தண்ணீர் கொடுக்க கூட ஆள் இல்லை. கொதிக்கும் வெயிலில் ஓடிய நான் அங்கே இறந்தே இருக்கலாம் ! -
இந்திய மாரத்தான் வீராங்கனை ஜாயிஸா குமுறல்!
இது சின்ன விஷயம், விளையாட்டு துறை இதற்கு பொறுப்பு ஏற்க முடியாது - "விஜய் ங்கோயாலு", மத்திய விளையாட்டு துறை அமைச்சர்!
அட பாவி! ஒரு வீராங்கனை அதுவும் உயிரே போய் இருக்கும்ன்னு சொல்றாங்க, இது ஒரு சின்ன விஷயமா?
குடிக்க தண்ணி கொடுக்க வக்கு இல்லை.. கோமியத்தில தங்கம் எடுக்குறாங்களாம் ?
சனியன் புடிச்சவங்களே.. சிறுநீரை வாளியில் பிடித்து வீட்டில் பணிபுரிவரிடம் கொடுத்து ஆரஞ்சு மரத்துக்கு ஊத்த சொல்லி அந்த பழத்தை விருந்தாளிகளுக்கு கொடுக்குற உங்களை கூட்டினு வந்து மெஜாரிட்டியோட உக்கார வைச்சோம் பாரு.. எங்களை..
இன்னொரு விஷயம்.. ஆயுத எழுத்து நிகழ்ச்சியில் KT ராகவன்னு ஒரு ஆளு. அவரிடம்.. இந்தியா ஏன் ஒலிம்பிக் போட்டியில் இப்படி தடுமாறுதுன்னு கேட்டா..
இதோ அவர் பதில்...
பதக்கங்கள் பெறாததற்கு காரணம்.. இந்தியாவிற்கு - இந்தியனுக்கு விளையாட்டு கலாச்சாரம் இல்லையாம் ( இத போரி மஜூம்தார் என்ற ஆள் சொன்னாராம். மஜூம்தார் பெயரை கேட்டவுடனே மராத்தின்னு தெரியுது . வீர சிவாஜியின் பரம்பரையில் வந்துட்டு இப்படி ஒரு ஆள் சொல்லி இருக்கான்.. அதை இந்த அப்ரண்டிஸ் நமக்கு சொல்லுது)
KT ராகவனுக்கு ஒரு விஷயம் சொல்லணும். எதை வச்சி இந்தியனுக்கு விளையாட்டு கலாச்சாரம் இல்லேனு சொல்றிங்க. பல்லாங்குழி ஆடும் போதே பெருமூச்சு விடுற ஆளுங்கள தலைவரா போட்டுட்டு எங்களுக்கு கலாச்சரம் இல்லைன்னு ...
இந்திய கலாச்சாரத்தை விடுங்க.. தமிழ் கலாச்சாரத்துக்கு வாங்க. காளையை அடக்க முடியாதவனுக்கு மனைவி எதுக்குடான்னு வாழ்ந்தவங்க தானே ... இவங்களுக்கு விளையாட்டு கலாச்சாரம் இல்லையா?
விளையாட்டில் இந்தியாவின் பின்னடைவுக்கு காரணமே அரசியல்வாதிகள் - அதிகாரிகள் கூட்டு சதி தானே. அதை முதலில் ஒத்து கொள்வதை விட்டு விட்டு இந்த அறிவுஜீவி நம்ம விளையாட்டு கலாச்சாரத்தை பத்தி பேசுறாரு.
இன்னொரு விஷயம்.. அது எப்படி இந்த ஆளுங்க குடும்பமா சேர்ந்து நாட்டையே குத்தகை எடுக்குறாங்க.
உதாரணத்துக்கு பாருங்க..
ஒலிம்பிக் சங்கத்து தலைவர் ராமச்சந்திரன். இவரு வேற யாரும் இலை கிரிக்கெட் தலைவர் ஸ்ரீனிவாசனின் கூட பிறந்த சகோதரன். என்ன ஒரு ஆச்சரியம் பாருங்க.. கிரிக்கெட்டையும் ஒலிம்பிக்கையும் நடத்த நமக்கு இந்த ரெண்டு பேர் தான் . அதுவும் ஒரே குடும்பத்தில் இருந்து.
இவங்க ரெண்டு பெரும் தான் என்ன ஒரு தியாகம் பண்ணி நம்ம நாட்டை காப்பாத்தி வராங்க..
இன்றைக்கு ஒரு செய்தி படித்தேன். சிந்துவிற்கு முறையான பயிற்சியாளரை கொடுத்து அவரை அடுத்த ஒலிம்பிக்கில் தங்கம் பெற செய்வோம் -
தெலுங்கானா முதல்வர்
கேனை பையன் ஊரில் கிறுக்கு பையன் நாட்டாமையாம்.
என்ன ஒரு கிறுக்குத்தனமான பேச்சு. இத்தனை வருசமா சிந்துவிற்கும் சரி மற்ற எந்த விளையாட்டுக்கும் சரி ஒன்னும் செய்யல.. இப்ப செய்ய போறாராம்!
