சனி, 16 ஜூன், 2018

நூதன திருடர்கள் - சாக்கிரதை! (தொடர்ச்சி 2)

ஆரம்பத்தில் இருந்து படிக்க இங்கே சொடுக்கவும் 

முந்தைய பதிவை  படிக்க இங்கே சொடுக்கவும்.

என்னடா இது? கும்புட போன தெய்வம் குறுக்கால வந்த மாதிரி.. இம்புட்டு பெரிய கல்லூரியில் பெரிய பெரிய படிப்பு படிக்கும் அம்மணி நம்ம பிள்ளையோடு தங்க போறாங்க..அவங்களிடம் இருந்து நம்ம பிள்ளை நிறைய விஷயம் கத்துக்கலாம்.

மகளுக்கு படிப்பும் ஆச்சி..
நமக்கு வாடகையும் ஆச்சி..ன்னு  ஒரு புன் முறுவலோடு..

மாச மாசம் வர வாடகையை ஒரு உண்டியலில் போடுறது போல தனியா ஒரு வங்கி கணக்கு ஆரம்பிச்சி.. அதை வைச்சி இன்னொரு வீடு வாங்கி.. அண்ணாமலை ரஜினி மாதிரி ஒரே பாட்டில் கோடீஸ்வரனாகிடலாம்னு

ஆண்டவன் படைச்சான் என்கிட்டே கொடுத்தான்...அனுப ....

என்று பாடுகையில்..

ஒரு டெக்ஸ்ட் வந்தது....

ஒரு சின்ன பிரச்சனை.. என்னுடைய கார் டிரான்ஸ்போர்ட் பணத்தை டெலிவரி சமயத்தில் தான் தரணுமாம். இப்ப தர முடியாதாம். நான் முதல் மாத வாடகை மற்றும் டெபாசிட் கூட இன்னும் ஒரு 1600  டாலர் சேர்த்து அனுப்புறேன். அந்த கார் டெலிவரி வரும் போது தயவு செய்து அதை அவர்களிடம் பணமாகவோ அல்ல காசோலையாகவோ கொடுத்துடுங்க. நன்றி.


இன்னாடா இது... இந்து நமக்கு தேவையா ? ன்னு கொஞ்சம் சளித்தாலும்.. சரி, நம்ம பொண்ணு இந்த மாதிரி வேற ஒரு ஊருக்கு படிக்க போய் நமக்கும் இந்த மாதிரி  உதவி தேவை பட்டா நாமும் இப்படி தானே யாரையாவது கேப்போம். அதுமட்டுமில்லாமல், அவங்க பணம்.. வாங்கி கொடுக்கணும்.. இதுல என்ன பிரச்சனை வரப்போகுது!

சரி.. நீங்க அனுப்புங்க.. நாங்க முடிஞ்ச அளவு உதவி செய்யுறோம்!

மிக்க நன்றி.. என்னால நம்பவே முடியல... நீங்க ரொம்ப நல்லவங்க..

என்று ஒரு டெக்ஸ்ட் வர..

நம்மை தான் முன்ன பின்ன யாருமே நல்லவங்கனு சொன்னது இல்லையே.. அந்த சந்தோஷத்தில்.. விசு, கடைசியா ஒரு ஆத்மா உன்னை புரிஞ்சினு இருக்கு.. என்னமோ போ என்று படுக்கைக்கு சென்றேன்.

காலையில்.. ஒரு டெக்ஸ்ட்..

செக் நேற்று கொரியர் சர்விஸில் அனுப்பியாகிற்று.. வந்தவுடன் டெக்ஸ்ட் பண்ணவும்..

பதிலுக்கு..நான்..

சந்தோசம், இருந்தாலும் இந்த செக்கை நான் வங்கியில் போடும் முன் உங்கள் முழு விலாசம் தேவை. ரென்டல் அக்ரீமெண்ட் போடாமல் இந்த செக்கை நான் வங்கியில் போட மாட்டேன்..

ரென்டல் அக்ரீமெண்ட் நான் அங்கே வந்தவுடன் கை எழுத்து போடுகிறேன்.. நீங்கள் செக்கை வங்கியில் டெபாசிட் பண்ணிவிடுங்கள். தேங்க்ஸ்.

அலுவலகத்தில் இருந்து இல்லத்திற்கு வந்தேன்.. செக் ஒன்று இருந்தது. எங்கிருந்து வந்தது என்று பார்க்கையில் ..அருகில் உள்ள அரிசோனா மாநிலத்தில் இருக்கும் ஒரு கம்பெனி கொடுத்த செக்.

உடனடியாக கூகிள் செய்து பார்த்து அந்த விலாசமும் கம்பெனியும் சரி என்று முடிவு செய்து..

சரி.. செக்கை நாளை போடுகிறேன்..

ஐயோ.. இன்னைக்கே போடுங்க.. அதுமட்டுமில்லாமல்.. செக்கை டெபாசிட் செய்தவுடன் எனக்கு ஒரு உதவி வேண்டும்..

என்ன உதவி?

கார் டெலிவெரியில் சற்று பிரச்சனை. நான்  அங்கு வந்து பார்த்து கொள்கிறேன். எங்க அப்பா 1600  டாலர் அதிகமா அனுப்பி இருக்கின்றேன் என்று சொன்னார். அந்த 1600 எனக்கு மிகவும் அவசரமாக தேவை படுகின்றது. நீங்கள் அதை வங்கியில் இருந்து வித்ட்ரா  செய்து நான் சொல்லும் வங்கி கணக்கில் இன்றைக்கே போட்டு விடுங்கள். அதை வைத்து தான் நான் விமான டிக்கட் வாங்க வேண்டும் .நீங்கள் போடா விட்டால் நான் ஜூன் 20  அங்கே வர முடியாது.

இதை படித்தவுடன் தான் பளீச் என்று பல்ப் எரிந்தது.

தொடர்ச்சியை படிக்க இங்கே சொடுக்கவும்..

3 கருத்துகள்:

  1. நீங்கள் ஏமாறவில்லை என நினைக்கிறேன்

    பதிலளிநீக்கு
  2. ஆஹா.புரிஞ்ச மாதிரியும் இருக்கு புரியாத மாதிரியும் இருக்கு.நல்லவங்கன்னு புகழ்ந்தா கொஞ்சம் ஜாக்கிரதையாத்தான் இருக்கனுமோ

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...