மீண்டும் ஒரு நாள் ... சுவிஸ் நாட்டில் !
மறுபடியும் காலை ஏழு மணிக்கு அம்மணி எழுப்பி விட ..
ஏம்மா ... இன்னும் கொஞ்ச நேரம் ... ப்ளீஸ் !
ஏங்க .. புதன் காலை, இங்கே என் தங்கச்சியோட சேர்ந்து கோயிலுக்கு போகலாம் , கிளம்புங்க ..
நிற்பதும் நிர்மூலமாகததும் அவர் செயல் ஆயிற்றே.. தட்ட முடியாதே...
கிளம்பி சென்று 8:30 மணி வரை எல்லாம் வல்ல இறைவனை தொழுது விட்டு மீண்டும் வீடிற்கு வந்தோம். வரும்போதே அலைபேசியில் பெட்டைகளை எழுப்பி விட்டு தயாராக இருக்க சொன்னோம். இன்றைக்கு பெரிய பெரிய திட்டம் ..
என்னுடைய ரெண்டு ராசாதிக்கள், உறவினரின் ரெண்டு ராசாதிக்கள் (ஏற குறைய ஒரே வயது ) ... நான்கு பெரும் ஓடி வந்து, இன்றைக்கு நாங்கள் ஷாப்பிங் செல்ல போகிறோம் என்று சொல்ல..
தெய்வமே.. இங்கே வந்தும் ஷாப்பிங்கா ? இது என்ன பரிசோதனை என்று நினைத்து கொண்டே கிளம்புகையில், தங்கச்சியின் வீட்டுகார் ...
இப்படி செய்யலாமே .. நாம் அனைவரும் மதிய உணவை சாப்பிட்டு விட்டு கிளம்பலாம் என்று சொல்ல.. நானோ..
என் மனைவி அருமையான மீன் குழம்பு செய்வார்கள் என்று ஒரு வார்த்தையும் சொல்ல .. வஞ்சிரம் மீன் குழம்பும் வருவலும் தயாராகியது.
அனைத்தும் தயாராகியதும் உணவினை முடித்து விட்டு இரண்டு கார்களை எடுத்து கொண்டு வெளியே கிளம்பினோம். முதலில் ஷாப்பிங் , பிறகு Starbuck காபி, பின்னர் ஐக்கிய நாட்டு சபை , அதற்கு மேலும் நேரம் இருந்தால் அருகில் உள்ள பூங்கா.... இது தான் திட்டம்.
வண்டியை அங்கே இருந்த கடையின் பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு, உள்ளே இருந்த மிக பெரிய கடையில் நுழைந்தோம். பெட்டைகள் நால்வரும்.. காஞ்ச மாடு கம்பம்கொல்லையை கண்டது போல் ஓட இரண்டு அம்மணிகளும் அவர்களை பின் பற்ற நானும் நண்பரும் எங்களால் இங்கே மணி கணக்கில் இருக்க முடியாது நாங்கள் வெளியே சென்று Starbuck கடையில் அமர்ந்து இருகின்றோம் . நீங்கள் ஷாப்பிங் முடித்து விட்டு கூப்பிட்டால் இங்கே வந்து அழைத்து கொள்கிறோம் என்று சொல்லிவிட்டு கிளம்பினோம்.
அருகில் இருந்த starbuck கடையில் குடிக்க எதோ வாங்கி கொண்டு அமர்ந்தேன்.