பதக்கம் பெற்ற இருவருக்கும் பணத்தை அள்ளி கொடுக்கும் இந்த அரசியல்வாதிகள் இதை செய்வதே தங்கள் கடமையில் இருந்து தவறியதை மறைப்பதற்கே.
இந்த ஒலிம்பிக் அவமானம் வேறு எங்கேயாவது நடந்து இருந்தால் மொத்த சங்க அதிகாரிகள் எல்லாரும் நடந்த அவமானத்திற்காக தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து இருப்பார்கள்.
ஆனால் நம்ம ஆட்கள்.. வெட்கம் மானம் சூடு சொரணை எதுவும் இல்லையே ...அதனால் இன்னும் அங்கே உட்க்கார்ந்துன்னு அடுத்த ஒலிம்பிக்சில் செல்பி எடுக்க தயாரா இருக்காங்க.
பின் குறிப்பு :
சென்ற வாரம் ராசாத்திகளின் பள்ளி கூடத்தில் இருந்து விளையாட்டில் போட்டியில் ஈடுபடும் மாணவ மாணவியரின் பெற்றோர்களுக்கு ஒரு கடிதம்.
தங்கள் யாராவது பிள்ளைகளில் விளையாட்டில் முழு மூச்சாக ஈடுபட வேண்டும் என்று விரும்பினால் உடனே பள்ளி கூட உடற்பயிற்ச்சி ஆசிரியர்களை அணுகுங்கள். 2024 ஒலிம்பிக்ஸ் வெகு தூரத்தில் இல்லை.
இதை படித்தவுடன் அந்த ஆசிரியரை தொலை பேசியில் அழைத்து .. அந்த கடிதத்தில் ஒரு தவறு.. 2020 ஒலிம்பிக்ஸ் என்று எழுதுவதற்கு பதில் 2024 என்று எழுதி விட்டீர்கள். 2024 ஒலிம்பிக்ஸ் எங்கே நடக்க போகின்றது என்று கூட இன்னும் முடிவாகவில்லை என்றேன்.
அவரோ , அதற்கு, சிரித்து கொண்டே..
நண்பா.. 2020 ஜப்பானில் நடக்கும் ஒலிம்பிக்சில் யார் யார் பங்கேற்பார்கள் என்று 2012 -13 லேயே முடிவாகி இருக்கும். ஏதாவது ஒன்று இரண்டு ஆட்களை தவிர 2020 ல் யார் யார் போட்டி போடுவார்கள் என்பதை அமெரிக்க ஒலிம்பிக் சங்கம் இப்போது நமக்கு தரும். ..
என்றார்..
அதை கேட்டவுடன்.. மனதில் ஒரு சிறிய ஏளனம் .
இந்த நாட்டில் 2020 ல் யார் யார் விளையாட போவார்கள் என்ற மட்டும் தான் தெரியும்.
ஆனால் எனக்கோ 2040 ல் இந்தியாவில் இருந்து யார் யார் அதிகாரிகளாக போவார்கள் என்ற கூட தெரியும்.
ஓர் விண்ணப்பம் : சென்ற பதிவில் என்னை தேசத்துரோகி என்ற பின்னூட்டத்தை இட்ட பெயர் சொல்ல தைரியம் இல்லாத நபருக்கு...
முதலில் பெயர் சொல்லும் தைரியத்தை வளர்த்து கொள்ளுங்கள் அதுக்கு அப்புறமா யார் தேச துரோகின்னு விவாதிக்கலாம்.
நெஞ்சு பொறுக்குதில்லையே..

நெஞ்சு பொறுக்குதில்லையே.... :(
பதிலளிநீக்குமஜும்தார் - மராட்டி அல்ல! அவர் மேற்கு வங்கத்தவர் - பெங்காலி.... எனது அலுவலக நண்பர் - பெங்காலி - அவர் பெயரும் மஜும்தார் தான்...
நன்றி வெங்கட் அவர்களே... இந்த எழுத்தாளர் பெங்காலி தான். நான் மஸும்தார் என்று நினைத்து மராத்தி என்று எழுதி விட்டேன். தவறை சுட்டி காட்டியதற்கு நன்றி.
நீக்குசரி.. வீர சிவாஜி பரம்பரையை விடுங்க.. சுபாஷ் சந்திர போஸ் பிறப்பிடத்தில் இருந்து வந்துட்டு இந்தியனுக்கு வீரம் கிடையாது விளையாட்டு கலாச்சாரம் கிடையாதுன்னு சொல்றது... Its just an excuse!
கே டி ராகவன் பேசறதெல்லாம் பாக்கறீங்களா. ஒரு சிலருக்கு மைக் கெடச்சா போதுமே. அந்த லிஸ்ட் அவரு.
