திங்கள், 13 ஜூலை, 2015

கண்ணதாசன் கலாய்த்தது யாரை ....?

ஓர் மீள் பதிவு..
கண்ணதாசன் அவர்கள் ஒரு முறை நண்பர் ஒருவருடன் ஒரு வெளிநாட்டு பயணம் போய் இருந்தார். அங்கே அவருக்கும் அவர் நண்பருக்கும் நடந்த சில நிகழ்ச்சிகள் …. கவுண்டமணியின் பாணியை பல வருடங்களுக்கு முன்பே கண்ணதாசன் பண்ணி விட்டாரே என்ற எண்ணத்தை தருகின்றது.

kannadasan
பயணம் ஆரம்பம் … விமானத்தில்…
அண்ணே .. கண்ணதாசன் அண்ணே…
சொல்லு …
என்ன அண்ணே .. விமானத்துல பயணிக்கிரதுக்கு தான் சீட் தருவாங்கன்னு நினைச்சேன் .. இங்கே பார்த்தா ரூமை எல்லாம் வாடகை விடுவாங்க போல இருக்கே ..
என்ன சொல்ற .. ”
அங்கே பாருங்க அண்ணே … “tolet ” போர்ட் போட்டு இருக்கே…
அது tolet லேட் இல்ல, Toilet , நல்ல கூர்ந்து படித்து பாரு..
அண்ணே, இப்ப நம்ம எங்கே அண்ணே போறோம் ..?
எங்கே போறோம்ன்னு கூட தெரியாம விமானத்தில எறிட்டியா? சமத்து …
சொல்லுங்க அண்ணே … இப்ப எங்கே போறோம் …?
ஆப்கானிஸ்தான் …
அப்படினா …
ஆப்கானிஸ்தான் என்பது ஒரு நாடு …
சரி அண்ணே .. ஆப்கானிஸ்தானில் எங்கே அண்ணே போறோம்..
காபுல் …
அப்படினா …?
டேய் … எனக்கு வர கோவத்துக்கு…
சொல்லுங்க அண்ணே..
காபுல் என்பது ஒரு ஊர் ….
இந்த ஊரில் என்ன அண்ணே விசேஷம் ,.
இங்க நல்ல ருசியான திராட்சை பழம் கிடைக்கும், அதுமட்டும் இல்லாமல் பெரிய பெரிய கவிஞர்கள் வாழ்ந்த ஊர் … அதுதான் இந்த ஊர் விசேஷம் …
விமானம் தரை தட்டியது..
என்ன அண்ணே.. பொட்டல் காடு போல இருக்கு .. இங்க போய் ருசியான திராட்சை எப்படி ? வேற என்ன அண்ணே விசேஷம்..
இங்க இருந்து தாண்டா கஜினி முஹம்மத் , கோரி முஹம்மது இந்த மாதிரி ராஜாக்கள் நம்ம நாட்டின் மீது படையெடுத்து வந்தார்கள் …
யார் அண்ணே அது கஜினி முஹம்மத் ?
டேய் … கொஞ்சம் அமைதியா இருக்கியா …
ஆப்கானிஸ்தான் பயணம் முடிந்து அங்கு இருந்து தாஷ்கந்த் என்ற நாட்டிர்க்கு பயணம் துவங்கியது …
அண்ணே , இப்ப எங்க அண்ணே போறோம் …?
தாஷ்கந்த்…
அப்படினா …?
டேய்…
அங்கே தாஷ்கண்டில் .. தமிழ் படித்த ஒரு அம்மையாரை சந்திக்க வேண்டும் … அந்த அம்மையார் வெளிநாட்டோர் என்றாலும் சுத்தமான இலக்கிய தமிழில் பேச கூடியவர் …அவரிடம் கண்ணதாசன்…பேசும் போது ..
அம்மா.. உங்கள் கணவர் எங்கே வேலை பார்க்கின்றார் ?
என்று கேட்க அந்த அம்மையார் ..
அவர் பொறியியல் துறையில் வேலை பார்க்கின்றார் ..
என்ற பதில் அளித்து விட்டு சமையில் அறைக்கு சென்றார் .. அந்த நேரத்தில்..
என்ன அண்ணே, கேடு கெட்ட ஊரா இருக்கு .. பொரியல்-கூட்டு – வறுவல் இதுக்கெல்லாமா ஒரு துறை வைப்பாங்க … அதை வேற அந்த அம்மா பெருமையா சொல்றாங்க…
டேய்.. அது பொறியியல் ..
அப்படினா…
இன்ஜினியரிங் ..
அப்படினா…
நீ சும்மா வா …
பேசி கொண்டு இருக்கும் பொது அந்த பொறியியல் நிபுணர் அங்கு வந்து ..
சீக்கிரம் கிளம்புங்க …நம்ம இப்ப லெனின் மசொலியம் ( lenin mausoleum ) பார்க்க போகலாம் ..
