வேலை முடிந்து இல்லம் வந்து சேருகையில், இளையவள் அலறினாள்..
ரொம்ப பசிக்குது. ரொம்ப பசிக்குது...
நம்ம ராசி, இல்லத்தில் அம்மணி இருந்ததால்...
எனக்கும் தான் பசி.. உங்க அம்மாட்ட சொல்லி ஏதாவது மாலை டிபன் செஞ்சா எனக்கும் ரெண்டு வாய் செய்ய சொல்லு..
என்று சொல்லி விட்டு...
அடே டே.. இந்தியாவில் இருக்கும் போது இப்படி "மாலை பசி" வந்தால், அப்படியே பக்கத்துல இருக்க கடைக்கு போய் , ஒரு பஜ்ஜி, போண்டான்னு ஏதாவது வாங்கி சாப்பிடலமாமேனு நினைத்து கொண்டே, கணினியை தட்டி, இசை உலகில் இறங்கி விட்டு, மின்னஞ்சலையும் முகநூலையும் பார்த்து கொண்டு இருக்கையில், அம்மணி மேசைக்கு அருகில் வந்து அமர..இளையவளோ..
I said, I am Hungry என்று மீண்டும் அலறினாள்.
இப்ப என்ன செய்யுறது.. வேனும்னா அங்கே நாலு வாழை பலம் இருக்கு, அதுல ஒன்னு சாப்பிடு,
எனக்கு வாழை பழம் வேண்டாம்.. வேணும்ன்னா அதுல ஒரு ஸ்வீட் செய்வீங்களே அதை செய்யுங்க, ப்ளீஸ் என்று சொல்லி விட்டு விலகினாள்.
ஏங்க.. பிசியா?
சே சே.. நான் போய் .. எப்படி பிசி..
எனக்கு ஒரு உதவி வேணும்..
சொல்லு...
இவளுக்கு அந்த வாழைப்பழ பலகாரம் வேணுமாம்.
அதுக்கு நான் என்ன உதவி செய்யணும்.
போன முறை நீங்க தானே செஞ்சீங்க..
ஆமா.. இப்ப நான் செய்யணுமா? ரொம்ப டயர்ட்...
சரி.. எனக்கு கூட மாட கொஞ்சம் உதவி செய்யுங்க.. நானே செய்யுறேன்.
என்று சொல்லி அருகில் ஒரு நாற்காலி போட்டு அமர்ந்தார்கள் .
ஒரு பாத்திரம் கொடுங்களேன்..
இந்தா...
இது பிளாஸ்டிக் வேணாம் , எவர் சில்வர் தாங்க...
Whats the difference?
அப்புறம் சொல்லுறேன்..
அந்த வாழ பழத்தை தாங்களேன்..
தந்தேன்.
நாலு வேணாம்.. மூணு போதும், அது மட்டும் இல்ல, ஒன்னு ரொம்ப பழுத்துட்டு இருக்கு, நீங்க சாப்பிடுங்க, இல்லாட்டி குப்பையில் தான் போடணும்.
மனதில்..
அட பாவி, குப்பையில் போட வேண்டியதை உன் தொப்பையில் போடுகின்றார்களே விசு என்று நொந்து கொண்டே...
வேணாம்.. அதையும் அந்த பலகாரத்திலே போடு, கொஞ்சம் எக்ஸ்டரா செய், பரவாயில்லை.
ஏங்க..
சொல்லு...
கொஞ்சம் பட்டர்...
கொடுத்தேன்..
ஏங்க..
சொல்லு...
கொஞ்சம் கோதுமை மாவு..
இதோ..
என்னங்க? கோதுமை மாவை கேட்டா கூடவே ரெண்டு முட்டையோட வரீங்க?
அடுத்து அதுக்கு தானே அனுப்புவ?
சரி, தேங்க்ஸ்..நெக்ஸ்ட் என்ன வேணும்ன்னு சமத்தா எடுத்து கொடுங்க..
சக்கரை, மற்றும் ஏலகாய் தூள் எடுத்து வந்தேன்.
எல்லாவற்றையும் ஒன்றாக போட்டு சிறிது நீரும் ஊற்றி அம்மணி அதை நன்றாக பிசைய..
மாவும் திரண்டு வந்தது.
ஏங்க..
சொல்லு..
எல்லாத்தையும் நானே ரெடி பண்ணிட்டேன்.. கொஞ்சம் கடாயில் போட்டு போண்டா மாதிரி எடுத்துடுங்க.
எல்லாத்தையும் நீ ரெடி பண்ண? என்று சொல்லி கொண்டே, ஒரு சிட்டிகை உப்பையும் போட்டு விட்டு..
சரி, என்று நொந்து கொண்டே அடுப்பின் அருகில் செல்கையில்.
ஏங்க...
சொல்லு..
ஒரு கடாய் வைச்சி கொஞ்சம் எண்ணெய் ஊத்துங்க.
சரி...
சொல்லி விட்டு செய்தேன்.
