பாரிஸ் நகரில் இன்னொரு நாள். நேற்று இரவு "Eiffel" கோபுரம் பார்த்துவிட்டு ஹோட்டல் அறையை வந்து சேரும் போது இரவு பனிரெண்டு மணியாகிவிட்டது. காலையில் ஏழு மணி போல் மீண்டும் கிளம்பி நகர ஊர்வலம் என்ற திட்டம். அனைவரும் அடித்து போட்டதுபோல் ஒரு தூக்கம். காலையில் எழும் போதே 9 ஆகிவிட்டது.
மூத்த ராசாத்தி ஐரோப்பா பயணம் என்று சொன்னவுடனே பாரிஸ் நகரில் உள்ள ராஜ அரண்மனைக்கு போக வேண்டும் என்று ஆணையிட்டு இருந்தாள்.
அது சரி, இது பயண தொடர் தானே.. இங்கே எப்படி இந்த தலைப்பு ... ஒரு நிமிஷம் பொறுங்கள் .
இந்த இரண்டு படங்களையும் நான் பார்த்தது இல்லை, அதனால் இதை அந்த படங்களின் விமர்சனம் என்று நினைக்க வேண்டாம். இந்த அரண்மனையை பார்த்தவுடன் வந்தது தான் இந்த தலைப்பு.
ஒரு மனிதனிடம் கஷ்டப்பட்டு சம்பாதிக்காத பணமும் புகழும் இருந்தால் என்ன என்ன விதத்தில் அதை செலவு செய்யலாம் என்பார்க்கான அடையாளம்.
இந்த ராஜா செய்த அட்டகாசத்தினால் தான் நேப்பொலியன் தலைமையில் 1799ல் புரட்சி நடந்தது. இந்த அரண்மனை தற்போது ஒரு பொருக்கட்சியாக மாற்ற பட்டு பொது மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கூறியது போல் காலையில் சிறிது தாமதமாக எழுந்து பின்னர் காலை உணவை முடித்து கொண்டு இங்கே கிளம்பினோம். பாரிஸ் நகரில் எனக்கு பிடித்த மற்றும் பிடிக்காத ரெண்டு விஷயங்கள்.
பிடித்த விஷயம்:
ரயல் மற்றும் பேருந்து வசதி.. 8-10 பொற்காசு கொடுத்து ஒரு டிக்கட் வாங்கி கொண்டால் போதும், எங்கே வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் போய் கொள்ளலாம் .
பிடிக்காத விஷயம்.; யாரை பார்த்தாலும் எங்கே பார்த்தாலும் புகை பிடிகின்றார்கள். இந்த புகை வாசனையினால் தலை வலி கண்டிப்பாக வந்து சேரும்.
இரண்டு ரயில் பிடித்து இந்த அரண்மனைக்கான ரயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்தோம். இரண்டு பக்கம் நல்ல மரங்கள் சூழ்ந்த ஒரு சின்ன தெரு. அதை தாண்டி.. இடது பக்கம் திரும்பினால்... அடேங்கப்பா.. எம்புட்டு பெரிய அரண்மனை .
அதனை நோக்கி நடக்க ஆரம்பித்தோம். வழியில் ஒரு குதிரை வண்டி ... அதில் ஏறி போகலாம் என்று நினைக்கையில்.. அம்மணி.. அந்த வண்டியில் ஏறி போனால் உங்கள் வண்டி (சுவிஸ் நாட்டில் அவர்களின் சகோதரியை பார்த்ததில் இருந்தே அம்மணி என்னிடம் கூட இலங்கை தமிழில் தான் கதைக்கின்றார்கள் ) எப்போது குறையும்.. நடையை கட்டுங்கள் என்று ஒரு ஆணை இட்டார்கள்..
சென்ற வாரம் " பாகுபலி" படத்தின் ட்ரைலர் பார்த்ததோ என்னவோ ... அந்த அரண்மனையின் நினைவு வந்தது. இந்த லூயிஸ் அரசன் படம் எனக்கு என்னமோ "புலிகேசியின் வடிவேல்" போல தான் தெரிந்தது. அதனால் தான் இந்த பதிவிற்கு இந்த தலைப்பு.
