புதன், 17 டிசம்பர், 2014

அச்சச்சோ புன்னகை ....

என்னா விசு ? கோழிய அடிச்சி கொழம்பு கொதிக்கும் வாசனை வரும் போது தானே எழுவ? இப்ப எல்லாம் கொஞ்ச நாளா கோழி கூவும் போதே எழுறியே என்ன விஷயம்?

அது எல்லாம் ஒன்னும் இல்ல? நான் எப்போதும் போல தான் காலையில் ஐந்து மணிக்கு தான் எழுறேன்.

டேய், எனக்கு ஏற்கனவே காது குத்தியாச்சி, இதில் நீ வேற..
உண்மைய சொல்லு..

மச்சி, இந்த மாதிரி பொதுவா "உண்மைய சொல்லுன்னு" யாராவது கேட்கும் போது ரொம்ப ஜாக்கிரதையா பதில் சொல்ல வேண்டும். அவங்க எதோ கேட்க போய் நம்ப நம்மை பற்றிய தேவையில்லாத விஷயத்தை எல்லாம் போட்டு உடைச்சிடுவோம்.

சரி, நீ விஷயத்திற்கு வா, என்ன விஷயம்? இப்ப எல்லாம் காலையில் 5 மணிக்கு எழுந்து வெளிய போற?

சம்பத்து.. எனக்கு ஆயிரம் வேலை இருக்கும்..அதில் உனக்கு என்ன பிரச்சனை?



இல்ல நானும் ஒரு மாதமா பார்கின்றேன், நீ காலையில் எழுந்து உமா படிக்கின்றாளே அதே டைப்பிங் வகுப்பு நடக்கும் இடத்திற்கு போற. என்ன விஷயம்?



அட பாவி.. அது காலையில் 5 மணிக்கு நடக்கும் காட்சி ஆச்சே? நீ எப்ப எப்படி பார்த்த?

விசு.. ஒரு நாள் காலங்காத்தால இந்த புடுபுடுகாரன் வந்து போட்ட சத்தத்தில் தூக்கம் போய்டிச்சி. சரி, நேத்து இங்கிலாந்தில் நடந்த ஒன்டே டே கிரிகெட் மேட்ச் என்ன ஆச்சின்னு பேப்பர் படிக்க பக்கத்துக்கு டீ கடைக்கு போனேன். அப்ப தான் நீ வெள்ளையும் சொள்ளையுமா அவ பின்னாலே போறத பார்த்தேன்.

டேய், நீ இப்ப நான் எங்கே போறேன்னு கேக்குறியா? இல்ல நான் அவள் பின்னாலே ஏன் போறேன்னு கேக்குறியா?

அவளை பத்தி எனக்கு என்ன அக்கறை? நீ எங்கே போற?

சும்மா தான் வாக்கிங் , காலையில் நடப்பது ரொம்ப நல்லதுன்னு பெரியவங்க சொல்லி இருக்காங்க இல்ல...அது தான்.

விசு, அதே பெரியவங்க , பொய் சொல்றது நல்லது இல்லை என்றும் சொல்லி இருக்காங்க.. உண்மை ப்ளீஸ்!

மச்சி, நான் உண்மையாவே வாகிங் தான் போறேன். ஒரு வேளை, அவள் தான் என் பின்னாலே தினந்தோறும் வாராளா?

நல்லா கேட்ட போ, விசு. நான் தான் தினந்தோறும் பார்க்கின்றேனே, தினந்தோறும் காலையில் அவள் டைப்பிங் வகுப்பிற்கு செல்லும் போது நீ தான் அவளை தொடர்ந்து போற.

மச்சி, எனக்கு ஒரு உண்மை புரிந்து விட்டது.

என்ன விசு?

உனக்கு அவள் மேல் காதல், அங்கே நடுவில் நான் வந்து டீல் (அந்த காலத்தில் அதுக்கு பேர் டீல். இப்பதான் "கடலை" "பட்டாணி" என்ற புது புது வார்த்தைகள்) போட்டு விடுவேனா என்ற பயம்...

சீ ...சீ ... என்ன விசு... எனக்கு போய் அவள் மேல்..... ச்சே..... எப்படி விசு கண்டு பிடிச்ச?

டேய் முட்டாள், நான் காலையில் ஐந்து மணிக்கு அவள் பின்னாலே
போறேன்னு சொல்ற? ஆனால் நான் எங்கே போறேன்னு கூட தெரியவில்லை.

ஆமா, இதில் என்ன தப்பு? நீ எங்கே போறேன்னு என்னிடம் சொல்லிட்டா போற?

சரி, அவள் மட்டும் டைப்பிங் போறான்னு எப்படி தெரியும்?

அவள் கையில் தான் அந்த டைப்பிங் பேப்பர் அழகா சுருட்டி எடுதுன்னு போறா. அதனால் தான் அவள் டைப்பிங் போறான்னு தெரியும்.

மச்சி.. அவ கையில் பேப்பர் அழகா சுற்றி இருக்குன்னு சொல்ற? என் கையில் என்ன கொள்ளி கட்டையா எடுத்து கொண்டு போறேன்? அதே சுருட்டிய பேப்பர் தானே. அவள் பின்னால் போகும் என் கையில் உள்ள பேப்பரை கூட பார்க்க உனக்கு மனம் இல்லை..ஏன்னா, உன்னுடைய நோக்கம் எல்லாம் அவள் மேலே தான். ஆல் தி பெஸ்ட். எங்கிருந்தாலும் வாழ்க.

என்ன விசு இப்படி புட்டு புட்டு வச்சிட்ட?