நான் வேணும்னா அதை அடுப்பில் போடுறேன்..அந்த இடத்தை மட்டும்
கொஞ்சம் கூட்டி துடைச்சிடுங்க...
எந்த இடம்?
அந்த மாவை மிக்ஸ் பண்ண இடம். கீழே கொஞ்சம் மாவு மாவா இருக்கு பாருங்க..
ஓகே.
கூட்டி தான் துடைக்குறீங்க.. அப்படியே முழு வீடையும் துடைச்சிடுங்க?
சரி.
மனதில், இதுக்கு அவ பசின்னு சொன்னவுடன் நானே ஏதாவது செஞ்சி தந்து இருக்கலாம்.
I am very hungry, and whats happening here.!
இதோ ரெடி என்று அம்மணி தட்டில் கொடுத்தார்கள்.
வாவ்...Thats so fast Mumma, you are the best என்று என்னை ஒரு கேவலமான பார்வை பார்த்து விட்டு அவள் அறையை நோக்கி செல்ல..
ஏங்க..
அடுப்பை சுத்தம் பண்ணனுமா?
சே.. சே.. என்னங்க.. எப்ப பாரு உங்களை வேலை வாங்கினே இருக்க.. நான் என்ன அவ்வளவு கொடுமைகாரியா?
பின்ன என்ன சொல்லு?
ரெண்டு பலகாரம் சாப்பிடுங்க..
என்று பரிமாற..சாப்பிட்டேன்.
ஏங்க..?
இப்ப தானே சாப்பிட்டேன், ரெண்டு நிமிஷம் கொடு பிளேட்டை கழுவிடுறேன்.
அது இல்லேங்க...
சொல்லு..
இந்த பலகாரம் எங்க இலங்கையில் செய்ய மாட்டோம். கல்யாணத்துக்கு அப்புறம் தான் கத்துக்குனேன். உங்கள்ட்ட இருந்து.
யு ஆர் வெல்கம்.
இத நீங்க எப்ப கத்துக்குனீங்க..
சின்ன வயசுல.. எனக்கு தான் சமையல் ரொம்ப பிடிக்குமே.. கையில் காசு இல்லாத நேரத்தில் இது தான் ஆபத்வந்தவான்.
இவ்வளவு நல்லா இருக்கே, இதுக்கு என்னங்க பேரு?
சொன்னா சிரிப்ப?
சொல்லுங்க..
சோம்பேறி பலகாரம்.
பீ சீரியஸ். என்னங்க பேரு ?
உண்மையாவே சோம்பேறி பலகாரம் தான்.
ரியலி..? ஏங்க அதுக்கு இப்படி ஒரு வித்தியாசமான பேரு?
இவ்வளவு வருசமா நானும் இதுக்கு ஏன் இப்படி ஒரு பேருன்னு யோசித்தேன் , இன்னைக்கு தான் தெரிஞ்சது?
உங்களுக்கு தெரிஞ்சதை சொல்லுங்க.
ஒரு இடத்தில ஆடமா அசையாமா நிதானமா உக்காந்ததுன்னே, பக்கத்துல இருந்த என்னை வைச்சி எல்லா வேலையும் வாங்கின்னு செஞ்ச பாரு.. அது தான் .
பின் குறிப்பு:
அது ஏன் பிளாஸ்டிக் வேணாம். எவர் சில்வர்?
கோதுமை மாவு பிளாஸ்டிக் பாத்திரத்தில் ரொம்ப ஒட்டிக்கும். அப்புறம் நீங்க கழுவ கஷ்ட படுவீங்க. எவர் சில்வர் பாத்திரம் ரொம்ப ஈஸி. அது தான்.

சரிதான் சோம்பேறி பலகாரம் செய்யுமுறையா? பின்குறிப்பு சூப்பர், நல்ல அனுபவசாலிதான் போல.
பதிலளிநீக்குReally awesome. Am reading all your posts now. Keep rocking!
பதிலளிநீக்குThank you very much for your compliments. Glad that you are going to read the other posts. Keep the comments coming! Really looking forward to read them.
நீக்கு//அட பாவி, குப்பையில் போட வேண்டியதை உன் தொப்பையில் போடுகின்றார்களே விசு என்று நொந்து கொண்டே...// //Thats so fast Mumma, you are the best என்று என்னை ஒரு கேவலமான பார்வை பார்த்து விட்டு// //கூட்டி தான் துடைக்குறீங்க.. அப்படியே முழு வீடையும் துடைச்சிடுங்க? //என்று வாய்விட்டு சிரித்த இடம் பல.
பதிலளிநீக்குவழக்கம் போல அருமையான நடை! கதை சொல்ல விசுவுக்கு நிகர் விசுவே!
நல்லா நகைச்சுவை பதிவு.
பதிலளிநீக்குமுட்டை கலந்த அப்பமா?
கூட மாட வேலை செய்து சாப்பிட்டது அதற்கு பேர் வைத்தது எல்லாம் அருமை.
அப்ப நீங்களே செய்யலாம் மாவிளக்கு.