அங்கே இருந்த காவலாளி ..
உங்களுக்கு என்ன வேண்டும்...?
உண்ண ரொட்டி (பிரட் ) கூட இல்லை..
கொஞ்சம் பொறுங்கள் .... இளவரசியிடம் சொல்லுகிறேன் ...
இளவரசி அவர்களே .. பொது மக்கள்...
நானும் பார்த்தேன்..அவர்களுக்கு என்ன வேண்டுமாம்..
உண்ண ரொட்டி இல்லை என்று போராட்டம்..
ரொட்டி இல்லாவிட்டால் என்ன ? அவர்களை "கேக்" சாப்பிட சொல்லுங்கள் ..(Let them eat Cake ... "Qu'ils mangent de la brioche")
என்ற தெனாவட்டான பதில் கொடுத்த இளவரசி, இந்த பதில் இன்னும் சில நாட்களில் பிரெஞ்சு புரட்சியாக மாறும் என்று கனவிலும் நினைத்து இருக்க மாட்டார்கள்.
ஒவ்வொரு அறையாக கடக்க ஆரம்பித்தோம். மொத்தம் 700அரைக்கும் மேல் .. ஒரு தனி குடுமபத்திற்கு இவ்வளவு பெரிய இடம் தேவையா என்ற கேள்வி மனதில் வந்து கொண்டே இருந்தது.
அடுத்த அறையில் ... ஒரு நாற்காலி அதன் எதிரில் பூட்டு சாவியோடு ஒரு மேசை.
இது என்ன .. பூட்டு சாவியோடு?
ஒ.. இது ராஜாவின் "கணக்கு பிள்ளையின்" மேசை - நாற்காலி..
மனதில்.. ஒரு பெருமை...
ஒ.. ஒரு வேளை நானும் அந்த காலத்தில் பிரெஞ்சு நாட்டில் பிறந்து இருந்தால் இந்த அறையில் தான் இந்த நாற்காலியில் தான் என் காலத்தை கடந்து இருப்பேன் என்று நினைக்கையிலே ....
இந்த நாற்காலில் அமர்ந்த அனைத்து "கணக்கு பிள்ளைகளும்" "கணக்கு பிழைகளினால் " தலை வெட்டி கொலை செய்ய பட்டார்கள் என்று கேள்வி பட்டதும்..
"நல்ல வேளை நான் பிழைத்து கொண்டேன்" என்று பாடி கொண்டே அங்கே இருந்து வெளியேறினேன் .
மூத்த ராசாத்தி ஐரோப்பா பயணம் என்று சொன்னவுடனே பாரிஸ் நகரில் உள்ள ராஜ அரண்மனைக்கு போக வேண்டும் என்று ஆணையிட்டு இருந்தாள்.
அது சரி, இது பயண தொடர் தானே.. இங்கே எப்படி இந்த தலைப்பு ... ஒரு நிமிஷம் பொறுங்கள் .
இந்த இரண்டு படங்களையும் நான் பார்த்தது இல்லை, அதனால் இதை அந்த படங்களின் விமர்சனம் என்று நினைக்க வேண்டாம். இந்த அரண்மனையை பார்த்தவுடன் வந்தது தான் இந்த தலைப்பு.
பிரமாண்டம் ...
"Palace of Versailles " வெர்சலைஸ் அரண்மனை" என்று அழைக்கபடும் இந்த அரண்மனை 1722ல் இருந்து 1789 வரை கட்டப்பட்டு லூயிஸ் என்ற ராஜாவின் ஆளுகையில் இருந்தது. 67,000 சதுர மீட்டர் அளவில் கட்டப்பட்ட இந்த அரண்மனை ...அடேங்கப்பா.. "Vulgar Display of Welath" என்று சொல்லலாம். அப்படி இருந்தது.ஒரு மனிதனிடம் கஷ்டப்பட்டு சம்பாதிக்காத பணமும் புகழும் இருந்தால் என்ன என்ன விதத்தில் அதை செலவு செய்யலாம் என்பார்க்கான அடையாளம்.
