியல..
இல்ல, சாயங்காலம் உங்களை அந்த கடையில் மறைஞ்சி நின்னு பார்த்தோம். நீங்கள் வாங்கிய சாமான எல்லாத்தையும் கணக்கு போட்டு கூட்டி கழித்து பார்த்த இவர் ...
நீங்க கண்டிப்பா "பஜ்ஜி இல்லாட்டி டாக்கோஸ்" தான் செய்ய போறீங்கனு அடிச்சி சொன்னார்.
அப்படியா... அப்புறம்..?
நாங்க எல்லாரும் எங்களுக்கும் வேணும்னு அடம் பிடிக்க .. இவர் கவலையே படாதீங்க .. அரை மணி நேரத்தில் வரேன்னு சொல்லிட்டு உங்க வீட்டுக்கு வந்து வாங்கினு வந்தாரு.. ரொம்ப தேங்க்ஸ்.
www.visuawesome.com
வாங்க டாடி வெளிய போய் "மெக்சிக்கன் டாக்கோஸ்" போய் சாப்பிடலாம்.
அதுக்கு ஏன் வெளியே போகவேண்டும். நாமே செய்யலாமே ..
என்னது ... நீங்க... டாக்கோஸ் .. டாடி.. இது என்ன இட்லி தோசையா ? மெக்சிக்கன்..
நான் பெத்த ராசாத்தி.. இட்லி தோசை செய்ய தெரிந்த ஒருவனுக்கு இந்த மெக்சிக்கன் டாக்கோஸ் ... ஜுஜுபி..
இப்படி நாமே நமக்கு சொல்லிக்க வேண்டியது தான்..
இந்த டாக்கோஸ் பொதுவாக அசைவத்தை கொண்டு செய்யப்படும். இன்று " இறால் டாக்கோஸ்" செய்யலாம் என்று நினைத்து ..
ஒரு பாக்கட் இறால்
குடை மிளகாய்
கொத்தமல்லி
வாங்கி கொண்டு இல்லத்திற்கு திரும்பினேன். இந்த மூன்றை தவிர இதற்கு "வெங்காயம்- இஞ்சி - பூண்டு- பச்சை மிளகாய்- கடலை மாவு -மிளகு தூள் - தயிர் - எலுமிச்சை "தேவை படும். ஆனால் இந்த பொருள்கள் இல்லத்தில் உள்ளதால் அவற்றை வாங்காமல் வந்து சேர்ந்தேன்.
முதலில் கடலை மாவை தேவையான அளவிற்கு ஒரு சிறிய பாத்திரத்தில் போட்டு அதில் இரண்டு பெரிய கரண்டி தயிர் ஊத்தினேன். பின்னர் அதில் அரைத்த இஞ்சி - பூண்டு ஒரு டீ ஸ்பூன்- ஒரு சிட்டிக்கை மஞ்சள் - மிளகாய் -மிளகு- உப்பு) எல்லாவற்றையும் போட்டு கலவையாக (நம்மஊர் பஜ்ஜி பாணியில் ) சேர்த்து இறால் உள்ள பாத்திரத்தில் இந்த கலவையை சேர்த்தேன்.
(உடனே ..கலவையை அதில் ஊற்றுவதருக்கு பதில் இறாலை இதில் போட்டு இருக்கலாமே என்று "லொள்ளு" பண்ண கூடாது. எல்லாம் ஒரு முன்னெச்சரிக்கை தான்)
பிறகு கடாய் ஒன்றை அடுப்பில் ஏற்றி அதில் எண்ணையை ஊற்றி ஒன்றோடு ஒன்று ஒட்டாதவகையில் பொரிக்க ஆரம்பித்தேன். இது பொரித்து கொண்டு இருக்கையில் இன்னொரு அடுப்பில் இன்னொரு கடாய் வைத்து நெருப்பை குறைவாக வைத்து ..
ஒரு அடுப்பில் இறால் அடுத்த அடுப்பில் "வெங்காயம் மிளகாய்" வதக்கல்...
