ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2018

என்ன சத்தம் இந்த நேரம்?

என்ன டாடா?  இப்ப எல்லாம் நீங்களும் அம்மாவும் வீட்டுல சண்டையே போடறதில்லையாமே..

சிரிப்போடு கேட்டாள் வார இறுதிக்கு  இல்லம் வந்த மூத்தவள்.

என்னது... நானும் அம்மாவும் சண்டை போட்டோமா? நாங்க எங்க வாழ்க்கையில் இது வரை சண்டை போட்டதே இல்லை... நீ என்ன புது கதை சொல்ற?

வாவ்... நீங்க சண்டை போட்டதே இல்லை!?  நான் வீட்டுல இருக்கும் போது ஒரு நாளைக்கு அஞ்சு முறையாவது அம்மா உங்களை சத்தம் போடுவாங்களே..

ஆமா ... அதுக்கு என்ன இப்ப?

அப்புறம் சண்டை போடுறதே இல்லைனு சொன்னீங்க...?

நான் பெத்த ராசாத்தி.. ஒரு சண்டை போடணும்னா அதுக்கு ரெண்டு பேரும் சத்தம் போட்டு பேசணும். இங்கே அம்மா மட்டும் தான் என்னை சத்தம் போடுவாங்க.. இதுக்கு பேர் சண்டை இல்ல.."Domestic  Violence ".நீ பிறந்து உன்னை முதல் முதலா தூக்குனனே..அப்ப தான் உங்க அம்மா என்னை சத்தம் போட  ஆறாம்பிச்சாங்க ..

சரி,..அப்படியே இருக்கட்டும்.. இப்ப எல்லாம் அம்மா உங்களை சத்தம் போடறதில்லையாமே.. சின்னவ சொல்றா?

நான் நோட் பண்ணவே இல்லை.. நீ சொன்னவுடன் தான் கூட்டி கழிச்சி பார்த்தேன். கொஞ்சம் கம்மியாகி இருக்கு.

அது தான் ஏன்.. எப்படி.. எதுக்கு... நான் காலேஜ் போகிறதுக்கு முன்னாலே வீட்டிலே இருக்கும் போது எப்போதும் சத்தம் போடுவாங்களே.. என்ன ஆச்சி..



என்ன ஆச்சியா? கேள்விலேயே தான் பதில் இருக்கே...

புரியல..

நீ தான் இப்ப இங்கே இல்லையே.. தனியா வேற வீட்டுல இருக்கியே.. அது தான்.

இப்ப எனக்கு நிஜமாவே  புரியல..

ராசாத்தி.. நானும் சரி உங்க அம்மாவும் சரி... எதுக்கு சண்டை போடணும்? ஆண்டவன் புண்ணியத்தில் நல்ல வேலை. வேலைக்கு  ஏத்த ஊதியம். மத்த  படி ஒரு நல்ல ஊரில் ஒரு நல்ல வாழ்க்கை. ரெண்டு பேருக்குமே.. இந்த TV பாக்குற பழக்கம் கிடையாது. குடி - சிகரெட் - ஊதாரித்தனம் - சோம்பேறித்தனம்  - கிசு கிசு -  வீண் செலவு  அப்படி எதுவும் கிடையாது..

அப்படி இருக்கும் போது .. நான் வீட்டுல இருக்கும் போது அம்மா ஏன் உங்களை சத்தம் போடுவாங்க.. எனக்கு இன்னும் உங்கள் பதில் தெரியல..

அம்புட்டு சத்தமும் உன்னால தான் மக..

வாட்... !!!?

மக.. ஒரே ஒரு நாளை எடுத்துக்கோ... நீ இங்கே இருக்கும் போது..

போது ..!?

காலையில் அஞ்சி மணிக்கு உன் ரூமில் அலாரம் அடிக்கும்.. நீ அதை அணைச்சிட்டு திரும்பவும் தூங்க போயிடுவ..

அதுக்கு...?

அங்கே தான் எனக்கு திட்டு  ஆரம்பிக்கும்..

ஏங்க ,., அவ அலாரத்தை ஆப் பண்ணிட்டு தூங்கினு இருக்கா.. நீங்களும் குறட்டை விட்டுணு.. அவளை போய் எழுப்புங்க.. என்ன வளத்து வச்சி இருக்கீங்களோ...