இந்த ராஜா செய்த அட்டகாசத்தினால் தான் நேப்பொலியன் தலைமையில் 1799ல் புரட்சி நடந்தது. இந்த அரண்மனை தற்போது ஒரு பொருக்கட்சியாக மாற்ற பட்டு பொது மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கூறியது போல் காலையில் சிறிது தாமதமாக எழுந்து பின்னர் காலை உணவை முடித்து கொண்டு இங்கே கிளம்பினோம். பாரிஸ் நகரில் எனக்கு பிடித்த மற்றும் பிடிக்காத ரெண்டு விஷயங்கள்.
பிடித்த விஷயம்:
ரயல் மற்றும் பேருந்து வசதி.. 8-10 பொற்காசு கொடுத்து ஒரு டிக்கட் வாங்கி கொண்டால் போதும், எங்கே வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் போய் கொள்ளலாம் .
பிடிக்காத விஷயம்.; யாரை பார்த்தாலும் எங்கே பார்த்தாலும் புகை பிடிகின்றார்கள். இந்த புகை வாசனையினால் தலை வலி கண்டிப்பாக வந்து சேரும்.
இரண்டு ரயில் பிடித்து இந்த அரண்மனைக்கான ரயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்தோம். இரண்டு பக்கம் நல்ல மரங்கள் சூழ்ந்த ஒரு சின்ன தெரு. அதை தாண்டி.. இடது பக்கம் திரும்பினால்... அடேங்கப்பா.. எம்புட்டு பெரிய அரண்மனை .
அதனை நோக்கி நடக்க ஆரம்பித்தோம். வழியில் ஒரு குதிரை வண்டி ... அதில் ஏறி போகலாம் என்று நினைக்கையில்.. அம்மணி.. அந்த வண்டியில் ஏறி போனால் உங்கள் வண்டி (சுவிஸ் நாட்டில் அவர்களின் சகோதரியை பார்த்ததில் இருந்தே அம்மணி என்னிடம் கூட இலங்கை தமிழில் தான் கதைக்கின்றார்கள் ) எப்போது குறையும்.. நடையை கட்டுங்கள் என்று ஒரு ஆணை இட்டார்கள்..
வண்டி காத்த வண்டி...
இன்னும் சில நிமிடம் நடந்து பார்க்கையில் பெரிய வரிசை. நூற்றுகணக்கான மலக்கல் இதன் உள்ளே செல்ல காத்து கொண்டு இருந்தார்கள். அந்த வரிசையில் நாங்களும் சேர்ந்து ஒரு மணி நேரம் கழித்து அரண்மனையின் உள்ளே நுழைந்தோம்.சென்ற வாரம் " பாகுபலி" படத்தின் ட்ரைலர் பார்த்ததோ என்னவோ ... அந்த அரண்மனையின் நினைவு வந்தது. இந்த லூயிஸ் அரசன் படம் எனக்கு என்னமோ "புலிகேசியின் வடிவேல்" போல தான் தெரிந்தது. அதனால் தான் இந்த பதிவிற்கு இந்த தலைப்பு.
பார்க்க வடிவேல் போன்ற தோற்றம் ....
ஒவ்வொரு அறையும்... சொல்லி மாளாது..கோடி கணக்கில் செலவு செய்து கட்ட பட்டு இருக்கின்றது. 1770ல் பிரெஞ்சு நாட்டில் ஒரு பஞ்சம் வந்து மக்கள் வேலைக்கும் உணவிற்கும் அலைந்த போது.. பொது மக்கள் பலர் கூடி இந்த அரண்மனை வந்து ஒரு போராட்டம் நடத்தினார்கள்.அங்கே இருந்த காவலாளி ..
உங்களுக்கு என்ன வேண்டும்...?
உண்ண ரொட்டி (பிரட் ) கூட இல்லை..
கொஞ்சம் பொறுங்கள் .... இளவரசியிடம் சொல்லுகிறேன் ...
இளவரசி அவர்களே .. பொது மக்கள்...
நானும் பார்த்தேன்..அவர்களுக்கு என்ன வேண்டுமாம்..
உண்ண ரொட்டி இல்லை என்று போராட்டம்..
