இந்த ஆறு எங்கே போகின்றது என்று கேட்டதற்கு என் அக்கா சொல்லிய பதில் என்னை பேய் அறைந்தவான் (பேய் அறைந்த கதையை கூடிய சீக்கிரம் சொல்லுகிறேன், பொறுமை ப்ளீஸ்) போல் ஆகியதும் என் வீட்டு அம்மணியை சந்தோசமாகியதையும் சென்ற பதிவில் படித்தோம் அல்லவா ..
அக்கா .. இந்த ஆறு எங்கேசென்று கொண்டு இருகின்றது ..?
போலந்து...
அக்கா, மெதுவா சொல்லுங்க.. அம்மணிக்கு கேட்டுட போது..
ஏங்க அக்கா இந்த ஆறு போலந்து போதுன்னா சொன்னாங்க...
சீ.. சீ .... சந்து பொந்துன்னு சொன்னாங்க...
சும்மா இருங்க... அக்கா.. இது போலந்தா போகுது..?
ஆமா..?
அக்கா .. போலந்து இங்கு இருந்து எவ்வளவு தூரம்..?
கிட்ட தான்...
அங்கே போக முடியுமா...?
இந்த கேள்வியை அம்மணி கேட்பார்கள் என்று தான் அக்கா போலந்த் என்றவுடன் நான் பேய் அறைந்தவன் போல் ஆனேன். ஏற்கனவே கடந்த 10 நாட்களில் நிறைய பட்டிணங்கள் பார்த்து விட்டாகிவிட்டது. கண் போன போக்கிலே கால்கள் போய் போய்... இன்னும் நடக்க முடியுமா என்ற கேள்வி குறியே வந்து விட்டது ... இந்த நேரத்தில் அம்மணி போலந்து போகவேண்டும் என்றும் அடம் பிடிப்பார்கள் .
கண்டிப்பாக போகலாம்..ஆமா.. உனக்கு ஏன் போலந்த் நாட்டின் மேல் இவ்வளவு பிரியம்..?
அங்கே வாங்க சொல்றேன்.
நானோ.. கடைசியாக ஒரு முறை..
அங்கே போக பாஸ்போர்ட் எல்லாம் தேவை படும்.. இது சும்மா நம் நேரத்தை வீணாக்க போகுது. வீட்டிற்கு போகலாம்.
இந்த மாதிரி ஏதாவது நடக்கும் என்று தான் நான் பாஸ்போர்டை கையில் எடுத்து வந்துள்ளேன்.
அரை மணி நேரத்தில் போலந்து நாட்டு எல்லை வந்தது . அங்கே இருந்த அதிகாரிகள் சில வாகனங்களை மட்டும் நிறுத்தி வைத்து மற்றவர்களை நேராக செல்லுமாறு கை அசைத்தார்கள்.
என்னுடைய அம்மணிக்கு தான் நல்ல ராசியாயிற்றே ..(அவங்க வீட்டுகார் நான்.. இதுலே இருந்த தெரியல.. அவங்க ராசி).. எங்களை நேராக செல்லுங்கள் என்று அனுப்பிவிட.. என் அருமை அக்காவோ...
சரி போலந்து வந்தாச்சி.. இப்ப எங்கே போறோம் ?
அம்மணி பேசும் முன் நானே பேசினேன்..
ஏதாவது ஒரு உணவகம் முன் நிறுத்துங்கள்...
நம்ம நேரா வீட்டில் போய் சாப்பிடலாம்.
அக்கா.. என் வீட்டுக்கார அம்மாவும் ராசாதிக்களும் போலந்து வந்ததே இங்கே உள்ள "பரோகி" என்ற உணவை சாப்பிடதான். அத மட்டும் வாங்கி கொடுத்துவிட்டால் .. வண்டியை உடனே திருப்பி விடலாம்.
அது என்ன "பரோகி..."
அது பரோகி இல்ல அக்கா.. "துரோகி.."
புரியல ...
அதை வாங்கி வாங்க .. சொல்றேன்..
அருகில் இருந்த உணவகத்தில் நிறுத்த ... அனைவரும் சென்று "பரோகி" வாங்கினோம்.
"பரோகி" போலந்து நாட்டின் ஒர் முக்கிய உணவு. நம் நாட்டின் சப்பாத்தி போல காலை, மதியம் இரவு என்று எந்த நேரத்திலும் உண்பார்கள். அது சரி இதை நான் ஏன் "துரோகி"என்கிறேன்..
