செவ்வாய், 11 ஆகஸ்ட், 2015

கைக்கு எட்டியது .....? (மாமாவுக்கு குடுமாவின் தொடர்ச்சி..)

 ஆரம்பத்தில் இருந்து படிக்க இங்கே சொடுக்குங்கள் ...


மாமாவுக்கு குடுமா ... குடுமா...


காதை கடித்த ராஜு மாமா அப்படி என்ன சொன்னார் என்பது இருக்கட்டும், அதை கேட்ட நானோ பயந்து போய்

ஆனால் இந்த விஷயம் வீட்டிலே மாமிக்கு தெரிய வந்தா...?

டேய்..நீயே பயத்துள்ள போட்டு கொடுத்துடுவ போல இருக்கே.. இது வீட்டுக்கு வீடு நடக்கிற காரியம் தான்.  நீ இருட்டறதுக்கு முன் சீக்கிரம் போய் நான் சொன்ன வேலைய முடிச்சின்னு வா.

மாமா..


போ.. விசு... நான் இருக்கேன்... ஒன்னும் ஆகாது...

சரி .. விலாசம் குடுங்க...

ஆமா .. எழுதிக்கோ..

மாமா ... சீக்கிரமா எப்படி போறது ?

இந்த உலகத்தில் என்னனமோ கண்டுபிடிக்கிறாங்க... இந்த விலாசத்த சொன்னா அங்கே சீக்கிரம் கூட்டின்னு போற மாதிரி எதுவும் கண்டுபிடிக்க  மாட்டறாங்களே..

இங்கே இருந்து..

 என்று சொல்லி அந்த தெரு வந்தவுடன் அங்கே யாரையாவது கேள் .. அவங்க சரியா சொல்லுவாங்க...

சரி மாமா என்று சொல்லி விட்டு வண்டியை விட்டேன் ..

20 நிமிடம் கழித்த பின் அந்த தெருவை அடைய ... வண்டியை நிறுத்தி விட்டு, அருகில் இருந்தவரிடம்..

சார் .. இங்க மீன் மார்க்கட் எங்கே இருக்கு?

வலது பக்கம் 6 வது கட்டிடம்..

தேங்க்ஸ்...

அங்கே சென்று .. விற்று கொண்டு இருந்த மீன் வகையார்க்களில் வெவ்வேறு மீனாக பார்த்து வாங்கி கொண்டு மீண்டும் கல்யாணம் மாமா வீட்டிற்கு வண்டியை விட்டேன் ..

வீட்டை அடைந்தவுடன் ஏற குறைய அனைத்து மாமாக்களும் எனக்காக காத்து கொண்டு இருந்தனர்..

என்ன விசு.. 7 மணி போல் ஆகபோகுது.. ரொம்ப லேட் பண்ணிட்ட..சரி..  எல்லா மீனையும் அந்த பாத்திரத்தில் கொட்டு..

மாமா.. ஆறு விதமான மீன்கள்.. எல்லாம் மிக்ஸ் ஆகிவிடும்..

நீ கொஞ்சம் சும்மா இரு.

எல்லா மீனையும் ஒன்றாக போட்டு கலக்கி ஆளுக்கு ஒரு பை விகிதம் நிரப்பி கொண்டு இருக்கையில்.. ஒரு மாமா மட்டும் ஒரு தூண்டில் கொக்கியை ஒரு மீனின் வாயில் கஷ்டப்பட்டு நுழைத்து கொண்டு இருந்தார் .

என்ன மாமா பண்றீங்க?

என் வீட்டு அம்மணி கொஞ்சம் கறார்.. அதனால் தான். அவங்க சுத்தம் பண்ணும் போது ..

ஏங்க..ஒரு  மீன் வாயில் கொக்கி உள்ளதுன்னு சொல்லுவாங்க... அப்பா நான் பெருமையா அதை எடுப்பேன்..

அது சரி.. அதை ஏன் மிக்ஸ் பண்ணிங்க.. ஆளுக்கொரு வகையான மீனா எடுத்துன்னே போக வேண்டியது தானே..

டேய்..   நீ உண்மையாவே விஷயம் தெரியாத ஆளா இருக்கியே..கடலில் போய் தூண்டில் போட்டு எவனாவது ஒரே வகையான மீனா பிடிக்க முடியுமா? அதனால் தான்.. விதவிதமான மீன் .. வித வித மான சைஸ்  ஸில்..

மனதில் .. அட பாவிங்களே.. எப்படி இப்படி எல்லாம் யோசிக்க முடியுது.

விசு .. அடுத்த முறை கடைக்கு போகும் போது முடிஞ்சா ரெண்டு மூணு மீன்  உயிரோடு வாங்கு.. அது இன்னும் ரொம்ப "நட்சுரளா" இருக்கும்..

சரி மாமா..

அனைவரும் அங்கு இருந்து கிளம்பி.. வீட்டிற்கு  வர..

அத்தை.. கதவின் அருகில் இருந்தார்கள்..

என்ன இவ்வளவு நேரம் ?

எவ்வளவு நேரமா இருந்தா என்ன ? எவ்வளவு மீன் கிடைச்சு இருக்கு பார்.?

அடே.. பரவாயிலிங்க.. சூப்பர்.. சொன்ன மாதிரியே .. எவ்வளவு மீன்.. இன்றைக்கு கொழம்பு வறுவல் ரெண்டுமே மீன் தான்...

சமையல் வாசனை மூக்கை துளைக்கையில் ..