ரொட்டி இல்லாவிட்டால் என்ன ? அவர்களை "கேக்" சாப்பிட சொல்லுங்கள் ..(Let them eat Cake ... "Qu'ils mangent de la brioche")
என்ற தெனாவட்டான பதில் கொடுத்த இளவரசி, இந்த பதில் இன்னும் சில நாட்களில் பிரெஞ்சு புரட்சியாக மாறும் என்று கனவிலும் நினைத்து இருக்க மாட்டார்கள்.
ஒவ்வொரு அறையாக கடக்க ஆரம்பித்தோம். மொத்தம் 700அரைக்கும் மேல் .. ஒரு தனி குடுமபத்திற்கு இவ்வளவு பெரிய இடம் தேவையா என்ற கேள்வி மனதில் வந்து கொண்டே இருந்தது.
அடுத்த அறையில் ... ஒரு நாற்காலி அதன் எதிரில் பூட்டு சாவியோடு ஒரு மேசை.
இது என்ன .. பூட்டு சாவியோடு?
ஒ.. இது ராஜாவின் "கணக்கு பிள்ளையின்" மேசை - நாற்காலி..
மனதில்.. ஒரு பெருமை...
ஒ.. ஒரு வேளை நானும் அந்த காலத்தில் பிரெஞ்சு நாட்டில் பிறந்து இருந்தால் இந்த அறையில் தான் இந்த நாற்காலியில் தான் என் காலத்தை கடந்து இருப்பேன் என்று நினைக்கையிலே ....
இந்த நாற்காலில் அமர்ந்த அனைத்து "கணக்கு பிள்ளைகளும்" "கணக்கு பிழைகளினால் " தலை வெட்டி கொலை செய்ய பட்டார்கள் என்று கேள்வி பட்டதும்..
"நல்ல வேளை நான் பிழைத்து கொண்டேன்" என்று பாடி கொண்டே அங்கே இருந்து வெளியேறினேன் .
கணக்கு பிள்ளையின் நாற்காலி ..
அடுத்த அரை... ராஜாவின் படுக்கை அரை.... அந்த அறையின் சுவற்றில் ஒரு அம்மணியும் படம் தொங்குவதை பார்த்து...
இந்த அம்மா யாரு?
ஒ.. இவர்கள் ராணியின் அம்மா.. ராஜாவின் மாமியார் ?
என்னடா ராஜா, இந்த ஆள்?. மாமியாரின் படத்தை படுக்கை அறையில் யார் வைப்பார்கள்... ஒரு வேளை "வீட்டோடு மாப்பிளையா" என்று சற்று பொறாமையோடு நடந்தேன்.
இவ்வாறாக அணைத்து அறையும் பார்த்து முடித்து விட்டு வெளியே வரும் போது இரு கால்களும் சோர்ந்து விட்டன..
வாங்க நேர போய் ரயிலில் ஏறி ஹோட்டலுக்கு போகலாம்.
இவ்வளவு சீக்கிரமா ?
இங்க தான் எல்லாத்தையும் பார்த்து ஆகிவிட்டதே...
இது அரண்மனை தாங்க.. வெளியே போய் இந்த அரண்மனையின் தோட்டத்தை பார்க்கலாம் ... வாங்க...
அது எவ்வளவு பெரிசு... ?
தெரியில ..நடங்க.. நடங்க;;. வெளியே சென்று பார்த்தால் அரண்மனையை விட பெரிய தோட்டம்...
தோட்டத்தில் ஒரு சிறிய பகுதி
நல்லா தான் வாழ்ந்து இருக்கான் இந்த ராசா .. என்று நினைத்து கொண்டே
அந்த தோட்டத்தையும் முடித்து விட்டு.. ரயில் நிலையம் வந்தோம்.
சீக்கிரம் போய் ஏதாவது சாப்பிட்டு தூங்கலாம் ...
டாடி... நம்ம இருப்பது பாரிஸ்.. இங்கே Hard Rock Cafe என்ற இடதில் தான்
நம்ம சாப்பிட வேண்டும் என்று ஆணையிட..
அந்த இடம் எங்கே இருக்கு ...
இங்கே இருந்து 2 பேருந்து ஒரு ரயில் தான் கிளம்புங்க..
சரி என்று கிளம்பி அங்கே வந்தோம்...
சீக்கிரம் சாப்பிட்டு கிளம்புங்க...