மசொலியம் என்ற வார்த்தையை கேட்டவுடன் …
அண்ணே..
என்னடா …
முசோலினி இந்த ஊரா அண்ணே .. சொல்லவே இல்லை ..
முசோலினி .. அவர் இத்தாலி நாட்டவர் .. ஏன் ?
இல்ல , இவர் நம்மை லெனினையும் … முசோலினியையும் சந்திக்க போலாம்னு சொல்றாரே ..
டேய்.. அது முசோலினி இல்ல.. மசொலியம் ..
அப்படினா ?
மசொலியம்னா.. சமாதி .
அங்கு இருந்து …நேராக “செவாஸ்கி” மியூசிக் அரங்கம் சென்றார்கள் . செவாஸ்கி என்பவர் 18ம் நூற்றாண்டில் வாழ்ந்த பியானோ ஜாம்பவான் . உலக புகழ் பெற்றவர் …அங்கே சென்றவுடன்.. அந்த பொறியியல் நிபுணர் .. அதுதான் செவாஸ்கி வாசித்த பியானோ.. அதை இதை நாட்கள் கழித்தும் பத்திரமாக வைத்து பாது காத்து வருகின்றார்கள் , என்ற ஒரு தகவலை சொன்னார் .
அண்ணே.. அது என்ன அண்ணே .. பியானோ போல இருக்கு …
டேய்.. கொஞ்சம் அமைதியா இரு..
அண்ணே .. அது பியானோ தான் அண்ணே..
ஆமாண்டா.. செவாஸ்கி வாசித்த பியானோ..உடனே ..செவாஸ்கி யா .. அப்படின்னா என்னான்னு கேட்டா.. உன்னை இங்கேயே விட்டுட்டு போய்டுவேன் ..
அண்ணே , செவாஸ்கிய தெரியாதவங்க கூட இருப்பாங்களா ..?
அவர் யாருன்னு எனக்கு கூட தெரியல … இப்ப இந்த பொரியல்.. சாரி.. பொறியியல் நிபுணர் சொல்லி தான் தெரியும்..
அண்ணே .. நான் கொஞ்சம் அந்த பியானோவில் உட்கார்ந்து வாசிக்கலாமா ?
வேணாண்டா..
என்று கண்ணதாசன் சொல்லுமுன்பே …
அந்த பியானோவில் அமர்ந்து விட்டார் .. அடுத்த அரை மணி நேரம்.. செவாஸ்கியின் சங்கீதத்தை ஒரு நோட்ஸ் எதுவுமே இல்லாமல் .. இவர் வாசிக்க அங்கு இருந்த மற்ற ரஷ்ய மக்கள் ஆச்சரியத்தில் மூழ்கினர்.. யார் இந்த மனிதன்..? நம்ம ஊர் செவாஸ்கி யின் இசையை இவ்வளவு அழகாக வாசிக்கின்றாரே …யார் இவர் .. யார் இவர்…என்று கண்ணதாசனை கேட்க.
இவர் என் நண்பர் தான் .. இசையை தவிர மற்ற எதுவுமே இவருக்கு தெரியாது.. இவர் பெயர் .. MS விஸ்வநாதன் .. என்றார்..
நண்பர்களே, இந்த பதிவில் கற்பனை எதுவுமே இல்லை. அனைத்தும் உண்மையில் நடந்ததே. இதை கண்ணதாசன் அவர்கள் எங்கோ சொல்லி கேட்டுள்ளேன் …இதை சொல்லி முடிக்கையில் கண்ணதாசன் அவர்கள் .. MSV க்கு .. மூச்சு பேச்சு எல்லாமே இசை என்று பெருமையாக குருப்பிட்டார் ..
பின் குறிப்பு :
அண்ணே.. என்னமோ கலர் கலரா குடிக்கிரிங்களே … எனக்கும் கொஞ்சம் தாங்க அண்ணே..
டேய் அது உனக்கு வேணா..
ரொம்ப தாகம் அண்ணே..
டேய், இது என்னான்னு உனக்கு தெரியுமா ..
கூல் ட்ரிங்க்ஸ் அண்ணனே..
ட்ரிங்க்ஸ் தான் .. ஆனா இது பெயர் என்ன தெரியுமா ?
சொல்லுங்க அண்ணே..
வோட்கா..
அப்படினா ?
பின் குறிப்பு :
MSV அவர்கள் இறைவனடி சேர்ந்தார் என்று இப்போது தான் படித்தேன். மனதில்ஏதோ  பிறப்பில் இருந்து என் இல்லத்தில் என்னோடு வாழ்ந்த என் சொந்தம் ஒருவர் தவறியதை போல் ஒரு உணர்ச்சி. அருமையான இசைக்கு நன்றி MSV  அவர்களே.  
www .visuawesome .com