இது என்ன கம்ப சூத்திரமா? நானும் உன்னை கொஞ்ச நாளா கவனித்து கொண்டு தான் இருக்கேன்... கோழியெல்லாம் நாள் முழுக்க வெளிய சுத்திட்டு சாயங்காலம் வீட்டிற்க்கு திரும்பி வரும் போது படுக்கைய விட்டு எழுற ஆள் நீ , இப்ப கொஞ்ச நாளா கோழி கூவறதுக்கு முன்னாலே  எழுறியே ... அதை வச்சி தான் சொன்னேன்.

சரி விசு .. இவ்வளவு நாள அவ பின்னாலே போறியே... சில நாட்களில் அவள் உன்னை பார்த்து சிரிக்கும் போது நீ ஏன் மூஞ்சை அந்த பக்கம் திருப்பி கொண்டு போற..

டேய், அதையெல்லாம் கூட கவனிச்சியா? 234 தொகுதியையும் தெரிந்து வச்சி இருக்கியே..

சொல்லு விசு..

அது ஒன்னும் இல்ல, அவள் அந்த மாதிரி சிரிக்கும் போது எனக்குள் எனக்கே தெரியாமல் வரும் வெட்கம் தான்..

விசு....!!!? (இதை சொல்லும் போது அவன் முகம் பேய் அறைந்ததை போல் மாறியது... பேய் அரை......................................................சொல்கிறேன்)

டேய்,, உணர்ச்சிவச படாத..நிதானமா கேளு. அவளுக்கும் எனக்கும் ஒரே வயது தான். ரெண்டு பெரும் ஒரே வகுப்பு தான். இருந்தாலும் அவ டைப்பிங் வகுப்பில் ரொம்ப சமத்தா  Higher  லெவெலுக்கு வந்துட்டா .. நான் இன்னும் அந்த முதல் வகுப்பில் சொல்லி கொடுத்த AFDFGF  மற்றும் LKJHJ  அங்கேயே தங்கிட்டேன். அது தான் அவள் என்னை பரிதாபமாக பார்த்து சிரிக்கும் போது எனக்கு வெட்கம் வந்துடும்.

அட பாவி.. இந்த AFDFGF விஷயம் எனக்கு இவ்வளவு நாளா தெரியாமல் போச்சே விசு?

ஏன், இதை எங்கேயாவது கேள்வி பட்டு இருக்கியா?

ஆமா விசு, போன வாரம் அவளிடம் ஒரு காதல் கடிதம் கொடுத்த போது..
அதை கிழித்துபோட்டு..

 "படிக்கிறது "AFDFGF" யாம் எழுதுறது ஷேக்ஸ்பியராம் " ன்னு சொல்லிட்டு போனா.

பின் குறிப்பு; அந்த புடுபுடுகாரனை இவன் வீட்டிற்க்கு அனுப்பியதே நான் தான். அதை பற்றி இன்னொரு முறை வேறொரு பதிவு இடுகின்றேன்.

www.visuawesome.com

11 கருத்துகள்:

  1. ஹஹஹஹஹ கீதாவும் துளசியும் இப்பதான் உங்க இந்த இடுகையை வாசிச்சு சிரிச்சு...ஹப்பா....முடிலப்பா...

    சபாஷ் போடனூம் நண்பரே! உங்கள் நரேஷன், அந்த நகைச்சுவை உரையாடல் சொல்லும் விதம்...அப்படியே சங்கிலி அடுக்கி அடுக்கி கோர்த்தார் போல சுவையாக, பட்டாசு சரவெடி போல் வருகிறது...அது ஒரு தனிக் கலை....அது உங்களுக்கு மிக அருமையாக வருகின்றது நண்பரே! அதற்குத்தான் அந்த சபாஷ்...ஹேட்ஸ் ஆஃப் டுயு னண்பரே!

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்
    தொடக்கம் முதல் முடிவு வரைநன்றாக உள்ளது உரையாடல்கள் பகிர்வுக்கு நன்றி
    த.ம3
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  3. ASDFGF ;LKJHJ தினங்கள் நினைவுக்கு வந்தன

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழ் பையா? மறக்க கூடிய நாட்க்களா அவை ! நம் (என் ) வாழ்வின் பொற்காலம் அல்லவோ!

      நீக்கு
  4. ஹா... ஹா... உங்கள் டீல் ரொம்பவே பிடிச்சிருக்கு...!

    பதிலளிநீக்கு
  5. டைப்ரைட்டரை தட்டிய காலங்களை நினைவு படுத்திய ரசமான பதிவு

    பதிலளிநீக்கு
  6. நானும் என் கல்லூரிக்காலத்தில் டைப் அடிக்க கற்றுக்கொள்ளப் போகிறேன் எனச் சொன்னதும் என் அப்பா ஊரில் டைப் பரிட்சைக்கு பீஸ் கட்டிவிட்டு கண்டிப்பாய் எழுதுன்னு சொன்னதும் அரைகுறையாய்ப் போய் பெயிலானதும் நினைவிற்கு வருகிறது.... அந்த மாஸ்டர் இன்னம் என்னை தேடிக்கொண்டிருப்பதாய் தகவல்... அவர் மூலமா பரிட்சை எழுதி பெயிலானது நான் மட்டுமே....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் டைபிங்ல் பைல் ஆனதற்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள் !

      நீக்கு
    2. குடுகுடுப்பைக்காரன் ....?

      நீக்கு
    3. ஐயகோ, இ(த்)தனை நாளா இதை தவறாக அல்லவா சொல்லி வருகின்றேன்! சுட்டி காட்டியதற்கும் வருகைக்கும் நன்றி !

      நீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...