புதன், 10 ஆகஸ்ட், 2016

சும்மா கிடந்த சங்கை....

அலை பேசி அலறியது...

ஹலோ..

வாத்தியாரே.. சீக்கிரம் கிளம்பு...

தண்டம்... கண்ணாலாமான புள்ள குட்டிக்காரன் நான்.. இந்த மாதிரி சனிக்கிழமை மதியம் தூங்குறது, குறிஞ்சி  பூ பூத்தமாதிரி பனிரெண்டு வருஷத்துக்கு ஒரு முறை தான்  வரும்... அப்புறம் பார்க்கலாம்...

 வாத்தியாரே... தூக்கம் எல்லாம் அப்புறம் பாத்துக்கலாம்... இன்னும் ரெண்டே நிமிசத்தில் அம்மணி உன்னை எழுப்பி அவசரமா கடைக்கு போக சொல்வாங்க .. சீக்கிரம் கிளம்பு...

பாணி.. எங்க வீட்டில நடக்குறது... உனக்கு... எப்படி?

என்று கேட்டு முடிக்கும் முன்...

ஏங்க...

சொல்லு...

கொஞ்சம்...

அவசரமா கடைக்கு போகணுமா?

எப்படி ... இவ்வளவு கரெக்ட்டா சொல்றீங்க...?

கிட்டத்தட்ட இருபது வருஷ பழக்கம்... அதுதான்...சொல்லு என்ன விஷயம்?

பக்கத்துல இருக்க அரபி சூப்பர் மார்க்கெட்டில் அருமையான கீரை வந்து இருக்காம்... கொஞ்சம்....

அது எப்படி உனக்கு தெரியும்?



இப்ப தான் தண்டபாணி கூப்பிட்டாரு... உங்களை கேட்டார்... நான் நீங்க தூங்குறீங்கன்னு சொன்னேன்...அப்ப தான் சொன்னார்... அவரும் கடைக்கு வராராம்.. கொஞ்சம் போய் வாங்கின்னு  வந்துடுங்க....

தண்டமே சொன்னான்னா?

அவரே கூப்பிட்டு சொன்னாருங்க..

அவனுக்கு தான் என்ன ஒரு நல்ல மனசு...

பத்து நிமிடம் கழித்து...

வா வாத்தியாரே....

என்ன தண்டம்... மதியம் தூங்கும் போது... இப்படி...

வாத்தியாரே.. நானும் தூங்கினு தான் இருந்தேன்... சாரதி வீட்டுல இருந்து பிரேமா போன் போட்டு என் புழைப்ப கெடுத்தாங்க..

அதுக்கு நீ ஏன் எங்க வீட்டுக்கு போன் பண்ண...

யாம் பெற்ற இன்பம் தான்...

பேசி கொண்டே காய்கறி  பக்கம் நுழைந்தோம்...

வாத்தியாரே...

சொல்லு தண்டம்...

40 டிகிரி சாஞ்சி இடது பக்கம் பாரு...

அங்கே இன்ன?

என் இனிய தமிழ் மகன் ஒருத்தர் இருக்கார்...

டேய்.. அவர் இந்தியன் மாதிரி இருக்கார்..இருந்தாலும் நீ எப்படி அவர் தமிழ்னு சொல்ற?

அவர் வெண்டைக்காயை ஒடைச்சி பதம் பாக்குறத பாரு... உலகத்திலேயே வேற எவனும் செய்ய மாட்டான்.

இல்ல பாணி... கர்நாடகாவில்...

வாத்தியாரே.. கர்நாடகாவிற்கும் காய் கறிக்கும் சம்பந்தமே இல்ல...

எப்படி சொல்ற?

தக்காளிக்கு கன்னடாவில் வார்த்தையே இல்லை...

தண்டம்.. இருக்கு .. .தண்டம்...ஒரு நிமிஷம் இரு.. சொல்றேன்...

நீ எவ்வளவு நேரம் யோசித்தாலும் சொல்ல முடியாது...நானே சொல்லட்டா...

சொல்லு..

தக்காளிக்கு கன்னடாவில் டமாட்டா ..

அது இங்கிலிஷ் தண்டம்...

அதே தான் கன்னடாவிலும்..

சரி.. இவரு எப்படி தமிழ்ன்னு முடிவு பண்ண?

சரி வெண்டைக்காயை விடு... அங்கே பாரு... முருங்கைக்காய் வாங்குறாரு...உலகத்திலே தமிழனை தவிர வேற எவனாவது முருங்கைக்காயை இவ்வளவு சந்தோசமா வாங்குவானா?

சரி.. அவரை விடு.. இந்த கீரை எங்கே இருக்கு தேடு...

நீ இந்த பக்கம் போ ... நான் அந்த பக்கம் பாக்குறேன்..

தேடிய சில வினாடிகளில் அடியேன் கீரையை பார்க்க.. சற்று தொலைவில் இருந்த தண்டபாணியை..

தண்டம்.. தண்டம்...

என்று சற்று சத்தம் போட்டு அழைக்க..

தண்டம் என்னை நோக்கி வர...

