Thursday, June 14, 2018

நூதன திருடர்கள் - சாக்கிரதை!

மூத்தவள் முதல் வருடம் கல்லூரியில் சேர்ந்து ஒரு வருடம் முடிய, நம்மில் அனைவருக்கும் உள்ள அதே பிரச்சனை அடியேனுக்கும் வந்தது.,

இங்கே பொதுவாகவே முதல் வருடம் விடுதியில் தங்கி படித்தாலும் இரண்டாம் வருடத்தில் இருந்து வெளியே தங்க வேண்டிய நிர்பந்தம் வரும்.
சில கல்லூரிகளில் அவர்களே இடம் இல்லை, கல்லூரி விதி முறைகள் அவ்வாறு என்பார்கள். மற்றும் சில இடங்களில் கல்லூரியில் இடம் இருந்தாலும் பிள்ளைகள் தமக்கு விடுதியில் இருக்க பிடிக்கவில்லை என்று அடம் பிடிப்பார்கள்.

நம் மூத்தவள் தான் அடம் பிடிப்பதில் முனைவர் பட்டம் பெற்றவளாயிற்றே. நான் வெளியே தான் இருப்பேன் என்று அடம் பிடிக்க..

இரண்டு மாதத்திற்க்கு முன் அவளுக்கு வீடு தேடும் படலம் ஆரம்பித்தது. தனியாக ஒரு பெட் ரூம்  கொண்ட அபார்ட்மெண்டிற்கு கிட்டத்தட்ட 1200$ ல் இருந்து 1800 $ வரை என்று அறிந்த நான் பேய் அறைந்தவன் போல் ஆனேன் என்பதை சொல்லவும் வேண்டுமா?

டைட்டானிக் கப்பலில் மாமியாரை அனுப்பிவைத்த மருமகன் போல் அமர்ந்து இருந்த என்னிடம் அம்மணி..

என்னங்க.. டைட்டானிக் கப்பலில் ஒன் வே டிக்கட் எடுத்த மாதிரி சோகமா இருக்கீங்க?

இல்ல.. இவ விடுதியில் இருந்து வெளியே வரேன்னு சொல்றா?

அதுக்கு..

மாசத்துக்கு 1500$ ஆகும் போல இருக்கு..

அதுக்கு ...?

எனக்கு ஒண்ணாம் க்ளாசில்  இருந்து மாஸ்டர்ஸ் வரைக்கும் மொத்தமாவே இம்புட்டு ஆகல, சாப்பாட்டையும் சேர்த்து...

இந்த புலம்பலை விட்டுட்டு ஆகுற வேலைய பாருங்க..

அடுத்த நாள்.. வேலையை முடித்து வீடு திரும்புகையில், அம்மணி..

இவளோட வீடை பத்தி என்கூட வேலை செய்யுறவங்க ஒருத்தவங்கள்ட பேசினேன்..

காலேஜில் இருந்து எடுத்துடுன்னு சொன்னார்களா?

உங்க வாயில ..

சொல்லு..

வாடகை வீட்டுக்கு பதிலா சின்னதா ஒரு வீடே வாங்கிடுன்னு சொல்றாங்க..

உன் வாயில... நானே டென்ஷனில் இருக்கேன் .. இப்ப தமாஷ் பண்ணாத..

இல்லேங்க.. நிஜமாத்தான்.. And it makes sense!

சொல்லு..

சின்னதா ஒரு வீடை வாங்கி போட்டுட்டா.. நாலு வருஷம் அவ அங்கே தங்கி படிப்பா.. அஞ்சாவது வருஷம் அந்த இடமே இஷ்ட பட்டா அங்கேயே இருப்பா.. இல்லாட்டி வீடை வித்துடலாம் .

அதே இது கூட நல்லா இருக்கே.. கணக்கு பிள்ளை நான் கூட இப்படி யோசிக்கலையே.. உனக்கு யாரு இந்த ஐடியா  கொடுத்தது?

எங்க ஆபிசில் வேலை செய்யற கணக்கு பிள்ளை தான்.

ஓ.. இங்கே படிச்சவரா இருக்கும்!

உடனடியாக வீடு தேடும் படலம் துவங்க..

அமெரிக்காவில் மிகவும் எளிதாக வாங்க கூடிய விஷயம் ரெண்டு. ஒன்று கார். இரண்டாவது வீடு. காட்டிய இடத்தில கை  எழுத்து போட ஒரே மாதத்தில் புதிதாக கட்டிய ஒரு 3பெட் ரூம்  வீடு கிடைத்தது. கல்லூரியில் இருந்து இரண்டு கல்  தூரம் மட்டுமே.

முதல்- வட்டி -லொட்டு -லொசுக்கு என்று மாதம் மூவாயிரம் சொச்சம் வர.. .

டாடி..என் கூட படிக்கிற என் பிரென்ட் ஒருத்தி வீடை பார்த்தா.. நம்ம ஒரு ரூம் வாடகை விடுவோமான்னு கேக்குறா..

உனக்கு பிரச்சனை இல்லையா?

நோ.. எனக்கு தேவை ஒரு ரூம் தான்.. கொடுங்க..

ஒரு ரூமை மாதம் 1000$க்கு அவளுக்கு தர, மாத செலவு கம்மியானது.

ராசாத்தி, இன்னொரு ரூமையும் ..

கொடுங்க.. லோக்கல் வெப் சைட்டில் விளம்பரம் தாங்க.. உடனே போயிடும்.

கொடுத்தேன்.

Looking for Female Housemate,Preferably Student , Under 21 (ஏன் 21 வயசுக்குள்ள என்பதை அப்புறம் சொல்றேன்)  ) to share house with two other female Students.

இரவு 9 மணிக்கு விளம்பரம் வெளியிட.. காலை ஆறு மணிக்கு ஒரு டெக்ஸ்ட் .

அந்த வீடு விளம்பரம் நீங்கள் தானே தந்தீர்கள்,  அந்த வீட்டை பற்றிய மேலும் பல விவரங்களை என் மகளுக்கு இந்த ஈ மெயில் விலாசத்திற்கு அனுப்ப முடியுமா?

சந்தோசம்  தங்க முடியவில்லை. அப்பாடா.. மாச செலவு குறைஞ்சதுன்னு   நினைத்து கொண்டு.. அந்த மகளுக்கு  விவரமாக எழுதினேன்.

ஒரு மணி நேரத்தில் பதில் வந்தது.

ஓ மைகாட்.. என்னாலே நம்பவே முடியல.. இப்படி தான் ஒரு வீடு எதிர்பார்த்தேன். நானும் கல்லூரி மாணவி தான். இப்போதுஒரு ப்ரோகஜக்ட் செய்ய அலாஸ்கா வந்துளேன். இங்கே தோலை பேசி இன்டர் நெட் வசதி அதிகம் இல்ல. அந்த ரூம் எனக்கு அவசியம். உடனடியாக அப்பாவிடம் சொல்லி பணம் அனுப்புகிறேன்.. விலாசம் தரவும் என்று சொல்ல..

நானும் விலாசம் அனுப்பினேன்.

உடனடியாக பணமும்  வந்தது ...

தொடரும்  ...


அடுத்த பாகத்தை படிக்க இங்கே சொடுக்கவும் 

1 comment:

  1. ஆஹா போகிற போக்கைப்பார்த்தால் வீட்டு வாடகையே இல்லாமல் போக வாய்ப்பிருக்கும் போலத் தெரியுதேதெரியுதே.

    ReplyDelete

www.visuawesome.com

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...