பதிலளிநீக்குஜெய்ஷாவுக்கு நடந்தது கொடுமை. இதில் அரசு தலையிட்டு சம்பந்தப்பட்டவர்களை தண்டிக்கவேண்டும். ஆனா அதெல்லாம் நடக்காது. இந்தப்பிரச்சினையில் அரசையும், அதிகாரிகளையும் ஜெயிக்க முடியாதென்று நல்லா தெரிஞ்சும், எவ்வளவு வலியும் வேதனையும் அனுபவிச்சிருந்தா வெளிப்படையா இப்படி மீடியாகிட்ட சொல்லுவாங்க. இனி அவங்களை ஆட்டத்துல சேப்பாங்கன்றீங்க.
விஜயன்
என்னத்த பண்றது ... ? இந்த மாதிரி ஆட்கள் இருப்பதினால் தானே நமக்கு டைம் பாஸ்.. வாழ் KTR
நீக்குsorry sir. neenga thappa purinjikkitteenga. nan avanga bashaila sonnen. per solla bayamlam illa. ithukku munnadi comment pannadhilla. pannavum theriyadhu . ippadhan kathukkitten. en peru TIPU SULTAN.
பதிலளிநீக்குவாங்க திப்பு சுல்தான் ..
நீக்குஇப்படி பேர் சொல்லாமல் பின்னூட்டம் இடுவது தப்பு சுல்தான்....
idhukku munna comment pannadhilla. idhan first time.
நீக்குஇரு நபர் கமிட்டி அமைச்சுருக்காங்களாம்.
பதிலளிநீக்கு//இதுகுறித்து விளையாட்டுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இப்புகார் குறித்து விசாரணை நடத்த விளையாட்டுத்துறை இணை செயலாளர் ஓங்கர் கேதியா, விளையாட்டுத்துறை இயக்குனர் விவேக் நாராயண் ஆகியோரை கொண்ட இருநபர் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கமிட்டி விசாரணை நடத்தி இன்னும் 7 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யும் என மத்திய விளையாட்டு துறை அமைச்சர் விஜய் கோயல் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read more at: http://tamil.oneindia.com/news/sports/sports-minister-forms-enquiry-committee-probe-op-jaisha-alle-260930.html//
திருடன் கிட்டயே சாவி.விசாரணைக்கமிஷன் கமிஷன் வாங்காம இருந்தா ஆச்சரியம்.
விஜயன்
மனதை வலிக்கச் செய்த பதிவு. திறமையானவர்கள் நம்மிடம் நிறைய இருக்கிறார்கள். அரசியலால் அது மங்கிப்போய் நிற்கிறது.
பதிலளிநீக்குஅற்புதமான சாட்டையடி பதிவு!
இந்தியாவில் விளையாட்டில் இருந்து அரசியல் என்று ஒழிகிறதோ அப்போதுதான் விளையாட்டிற்கு விடிவு பிறக்கும்!
பதிலளிநீக்குஇதற்குக் காரணம் அரசியல்வாதிகள் ஒருபுறம் என்றால், நம் பள்ளிகள், பெற்றோர்கள் எல்லோரும் காரணம். அரசும் காரணம்.
பதிலளிநீக்குசரி இங்கு எழுத நினைத்தோம் ஆனால் அது பதிவு அளவிற்கு நீள்வதால்...கட். பதிவாக்கி விடலாமா என்ற எண்ணமும் உள்ளது...பார்ப்போம்...
மிக மிக நல்ல பதிவு ஆனால் மனது வேதனை தரும் பதிவு.
'நம்ம ஊருல ஒருத்தன் அவன் திறமையினால் மேலே வந்தால், எல்லாப் பயலுகளும் (விளையாட்டுத்துறை, கமிட்டி போன்ற எல்லாரும்) அல்லக்கைகளாக மாறி, வாய்ப்பைப் பயன்படுத்தி அரசு காசுல மஞ்சக் குளிக்கிறாங்க. உங்களுக்குத்தான் தெரியுமே, காமன்வெல்த் விளையாட்டை தில்லியில் எப்படி நடத்திக் கிளிச்சாங்க என்று. கொள்ளையோ கொள்ளை என்று அடித்தார்கள். உங்க பதிவிலயா படிச்சேன்.. நீச்சல் விளையாட்டுக்கு இந்திய அரசு இன்சார்ஜுக்கு, நீச்சலே தெரியாது என்று. இதுலவேற, சச்சினுக்கு ராஜ்ஜியசபா எம்.பி பதவி கொடுத்தா (அவருடைய சொந்தத் திறமையையும் புகழையும், இந்தப் பதவியோடு சேர்த்துக் குழப்பிக்காதீங்க. நானும் அவர் ரசிகன்) அதுனால விளையாட்டுக்கு என்ன யூஸ்? இப்பக்கூட பாருங்களேன்.. தமிழ் நாட்டில், ஒரு மந்திரியை எந்திரி என்று சொன்னா, அவருடைய சாதி மக்களை கூல் பண்ணும் விதமாக அதே சாதியைச் சேர்ந்தவருக்கு மந்திரி பதவி கொடுத்திருக்கிறார் என்று எழுதுறாங்க (இப்போ வந்துள்ளவருக்குத் திறமை இருப்பதுபோல் தெரிந்தாலும்). எங்க உருப்பட?
பதிலளிநீக்கு