சிறிது நேரம் கழித்து அழைப்பு வர, நீங்களும் இங்கேயே வந்து காபி பருகுங்கள் என்று சொல்லி அவர்களும் வர அனைவரும் பருகினோம். அது முடித்த பின் மீண்டும் அந்த கடையில் நுழைந்து பார்கிங் செல்ல "லிப்ட்" பக்கம் செல்கையில் அம்மணிகள் இருவரை காணவில்லை. நீங்கள் செல்லுங்கள் நான் அவர்களை அழைத்து வருகின்றேன் என்று அவர்களை தேட ஆரம்பித்தேன். எங்கேயும் காணவில்லை. சரி.. அவர்களும் கார் பார்க்கிங் சென்று இருப்பார்கள் என்று எண்ணி பார்க்கிங் பக்கம் போகலாம் என்று நினைக்கையில் தான்... அட பாவி .. ஆயிர கணக்கில் உள்ள பார்க்கிங் இப்போது எங்கே போய் தேட போகிறேன். எங்கே வண்டியை விட்டேன் என்று கவனிக்காமல் விட்டு விட்டேனே ... என்று நொந்து கொண்டே தேட ஆரம்பித்தேன்.
கிட்ட தட்ட 20 நிமிடம் ஆனது. அந்த இடத்தை கண்டு பிடிக்க முடியவில்லை.
சரி.... வெளியே போய் பார்க்கலாம் என்று நினைத்து நடக்க ஆரம்பித்தேன். அருகில் நிறைய பேருந்துகள்.
6 வயது இருக்கும் போது ஆம்பூர் பட்டணத்தில் காணமல் போனபோது ... ஒவ்வொரு பேருந்தாக போய் ..
இது எங்கே போகின்றது .. இது எங்கே போகின்றது என்று கேட்டு அழுத நினைவு மனதில் வர...
இந்த வண்டி எங்கே போகிறது..
கிருஷ்ணகிரி
இது ...
திருப்பத்தூர்
இது ...
வேலூர்
இது...
அது எல்லாம் இருக்கட்டும் .. நீ எங்கே போக போகின்றாய்...
இந்த வண்டி எங்கே போகிறது..
லண்டனுக்கு..
இது ...
பாரிஸ்...
இது ...
பெர்லின்...
இது...
அது எல்லாம் இருக்கட்டும் .. நீ எங்கே போக போகின்றாய் என்று அவர் கேட்க நானோ பேய் அறைந்தவன் போல் முழித்து (பேய் அறைந்த கதையை கண்டிப்பாக மற்றொரு நாள் சொல்கிறேன்) தெரியவில்லை என்று சொல்லி அங்கே இருந்து கிளம்பி மீண்டும் அந்த பார்க்கிங் நோக்கி நடக்க...
"அப்பா... பெரியப்பா "என்று ராசாத்திக்கள் ஓடி வர மனதில் மீண்டும் ஒரு நிம்மதி.
அங்கே இருந்து கிளம்பி நேராக ஐக்கிய நாட்டு சபைக்கு கிளம்பினோம் . வண்டியை எதிரில் நிறுத்திவிட்டு நடக்க ஆரம்பித்தோம். பார்க்கிங் தேடி நடந்ததும் மற்றும் இப்போது நடந்ததும் சேர்ந்து என்னை சோர்வாக்க, ஏதாவது நாற்காலி இருந்தால் அமருவோம் என்று நினைக்கும் போது எதிரில் ஒரு நாற்காலி... என்னடா இது நாற்காலி இருந்தும் அமர முடியவில்லையே என்று நினைக்கையில் ... உறவினர் இதற்கான விளக்கத்தை கூறினார் .
அதை கடந்து ஐக்கிய நாடு சபையின் வாசலில் நுழைகையில் கண்ணில் பட்டது அங்கே இருந்த பாதுகாப்பு.
அட பாவிகளே ...இந்த பாதுகாப்பு வாய்ந்த நாட்டில் பணக்கார நாட்டிலே உங்களுக்கு இவ்வளவு பாதுகாப்பை வைத்து கொண்டு இருகின்றீர்களே... அங்கே என் இனத்தார் கொத்து கொத்தாக சித்ரவதை செய்ய பட்டுகொல்ல படுகின்றார்களே... அவர்களை மறந்து விட்டீர்களே .. லட்ச கணக்கில் விதவைகள் .. ஒரு பரம்பரையே அழிகின்றதே ... அவர்களுக்கு இல்லாத பாதுகாப்பு உங்களுக்கு ஏன் என்று மனதில் ஒரு நினைப்பு வந்தது.