பல வருடங்களுக்கு முன் போலந்தில் இருந்து தமிழ் நாட்டிற்க்கு வந்த "துரோகி" ஒருவன் நம் ஊரில் செய்ய படும் "கொழுக்கட்டை" என்ற உணவை ... ரசித்து புசித்து "பரோகி" என்று பெயரை வைத்து பணம் சம்பாரிக்க ஆரம்பித்து விட்டான்.
நம்ம ஊரில் இந்த கொழுகட்டையில் சில பருப்பு வகைகளை வேக வைத்து வெல்லம் போன்ற இனிப்பையும் சேர்த்து சாப்பிடுவோம். ஆனால் இங்கே இதில் இவர்கள் .. கீரை.. காளான் மற்றும் இறைச்சி போன்றவற்றை வைத்து செய்கின்றார்கள்.
அது சரி.. இது எப்படி என் வீட்டு அம்மணிக்கு தெரியும்?
சில மாதங்களுக்கு முன் "லாஸ் வேகஸ்" நகரில் வாழும் நண்பர் ஒருவர் வீட்டிற்கு சென்றபோது...
காலை உணவு என்ன சாப்பிடுகின்றீர்கள்...?
எதுவா இருந்தாலும் பரவாயில்லை...
கொழுக்கட்டை சாப்பிடலாமா..?
கொழுகட்டையா.. அது செய்வது ரொம்ப வேலை .. வேறு ஏதாவது..
எங்க ஊரில் கொழுக்கட்டை ஈசி..அஞ்சி நிமிஷம் கொடுங்க ..
என்று சொல்லி இந்த போலந்த் நாட்டு கொழுகட்டையை வகையறா விதமாக மேசையில் வைத்தார்..
என் வீட்டு அம்மணியோ..
அண்ணே.. இவ்வளவு நல்லா இருக்கு.. ஆனால் வித்தியாசமா இனிப்புக்கு பதிலா காரம் .. எங்கே கற்று கொண்டீர்கள்...?
ஐயோ.. இது நம்ம ஊர் கொழுக்கட்டை அல்ல.இது பெயர் பரோகி..நான் போலந்த் நாட்டில் படிக்கும் போது அங்கே இருந்த உணவு. இங்கே கடையில் கிடைக்கும். இதை இட்லி போல் அவிக்கலாம்.. அல்ல வடை போல் பொரிக்கலாம்.
ரொம்ப நன்றி அண்ணே..
அன்று அதை சாப்பிட்டதில் இருந்தே அம்மணியும் சரி.. கண்மணிகளும் சரி... பரோகி .. பரோகி என்று அலைய ஆரம்பித்தனர்...
இப்போது இன்றைக்கு வருவோம்...
அங்கே இருந்த உணவகத்தில் பரோகி ஆர்டர் செய்து விட்டு அனைவரும் உள்ளே நிற்க.. அடியேன் வெளியே வந்து இந்நாட்டை நோட்டமிட்டேன்...
ஜெர்மனி போல் ஒரு பணக்கார கலை இல்லாவிடிலும் ஒரு முன்னேறிய நாடு போல் தான் தெரிந்தது.மிகவும் பழமைவாய்ந்த உயரமாக எழுப்பபட்ட கட்டிடங்கள் பல வானை நோக்கி இருந்தன ..
பரோகி தயார் .. என்ற சத்தம் வர.. அது கூடவே மழையும் வந்தது .
அனைத்தையும் எடுத்து கொண்டு வண்டி நோக்கி நாங்கள் ஓட ..சிறிது நேரத்தில் வண்டி பெர்லினை நோக்கி ஓடியது..
மனமோ.. இந்த போலந்து இரண்டாம் உலக போரில் எவ்வளவு இன்னல்களை அனுபவித்து உள்ளது. அவ்வளவு கஷ்ட பட்டும் .. இவ்வளவு ஒழுக்கம்... ஒரு பெருமூச்சு விட்டேன்..
என்னங்க .. பெரு மூச்சு..
ஒன்னும் இல்ல.. வீட்டை விட்டு கிளம்பி ரெண்டு வாரம் ஆச்சி.. அதுதான்..
இன்னும் 4 நாள் தான்.. லண்டன் போய் அங்கே சில இடங்களை பார்த்து விட்டு .. கிளம்ப வேண்டியது தான்..
ஐயகோ.. லண்டனா.. அங்கே தான் அம்மணிக்கு அதிக உறவினர்கள் ..தோழர்கள் .. எவ்வளவு நடக்க விட போறாங்களோன்னு .. நினைத்து கொண்டே ... துரோகியை கடிக்க ஆரம்பித்தேன்..