நான் எழாததுக்கு உங்களை திட்டுவாங்க ... ஆமா.. இப்பதான் தெரியுது..

அது தான் ஆரம்பம்..

ஏங்க ...அவ பாருங்க.. டிபன் சாப்பிடாம அப்படியே கிளம்புறா. நீங்க என்ன பண்றீங்க. போங்க.. மட மடன்னு போய் டிபன் பண்ண சொல்லுங்க.. கொஞ்சமாவது உங்களுக்கு பொறுப்பு வேணாமா...

ஓ...ஆமா.. அதுக்கு உங்களை டைய்லி திட்டுவாங்க..

அப்புறம் நீ போனவுடன்..

அந்த ஈர டவலை அப்படியே தரையில் போட்டுட்டு போய் இருக்கா.. என்ன வளத்து வச்சி இருக்கீங்களோ..

அப்புறம்..

மதியம் லஞ்சு பெட்டியை மறந்துட்டு போய்ட்டா.. இந்த மாதிரி சின்ன சின்ன விஷயத்தில் அப்படியே உங்கள மாதிரி வளர்ந்து இருக்கா..

ரியலி...

இம்புட்டு திட்டையும் வாங்கின்னு நான் வேலையில்  போய் உக்காருவேன்.. அப்ப போன் வரும்.

அது ரெண்டு மூணு தடவை தான் நடந்து இருக்கு..அப்புறம்..

அவசரமா காசு வேணுமாம்... உடனே பாங்கில் போட சொல்றா.. கொஞ்சம் கூட பொறுப்பு இல்ல..

சரி..சாயங்காலம்..

ஏங்க.. அவ காலையில் ரூமுல பேன் லைட் எதையுமே ஆப் பண்ணாம போய்  இருக்கா..

ஏங்க.. இன்னைக்கு பியானோ க்ளாஸ் . ...மறந்துட்டாளா , அவங்க டீச்சர்  என்னை கூப்பிட்டாங்க.

ஏழு மணியாக போது.. என் போன் அன்ஸ்வர் பண்ண  மாட்டுறா...

அப்புறம்..

நீ வந்தவுடன்..

ஏங்க.. அப்படியே செருப்போடு ரூமுக்கு போறா..

கார் கதவை சரியா மூடல...

சாப்பிடாம, ஹோம் ஒர்க்குனு உக்காந்து இருக்கா..

பியானோ பிராக்டிஸ் பண்ணல...

கொஞ்சமாவது வீட்டுல உதவி செய்யலாம் இல்ல..

அப்புறம்..

இம்புட்டு திட்டு வாங்கின்னு நான் சோகமா தூங்க போவேனா..

அவ்வளவு தானா?

வெயிட்.. ராத்திரி ஒரு மணி போல்...

ஏங்க..

சொல்லு..

அவ இன்னும் தூங்காம என்னமோ ஹோம் ஒர்க்குன்னு இருக்கா.. நேரம் காலம் கொஞ்சம் கூட தெரியாதவ .. போய் தூங்க சொல்லுங்க...

அப்புறம்..

திரும்பவும் காலையில் உன் அலாரம்.. அதுக்கு சத்தம்..

ஆமா டாடா..  மேக்சிமம் திட்டு என்னால தான்... சாரி..

இப்ப கூட கொஞ்சம் திட்டு விழுது... உன் தங்கச்சி மூலமா... இன்னும் ரெண்டே வருஷம் அவளும் காலேஜ் போனவுடன்.. எனக்கு திட்டே விழாது.


ஆல் தி பெஸ்ட்!   

6 கருத்துகள்:

  1. திட்டு வாங்கவில்லை என்றால்... "சே... என்ன வாழ்க்கை...!"

    பதிலளிநீக்கு
  2. தம்பி விசு நீ நம்புனா நம்பு நம்பாட்டி போ , எங்க வீட்டிலும் இதே கதைதான், இதே காரணம்தான், அதே திரைக்கதை வசனம்தான் அதே ரெண்டு ராசாத்திகள்தான். ஆனா திட்டுறது நானு வாங்குறது என் மனைவி .

    பதிலளிநீக்கு
  3. My daughter says, some one who has come home has posted this :-)

    I am sharing this with your permission

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...