அது மட்டும் அல்லாமல்... இவ்வளவு பெரிய சபை... இந்த சபையால் கடந்த 40 வருடங்களில் ஏதாவது ஒரு நல்ல காரியம் யாருக்காவது நடந்ததா என்று நினைக்கையில் பதில் எதுவும் கிடைக்க வில்லை (உங்களில் யாருக்காவது ஐக்கிய நாட்டு சபையினால் வந்த உருப்புடியான காரியம் ஏதாவது நினைவிற்கு வந்தால் பின்னூட்டத்தில் எழுதுங்கள்)
மீண்டும் வண்டியை நோக்கி நடக்கையில் அந்த நாற்காலியை தாண்டி நடக்க நேர்ந்தது. இங்கே வாழும் என் உறவினர் ... சென்ற வருடம் ஒரு தமிழ் வாலிபன் இங்கே நியாயம் கோரி தீக்குளித்து மாண்டான் என்றார். அதை கேட்ட பின் வருத்தம் இரட்டிப்பானது.
என்னடா... ஐக்கிய நாட்டு சபையை பார்த்து சந்தோசமாக இருப்போம் என்று வந்தால் ... இங்கே.... கதையே வேறு என்று நினைத்து கொண்டே வண்டியை நோக்கி நகர...
ஏங்க ... ஒரு வேளை அந்த பார்க்கிங்கில் நீங்கள் உண்மையாகவே காணமல் போய் இருந்தால் ... என்ன செய்து இருப்பீர்கள்?
நாளை நேராக விமான நிலையத்திற்கு வந்து இருப்பேன் ..
அப்போதுதான் நினவு வந்தது.. நாளை கிளம்ப வேண்டும். இங்கு இருந்து பாரிஸ் நகரத்திற்கு ...
டேய் விசு, முதல் முதலா பாரிஸ் கார்னருக்கு போற ..பத்திரமாக வந்து சேரு என்று என் மாமா மதராசில் பல வருடங்களுக்கு முன்னால் சொன்ன எச்சரிக்கை நினைவிருக்கு வந்தது.
www,visuawesome.com
மறுபடியும் காலை ஏழு மணிக்கு அம்மணி எழுப்பி விட ..
ஏம்மா ... இன்னும் கொஞ்ச நேரம் ... ப்ளீஸ் !
ஏங்க .. புதன் காலை, இங்கே என் தங்கச்சியோட சேர்ந்து கோயிலுக்கு போகலாம் , கிளம்புங்க ..
நிற்பதும் நிர்மூலமாகததும் அவர் செயல் ஆயிற்றே.. தட்ட முடியாதே...
கிளம்பி சென்று 8:30 மணி வரை எல்லாம் வல்ல இறைவனை தொழுது விட்டு மீண்டும் வீடிற்கு வந்தோம். வரும்போதே அலைபேசியில் பெட்டைகளை எழுப்பி விட்டு தயாராக இருக்க சொன்னோம். இன்றைக்கு பெரிய பெரிய திட்டம் ..
என்னுடைய ரெண்டு ராசாதிக்கள், உறவினரின் ரெண்டு ராசாதிக்கள் (ஏற குறைய ஒரே வயது ) ... நான்கு பெரும் ஓடி வந்து, இன்றைக்கு நாங்கள் ஷாப்பிங் செல்ல போகிறோம் என்று சொல்ல..
தெய்வமே.. இங்கே வந்தும் ஷாப்பிங்கா ? இது என்ன பரிசோதனை என்று நினைத்து கொண்டே கிளம்புகையில், தங்கச்சியின் வீட்டுகார் ...
