திங்கள், 10 ஆகஸ்ட், 2015

அறுபதிலும் ஆசை வரும்... (மாமாவுக்கு குடுமாவின் தொடர்ச்சி..)

ஆரம்பத்தில் இருந்து படிக்க இங்கே சொடுக்குங்கள் ....

கல்யாணம் அவர்களின் வீட்டின் உள்ளே....மாமாவின் நண்பர்கள் கிட்ட தட்ட 7-8 பேர் அமர்ந்து கொண்டு ... "சோம பானம்" - "சுறா பானம்" என்று அருந்தி கொண்டு இருந்தனர். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எந்த ஒரு பெண்மணியும் அங்கே இல்லை. நமக்கு தான் எப்போதுமே ஆர்வ கோளாறு  தாராளமாயிற்றே..

என்ன மாமா.. இது ஒரு "பேச்சிலர்" திருவிழா போல இருக்கே... இங்கே என்ன நடக்குது ?


சரியா சொன்ன. இது "பேச்சலர்" பார்ட்டியே தான். நாங்க எல்லாரும் ஆறுமாதத்திற்கு ஒரு முறை இப்படி யார் வீட்டிலேயாவது சேர்ந்து கொண்டாடுவோம்.

அப்ப "கல்யாணம்" மாமாவுக்கு "கல்யாணம்" ஆகவில்லையா ?

என்னாது ? கல்யாணத்துக்கு கல்யாணம் ஆகலையா? அப்ப நான் கொடுத்த  மொய் ...? என்று அடுத்த மாமா இரண்டு தூண்டில் - பக்கட் விகிதம் உள்ளே நுழைந்தார்.

என்ன மாமா, வர எல்லாரும் ரெண்டு தூண்டில் பக்கட் விகிதம் வராங்க..

எல்லாரும் அவங்க அவங்க வீட்டில் கடற்கரையில் மீன் பிடிக்க போறோம்னு  சொல்லிட்டு இங்க வந்துடுவாங்க.

ஏன்..

டேய்.. உனக்கு என்ன வயசு?

25..

25 வயசுல நீ பிரமச்சாரி ... அதுனால உனக்கு இந்த தந்திரம் புரியாது . "கண்ணாலம்"ஆனா புரியும்.

சரி.. எல்லாரும் ஒன்ன சேர்ந்து பார்ட்டி. கல்யாணம் மாமாவுடைய மாமி போட்டு கொடுத்துட்டா ...

அவங்க தான் இந்தியா போய் இருக்காங்களே..

(மனதில்.. அட பாவிங்களே... 50-60 வயதில் உங்களுக்கு இது தேவையா , ஒரு வேளை நமக்கும் இந்த வயது ஆனால் இப்படி தான் ஆகிவிடுவோமா ?)

பேசி கொண்டே இருக்கும் போது .. நிச்சயதார்த்தம் .. மன்னிக்கவும் ...விசு அவர்கள் ஒரு சோமபானத்தை என் கையில் நுழைக்க, அருகில் இருந்த மாமா..

விசு.. உனக்கு இல்ல...?

ஏன்.

நீ தான் இன்றைக்கு எங்களுக்கு வண்டி ஓட்டுனர்..

மாமா ... புரியல..

விசு.. இன்னும் ஒரு அஞ்சி ஆறு மணி நேரத்துக்கு நாங்க யாரும் வண்டி ஒட்ட முடியாது.. அதனால் உன் சேவை எங்களுக்கு தேவை.. நீ எதுவும் குடித்து வைக்காத..

(மனதில், அட பாவி மாமா.. இதுக்கு தான் விழுந்து விழுந்து எனக்கு உளுந்து வடை வைச்செள்ளா ? இதுல நடு நடுவே .. யு வோன்ட் ரிக்ரெட் .. வேற !)

சரி மாமா..

அடுத்த சில மணிநேரங்களில் .. இவர்கள் அனைவரும் அடித்த கும்மாளம் ... எதோ காஞ்ச மாடு கம்பகொல்லையில் நுழைந்ததை போல்..

