வெள்ளி, 31 ஜூலை, 2015

மூன்றெழுத்தில் ....

சென்ற பதிவில் பெர்லின் நகரில் பெர்லின் சுவர் அருகே இருந்த சில விளக்கங்களை படித்த நான் என் அக்காவிடம் ...

அக்கா.. ஹிட்லர் எப்படி இத்தனை பேரை கவர்ந்தான்?

அதுவா.. இதை படி என்று ஒரு விளக்கத்தை காட்டினார்கள்..

படித்து அதிர்ந்தே விட்டேன்..

என்ன படித்தேன்...

முதல் உலகப்போர் முடிந்ததில் இருந்தே ஜெர்மனி நாடு பொருளாதாரத்திலும் மற்றும் வாழ்க்கை தரத்திலும் மிகவும் பின் தங்கி காணப்பட்டது. இந்நிலையில்.. 1920ல் இருந்து 1930வரை குறைந்த அளவில் வாக்கு வாங்கி வந்த நாசி (ஹிட்லர் கட்சி) 1933ல் நடந்த தேர்தலில்  எப்போதும் இல்லாத அளவில் தேர்தல் பிரசாரம் செய்ய ஆரம்பித்தது.


1925- 1933 வரை ஜெர்மன் நாட்டின் ஆளும் கட்சி பல ஊழல்களில் ஈடுபட்டது தெரியவந்தது.  இந்த ஊழல்களினால் ஜர்மனி நாட்டு மக்கள் பல இன்னல்களுக்கு ஆளானார்கள். இந்த ஊழலின் கேடை ஹிட்லர் தனக்கு சாதகமாக பயன் படுத்தி கொண்டார். 1933 தேர்தலின் நேரத்தில் எப்போது எங்கே பேசினாலும் ஆளுங்கட்சியின் ஊழலால் வந்த வினைகளை மக்களுக்கு எடுத்து உரைத்தார்.
கொள்கை பரப்பும் ... தீவிரவாதமும்...
ஹிட்லரின் பேச்சு மக்களை வெகுவாக கவர்ந்தது. ஆளுங்கட்சியின் மேல் மக்கள் நம்பிக்கை இழந்தனர். ஜெர்மனியின் எதிர்காலமே ஹிட்லர் தான் என்று நம்பினர்.

இந்த தேர்தலில் நாசி கட்சியினர் மக்களுக்கு கொடுத்த சில வாக்குறுதிகள் ...


  • ஜெர்மனியை மீண்டும் ஒரு பெரிய சக்தியான நாடாக உருவாக்குவோம்.



  • ஜெர்மனியில் வேலையில்லா திண்டாட்டத்தை முறியடிப்போம்



  • விவசாயிகளுக்கு அதிக வருமானம் அமைத்து கொடுப்போம்



  • யூதர்கள் மற்றும் சில சிரும்பான்மையினர் வெளியேற வேண்டும்.


மற்றும் பல வாக்குறுதிகள் ...

ஜெர்மனி மக்கள் ஹிட்லரை நம்பினர். ஜெர்மனியின் எதிர்காலமே இவர்தான் என்று என்ற முடிவிற்கு வந்தனர்.  1933 தேர்தல் நடந்து முடிவு வந்தது .ஹிட்லரின் நாசி கட்சி கிட்டதட்ட 45 சதவீதம் வாக்கு பெற்று  288 சீட்டுகளும் பெற்று பெரும்பான்மையோடு ஆட்சியை பிடித்தது.

ஜெர்மானியர்கள்  ஹிட்லரோடு சேர்ந்து தங்கள் தங்களை பிடித்த சனியன் முடிந்ததது என்று கொண்டாடினார்கள். ஆட்சிக்கு வந்த முதல் வேலையாக ஹிட்லர் நாசி கட்சியை தவிர மற்ற எல்லா கட்சிகளையும் கலைத்தார். "ஜெர்மனி என்றால் ஹிட்லர் .. ஹிட்லர் என்றால் ஜெர்மனி "என்ற ஒரு கருத்தை நிலை நாட்டினார்.

தேர்தலில் நாசி கட்சிக்கு பெரும்பான்மை கிடைத்து விட்டதால் யாருடைய எதிர்ப்பும் இல்லாமல் ஹிட்லர் தன்னுடைய உண்மையானா முகத்தை காட்ட ஆரம்பித்தார்.

தங்களின் எதிர்காலம் மிகவும் பிரகாசமாக போகின்றது என்று நினைத்து கொண்டு இருந்த ஜெர்மனி மக்களுக்கு அடுத்த சில வருடங்களில்...

600 லட்சம் மானிடர்கள் மரிக்க போவது தெரியவில்லை.
600 லட்சத்தில் சிலர் ...

ஒன்றா .. இரண்டா... 600 லட்சம் ... 1940ம் வருடத்தில் 100 பேருக்கு மூவர் ... ஹிட்லரினால் மரித்தனர்...

இவ்வளவிற்கும் காரணம்..ஜெர்மனியில் ஹிட்லரின் ஆட்சிக்கு முன்னர் நடந்த ஊழல். இந்த ஊழல் என்ற கொடிய நோய் மட்டும் இருந்து இராவிட்டால் .. ஹிட்லர் வெற்றி பெற்று இருக்க முடியாது.. உலகபோரும்  நடந்து இருக்காது.

ஒரு சில அரசியல்வாதிகளின் சுயநல பேராசையினால் 600 லட்சம் பேர் இறந்தனர்..

என்ன ஒரு அநியாயம்.

இந்த ஊழல் முற்றிலும் அழிய வேண்டும்... இவ்வுலகம் இன்னொரு முறை  இந்த சோகத்தை சந்திக்க கூடாது....

அதுவும் சில சுயநலவாதிகளின் ... "ஊழல்" பேராசைக்காக ...

www.visuawesome.com



2 கருத்துகள்:

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...