Hard Rock Cafe ...Paris
என்ன அவசரம்..
நாளை இங்கு இருந்து ஜெர்மனி நாட்டு தலைநகரான பெர்லினுக்கு பயணம் ..
அறைக்கு வந்து ஜன்னலை திறந்தால் ....Eiffel கோபுரம் வண்ண விளக்குகளால் மின்னி கொண்டு இருந்தது...
எப்போது தூங்க போனேன் என்று தெரியாது...
பின் குறிப்பு :
காலையில் ..ஏங்க.. நேத்து ராத்திரி.. நான் இல்லை.. நான் இல்லை ன்னு கழுத்த கெட்டி பிடிச்சின்னு சத்தம் போட்டீங்க...
அப்படி ஒன்னும் இல்லை...
இல்ல ரெண்டு மூணு தரவை அந்த மாதிரி சொன்னீங்க..
கனவில் கணக்கில் பிழைவிட்டு கழுத்தில் கத்தி ஏறியதை அவர்களிடம் சொல்லவா முடியும் ..?
தொடரும்..
www.visuawesome.com
Paris aduthu Berlin aa. thodarungal...
பதிலளிநீக்குkutti history class eduthuttinga sir:)
செம ரவுண்டுனு சொல்லுங்க நண்பரே! அது சரி அந்தத் தோட்டத்துலதான் ராஜா, ரானி வாக்கிங்க் போயிருப்பாங்களோ!
பதிலளிநீக்குகணக்குப் பிள்ளைக்கே கணக்குல பிழையா!! ஹஹஹ
//பிடிக்காத விஷயம்.; யாரை பார்த்தாலும் எங்கே பார்த்தாலும் புகை பிடிகின்றார்கள். இந்த புகை வாசனையினால் தலை வலி கண்டிப்பாக வந்து சேரும்.// எங்களது இன்றைய இடுகை இதன் தொடர்புடையது....இனிதான் வெளியீடு....
நல்ல பயணம்....நாங்களும் தொடர்கின்றோம்...
பதிலளிநீக்குஅடேங்கப்பா...! வேறென்ன சொல்றது... அசத்தல்...
பதிலளிநீக்குஇந்த பரதேசியை விட்டுவிட்டு சென்று விட்டீர்களே?
பதிலளிநீக்குMel Brook's history of the world படம் ... அதுல ராஜா தோட்டத்தில தங்க வாளியில் piss அடித்து tips -யை வாளிக்குள்ளே போட்டது நினைவுக்கு வந்தது.
பதிலளிநீக்குhttps://www.youtube.com/watch?v=Db3e8Qw9hhs
பதிலளிநீக்குஅசத்தல் பயணம் நண்பரே
பதிலளிநீக்குதொடருங்கள்
தம +1
சுவாரஸ்யமாக சொல்கிறீர்கள்! செவி மடுக்கிறேன்! நன்றி!
பதிலளிநீக்குவணக்கம்,
பதிலளிநீக்குதங்கள் பயணம் அருமையாக தொடர்கிறது,,,,,
வாழ்த்துக்கள்.
நன்றி.
வணக்கம் அங்கிள்...ராகசூர்யா...(நான் செல்வா மகள்...என் வலை தளமும் வாருங்கள்.http://chinnavalsurya.blogspot.in/2015/11/blog-post.html..உங்கள் புத்தகம் படித்துப் படித்து எனக்கு அவ்வலவு ஜாலியா இருந்தது.நன்றி அங்கிள்
பதிலளிநீக்குரொம்ப சந்தோசம் ராகசூர்யா.. ரொம்ப சந்தோசம். என் புத்தகத்தை படித்து மட்டும் இல்லாமல் அதை பற்றி எனக்கு சொன்னதிற்கும். உங்கள் தளத்திற்கு இதோ செல்கிறேன். தொடர்ந்து எழுதுங்கள்.
நீக்குஉங்க அப்பா செல்வா பெயரில் எங்கள் வீட்டின் அருகே ஒரு தெருவே இருக்கு. அடுத்த முறை அங்கே போகும் போது ஒரு புகைப்படம் எடுத்து அனுப்புகின்றேன்.