இரண்டு பூண்டு மற்றும் ஒரு சிறு துண்டு இஞ்சியை மிகவும் சிறிய சிறிய துண்டாக வெட்டி அதை இரண்டாவதாக குறைந்த நெருப்பில் உள்ள கடையில் போட்டு வதக்க ஆரம்பித்தேன். அடுத்து சில நிமிடங்களில் இரண்டு வெங்காயத்தை நீள நீளமாகவும் மற்றும் அந்த குடை மிளகாயை அதே போல வெட்டி அதை அந்த இஞ்சி - பூண்டோடு சேர்த்து வதக்கினேன். அதை இறக்கும் முன் கொஞ்சம் எலுமிச்சை சாறு மற்றும் கொத்தமல்லி போட்டு இறக்கினேன்.
இறாலின் பதம் மிகவும் முக்கியம்
ஒரு பக்கம் இறால் பொரிக்க அடுத்த பக்கம் வெங்காயம் - மிளகாய் பொரிக்க .. அவகோடா (Avocado) என்று அழைக்கப்படும் ( இதை இந்தியாவில் "பட்டர் ப்ருட்" என்பார்கள் ) ஒன்றை ஆரஞ்சு சுளை வடிவில் வெட்டி அடுத்த பாத்திரத்தில் வைத்து கொண்டேன்.
வீட்டின் அழைப்பு மணி அடிக்கும் சத்தத்தை கேட்டு..
வாத்தியாரே.. என்ன சூப்பர் வாசனை..
வா, தண்டம்.. என்ன சொல்லிக்காமல் கொல்லிகாமல்..
இல்ல வாத்தியரே.. பிள்ளைகள் வெள்ளியும் அதுவுமா வெளிய போய் சாப்பிடலாமான்னு கேட்டாங்க, அதுவும் "மெக்சிக்கன்" தான் வேணுமாம்..
அதுதான் வாங்கினு போகலாம்னு வந்தேன். வழியில் உன்னையும் பார்த்துட்டு .. அது சரி என்ன.. உன்வீடு மெக்சிக்கன் வீடு மாதிரி வாசனை..?
பாணி .. உனக்கு ரொம்ப ராசி..தேவையான அளவு எடுத்துக்குனு, அந்த மெக்சிக்கன் கடையில் குடுக்க வேண்டிய டாலரை கொடுத்துட்டு போ.
சோக்கா சொன்ன.. ஆனா, சுந்தரி இன்றைக்கு சைவம் ..
அதுக்கு.. கவலையே இல்லை தண்டம்.. அஞ்சு நிமிஷம் கொடு ..
என்று சொல்லி அங்கே மீதி இருந்த கடலை மாவு கலவையில் வெங்காயத்தை வட்டமாக வெட்டி போட்டு சில வெங்காய பஜ்ஜி.. மேலும் இரண்டு பச்சை மிளகாயை போட்டு மிளகாய் பஜ்ஜி...
மீதி மாவில் சைவ ப்ரியர்களுக்கான வெங்காயம் மற்றும் மிளகாய் பஜ்ஜி..
இந்த பாணி ... வைச்சிக்க நீ...
நன்றி வாத்தியாரே..
என்று கூறி பாணி விடை பெற.. அருமை ராசாத்தியோ..
டாடி.. அங்கே மெக்சிக்கன் கடையில் செய்யுற மாதிரியே இருக்கு.. எப்படி டாடி.. ?
மகள்.. நான் தான் சொன்னேனே, இட்லி தோசை செய்யுற ஆளுக்கு இடது ஜுஜுபி...
என்று மனதில்..
என்ன விசு.. ? இப்படி தாக்குறியே .. என்ன வந்தாலும் பிச்சி பிச்சி.. இடஞ்ச்சூட்டி பொருள் விளக்குறியே என்று என்னையே நான் மெச்சி கொண்டு அதற்கும் மேலே ஒரு படி போய்.. " Visu- Awesome Dad" என்று இருக்கையில் ... ராசாத்தி எனக்கும் ஒரு "டாக்கோஸ்" தயார் பண்ணி கொடுத்தாள்.