6 கருத்துகள்:

  1. வணக்கம்
    உரையாடல் வடிவில் அசத்தி விட்டீர்கள் வாழ்த்துக்கள்
    MSV.ஆழ்ந்த இரங்கல்கள் த.ம 2
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  2. அருமை நண்பரே.. அன்னாரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிராதிப்போம்..
    "இசையை தவிர மற்ற எதுவுமே இவருக்கு தெரியாது.. இவர் பெயர் .. MS விஸ்வநாதன் .." - மிக உண்மையான வரிகள்...

    பதிலளிநீக்கு
  3. ஆம்! நண்பரே! அருமையான மெல்லிசை மாமன்னரை நம் இசை உலகு இழந்துவிட்டது. காரிகன் அவர்களின் பதிவில் சமீபத்தில் அமுதவன் ஐயா அவர்களும், நாங்களும் வாசித்த செய்தி அதாவது மெல்லிசை மன்னர் குணமாகி வருவதாக அறிந்ததை எழுதி இருந்தோம்...அடுத்து சில நாட்களில் அவரது மறைவு. அவர் மறைந்திருக்கலாம் ஆனால் அவரது இசை இவ்வுலகம் முழுவதும் நிறைந்து அவரை நினைவு படுத்திக் கொண்டெ தான் இருக்கும்....அன்று அவர் வாசித்த அந்த பியானோ இசை ஒலிக்காமல் இருக்குமா....உங்கள் பதிவின் மூலம் அதை உலகிற்கு, தமிழர்கள் மத்தியில் சேர்த்தமைக்கு வாழ்த்துகள்!

    அருமையான பதிவு. எத்தனை முறை வாசித்தாலும் அலுக்காது

    பதிலளிநீக்கு
  4. கவிஞர் எழுதிய விஸ்வநாதன் பற்றிய கட்டுரையைப் படிக்கத் தந்தமைக்கு நன்றி. ஏற்கெனவே படித்திருந்தாலும் இந்தச் சமயத்தில் படிக்க நேர்வது மனதுக்கு இதமானதாகவே இருக்கின்றது.
    திரு துளசிதரன் அவர்கள் சொல்லியிருப்பதுபோல டாக்டர்களின் அறிக்கை மட்டுமல்ல திரு சிவகுமார் மூலம் பெற்ற செய்தியும் மெல்லிசை மன்னர் தேறிவருகிறார் என்பதாகவே இருந்தது. மருத்துவ மனையில் இருந்த எம்எஸ்வி அவர்களைப் பார்ப்பதற்கு வருகிறேன் என்று திரு சிவகுமார் அவர்கள் தெரிவித்தபோது "வேணாம் சார் அப்பா நல்லா இருக்காங்க. திங்கட்கிழமை டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்துர்றாங்க. நீங்க வீட்டுக்கு வந்துருங்க" என்று அவர் மகன் சொன்னதாக திரு சிவகுமார் அவர்கள் சொன்னார்கள். எனவே மிகப்பெரிய நம்பிக்கையுடன் மெல்லிசை மன்னர் தேறிவிட்டார் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் திங்கட்கிழமைக் காலையில் சென்னையிலிருந்து வந்த செய்தி நம்பிக்கையில் மண்ணை வாரிப் போட்டுவிட்டது.

    பதிலளிநீக்கு
  5. ஆழ்ந்த இரங்கல்கள்! கண்ணதாசன், எம்.எஸ்.வி எல்லாம் ஓர் சகாப்தம்! அவர்களின்றி இந்த உலகு வெறுமை அடைந்து போயிருக்கிறது!

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...