தொடரும்..

போலந்து நாட்டில் ஸ்டேட்டின் என்னும் நகரத்தை நோக்கி..

" துரோகி" என்ற "பரோகி"

பழமை வாய்ந்த கட்டிடங்கள் ..
என்னை பொறுத்தவரை .. எந்த ஒரு நாட்டிற்கு சென்றாலும் .. அங்கே உள்ள சாலைக்கு சென்று அங்கே உள்ள போக்கு வரத்தை பார்த்து அந்த தனி மனித ஒழுக்கத்தை நோட்டமிடுவேன். அதுமட்டும் இல்லாமல் பொதுமக்களுக்கான போக்குவரத்து பேருந்து மற்றும் ரயில் மிகவும் நவீனமாக்க பட்டு இருந்தது.
நவீனமயமான போக்குவரத்து முறைகள் ...
இங்கே இருந்த போக்கு வாரத்தில் நிறைய ஒழுக்கம் தெரிந்தது. ஒ.. இது ஒரு சீரான நாடு தான் என்று ஒரு முடிவு செய்து முடிக்கையில்..
சீரான (ஒழி பெருக்கி சத்தம் இல்லாத) போக்கு வரத்து
பரோகி தயார் .. என்ற சத்தம் வர.. அது கூடவே மழையும் வந்தது .
அனைத்தையும் எடுத்து கொண்டு வண்டி நோக்கி நாங்கள் ஓட ..சிறிது நேரத்தில் வண்டி பெர்லினை நோக்கி ஓடியது..
மனமோ.. இந்த போலந்து இரண்டாம் உலக போரில் எவ்வளவு இன்னல்களை அனுபவித்து உள்ளது. அவ்வளவு கஷ்ட பட்டும் .. இவ்வளவு ஒழுக்கம்... ஒரு பெருமூச்சு விட்டேன்..
என்னங்க .. பெரு மூச்சு..
ஒன்னும் இல்ல.. வீட்டை விட்டு கிளம்பி ரெண்டு வாரம் ஆச்சி.. அதுதான்..
இன்னும் 4 நாள் தான்.. லண்டன் போய் அங்கே சில இடங்களை பார்த்து விட்டு .. கிளம்ப வேண்டியது தான்..
ஐயகோ.. லண்டனா.. அங்கே தான் அம்மணிக்கு அதிக உறவினர்கள் ..தோழர்கள் .. எவ்வளவு நடக்க விட போறாங்களோன்னு .. நினைத்து கொண்டே ... துரோகியை கடிக்க ஆரம்பித்தேன்..
தொடரும்..
www.visuawesome.com
அக்கா .. போலந்து இங்கு இருந்து எவ்வளவு தூரம்..?கிட்ட தான்...///
பதிலளிநீக்குtravel time evvalvu neram achu sir?
paroki... hmm..
thodarkiren.
அரை மணி நேரம்...மகேஷ்.. மேலே பதிவுலும் எழுதி விட்டேன்.
நீக்குஅரை மணி நேரத்தில் போலந்து நாட்டு எல்லை வந்தது ..//
நீக்குஆமா...
அட அப்போ பதிவு வாசிக்கும்போது எப்படி மிஸ் செஞ்சேன்?
ச்சே இனி கவனமா பதிவ படிக்கனும்:-)
ஸ்வாரஸ்யமான சுற்றுப்பயண தொடர் சார்.
நீங்க கவனமா தான் படிச்சீங்க மகேஷ். உங்கள் பின்னூடத்த படித்து விட்டு நான் தான் "அரை மணி நேரம் " என்பதை பதிவில் சேர்த்தேன் .
நீக்குவணக்கம்,
பதிலளிநீக்குஒரு துரோகிக்கு ச்சே ஒரு பரோகிக்கு என் சகோ வ இவ்வளவு காக்க வைக்கலாமா?
பதிவு அருமை, தொடருங்கள், நன்றி.
பரோகி துரோகியான கதை அறிந்தேன் நண்பரே
பதிலளிநீக்குதொடருங்கள்
இது துரோகம் தான்... ஹிஹி...
பதிலளிநீக்குஅட கொழுக்கட்டையை சுட்டு பரோகி ஆக்கிட்டாங்களா? போலந்து நாட்டு போக்குவரத்து ஒழுக்கம் பற்றிய படங்கள் சிறப்பு! நன்றி!
பதிலளிநீக்குதுரோகி அருமையாக இருக்கும். தொடருங்கள்.
பதிலளிநீக்கு