இறால் டாக்கோஸ் தாயார் ..
அது சரி.. சமையல் குறிப்பு தானே இதுக்கு ஏன் இந்த தலைப்பு .."ஆண்களுக்கு மட்டும் .. ஒரு மெக்சிக்கன் ரகசியம்..."
ஒன்னும் இல்ல, இது ரொம்ப சுலபமா செய்ய முடியும். கற்று கொண்டு அசத்துங்கள்.
பின் குறிப்பு :
அண்ணே .. சுந்தரி பேசுறேன்..
சொல்லு சுந்தரி.. தண்டம் வந்தாரா ?
வந்துட்டார் அண்ணே.. சாப்பாடிற்கு ரொம்ப நன்றி..
பரவாயில்லை...
அண்ணே ...இருந்தாலும் இவர் உங்களை ரொம்ப புரிஞ்சு வைச்சி இருக்கார்.
புரியல..
இல்ல, சாயங்காலம் உங்களை அந்த கடையில் மறைஞ்சி நின்னு பார்த்தோம். நீங்கள் வாங்கிய சாமான எல்லாத்தையும் கணக்கு போட்டு கூட்டி கழித்து பார்த்த இவர் ...
நீங்க கண்டிப்பா "பஜ்ஜி இல்லாட்டி டாக்கோஸ்" தான் செய்ய போறீங்கனு அடிச்சி சொன்னார்.
அப்படியா... அப்புறம்..?
நாங்க எல்லாரும் எங்களுக்கும் வேணும்னு அடம் பிடிக்க .. இவர் கவலையே படாதீங்க .. அரை மணி நேரத்தில் வரேன்னு சொல்லிட்டு உங்க வீட்டுக்கு வந்து வாங்கினு வந்தாரு.. ரொம்ப தேங்க்ஸ்.
www.visuawesome.com
இடஞ்ச்சூட்டி பொருள் விளக்கம் இப்படித்தானா?,,,,,
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்.
வாங்க டீச்சர்... எப்படி இருக்கீங்க ? ஏதோ நம்மால் முடிந்தது ,,,
நீக்குஇதுதான் மெக்சிக்கன் ரகசியமா?
பதிலளிநீக்குஅருமையான ரகசியம்... அட்டகாசமான ரகசியம்... வருகைக்கு நன்றி ஐயா.,,
நீக்குஹஹஹஹ தண்டம்! தண்டம் டாக்கோசுக்கும் வந்துட்டாரா....நல்ல குடும்பம் தண்டம்! ஹஹஹ்
பதிலளிநீக்குஇதை நான் காலிஃப்ளவரில் செய்வதுண்டு....டாக்கௌஸ் கிட்டத்தட்ட ட்ரை மஞ்சுரியன் போலதான்...மாவும் வேற சாஸ் இல்லாமல்....
A friend indeed is a friend in need (pun intended) என்ற கூற்றை வாழ்ந்து கட்டுபவர் அல்லவா என் நண்பன் தண்டபாணி,,,
நீக்குஆகா
பதிலளிநீக்குகொடுத்து வைத்த நண்பர்
தம =1
நானும் கொடுத்து வைத்தவன் தான் கரந்தை அவர்களே. ஒரு சமையல் காரனின் வெற்றியே அதை பரிமாறி அனுப்புவது தான்.
நீக்குசமையல் குறிப்பைக் கூட இப்படி வித்தியாசமாக எழுத முடியும் என்று எழுதி அசத்திவிட்டீர்கள்! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி தளிர் அவர்களே... ஒரு சமையல் குறிப்பு தான்... அதை நட்போடு சேர்த்து அளித்தேன்.. அம்புட்டுதேன்...
நீக்கு'தண்டம்" ... நல்ல பேரு!
பதிலளிநீக்குஆஹா சமையலும் பிரமாதமாய்ச் செய்கிறீர்களே ..அருமை சகோ
பதிலளிநீக்குதண்டம் சூப்பர் நண்பர் :)
u have wonderful friend.. :)
பதிலளிநீக்கு