இப்படி செய்யலாமே .. நாம் அனைவரும் மதிய உணவை சாப்பிட்டு விட்டு கிளம்பலாம் என்று சொல்ல.. நானோ..
என் மனைவி அருமையான மீன் குழம்பு செய்வார்கள் என்று ஒரு வார்த்தையும் சொல்ல .. வஞ்சிரம் மீன் குழம்பும் வருவலும் தயாராகியது.
அனைத்தும் தயாராகியதும் உணவினை முடித்து விட்டு இரண்டு கார்களை எடுத்து கொண்டு வெளியே கிளம்பினோம். முதலில் ஷாப்பிங் , பிறகு Starbuck காபி, பின்னர் ஐக்கிய நாட்டு சபை , அதற்கு மேலும் நேரம் இருந்தால் அருகில் உள்ள பூங்கா.... இது தான் திட்டம்.
வண்டியை அங்கே இருந்த கடையின் பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு, உள்ளே இருந்த மிக பெரிய கடையில் நுழைந்தோம். பெட்டைகள் நால்வரும்.. காஞ்ச மாடு கம்பம்கொல்லையை கண்டது போல் ஓட இரண்டு அம்மணிகளும் அவர்களை பின் பற்ற நானும் நண்பரும் எங்களால் இங்கே மணி கணக்கில் இருக்க முடியாது நாங்கள் வெளியே சென்று Starbuck கடையில் அமர்ந்து இருகின்றோம் . நீங்கள் ஷாப்பிங் முடித்து விட்டு கூப்பிட்டால் இங்கே வந்து அழைத்து கொள்கிறோம் என்று சொல்லிவிட்டு கிளம்பினோம்.
அருகில் இருந்த starbuck கடையில் குடிக்க எதோ வாங்கி கொண்டு அமர்ந்தேன்.
மதுரை தமிழா.. பின்னால் உள்ள Lamborghini என்னுடையது அல்ல...
சிறிது நேரம் கழித்து அழைப்பு வர, நீங்களும் இங்கேயே வந்து காபி பருகுங்கள் என்று சொல்லி அவர்களும் வர அனைவரும் பருகினோம். அது முடித்த பின் மீண்டும் அந்த கடையில் நுழைந்து பார்கிங் செல்ல "லிப்ட்" பக்கம் செல்கையில் அம்மணிகள் இருவரை காணவில்லை. நீங்கள் செல்லுங்கள் நான் அவர்களை அழைத்து வருகின்றேன் என்று அவர்களை தேட ஆரம்பித்தேன். எங்கேயும் காணவில்லை. சரி.. அவர்களும் கார் பார்க்கிங் சென்று இருப்பார்கள் என்று எண்ணி பார்க்கிங் பக்கம் போகலாம் என்று நினைக்கையில் தான்... அட பாவி .. ஆயிர கணக்கில் உள்ள பார்க்கிங் இப்போது எங்கே போய் தேட போகிறேன். எங்கே வண்டியை விட்டேன் என்று கவனிக்காமல் விட்டு விட்டேனே ... என்று நொந்து கொண்டே தேட ஆரம்பித்தேன்.
கிட்ட தட்ட 20 நிமிடம் ஆனது. அந்த இடத்தை கண்டு பிடிக்க முடியவில்லை.
சரி.... வெளியே போய் பார்க்கலாம் என்று நினைத்து நடக்க ஆரம்பித்தேன். அருகில் நிறைய பேருந்துகள்.
6 வயது இருக்கும் போது ஆம்பூர் பட்டணத்தில் காணமல் போனபோது ... ஒவ்வொரு பேருந்தாக போய் ..
இது எங்கே போகின்றது .. இது எங்கே போகின்றது என்று கேட்டு அழுத நினைவு மனதில் வர...
இந்த வண்டி எங்கே போகிறது..
கிருஷ்ணகிரி
இது ...
திருப்பத்தூர்
இது ...