மாமா இருந்தாலும் .. அத்தையை இப்படி ஏமாத்த கூடாது..

இதை நீ ஏன் ஏமாத்துறதா சொல்ற.. அது எல்லாம் பெரிய பெரிய வார்த்தை..

இது சும்மா "டைம் பாஸ்சுக்கு" தான், நம்ம யாருக்கும் எந்த தப்பும் செய்யலையே..

பேசி கொண்டே இருக்கையில்..

ஏங்க.. இவ்வளவு மீன்.. நம்ம பக்க தெரு டாக்டர் குடும்ப்பதையும் இரவு சாப்பாட்டிற்கு கூப்பிட்டேன்..

அதுக்கு என்ன பரவாயில்லை..

அடுத்த மணி நேரத்தில் மேசையில் அனைவரும் அமர... உணவு பரிமாறும் நேரத்தில் டாக்டர் தம் மனைவியோடு அமர்ந்தார்..

என்ன சமையல் என்று வந்த அம்மணி கேட்க்க..அதை.. மீன் குழம்பு மீன் வறுவல்..

ஐயோ அது எங்களுக்கு வேண்டாம் ..வெறும் சாம்பார் - ஊறுகாய் இருந்தா கொடு ...

என்ன .. நீங்க புருஷன் பொண்டாட்டி மீனை விரும்பி சாப்பிடுவிங்களே ..என்ன ஆச்சி..?

ஒன்னும் இல்ல .. இங்கே இருக்க மீன் மார்க்கெட்டில் எதோ "கெமிகல்" கலந்துடிச்சாம் , அதை யாரும் வாங்கி சாப்பிட வேண்டாம்னு   தொலை காட்சியல் சொன்னத நீ கேக்கலையா ?

நானும் கேட்டேன்.. ஆனால், இதை நாங்க மார்க்கெட்டில் வாங்கல .. நேரா கடற்கரையில் இருந்து பிடிச்சினு வந்தாங்க ..

என்று சொல்லி அவர்கள் பரிமாற அனைவரும் உண்ண ஆரம்பிக்க .. நானும் ராஜு மாமாவும் மட்டும் பேய் அறைந்த மாதிரி முழித்தோம்..

பின் குறிப்பு :

அடுத்த நாள்....

என்ன மாமா.. அவங்க யாருக்கும் உடம்புக்கு ஒன்னும் ஆகலையே..

உன்ன மாதிரி முட்டாள்கள் இருக்கிறவரை யாருக்கும் உடம்புக்கு ஒன்னும் ஆகாது,

மாமா..!?

டேய்.. உன்னை மீன் வாங்கி வர சொன்னா .. அதனுடைய ரசீதையுமா  சேர்த்து கொடுப்ப ? அந்த மீன் பையில் இருந்த ரசீதை உங்க அத்தை பார்த்துட்டு .. உடனே டாக்டர் வீட்டுக்கு போனை போட்டு, ரெண்டு அம்மணியும் சேர்ந்து ஒரு நாடகம் போட  ... எல்லாம் நாசமா போச்சி..

அய்யோ மாமா.. மல்லிப்பூ போல இட்லி.. அதுக்கு அவங்க மீன் குழம்பை ஊத்தும் போது ..  வேண்டாம், நான் சனியும் அதுவுமா மீன் சாப்பிட மாட்டேன்னு  சொல்லிட்டேனே.. ஐயோ.. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டலியே...

சரி அதை விடு.. அடுத்த சனி என்ன பிளான்..?

என்னத்த பிளான்.. கழுத கெட்டா குட்டி சுவர்... ஏன்..

நீ ஒன்னு பண்ணு, வெள்ளி இரவும் அதுவுமா.. அத்தைக்கு ஒரு போனை போட்டு .. ஒரு சின்ன பிரச்சனை .. அவசரமா மாமாவை அனுப்பி வைக்க முடியுமான்னு கேளு..

மாமா...?

டேய்.. நான் சொன்ன மாதிரி செய்.. "யு வோன்ட் ரிக்ரெட்..."

இத்தொடர்  இத்தோடு  முடிந்தது...

www.visuawesome.com

8 கருத்துகள்:

  1. என்னத்த சொல்றது தனபாலன் ...

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்,
    கடைசியில் மீன் குழம்பு சாப்பிடலையா?
    நன்றி,

    பதிலளிநீக்கு
  3. சிரிப்புத்தான்! மீன் சாப்பிட இனி ஜோசிக்க வேண்டும்[[[[

    பதிலளிநீக்கு
  4. ஹஹஹ் செம நாடகம்....மாட்டிக்கிட்டாங்க போல..நோ ரிக்ரெட்ஸ்...

    நண்பரே சூப்பர் படம்...ஃபோட்டோ ஷாப்? ரொம்பநல்லாருக்க்கு...அந்தக் கார்ட்டூனை எடுத்து கிமிக்ஸ் செஞ்சுருக்கீங்க போலருக்கு...அருமை...

    பதிலளிநீக்கு
  5. ஹ்ம்ம் இப்டியெல்லாம் ஏமாத்தக் கூடாது :))

    பதிலளிநீக்கு
  6. ஆஹா நினைச்ச படிதான்
    ஆகிடுச்சு
    மிகவும் இரசித்த பதிவுகள்
    பழைய பதிவுகள் அனைத்தையும்
    படிக்கும் ஆவலைத் தூண்டுது
    அவசியம் படித்து விடுவேன்
    வாழ்த்துக்களுடன்

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...