கற்பனை தான்..
இதை படிக்கும் அனைவரும் தமக்கு அறிந்த ஒரு சிற்றூர் அல்லது கிராமத்தை மனதில் ஏற்றி கொண்டு படிக்க ஆரம்பியுங்கள். அடியேனின் மனதில் பருகூர் !
பெரியவரின் இல்லத்தில் நல்ல காரியம். ஆறு வருடத்திற்கு முன் பெரியவரின் மூத்த மகளின் திருமணம் நடந்ததை ஊரில் யார் தான் மறப்பார். அப்படி ஒரு திருமணம்.
ஊரின் எல்லையில் இருக்கும் காட்டில் இருந்து விறகு பொறுக்குபவர்கள் துவங்கி உள்ளே இருக்கும் ரெட்டி குடும்பத்தாரின் தங்க நகை வியாபாரிகள் வரை மகிழ்ந்த திருமணம்.
ஆறு வருடம் கழித்து பெரியவரின் இரண்டாம் மகளுக்கு நிச்சயதார்த்தம் சென்ற வாரம். ஊரே மீண்டும் மகிழ்ந்தது. இன்னும் நான்கு மாதத்தில் கல்யாணமாம். அதுவும் பருகூரிலே கல்யாணமாம். மாப்பிள்ளை பெரிய பெரிய படிப்பு படித்து இருந்தாலும், ஊரிலேயே செட்டில் ஆகி பெரியவரோட நஞ்சை புஞ்சையை சமாளிக்க போறாராம்.
ஊரே களை கட்டியது.