வேலூர்
இது...
அது எல்லாம் இருக்கட்டும் .. நீ எங்கே போக போகின்றாய்...
அண்ணே, இந்த பேருந்து.. எங்கே போகுது...?
சற்று சுதாரித்துஇந்த வண்டி எங்கே போகிறது..
லண்டனுக்கு..
இது ...
பாரிஸ்...
இது ...
பெர்லின்...
இது...
அது எல்லாம் இருக்கட்டும் .. நீ எங்கே போக போகின்றாய் என்று அவர் கேட்க நானோ பேய் அறைந்தவன் போல் முழித்து (பேய் அறைந்த கதையை கண்டிப்பாக மற்றொரு நாள் சொல்கிறேன்) தெரியவில்லை என்று சொல்லி அங்கே இருந்து கிளம்பி மீண்டும் அந்த பார்க்கிங் நோக்கி நடக்க...
"அப்பா... பெரியப்பா "என்று ராசாத்திக்கள் ஓடி வர மனதில் மீண்டும் ஒரு நிம்மதி.
அங்கே இருந்து கிளம்பி நேராக ஐக்கிய நாட்டு சபைக்கு கிளம்பினோம் . வண்டியை எதிரில் நிறுத்திவிட்டு நடக்க ஆரம்பித்தோம். பார்க்கிங் தேடி நடந்ததும் மற்றும் இப்போது நடந்ததும் சேர்ந்து என்னை சோர்வாக்க, ஏதாவது நாற்காலி இருந்தால் அமருவோம் என்று நினைக்கும் போது எதிரில் ஒரு நாற்காலி... என்னடா இது நாற்காலி இருந்தும் அமர முடியவில்லையே என்று நினைக்கையில் ... உறவினர் இதற்கான விளக்கத்தை கூறினார் .
கண்ணிவெடியில் சிக்கிய வலி .....
கண்ணிவெடியில் அகப்பட்டு காலை இழந்தவரின் இழப்பையும் வலியையும் எடுத்துரைக்க வடிவமைக்க பட்டது தான் இந்த நாற்காலி என்று சொன்ன போதே மனதில் ஒரு வலி.அதை கடந்து ஐக்கிய நாடு சபையின் வாசலில் நுழைகையில் கண்ணில் பட்டது அங்கே இருந்த பாதுகாப்பு.
திருடன் இல்லாத ஊருக்கு திண்டுகல் பூட்டு எதற்கு ?
அது மட்டும் அல்லாமல்... இவ்வளவு பெரிய சபை... இந்த சபையால் கடந்த 40 வருடங்களில் ஏதாவது ஒரு நல்ல காரியம் யாருக்காவது நடந்ததா என்று நினைக்கையில் பதில் எதுவும் கிடைக்க வில்லை (உங்களில் யாருக்காவது ஐக்கிய நாட்டு சபையினால் வந்த உருப்புடியான காரியம் ஏதாவது நினைவிற்கு வந்தால் பின்னூட்டத்தில் எழுதுங்கள்)
மீண்டும் வண்டியை நோக்கி நடக்கையில் அந்த நாற்காலியை தாண்டி நடக்க நேர்ந்தது. இங்கே வாழும் என் உறவினர் ... சென்ற வருடம் ஒரு தமிழ் வாலிபன் இங்கே நியாயம் கோரி தீக்குளித்து மாண்டான் என்றார். அதை கேட்ட பின் வருத்தம் இரட்டிப்பானது.
என்னடா... ஐக்கிய நாட்டு சபையை பார்த்து சந்தோசமாக இருப்போம் என்று வந்தால் ... இங்கே.... கதையே வேறு என்று நினைத்து கொண்டே வண்டியை நோக்கி நகர...
ஏங்க ... ஒரு வேளை அந்த பார்க்கிங்கில் நீங்கள் உண்மையாகவே காணமல் போய் இருந்தால் ... என்ன செய்து இருப்பீர்கள்?