(மனதில்.. இப்ப மட்டும் கல்யாணம் அவர்களின் மனைவி திரும்ப வந்தால்....நினைக்கவே பயமாயிருந்தது.)

மாலை 5 மணி போல் ... சிலர் தூங்கி கொண்டு இருக்க...அருகில் இருந்த மேசையில் நானும் அமர்ந்து கொண்டே தூங்கி விட்டேன் ..


திடீரென்று அறிமுகமாகாத இன்னொரு மாமா என்னை எழுப்பி ..

விசு.. சியர்ஸ்.. இந்தா புடி, "சுறா" பானம்!

அவர் "சுறா" என்றவுடன் தான் எனக்கு நினைவு வந்தது.. ராஜுமாமாவிடம் ..

மாமா..அத்தை வீட்டில் மீன் வரும்னு காத்துன்னு இருப்பாங்களே..

வாட் டூ யு மீன் ..?

ஐயோ.. வரும் போது மீன் பிடித்தினு வருவோம்ன்னு சொன்னீங்களே .. மறந்துடிங்களா ?

மாமா என் அருகில் வந்து.. என் கையில் சில டாலர்களை வைத்தார்.

மாமா ...எனக்கு எதுக்கு காசு?

விசு இது உனக்கு இல்ல... நீ வண்டிய எடுத்துன்னு அவசரமா கொஞ்சம் வெளிய போகணும்.

மாமா போதும் மாமா.. நீங்களே பாருங்க.. இங்க சில பேருக்கு நிக்க கூட முடியல..

விசு.. பொறுமை.. ஒன்னும் சரக்கு வாங்கி வர தேவையில்லை..

பின்ன எதுக்கு டாலர்..?

கிட்ட வா..

என்று சொல்லி அவர் என் காதில் போட்டு வைத்த விஷயம்...

அட பாவிங்களே ... இது ரொம்ப மோசம்.. எப்படி இந்த வயதில் உங்க மனைவியை இப்படி ஏமாத்துரிங்க... என்று யோசிக்கையில்,

உள்மனதில் ... ஆண்டவனிடம் ஒரு வேண்டுதல்..

ஆண்டவா.. எனக்கு ஐம்பது வயது ஆகும் போது .. நான் இந்த மாதிரி நடக்க கூடாது.. என்று சொல்லி கொண்டே .. மாமா சொன்ன இடத்தை நோக்கி வண்டியை விட்டேன்..

தொடரும்.. தொடருங்கள்...

கைக்கு எட்டியது .....? (மாமாவுக்கு குடுமாவின் தொடர்ச்சி..)

4 கருத்துகள்:

  1. படிக்க மிக சுவராஸ்யமாக அதே நேரத்தில் நகைச்சுவையாகவும் இருந்தது, அருமை..... அனைத்தையும் இப்போதுதான் படித்து முடித்தேன்... உங்களிடம் நகைச்சுவைக்கு பஞ்சம் இல்லை

    பதிலளிநீக்கு
  2. பேச்சுலர் கச்சேரி பிரமாதம்! ஹாஹாஹா!

    பதிலளிநீக்கு
  3. ஹஹஹஹஹ்....செம நண்பரே! கடைல போய் மீன் வாங்கத்தானே சொன்னாரு மாமா.....ஹஹஹ்...

    கார்டூன்கள் சரியா எடுத்துப் போட்டுருக்கீங்க ....

    பதிலளிநீக்கு
  4. நல்ல ஐடியாவாக இருக்கே
    எப்படிக் கெட்டிக்காரத்தனமாகச்
    செய்தாலும் மாட்டிக் கொள்ளத்தான்
    அதிக வாய்ப்பிருப்பதாக எனக்குப் படுகிறது

    ஏனெனில் எப்போதும் மாமாவைவிட
    மாமிகள் தான் கெட்டிக்காரர்கள்

    முடிவில் பார்ப்போம்

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...