அங்கே முருங்கை காய் எடுத்து கொண்டு இருந்தவரும் தண்டத்தை பின் தொடர்ந்து வந்தார்...

தண்டபாணியை கண்ட அவர் ...

சார்.. நீங்க தான் தண்டபாணியா?

அவர் அப்படி கேட்டவுடன் தண்டம் என்னை நோக்கி.. பார்வையிலே.. நான் அப்பவே சொல்லல.. இவர் தமிழுன்னு என்று ஒரு செய்தியை சொன்னான்.

நான் .. தண்டபாணி.. தான்.. நீங்க.. உங்களை...

சார்.. என்னை உங்களுக்கு தெரியாது..ஆனால் உங்களுக்கு என்னை தெரியாது..

என்று ஆர்வ கோளாறில் உளற...

நீங்க சொன்ன ரெண்டுமே ஒன்னு தான்...

எது...

என்னை உங்களுக்கு தெரியாது... உங்களுக்கு என்னை தெரியாதுன்னு சொன்னீங்களே .. அது..

அதைவிடுங்க..தண்டபாணி சார்.. உங்களை சந்தித்ததில் ரொம்ப மகிழ்ச்சி..வீட்டுல சுந்தரி எப்படி இருக்காங்க.. பிள்ளைகள்...?

என்று கேட்க .. தண்டமோ...

சார்.. நீங்க யாரு? என் குடும்பத்தை பத்தி எல்லாம் தெரிஞ்சு வச்சி இருக்கீங்க.. உங்களை நான் இதுவரை...என்னை உங்களுக்கு எப்படி தெரியும்?

என்ன சார்.. தமிழ் பதிவுகளை படிக்கும் எல்லாருக்கும் தண்டபாணின்னா தெரியுமே...எங்க எல்லாருக்கும் தண்டபாணி போல் ஒரு நண்பன் கிடைப்பாராருனு எவ்வளவு ஏக்கம்,,

சந்தோசம்.. இருந்தாலும்.. நான் பதிவு எதுவும் எழுதுறது இல்லை..  இவரு தான்...

என்று என்னை பார்க்க..

அந்த முருங்கை தமிழனோ.. யார் எழுதுனா என்ன சார்.? நீங்க ரொம்ப பிசி ஆளா இருக்கலாம்.. அதனால எழுத முடியல.. ஆனாலும்.. உங்களை பத்தி தான் நாங்க எவ்வளவு படிச்சி இருக்கோம்...உங்களை சந்தித்தது ரொம்ப சந்தோசம்...

எனக்கும்.. உங்க பெயர்.. மதி வாணன்..

ரொம்ப சந்தோசம் மதி.....இவர் பெயர் . ...

என்று என்னை அறிமுக படுத்த முயற்சிக்க..

மதிவாணனோ...

அது எப்படி சார்... உங்களுக்கு இவ்வளவு நகைச்சுவை உணர்வு... உங்க பேரை கேட்டவுடனே சிரிப்பு வருதே சார்...

நன்றி.. அதுக்கு காரணமே... இவர்... இவர்...

சார்... அந்த கால்பந்து ஆட்டம்... புடவை கதை...என்னால நம்பவே முடியல...

என்னால கூட..

அப்புறம்... இந்தியாவில் இருந்து ஒருத்தர் வந்து திருமணமானவர்களுக்கு  அறிவுரை கொடுத்தாரே.. அன்னைக்கு நடந்தது...

அதை கூட இவர் தான்... எழு...

இதை எல்லாம் விடுங்க.. நண்பரோட தபால் பெட்டியை திருப்பி வைச்சீங்களே.. அதை படிச்சதுல இருந்து தபால் பெட்டியை பார்த்தாலே சிரிப்பு வரும்..

அது கூட இவர் வீட்டுல....

அப்புறம் அந்த ஸ்போர்ட்ஸ் சாமான் எக்ஸ்சேஞ்சில் அவ்வளவு ஜென்டில் மேனா இருந்தீங்களே.. அது என்ன ரொம்ப பாதித்தது.

அது கூட இவர் தான்...

இவ்வளவு பிசி நேரத்திலும் ... அம்மா - மனைவி - பிள்ளைகள் மூணு தலைமுறையை  சந்தோசமா வச்சினு இருக்கீங்களே....

ஆனாலும் சார்.. அந்த மோர் குழம்பு... சம்பவம்...

சொல்லுங்க...

இன்னொன்னு.. பட்டை.. ய பத்தி ஒரு சம்பவம்... பட்டைய கிளப்பிடீங்க...

எப்படி சார்.. உங்கனால மட்டும்..இப்படி.... உங்களை சந்திச்சதுல ரொம்ப சந்தோசம் சார்...ஒரு பதிவை இப்படி தான் எழுதனும்ம்னு எப்படி முடிவு பண்றீங்க.

மதி.. நான் ரொம்ப பிஸியான ஆளு.. அதனால மனசுல பட்டத சொல்லுவேன்.. அதுவே எழுத்தா மாறுது..