நாளை நேராக விமான நிலையத்திற்கு வந்து இருப்பேன் ..
அப்போதுதான் நினவு வந்தது.. நாளை கிளம்ப வேண்டும். இங்கு இருந்து பாரிஸ் நகரத்திற்கு ...
டேய் விசு, முதல் முதலா பாரிஸ் கார்னருக்கு போற ..பத்திரமாக வந்து சேரு என்று என் மாமா மதராசில் பல வருடங்களுக்கு முன்னால் சொன்ன எச்சரிக்கை நினைவிருக்கு வந்தது.
www,visuawesome.com
அந்த ஒரு காலினை இழந்த நாற்காலி
பதிலளிநீக்குமனதைப் பிசைகிறது
எவ்வளவு எளிமையாய்
ஒரு மாபெரும் இழப்பினைக்
காட்சிபடுத்தியிருக்கிறார்கள்
நன்றி நண்பரே
தம +1
நல்ல காரியம் தெரியவில்லை...
பதிலளிநீக்குகாற்று வாங்கப் போனேன் நல்ல பதிவு ஒன்றைப் போட்டேன் என்று அழகான பதிவு...//(உங்களில் யாருக்காவது ஐக்கிய நாட்டு சபையினால் வந்த உருப்புடியான காரியம் ஏதாவது நினைவிற்கு வந்தால் பின்னூட்டத்தில் எழுதுங்கள்)// ஹஹஹ் ஹ்ஹ நல்ல கேள்வி...ஆனல்ல் நீங்கள் சொல்லியிருக்கும் நிகழ்வு மனதைக் கசக்கியது...ஸ்விஸிலுமா என்று..
பதிலளிநீக்குபாரிஸ் செம கூட்டம் காணாமப் போயிடாதீங்க! ம்ம் பரவால்ல நீங்க காணாமப் போனாலும் அங்க எங்கியாவது உட்கார்ந்து பதிவு ஒண்ணு தட்டிவிட்டுருவீங்க..ஹஹ்ஹ சகோதரிக்கும் அது நன்றாகவே தெரிந்துருக்குமே...
பயணத் தொடர் அருமையாக வருகின்றது...
நண்பா,
பதிலளிநீக்குஉன் பயண குறிப்புகள் பிரமாதம்.
நீயாவது.... தொலைஞ்சி போறதாவது....
வாயுள்ள பிள்ளை நீ.................. அதமட்டும் மறந்துடாதே.
அந்த முக்காலி . . . நாற்காலியை நேரில் கண்டு கண்டு கலங்கிய நினைவு இப்போது என் மனத்திரையில்.
பயணம் சிறக்கட்டும்.
கோ
கண்ணிவெடி நாற்காலி சிற்பம்! பார்க்கையிலேயே வலித்தது! சுவையான பகிர்வு! நன்றி!
பதிலளிநீக்குவணக்கம் ஆசிரியரே,
பதிலளிநீக்குதங்கள் ஊர்பயணம் சிறப்பாக தொடர்கிறதா?
கண்ணிவெடியில் அகப்பட்டு காலை இழந்தவரின் இழப்பையும் வலியையும் எடுத்துரைக்க வடிவமைக்க பட்டது தான் இந்த நாற்காலி என்று சொன்ன போதே மனதில் ஒரு வலி.
உண்மை தான் ,
சகோ விடம் சொல்லிவிடுங்கள் தங்கள் நண்பர் கோ, தேடித்தருவார் என்று,,,
தங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்,
நன்றி.
//மதுரை தமிழா.. பின்னால் உள்ள Lamborghini என்னுடையது அல்ல///
பதிலளிநீக்குபுரிந்தது உங்கள் வீட்டு வேலையாளுக்கு நீங்க வாங்கி கொடுத்த கார் என்று....நீங்க பெரிய ஆளுதாம்பா ஹீஹீ