உங்களுக்கு மட்டும் ஆண்டவன் கொஞ்சம் நேரத்தை கூடுதலா கொடுத்து இருந்தா...என்னால யோசித்தே பார்க்க முடியல சார்.. நீங்க சொன்னதே வச்சி எழுதுறத படிக்கும் போதே இவ்வளவு ரசிக்க முடியுதே. நீங்களே எழுதுனா? என்னால நினைச்சே பார்க்க முடியல..

பார்க்கலாம்..

ஏன்... சார்.. உங்க அனுபவத்தையே .." என்னமோ சகவாசம்ன்னு" யாரோ புத்தகம் போட்டு கல்லா கட்டுனாராமே...

அது வந்து... என்னோட அனுமதியோடு தான்...

இந்த காலத்துல யாரையும் நம்ப முடியாது சார்.. ஜாக்கிரதையா இருங்க...

சரியா சொன்னீங்க.. ஐ வில் பி கேர்புல் ..

பை தி வே... இவரு யாரு சார்... அறிமுகப்படுத்தவே இல்லையே...

 என்று என்னை பார்க்க..

தண்டபாணியோ.. அவரே அறிமுகப்படுத்திக்கொள்வார்ன்னு சொல்ல...

நானோ...

ஐ அம் .. ரிச் கார்னலிஸ் .. பிரம் கோவா.. என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினேன்...

பின் குறிப்பு :

என்ன வாத்தியாரே.. என்னை பத்தி 234 தொகுதியும் தெரிஞ்சி வைச்சின்னு இருக்கான்..

ஆமா..

என்னை ரொம்ப புகழ்ந்துட்டான் வாத்தியாரே...

ஆமா...

என்ன வாத்தியாரே.. கொஞ்சம் பீலிங்கா இருக்க போல இருக்கே...

அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல..

என்று பேசி கொண்டே கார் அருகில் செல்கையில்...மதிவாணன் மீண்டும் எங்களை நோக்கி வந்தான்.

தண்டபாணி சார்.. அந்த புத்தகம் காப்பி ஒன்னு என் வண்டியில் இருந்தது. இப் யு டோன்ட் மைண்ட் . ஒரு ஆட்டோகிராப் .... ப்ளீஸ்...

மதி.. ஒரு நிமிஷம்... இவரு....

தண்டபாணி சார்.. இவரு யாருனு எனக்கும் தெரியும்.. இவர் தான் விசு... இந்த பதிவு எல்லாம் எழுதுறவர்...இந்த புத்தக ஆசிரியர்... விசு...

என்று சொல்ல எனக்கோ.. அட பாவி.. அப்புறம் எதுக்கு இவ்வளவு நேரம் என்னை கண்டுக்கவே இல்லை...

என்று எண்ண...தண்டபாணியோ...

வாத்தியாரே... இது என் கசின்... மதிவாணன்... லண்டனில் இருந்து வந்து இருக்கான்.. அவன் உன் பதிவை தொடர்ந்து படிக்கிறவன். ரெண்டு பேரும்  வீட்டுல இருந்து ஒன்னாதான் பிளான் பண்ணி கிளம்பி வந்தோம்...

அப்புறம் எதுக்கு என்னை யாருமே தெரியாத மாதிரி ஒரு டிராமா?

என்று நான் கேட்க.. மதியோ...

வாத்தியாரே..

நீங்க என்னை விசுனே கூப்பிடலாம்..ஏன் இப்படி ஒரு டிராமா...?

உங்க பதிவுல எவ்வளவு பேர ரவுண்டு கட்டி ஒட்டி இருக்கீங்க.. உங்களையும் கொஞ்சம் ஓட்டலாம்னு தான்.. பார் எ சேஞ்...

கலக்கிட்டிங்க மதி... மனதிலோ..

மதி வாணன்.. நீ மதி வாணன் இல்ல சதி வாணன்.. மவனே உனக்கு இருக்குடி... என்னையே ஓட்டுரியா... என்று நினைக்கையில் கடைசியாக என்னை ஒட்டிய நபருக்கு நடந்த கதை நினைவிற்கு வந்தது.


4 கருத்துகள்:

  1. 'நடந்த சம்பவம் என்றால் 'தண்டம்' நீங்க சொல்லுறமாதிரி 'தண்டம்' இல்லை. கற்பனைன்னா, உண்மையாவே கலக்குறீங்க.

    பதிலளிநீக்கு
  2. அருமை அருமை
    கீரை லிங்லிலிருந்து
    பதிவு லிங்க் கொடுத்த விதம்...

    நாங்களெல்லாம் இப்படி வித்தியாசமாக
    ஆடிகொருதரம் அமாவைக்கொருதரம் தான்யோசிப்போம்

    உங்களுக்கு அது தினப்படியாய் இருப்பதுதான்
    ஆச்சரியமாக இருக்கிறது

    மிக மிக அருமை

    வாழ்த்துக்களுடன்....

    பதிலளிநீக்கு
  3. உங்களை ஓட்டிய குஞ்சு குஞ்சு வை தேஷ்முக் ஜி நல்லா ஓட்டினாரே!!! அதுதானே நீங்கள் குறிப்பிட்டிருப்பது??!!! அந்தக் கதை...

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...